மார்கெட்டை பிடித்த நோக்கியா… இதுவரை இல்லாத புது அம்சங்கள்.. ஆனால் விலை குறைவு..!

நோக்கியா நிறுவனம் வெகு காலங்களாகவே மக்கள் மத்தியில் நம்பக தன்மை பெற்ற ஒரு நிறுவனமாக இருந்து வருகிறது. தொடர்ந்து நோக்கியா வெளியிடும் மொபைல்களை இப்போதும் மக்கள் நம்பி வாங்கி வருகின்றனர்.

நோக்கியா நிறுவனத்தை சில வருடங்களுக்கு முன்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. அதற்கு பிறகு பீயூச்சர் போன்களில் புது அம்சங்களை கொண்டு வந்து குறைந்த விலைக்கு அமல்ப்படுத்தியது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

அதனை தொடர்ந்து நோக்கியா மீண்டும் விற்பனை ஆக துவங்கியது. இந்த நிலையில் நோக்கியா நிறுவனம் தனது பெயரை ஹெச்.எம்.டி என பெயரை மாற்றி தனது விற்பனையை துவங்கியுள்ளது. அதில் புதிதாக வெளியாகி இருக்கும் HMD Fusion 5G Mobile இப்போது மொபைல் மார்கெட்டில் வேற மாதிரி ஒரு போனாக களம் இறங்கியிருக்கிறது.

17000 ரூபாய் விலைக்கு வெளியாகியுள்ள இந்த மொபைல் மற்ற மொபைல்களை விட இரண்டு முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மொபைலில் வரும் எல்.இ.டியின் நிறத்தை எந்த நிறத்திற்கு வேண்டுமானாலும் மாற்றி கொள்ள முடியும்.

மேலும் இந்த எல்.இ.டி கட்ட வடிவில் உள்ளது. இதை செல்பி எடுக்கும்போது முன்பக்கம் கூட திருப்பி கொள்ள முடியும். அதே மாதிரி செல்போனோடு சேர்த்து கேமிங் பேடும் இலவசமாக தருகிறது ஹெச்.எம்.டி நிறுவனம்.

போனுக்கு சார்ஜர் கூட சில நிறுவனங்கள் கொடுக்காத நிலையில் இத்தனை அம்சங்களை கொடுத்து 8ஜிபி. ரேம் மற்றும் 256 ஜிபி நினைவக திறனுடன் இந்த மொபைல் வந்துள்ளது. இப்போது இந்த மொபைலுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version