ரெண்டு பேரும் சேர்ந்து படம் பண்றோம்.. அறிவித்த கமல்..!
தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் பெரிதாக பேசப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருக்கும்.
இதனாலேயே கமல் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. கமல் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் நடிகர் ரஜினிகாந்தோடு இணைந்து நிறைய திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக அமைந்து இருக்கின்றன. இந்த நிலையில் பல வருடங்களாக நட்பாக இருந்தாலும் கூட ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இருவரும் போட்டி நடிகர்கள் ஆனார்கள்.
அதற்கு பிறகு இவர்கள் சேர்ந்து நடிக்கவே இல்லை. இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து இப்போது ஒரு திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருந்து வருகிறது. வெகு காலங்களாக இதை மக்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்கப் போவதாக ஒரு பேச்சு இருந்து கொண்டே இருந்தது சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன் அதை உறுதி செய்து இருக்கிறார்.
கமல் ரஜினியோடு சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இந்த திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம்தான் தயாரிக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன. விரைவில் இது குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் லோகேஷ் கனகராஜ் தான் இந்த படத்தை இயக்குகிறாரா? என்பது இன்னமும் தெரியவில்லை.