1 கோடி நஷ்டம். வீழ்ச்சியை கண்ட மாதம்பட்டியின் நிறுவனம்.. இதுதான் விஷயம்..!
தமிழில் மெஹந்தி சர்க்கஸ் என்கிற திரைப்படத்தில் நடித்து வரவேற்பு பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். மாதம்பட்டி ரங்கராஜ் பிரபலங்களுக்கு சமைக்கும் ஒரு சமையல் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இருந்தாலும் இவருக்கு சினிமாவின் மீதும் ஈடுபாடு இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் அவர் மெஹந்தி சர்க்கஸ் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை.
ஆனால் இப்பொழுது அவர் விஜய் டிவியில் நடக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறுவதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்து இருக்கிறார்.
தன்னுடைய நிறுவனம் கண்ட பிரச்சினைகள் குறித்து பேசி இருந்தார் அதில் அவர் கூறும் பொழுது, அதிக நபர்கள் வரும் திருமணங்களுக்கு சமைப்பதுதான் எங்கள் நிறுவனத்தின் ஸ்பெஷலான விஷயமாக இருந்தது.
ஆனால் கொரோனா சமயத்தில் அதிக நபர்கள் கூடி திருமணம் நடத்தக்கூடாது என்கிற விதிமுறையை போட்டனர். எனது நிறுவனத்தில் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். யாருமே திருமணத்திற்கு சமைக்க முடியாது என்கிற நிலை ஏற்பட்டது.
இதனால் எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் இந்த ஊழியர்களுக்கு எல்லாம் சம்பளம் கொடுக்க வேண்டிய தேவையும் இருந்தது. அப்பொழுதுதான் கோயம்புத்தூரில் இருக்கும் 5000 நோயாளிகளுக்கு தினசரி சமைக்கக்கூடிய ஆர்டர் தமிழக அரசின் மூலமாக எங்களுக்கு கிடைத்தது.
அதற்குப் பிறகு எங்களுக்கு லாபம் என்பது அதிகரிக்க துவங்கியது. எனவே எந்த ஒரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.