என் படம் மக்களுக்கு பிடிக்காம போக இதுதான் காரணம்.. ஓப்பன் டாக் கொடுத்த லோகேஷ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களின் மிக முக்கியமானவர். பெரும்பாலும் அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு இயக்குனருக்கு ரசிகர் பட்டாளம் உருவாவது கிடையாது.

தமிழ் சினிமாவில் மணிரத்தினம், ஷங்கர் மாதிரியான ஒரு சில இயக்குனர்களுக்கு ரசிகர் பட்டாளம் என்பது இருந்து வருகிறது ஆனால் அதே மாதிரியான ஒரு ரசிகர் பட்டாளத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜும் கொண்டு இருக்கிறார்.

அதற்கு அவரது தனிப்பட்ட படம் எடுக்கும் திறமையே காரணம் என்று கூறலாம். ஆனாலும் சில நேரங்களில் அவரது திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாவது நடந்து வருகிறது. இது குறித்து சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் மக்கள் எனது படம் குறித்து நிறைய விஷயங்களை யோசிக்கின்றனர். நிறைய எதிர்பார்க்கின்றனர்.

கூலி திரைப்படத்திற்கு கூட இந்த திரைப்படம் டைம் டிராவல் திரைப்படம் என்றெல்லாம் பேசி வந்தனர். இது எதுவுமே நான் கூறுவது கிடையாது மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.

நான் எனக்கு பிடித்த வகையில் படத்தை எடுக்கிறேன் ஆனால் அது அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் மட்டுமே அது நல்ல படம் என்று பேசப்படுகிறது ஒருவேளை அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால் நான் இன்னும் உழைக்க வேண்டி இருக்கிறது என கூறுகிறார் லோகேஷ் கனகராஜ்.