இரண்டு நாட்களில் மதராஸி திரைப்படத்தின் மொத்த வசூல்..!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் மதராஸி, இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பெரும்பாலும் ஏ.ஆர். முருகதாஸை பொருத்தவரை சமூகம் சார்ந்த மிக முக்கியமான விஷயங்களை தனது திரைப்படங்களில் பேசக்கூடியவர். அவர் இயக்கத்தில் வந்த ரமணா,கத்தி,சர்க்கார் மாதிரியான ஒவ்வொரு திரைப்படத்திலுமே சில முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டிருப்பதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் ஒரு காலத்தில் ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகராக இருந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரே இப்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு என்று தனி மார்க்கெட் இருக்கும் காரணத்தினால் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது படம் வெளியான இரண்டு நாட்களிலேயே 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது எனவே இந்த படமும் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.