தக் லைஃப் பிரச்சனையை இன்னும் மறக்கலை.. கவனமாக பதில் சொன்ன கமல்ஹாசன்.!

தமிழில் முக்கியமான பெரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது வரை தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் கமல்ஹாசன்.

ஹாலிவுட் சினிமாவில் கூட கமல்ஹாசனின் நடிப்பை பார்த்து பலரும் வியந்து இருக்கின்றனர். அதே மாதிரி தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

சமீபத்தில் கமல்ஹாசன் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் வெளியான போது எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை கொடுக்கவில்லை. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பு பேட்டிகளில் பேசிய கமல்ஹாசன் கூறும் போது தக்லைஃப் திரைப்படம் குறித்து மிகவும் மிகைப்படுத்தி பேசியிருந்தார்.

ஆனால் அவர் பேசிய அளவிற்கான வரவேற்பை அந்த திரைப்படம் பெறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அந்த விழாவில் ரஜினியோடுஅடுத்து அவர் திரைப்படத்தில் சேர்ந்து நடிக்க இருப்பதாக கூறியிருந்தார்.

உடனே நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அப்படி என்றால் அந்த திரைப்படம் வேற லெவலாக இருக்கும் என்று கூறினார். உடனே அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் படம் எப்படி இருக்கும் என்பதை மக்கள் தான் கூற வேண்டும் என்று கூறினார்.

தக் லைஃப் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன் எந்த ஒரு திரைப்படத்தையும் தாமாக முன்வந்து நன்றாக இருக்கும் என்று கூறுவது கிடையாது என இதன் மூலம் தெரிகிறது.