Tag Archives: தக் லைஃப்

ஓ.டி.டியில் முன்னணி.. ட்ரெண்டிங்கில் இருக்கும் தக் லைஃப் இதுதான் காரணம்..

சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் மற்றும் சிம்பு முக்கிய கதாபாத்திரமாக நடித்து வெளியான திரைப்படம் தக் லைஃப். ஒரு நல்ல திரைப்படமாக இருந்தாலும் கூட திரையரங்குகளில் அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு என்பது கிடைக்கவில்லை.

அதற்கு முக்கிய காரணம் திரைப்படம் குறித்து வெளியான விமர்சனங்கள் தான் என்று கூறப்படுகிறது. படம் குறித்து நிறைய மோசமான விமர்சனங்கள் அப்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அதனை தொடர்ந்து படத்திற்கான வசூல் என்பதும் குறைந்தது.

தொடர்ந்து தக் லைஃப் திரைப்படம் ஓ.டி.டியில் விற்பனையாவதிலும் இதனால் பிரச்சனைகள் ஏற்பட்டன. 120 கோடிக்கு இந்த திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்குவதாக இருந்தது.

Thug-life

ஆனால் இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற காரணத்தினால் அதைவிட குறைவான தொகைக்குதான் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை வாங்கியது. ஆனால் இப்பொழுது ஓடிடிக்கு வந்த பிறகு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

வெளியான ஒரு வாரங்களிலேயே நெட்ஃப்ளிக்ஸ் அதிக பார்வைகளை பெற்ற ஒரு படமாக தக்லைஃப் திரைப்படம் மாறி இருக்கிறது.

தக் லைஃப் படத்தில் ஏமாந்த சிம்பு.. பின்னால் நடந்த சதி வேலை..!

நடிகர் சிம்பு மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார். பெரும்பாலும் கதை தேர்ந்தெடுப்பதில் சிம்பு இப்பொழுது அதிகம் கவனம் காட்டி வருகிறார்.

அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களங்களை மட்டும் தான் அவர் தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் தக் லைஃப் திரைப்படம் சிம்புவிற்கு மிக முக்கியமான படமாக உள்ளது. ஏனெனில் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு இரண்டாவது முக்கிய ஹீரோவாக படத்தில் சிம்பு இருக்கிறார்.

ஆனாலும் கூட இந்த படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் இந்த படத்தின் கமலை விட சிம்புவுக்கு தான் முக்கியத்துவம் இருந்தது என்று ஆரம்பத்திலிருந்து பேச்சுக்கள் இருந்தன.

இது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது கமலஹாசனே இசை வெளியீட்டு விழாவில் பேசும்பொழுது ஆரம்பத்தில் இது என்னுடைய படமாக இருந்தது.

simbu

படம் முடியும்போது இது சிம்புவின் படமாக இருந்தது என்று கூறியிருந்தார். அப்படியானால் படத்தில் கமலை விடவும் சிம்புவிற்குதான் அதிகமான காட்சிகள் வைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. அதனால்தான் சிம்புவும் இந்த படத்தை அதிகமாக நம்பி இருந்திருக்கிறார்.

ஆனால் இறுதியில் படம் வெளியாகும் சமயத்தில் நிறைய காட்சிகளை நீக்கி இருக்கின்றனர். அதனால்தான் கமல்ஹாசனுக்கு காட்சிகள் அதிகமாக இருந்துள்ளது.

அந்த வகையில் சிம்பு ஏமாற்றப்பட்டுள்ளார் என்று தான் கூற வேண்டும் என்று கூறியிருக்கிறார் தக் லைஃப்.

தக் லைஃப் படத்தை எதிர்பார்த்து சிம்பு செய்த சம்பவம்.. இப்படி வினையா முடிஞ்சுட்டே..!

நடிகர் சிம்பு நடிக்கும் சமீப படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை களங்களை கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களாக இருக்கின்றன.

அவற்றை சிம்பு சிறப்பாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் கூட கமல்ஹாசனுடன் சிம்பு சேர்ந்து நடித்திருந்தார். கிட்டத்தட்ட சிம்புவின் நடிப்பு நன்றாக இருந்தது.

ஆனால் மணிரத்தினம் இயக்கத்தில் வரும் திரைப்படம் என்பதால் தக்லைஃப் திரைப்படம் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் சிம்பு. ஆனால் தக் லைஃப் திரைப்படம் வெளியான பிறகு அவர் எதிர்பார்த்த அளவிலான ஒரு வரவேற்பை அந்த படம் கொடுக்கவில்லை.

ஆனால் அந்த படத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக அடுத்து பல படங்களுக்கு சம்பளமே பேசவில்லையாம் சிம்பு. ஏனெனில் தக்லைஃப் திரைப்படம் ஒரு நல்ல வெற்றியை கொடுத்தால் தனது சம்பளத்தை அதிகரித்து கேட்கலாம் என்பது சிம்புவின் யோசனையாக இருந்திருக்கலாம்.

ஆனால் இப்பொழுது தக்லைஃப் திரைப்படம் பெரிதாக போகாத காரணத்தினால் பழைய சம்பளத்திற்கு நடிக்க சிம்பு ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதான் நீதிமன்றத்துக்கு வேலையா? தக் லைஃப் விஷயத்தில் கர்நாடகா நீதிமன்றத்திற்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்..

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தக் லைஃப் இந்த திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். திரைக்கு வந்த தக்லைஃப் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வசூலை இந்த திரைப்படம் பெற்று தரவில்லை இதற்கு நடுவே தக்லைஃப் குறித்து கன்னட சினிமாவில் ஒரு சர்ச்சை ஆரம்பத்தில் இருந்து வந்தது.

தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் மொழி வந்தது என்று மேடையில் பேசியிருந்தார் கமல். இதனால் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக தக்லைஃப் திரைப்படம் கன்னடத்தில் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

மேலும் இது குறித்து கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதியப்பட்டது இதற்கு பதில் அளித்த கர்நாடக நீதிமன்றம் தான் பேசியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது.

இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து சுப்ரீம் கோர்ட் தற்சமயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறும்போது கமல்ஹாசன் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது ஒரு நீதிமன்றத்தின் வேலை கிடையாது இது ஒரு அர்த்தமற்ற வழக்கு என்று கருத்து தெரிவித்துள்ளது.

நல்ல படத்தை இப்படி பண்ணிட்டாங்களே.. தக் லைஃப் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன்..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் திரிஷா சிம்பு என்று பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.

சமீபத்தில் வெளியான தக்லைஃப் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனத்திற்கு உள்ளானது. அதனை தொடர்ந்து படத்தின் வசூலும் பெரிதாக குறைந்தது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நல்ல படத்தினை மோசமான விமர்சனத்தை அளித்து ஓட விடாமல் செய்துவிட்டனர் என்பதாக பேசியிருந்தார் ஜெயமோகன்.

thug life simbu

ஒரு பக்கம் அவர் கூறுவது உண்மை போலவே இருக்கிறது. ஏனெனில் படத்தின் கதைக்கும் படத்தை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ததற்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருக்கிறது.

பெரும்பாலும் சமூக வலைதளங்களில் திரிஷாவுக்காக கமலும் சிம்புவும் சண்டை போட்டுக் கொள்வதாகதான் கதையை பேசி வந்தனர். ஆனால் கதையின் சாராம்சம் அப்படி இருக்கவில்லை.

மாறாக கமல் மற்றும் சிம்புவுக்கு இடையே புரிதல் இல்லாமல் போவதாலும் தலைமை யாருக்கு என்பதாலும்தான் இந்த சண்டை வருவதாக இருக்கிறது திரிஷா இதில் இந்த சண்டைக்கு காரணமான ஒரு கதாபாத்திரமாக இருக்கவில்லை.

அப்படி இருந்தும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தவறான ஒரு பிம்பத்தை இந்த படத்திற்கு உருவாக்கி இருந்தனர். இதனை சுட்டிக்காட்டும் விதத்தில் தான் ஜெயமோகன் தனது கருத்தினை பதிவு செய்து இருக்கிறார்.

தக் லைஃபால் வந்த பிரச்சனை… அடுத்த படத்தில் கமலுக்கு வந்த சிக்கல்..!

நடிகர் கமலஹாசன் நடித்து சமீபத்தில் வெளியாகி தற்சமயம் திரையரங்குகளில் ஓடிவரும் திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் இருந்து வருகிறது.

சமீப காலமாகவே நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்து வருகின்றன. இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார் என்பதால் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த திரைப்படம் உண்மையில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை எதிர்மறையான விமர்சனங்கள் காரணமாகவே இந்த திரைப்படம் வெற்றி அடையவில்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் அடுத்து அன்பறிவு இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார். இந்த திரைப்படமாவது அவருக்கு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்ப்புகள் இருந்தன.

ஆனால் இப்பொழுது அந்த திரைப்படம் பாதியிலேயே நின்று விட்டதாக பேச்சுக்கள் இருக்கின்றன. தொடர்ந்து கமலுக்கு மார்க்கெட் குறைந்து வரும் காரணத்தினால்தான் இந்த திரைப்படம் பாதியிலேயே நின்று விட்டது என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்தாலும் இன்னும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

காத்து வாங்கும் திரையரங்குகள்.. சரிவை கண்ட தக் லைஃப்.. கமலின் அடுத்த நம்பிக்கை..!

சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தக் லைஃப். 36 வருடங்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் நடிகர் சிம்புவும் இந்த படத்தில் இரண்டாம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். படத்தில் உணர்வுபூர்வமான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே கேங்ஸ்டர் திரைப்படம் என்றால் அதிக வெட்டு குத்து காட்சிகள் இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் குறைத்து விட்டு உறவுகளுக்கு இடையே உள்ள உணர்வுகளை அதிகம் பேசுவதாக மணிரத்தினம் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

thug-life

அதனால் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை இந்த நிலையில் தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது தக் லைஃப் திரைப்படம். ஏற்கனவே கமல்ஹாசனுக்கு இதற்கு முன்பு அவரது நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெற்று தரவில்லை.

எனவே அடுத்து அன்பு அறிவு இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படத்தையே கமல்ஹாசன் நம்பி இருக்கிறார்.

மணிரத்தினத்தை கேன்சல் செய்த ரஜினிகாந்த்.. வாய்ப்பை தட்டி தூக்கிய இளம் இயக்குனர்.!

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தார் ரஜினிகாந்த். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினிகாந்த் முன்பு நடித்த தளபதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது.

எனவே அதே மாதிரியான இன்னொரு திரைப்படத்தை இயக்கலாம் என்று முடிவெடுத்திருந்தார். ஆனால் இப்பொழுது ரஜினிகாந்த் அவரது முடிவை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவான தக்லைஃப் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் ஏற்கனவே இயக்குனர் ஹெச் வினோத் ரஜினிகாந்திடம் ஒரு கதையை கூறியிருந்தாராம். அந்த கதை கிட்டத்தட்ட சதுரங்க வேட்டை மாதிரியான ஒரு கதை என்று கூறப்படுகிறது. வில்லன் மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் தான் அதில் கதாநாயகனின் கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்ததாம் எனவே ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில்தான் அடுத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க போகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளால் வந்த ஆபத்து.. வெளிப்படையாக பேசிய சின்மயி..!

சமீபகாலமாக பாடகி சின்மயி அதிக பிரபலமாகி வருகிறார். சமீபத்தில் தக்லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த இசை வெளியீட்டு விழாவில் முத்தமலை என்கிற ஒரு பாடலை சின்மயி பாடி இருந்தார்.

ஆனால் அந்தப் பாடலை நிஜத்தில் பாடியது பாடகி தீ. ஆனால் அவர் அன்று பிசியாக இருந்த காரணத்தால் சின்மயி அந்த பாடலை பாடினார். சின்மயி பாடிய பாடல் அதிக பிரபலம் அடைந்தது. தொடர்ந்து சின்மயிக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில் இது குறித்து பேசிய சின்மயி கூறும் பொழுது ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பார்த்து பார்த்து மக்கள் முதலிடம் இரண்டாம் இடம் என்கிற மனநிலைக்கு சென்று விட்டனர். இதற்கு முன்பு கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் நான் பாடிய பொழுது அதில் ஆண் பாடகர்களாக பெரிய பெரிய பாடகர்கள் என்னுடன் பாடினர்.

ஆனால் அப்பொழுதெல்லாம் இந்த மாதிரியான பிரச்சனைகள் வரவில்லை இப்பொழுது இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்த்து மக்கள் மனம் மாறிவிட்டனர் என்று கூறியுள்ளார் சின்மயி..

ரெட்ரோவே பரவாயில்லை போல.. தக் லைஃப் முதல் நாள் வசூல் நிலவரம்..!

நேற்று நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ளார். 36 வருடங்களுக்கு பிறகு மணிரத்தினம் மற்றும் கமல் இருவரும் ஒன்றிணையும் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று வெளியான தக் லைஃப் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தது. தற்சமயம் இது பட வசூலையும் கூட வெகுவாக பாதித்துள்ளது.

Thug-life

அந்த வகையில் முதல் நாளே தக் லைஃப் திரைப்படம் 17 கோடிதான் வசூல் செய்துள்ளது. ரெட்ரோ திரைப்படம் முதல் நாள் 19 கோடி வசூல் செய்த நிலையில் அதை விட தக் லைஃபின் வசூல் குறைந்துள்ளது.

சங்கிகளின் வேலை இது.. தக் லைஃப் திரைப்படம் குறித்து இயக்குனர் அமீர்..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஏனெனில் 36 வருடங்களுக்கு பிறகு மணிரத்தினமும் கமல்ஹாசனும் இணையும் ஒரு திரைப்படமாக தக் லைஃப் திரைப்படம் இருக்கிறது, மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர்தான் கமலுக்கு எதிரி கதாபாத்திரமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த இயக்குனர் அமீர் தற்சமயம் படம் பார்த்துவிட்டு வந்த அமீர் படம் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம் பேசிய பத்திரிக்கையாளர்கள் எப்போதுமே கமல்ஹாசன் குறித்த விஷயங்களில் அவருக்கு முதலில் ஆதரவாக நீங்கள்தான் பேசுகிறீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமீர் கூறும்போது நான் நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். விஸ்வரூபம் விஷயத்திலும் சரி, இப்போதும் சரி கமல்ஹாசன் விஷயத்தில் எந்த தவறும் இல்லை. அவர் திராவிட மொழிகள் எல்லாம் ஒன்று என்கிற ரீதியில்தான் பேசியிருந்தார்.

அதை சில சங்கி குழுக்கள் மாற்றி பேசி வருகின்றன என கூறியுள்ளார் அமீர். மேலும் அமீர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் படம் தயாராவது குறித்து கமல்ஹாசனிடம் பேசுவதாகவும் அமீர் கூறியுள்ளார்.

 

கமல் கூறியதை ஏற்க முடியாது..! கன்னட சினிமாவில் வந்த பிரச்சனை.. ஒருங்கிணைந்த விநியோகஸ்தர்கள்..!

தமிழ் சினிமாவில் உள்ள பெரிய நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கமல்ஹாசன் இருந்து வருகிறார். விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து கமல்ஹாசன் ஆக்‌ஷன் திரைப்படங்களாக நடித்து வருகிறார். ஏனெனில் விக்ரம் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்று தந்தது.

இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் தற்சமயம் தக் லைஃப் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து சில விஷயங்களை பேசியிருந்தார்.

kamalhasan

அதில் பேசிய அவர் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என பேசியிருந்தார். இது கர்நாடகா மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தக் லைஃப் படத்தை வாங்குவது குறித்து யோசித்து வருகின்றனர் கன்னட திரைப்பட விநியோகஸ்தர்கள்.

கமல் கூறியதை ஏற்க முடியாது. எங்களுக்கு எங்கள் மொழி முக்கியம் என கூறியுள்ளனர் கன்னட விநியோகஸ்தர்கள்.