நடிகர் சிம்பு நடிக்கும் சமீப படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை களங்களை கொண்டதாக இருக்கிறது. ஒவ்வொரு திரைப்படத்திலும் அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களாக இருக்கின்றன.
அவற்றை சிம்பு சிறப்பாக நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் கூட கமல்ஹாசனுடன் சிம்பு சேர்ந்து நடித்திருந்தார். கிட்டத்தட்ட சிம்புவின் நடிப்பு நன்றாக இருந்தது.
ஆனால் மணிரத்தினம் இயக்கத்தில் வரும் திரைப்படம் என்பதால் தக்லைஃப் திரைப்படம் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் சிம்பு. ஆனால் தக் லைஃப் திரைப்படம் வெளியான பிறகு அவர் எதிர்பார்த்த அளவிலான ஒரு வரவேற்பை அந்த படம் கொடுக்கவில்லை.
ஆனால் அந்த படத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக அடுத்து பல படங்களுக்கு சம்பளமே பேசவில்லையாம் சிம்பு. ஏனெனில் தக்லைஃப் திரைப்படம் ஒரு நல்ல வெற்றியை கொடுத்தால் தனது சம்பளத்தை அதிகரித்து கேட்கலாம் என்பது சிம்புவின் யோசனையாக இருந்திருக்கலாம்.
ஆனால் இப்பொழுது தக்லைஃப் திரைப்படம் பெரிதாக போகாத காரணத்தினால் பழைய சம்பளத்திற்கு நடிக்க சிம்பு ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.