ஹாலிவுட் சினிமா மீது எப்போதுமே மக்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு என்பது இருந்து வருகிறது. டிவிடி ப்ளேயர்கள் வந்த காலத்தில் இருந்தே நிறைய ஹாலிவுட் படங்களை மக்கள் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் மக்கள் மத்தியில் பிரபலமான ஹாலிவுட் படங்களில் பைரேட் ஆஃப் தி கரேபியன் என்கிற திரைப்படம் மிகவும் பிரபலமானது. நடிகர் ஜானி டெப் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். கேப்டன் ஜாக் ஸ்பாரோ என்கிற கதாபாத்திரத்திற்கு அவர்தான் உயிர் கொடுத்தார் என்றுதான் கூற வேண்டும்.
இந்த நிலையில் தொடர்ந்து இன்னமும் பைரேட் ஆஃப் தி கரேபியன் திரைப்படம் நல்ல வரவேற்பைதான் பெற்று வருகிறது. சமீபத்தில் ஜானி டெப் அந்த படத்தில் வருகிற மாதிரியான கெட்டப்பில் ஒரு மருத்துவமனைக்கு எண்ட்ரி கொடுத்துள்ளார்.
அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளை பார்த்த ஜானி டெப் அவர்களிடம் கேப்டன் ஜாக் ஸ்பாரோவாக நடித்து குதூகலப்படுத்தியுள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இந்த மாதிரி நடிகர்கள் வந்து குஷிப்படுத்துவது வழக்கம்தான்..