இதுதான் நீதிமன்றத்துக்கு வேலையா? தக் லைஃப் விஷயத்தில் கர்நாடகா நீதிமன்றத்திற்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்.. - Cinepettai

இதுதான் நீதிமன்றத்துக்கு வேலையா? தக் லைஃப் விஷயத்தில் கர்நாடகா நீதிமன்றத்திற்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்..

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தக் லைஃப் இந்த திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். திரைக்கு வந்த தக்லைஃப் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வசூலை இந்த திரைப்படம் பெற்று தரவில்லை இதற்கு நடுவே தக்லைஃப் குறித்து கன்னட சினிமாவில் ஒரு சர்ச்சை ஆரம்பத்தில் இருந்து வந்தது.

தமிழ் மொழியில் இருந்துதான் கன்னடம் மொழி வந்தது என்று மேடையில் பேசியிருந்தார் கமல். இதனால் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக தக்லைஃப் திரைப்படம் கன்னடத்தில் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டது.

மேலும் இது குறித்து கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதியப்பட்டது இதற்கு பதில் அளித்த கர்நாடக நீதிமன்றம் தான் பேசியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியது.

இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து சுப்ரீம் கோர்ட் தற்சமயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறும்போது கமல்ஹாசன் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது ஒரு நீதிமன்றத்தின் வேலை கிடையாது இது ஒரு அர்த்தமற்ற வழக்கு என்று கருத்து தெரிவித்துள்ளது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version