மணிரத்தினத்தை கேன்சல் செய்த ரஜினிகாந்த்.. வாய்ப்பை தட்டி தூக்கிய இளம் இயக்குனர்.!

ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தார் ரஜினிகாந்த். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினிகாந்த் முன்பு நடித்த தளபதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது.

எனவே அதே மாதிரியான இன்னொரு திரைப்படத்தை இயக்கலாம் என்று முடிவெடுத்திருந்தார். ஆனால் இப்பொழுது ரஜினிகாந்த் அவரது முடிவை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவான தக்லைஃப் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் ஏற்கனவே இயக்குனர் ஹெச் வினோத் ரஜினிகாந்திடம் ஒரு கதையை கூறியிருந்தாராம். அந்த கதை கிட்டத்தட்ட சதுரங்க வேட்டை மாதிரியான ஒரு கதை என்று கூறப்படுகிறது. வில்லன் மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் தான் அதில் கதாநாயகனின் கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்ததாம் எனவே ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில்தான் அடுத்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க போகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.