சூப்பர் ஸ்டாருடன் இன்னும் இரண்டு படங்கள்.. ஸ்கெட்ச் போட்ட லோகேஷ்..!

பல காலங்களாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு திரைப்படமாக ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படம் இருந்து வருகிறது.

பலருக்கும் ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் ஒரு படம் வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில்தான் கூலி திரைப்படம் உருவாகி வருகிறது.

கூலி திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் மிகுந்த திருப்தியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனவே அடுத்து ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு பிறகும் லோகேஷ் கனகராஜுக்கு வாய்ப்பு கொடுத்த முடிவு எடுத்து இருக்கிறாராம் ரஜினிகாந்த்.

மேலும் இன்னும் இரண்டு படங்களாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார் ரஜினிகாந்த் ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.