Tag Archives: Coolie

முதல் நாள் வசூலில் விஜய்யை முந்த முடியலை.. கூலி படத்தின் தமிழ்நாட்டு வசூல் ரிப்போர்ட்..!

தமிழ் சினிமாவில் இன்னமும் இளம் நடிகர்களுக்கு போட்டி நடிகராக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் வசூலில் சாதனை படைத்துவிடும் என்று கூறலாம்.

அப்படியாக தற்சமயம் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் கூலி. கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக வெளியிட்டதால் இதில் அமீர்கான், நாகார்ஜுனா என்று பல முக்கிய பிரபலங்களை நடிக்க வைத்து இருக்கின்றனர். இந்த நிலையில் கூலி திரைப்படம் தமிழ்நாடு அளவில் முதல் நாள் செய்த வசூல் என்பது விஜய் படத்தின் வசூலை முறியடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கூலி திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் 27 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கிறது. இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் 20 கோடி தான் வசூல் செய்து இருந்தது.

அந்த வகையில் கூலி திரைப்படம் அதிகமாக வசூல் செய்துள்ளது என்றாலும் கூட விஜய் நடித்த கோட் திரைப்படம் முதல் நாள் 31 கோடியும் அதற்கு முன்பு வெளியான பீஸ்ட் திரைப்படம் 36 கோடியும் வசூல் செய்துள்ளது.

எனவே தமிழக வசூலை பொருத்தவரை இன்னமும் விஜய் திரைப்படத்தை மிஞ்சிய ஒரு வசூலை கூலி திரைப்படம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ரெண்டு நாடுகளில் செம ஹிட்.. கூலி செய்த சாதனை. எந்த நாடுகள் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்று வருகிறது கூலி திரைப்படம். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார்.

பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் போதை பொருள் கடத்தல் தொடர்பான படங்களாகதான் இருக்கும். ஆனால் எந்த திரைப்படம் கொஞ்சம் மாற்றாக பொருட்களை கடத்துதல் மற்றும் உடல் உறுப்புகளை கடத்தலை அடிப்படையாகக் கொண்டு செல்கிறது.

இந்த திரைப்படம் வெளியான உடனே அதிக வரவேற்பை பெற்றது. முதல் நாளை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஏற்கனவே திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் ஆகி இருந்தன.

இதனை அடுத்து உலக அளவிலும் இப்பொழுது கூலி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் கூலி திரைப்படம் ஆஸ்திரேலியா மற்றும் நார்வே நாடுகளில் அதிக வரவேற்பு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அந்த நாட்டு திரையரங்குகளில் கூலி திரைப்படம் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி வருகிறதாம்.

3 நாளில் வசூலை வாரி குவித்த கூலி திரைப்படம்.. வசூல் ரிப்போர்ட்.!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்திற்கு ஏற்கனவே அதிக வரவேற்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் வெளியான உடனேயே கூலி திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக கிடைக்க துவங்கியது. இந்த நிலையில் வெளியான கூலி திரைப்படம் அமோகமான வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 3 நாட்களில் இந்த படம் 151 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

கூலி திரைப்படத்தில் நடிகர்களின் சம்பள விவரம்..! ரஜினி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரஜினி நடிப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் வருகிற ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்து அதிக வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணமே இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை வந்த ஆக்‌ஷன் திரைப்படங்கள் எல்லாமே பெருமளவில் வசூலை கொடுத்துள்ளன. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படமானது மற்ற லோகேஷ் படங்களை விடவுமே சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு தகுந்தாற் போல ஏற்கனவே கூலி படத்தை பார்த்த படத்தின் தயாரிப்பாளர் படம் குறித்து திருப்தி அடைந்துள்ளார். இந்த நிலையில் படம் பேன் இந்தியா படம் என்பதால் நிறைய நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். அவர்களின் சம்பள விவரம் இப்போது வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்திற்கு இந்த படத்திற்கான சம்பளமாக 200 கோடி பேசப்பட்டுள்ளது. 150 கோடி ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. பாக்கி 50 கோடி படத்தின் வெற்றிக்கு பிறகு கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரூபாய் 50 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

அதே போல நடிகர் அமீர்கான் இந்த படத்திற்கு 20 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். நடிகர் நாகர்ஜுனா 10 கோடி சம்பளம் வாங்கியுள்ளார்

நடிகர் சோபின் 1 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். ஸ்ருதிஹாசன் மற்றும் பூஜா ஹெக்தே ரூபாய் 3 கோடி சம்பளமாக பெற்றுள்ளனர். உப்பேந்திரா ராவ் 2 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என பேச்சுக்கள் இருக்கின்றன.

ஒரு தாடிக்காக இவ்வளவு வேலையா? கூலி படத்தில் நடந்த சம்பவம்..!

கூலி திரைப்படத்தில் பாட்ஷா படத்தை போலவே ஃபிளாஷ்பேக் கதைக்களம் ஒன்று இருக்கிறது. முப்பது வருடங்களாக தேவா கதாபாத்திரம் எந்த ஒரு தவறும் செய்யாமல் கூலியாக வாழ்ந்து வந்ததாக கதைக்களம் இருக்கிறது.

அப்படி என்றால் 30 வருடத்திற்கு முன்பு அவர் என்ன செய்தார் என்கிற ஒரு கேள்வி கதையில் இன்டர்வல் வரை இருந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதற்கு பிறகு தான் தேவாவின் பழைய கதை என்பது வர இருக்கிறது. இந்த நிலையில் பழைய கதையில் தாடி எதுவும் இல்லாமல் வரும் கதாபாத்திரமாக ரஜினியின் கதாபாத்திரம் இருக்கிறதாம். ஏனெனில் இளமை காலங்களில் திரைப்படங்களில் நடிக்கும் போது ரஜினிகாந்த் தாடி வைக்காமல் வருவது போல கதாபாத்திரம் அமைந்துள்ளது .

இந்த நிலையில் இந்த பிளாஷ்பேக் கதைகளத்தில் நடிப்பதற்கு ரஜினிக்கு சிக்கலான ஒரு விஷயம் ஏற்பட்டது. அது என்னவென்றால் கூலி திரைப்படத்தில் நடித்து வரும் அதே சமயம் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் ரஜினி நடித்து வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் தாடி வைத்ததால் ரஜினியின் ப்ளாஸ்பேக் கதாபாத்திரத்தில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.  இப்படி இருக்கும் பொழுது எப்படி தாடியை எடுக்க முடியும் என்று ரஜினி அதற்கு மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தாடியோடு படப்பிடிப்பை எடுத்து அதற்குப் பிறகு கிராபிக்ஸ் முறையில் அவரது முகத்தில் இருந்த தாடியை நீக்கி இருக்கின்றனர். இதற்காக பெரிய பொருள் செலவு ஆகி இருந்தாலும் கூட திரும்ப தாடி வளர்ந்து ஜெயிலர் 2 படபிடிப்பை நடத்துவது கடினம் என்பதால் இப்படியான ஒரு முடிவை எடுத்து இருக்கின்றனர்.

கூலி படத்தில் பா.ஜ.க செய்த சதி..! ரஜினி சும்மா இருக்க மாட்டார்.. பத்திரிக்கையாளர் கொடுத்த அப்டேட்.!

ரஜினி நடித்து தற்சமயம் வெளியாக இருக்கும் திரைப்படமான கூலி திரைப்படம் தணிக்கை குழுவால் ஏ சான்றிதழ் பெற்று இருக்கிறது பொதுவாக ஏ சான்றிதழ் பெரும் திரைப்படங்களை 18 வயதிற்கு மேலானவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற தகுதி பெற்ற படமாக பார்க்கப்படும்.

அதற்கு கீழே வயது உள்ளவர்கள் அந்த படத்திற்கு போக முடியாது இந்தியாவில் கூட இந்த விதிமுறை பெரிதாக பின்பற்றப்படவில்லை என்றாலும் கூட அமெரிக்கா மாதிரியான நாடுகளில் இந்த விதிமுறைகள் பரவலாக பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்த நிலையில் எதற்காக கூலி திரைப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்து பிஸ்மி பேசி இருக்கிறார் அதில் அவர் கூறும் பொழுது ஒன்றிய அரசுதான் தொடர்ந்து திமுகவிற்கு எதிராக இருக்கிறது.

இந்த நிலையில் கூலி திரைப்படத்தை தயாரித்தது திமுக குழுமம் தான் என்பதுஅவர்களுக்கு தெரியும். எனவே தான் அவர்களை பழி வாங்குவதற்காகவே ஏ சான்றிதழை வழங்கி இருக்கின்றனர்.

ஆனால் இந்த விஷயத்திற்காக எல்லாம் ரஜினிகாந்த் வந்து பேச மாட்டார் அவருக்கு இதெல்லாம் சின்ன விஷயம். ஒரு வேலை இந்த படத்தையே தணிக்கை குழு தடை செய்து வைத்திருந்தால் அப்பொழுது ரஜினிகாந்த் கண்டிப்பாக களத்தில் இறங்கி இருப்பார் என்று கூறியிருக்கிறார் பிஸ்மி.

 

 

ரிலீஸ்க்கு முன்னாடியே லியோவை மிஞ்சிய கூலி.. இதுதான் விஷயம்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. வருகிற 14-ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

கூலி திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனெனில் முதன்முதலாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படமாக கூலி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் எப்போது ஆக்சன் திரைப்படங்களை இயக்க துவங்கினாரோ அப்போது முதலே ரஜினியை வைத்து அவர் ஒரு திரைப்படம் இயக்கினால் நன்றாக இருக்கும் என்பது மக்களது ஆசையாக இருந்தது.

அதனை நிவர்த்தி செய்யும் வகையில்தான் கூலி படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புக்கிங் ஓபன் ஆன நிலையில் தற்சமயம் முக்கால்வாசி திரையரங்குகளில் காட்சிகள் முழு புக்கிங் ஆகி இருக்கின்றன.

வெளிநாடுகளை பொறுத்தவரை அங்கும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது கூலி திரைப்படம். லியோ படம் முன்பதிவில் அமெரிக்காவில் மொத்தமாக 1.80 மில்லியன் டாலர் வசூல் செய்து இருந்தது.

ஆனால் கூலி திரைப்படம் 1.86 மில்லியன் டாலர் வசூல் செய்து அந்த சாதனையை முறியடித்து இருக்கிறது. தொடர்ந்து வசூல் சாதனையிலும் கூட லியோ படத்தை கூலி முறியடிக்கலாம் என பேச்சுக்கள் இருக்கின்றன.

வாட்ச் வச்சி படத்துல சீன் வைக்க இதுதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த லோகேஷ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜை பொருத்தவரை அவர் திரைப்படம் குறித்து வெளியிடும் ப்ரோமோ வீடியோவிற்கும் படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் இருக்கும்.

விக்ரம் திரைப்படத்திலேயே இந்த விஷயத்தை பார்க்க முடியும். விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் சமைத்து வாழை இலையை விரித்து போட்டு உணவு வைத்து விட்டு ஆரம்பிக்கலாமா? என்று கேட்பார்.

ஆனால் அந்த ப்ரோமோவிற்கும் பிறகு வந்த விக்ரம் படத்திற்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை. அதே போலதான் கூலி திரைப்படத்திற்கும் ஒரு ப்ரோமோ வெளியாகி இருந்தது.

அந்த ப்ரோமோவில் வாட்ச் வைத்து செய்த ஒரு சங்கலியை கையில் எடுத்துக் கொண்டு வரும் ரஜினி ஒரு கூட்டத்தை அடிப்பதாக ப்ரோமோ இருந்தது.

வழக்கம் போல இந்த ப்ரோமோவிற்கும் படத்திற்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் இருக்காது என்பது மக்களது எண்ணமாக இருந்தது. ஆனால் அதற்கும் படத்திற்கும் இடையே தொடர்பு உண்டு என்பதை லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது கடிகாரங்களை செய்யும் ஒரு நிறுவனத்தில் தான் கூலியாக வேலை செய்கிறார் ரஜினிகாந்த். அதனால்தான் அப்படியான ஒரு காட்சியை அமைத்திருந்தேன் என்று கூறுகிறார் லோகேஷ் கனகராஜ்.

 

 

 

குடும்பமா பார்க்க முடியாது..! கூலி படத்துக்கு வந்த சோதனை..!

தற்சமயம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் திரைப்படமாக கூலி திரைப்படம் இருக்கிறது. கூலி திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஒரு திரைப்படமாகும்.

பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் திரைப்படங்களை சிறப்பாக எடுக்கக்கூடியவர். அதனால் கூலி திரைப்படமும் சிறப்பான திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த் திரைப்படத்தை பொறுத்தவரை அதை குடும்பமாக  சென்று பார்ப்பதை ரசிகர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் கூலி திரைப்படத்தில் அது கொஞ்சம் கஷ்டம் என தெரிகிறது.

ஏனெனில் கூலி திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளும் ரத்த காட்சிகளும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படத்தை 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் பார்க்க கூடாது என்பது விதிமுறை ஆகும். ஆனாலும் தமிழ்நாட்டில் பெரிதாக திரையரங்குகள் இந்த விதிமுறைகளை பின்பற்றுவது கிடையாது.

எனவே தமிழ்நாட்டின் குடும்பமாக சென்று பார்க்க வாய்ப்புகள் இருந்தாலும் கூட வெளிநாடுகளில் இந்த விதிமுறை முக்கியமானதாக பார்க்கப்படும்பதால் அங்கே குடும்பத்துடன் சென்று கூலி திரைப்படத்தை பார்ப்பது சிக்கலான விஷயமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

 

 

கூலி படத்தின் கதை இதுதான்.. ட்ரைலரில் லீக் ஆன படக்கதை..!

நேற்று ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த படம் குறித்த அப்டேட் வந்த நாள் முதலே படத்திற்கான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்து இருக்கிறது.

இந்த படம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் மட்டுமே கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் யார் வில்லம் என்பதையும் அனுமானிக்க முடியவில்லை.

ஆனால் பாட்ஷா மாதிரியான ஒரு கதை அமைப்பு கொண்ட திரைப்படம் என்பது மட்டும் டிரைலரை பார்க்கும் பொழுதே தெரிகிறது. அதன்படி தேவா என்கிற கதாபாத்திரம் பல பெரிய விஷயங்களை செய்து கேங்ஸ்டர் கும்பலுடன் பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்ட ஒருவராக அறியப்படுகிறார்.

ஆனால் சில காலங்களுக்கு பிறகு தேவா காணாமல் போய்விடுகிறார். அவர் எங்கே இருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை. பாட்ஷா திரைப்படத்தில் வருவது போலவே தேவா இறந்துவிட்டார் என்று பலரும் நினைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேவா ஒரு துறைமுகத்தில் கூலி வேலை பார்ப்பவராக பல வருடங்களாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்னும் சாகவில்லை என்கிற செய்தி இந்த ரவுடி கும்பலுக்கு மீண்டும் தெரிகிறது. இதனை தொடர்ந்து அவர் அந்த துறைமுகத்தில் தான் வேலை பார்க்கிறார் என்கிற செய்தியும் வருகிறது.

இதனை அடுத்து தேவா மீண்டும் களத்தில் இறங்குகிறார் அதற்கு பிறகு அவர் எப்படி இந்த வில்லன்களை ஒழிக்கிறார்என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்று பேசப்படுகிறது.

ரொம்ப நாள் கழிச்சி கூலி படத்தில் ரஜினி செஞ்ச விஷயம்.. ட்ரைலரில் கவனிச்சீங்களா..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ஏற்கனவே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே ஆக்‌ஷன் திரைப்படங்களை சிறப்பாக இயக்க கூடியவர் என்கிற பெயரை பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் ரஜினிகாந்தை வைத்து அவர் ஒரு படம் இயக்குகிறார் என்றால் அது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்கிற எண்ணம் பலருக்குமே இருந்து வருகிறது. அதற்கு தகுந்தாற் போலவே கூலி திரைப்படமும் அமைந்துள்ளது. ஆக்ஸ்ட் 14 இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்சமயம் வெளியாகி அதிக ட்ரெண்ட் ஆகி வருகிறது. படத்தின் கதையை பார்க்கும்போது ஏதோ ஒரு விஷயத்தை செய்துவிட்டு மறைமுகமாக 30 வருடங்கள் வாழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த் (தேவா).

இந்த நிலையில் அவரை திரும்ப வம்பிழுக்கிறது வில்லன் குழு. அவர்களை எதிர்த்து ரஜினிகாந்த் செய்யும் விஷயங்களே படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் இந்த படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளார்.

சிவாஜி திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது முதலே அவர் புகை பழக்கத்தை விட்டு விட்டார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் அவர் புகை பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளாரே என பேச்சுக்கள் இருக்கின்றன.

ஆனால் திரைப்படத்திற்காக எப்போதாவது ரஜினி புகைப்பிடிப்பதுண்டு. மற்றப்படி அவர் பழக்கமாக இதை பயன்படுத்துவதில்லை எனவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.

 

 

கூலி திரைப்படத்தில் வரும் விஜய்.. லோகேஷ் செய்த வேலை.. இது வேறயா?.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

இதனாலேயே இந்த திரைப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. கூலி திரைப்படத்தை பொருத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கும் lcu திரைப்படங்களில் ஒன்றாக கூலி இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

விக்ரம், லியோ, கைதி மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே lcu திரைப்படங்களில் கனெக்ட் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கூலி திரைப்படம் அப்படி இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் கூட ஒரு கேமியோ கதாபாத்திரமாக இந்த படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்கலாம் என்று ஒரு பக்கம் பேச்சுவார்த்தை சென்று கொண்டு இருக்கிறது.

ஒரு வேலை கமல்ஹாசன் நடிக்கும் பட்சத்தில் வெகு வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்தும் கமலஹாசனும் சேர்ந்து நடிக்கும் திரைப்படமாக கூலி திரைப்படம் இருக்கும். இதற்கு நடுவே நடிகர் விஜய் குறித்த ஒரு காட்சியும் வைக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

நேரடியாக விஜய் வருவது போன்ற காட்சியை வைக்க முடியாது ஆனாலும் லியோ கதாபாத்திரம் குறித்த காட்சி ஏதாவது வைக்கலாம் அல்லது விஜய் ரஜினிக்கு போன் செய்து பேசுவது போன்ற காட்சிகளை வைக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளதாம்.

அப்படி காட்சிகள் இருக்கும் பட்சத்தில் மேலும் கூலி திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.