இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.
இதனாலேயே இந்த திரைப்படம் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. கூலி திரைப்படத்தை பொருத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கும் lcu திரைப்படங்களில் ஒன்றாக கூலி இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
விக்ரம், லியோ, கைதி மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே lcu திரைப்படங்களில் கனெக்ட் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கூலி திரைப்படம் அப்படி இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் கூட ஒரு கேமியோ கதாபாத்திரமாக இந்த படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்கலாம் என்று ஒரு பக்கம் பேச்சுவார்த்தை சென்று கொண்டு இருக்கிறது.
ஒரு வேலை கமல்ஹாசன் நடிக்கும் பட்சத்தில் வெகு வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்தும் கமலஹாசனும் சேர்ந்து நடிக்கும் திரைப்படமாக கூலி திரைப்படம் இருக்கும். இதற்கு நடுவே நடிகர் விஜய் குறித்த ஒரு காட்சியும் வைக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
நேரடியாக விஜய் வருவது போன்ற காட்சியை வைக்க முடியாது ஆனாலும் லியோ கதாபாத்திரம் குறித்த காட்சி ஏதாவது வைக்கலாம் அல்லது விஜய் ரஜினிக்கு போன் செய்து பேசுவது போன்ற காட்சிகளை வைக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளதாம்.
அப்படி காட்சிகள் இருக்கும் பட்சத்தில் மேலும் கூலி திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.