ஒரு தாடிக்காக இவ்வளவு வேலையா? கூலி படத்தில் நடந்த சம்பவம்..!

கூலி திரைப்படத்தில் பாட்ஷா படத்தை போலவே ஃபிளாஷ்பேக் கதைக்களம் ஒன்று இருக்கிறது. முப்பது வருடங்களாக தேவா கதாபாத்திரம் எந்த ஒரு தவறும் செய்யாமல் கூலியாக வாழ்ந்து வந்ததாக கதைக்களம் இருக்கிறது.

அப்படி என்றால் 30 வருடத்திற்கு முன்பு அவர் என்ன செய்தார் என்கிற ஒரு கேள்வி கதையில் இன்டர்வல் வரை இருந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதற்கு பிறகு தான் தேவாவின் பழைய கதை என்பது வர இருக்கிறது. இந்த நிலையில் பழைய கதையில் தாடி எதுவும் இல்லாமல் வரும் கதாபாத்திரமாக ரஜினியின் கதாபாத்திரம் இருக்கிறதாம். ஏனெனில் இளமை காலங்களில் திரைப்படங்களில் நடிக்கும் போது ரஜினிகாந்த் தாடி வைக்காமல் வருவது போல கதாபாத்திரம் அமைந்துள்ளது .

இந்த நிலையில் இந்த பிளாஷ்பேக் கதைகளத்தில் நடிப்பதற்கு ரஜினிக்கு சிக்கலான ஒரு விஷயம் ஏற்பட்டது. அது என்னவென்றால் கூலி திரைப்படத்தில் நடித்து வரும் அதே சமயம் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் ரஜினி நடித்து வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் தாடி வைத்ததால் ரஜினியின் ப்ளாஸ்பேக் கதாபாத்திரத்தில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.  இப்படி இருக்கும் பொழுது எப்படி தாடியை எடுக்க முடியும் என்று ரஜினி அதற்கு மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தாடியோடு படப்பிடிப்பை எடுத்து அதற்குப் பிறகு கிராபிக்ஸ் முறையில் அவரது முகத்தில் இருந்த தாடியை நீக்கி இருக்கின்றனர். இதற்காக பெரிய பொருள் செலவு ஆகி இருந்தாலும் கூட திரும்ப தாடி வளர்ந்து ஜெயிலர் 2 படபிடிப்பை நடத்துவது கடினம் என்பதால் இப்படியான ஒரு முடிவை எடுத்து இருக்கின்றனர்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version