இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் கூலி. கூலி திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.
இந்த படத்திற்கு தொடர்ந்து அதிகப்படியான டிக்கெடுகள் புக்கிங் ஆகி வருகின்றன. இந்த நிலையில் கூலி திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதால் அதன் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
பெரும்பாலும் பெரிய நடிகர்கள் திரைப்படங்கள் என்றாலே அவற்றின் டிக்கெட் விலையை அதிகரித்து விற்பனை செய்வது திரையரங்குகளின் வேலையாக இருக்கிறது.
அரசு நிர்ணயித்த திரையரங்க டிக்கெட் விலை என்பது 200 ரூபாய்க்கும் குறைவு தான். ஆனால் திரையரங்குகள் அந்த விதிமுறையை பின்பற்றுவது கிடையாது. அதிகாரப்பூர்வமாக டிக்கெட் விலையை 3000, 4000 என்ற விலைக்கு விற்க முடியாது.
தமிழ்நாட்டில் இந்த கட்டுப்பாடு இருப்பதால் பெங்களூர் திரையரங்குகள் அந்த மாதிரி அதிக விலைக்கு விற்பதை பார்க்க முடியும். தமிழ்நாடு திரையரங்குகளை பொருத்தவரை அதிகாரப்பூர்வமாக இல்லாமல் தான் இந்த விலைக்கு விற்கிறார்கள்.
கூலி திரைப்படத்தைப் பொறுத்தவரை நிறைய திரையரங்கங்கள் ஆன்லைன் புக்கிங் இல் ஏற்கனவே முழுமை அடைந்து விட்டதாக போட்டுவிட்டு தனியாக 3000 ரூபாய்க்கு டிக்கெட்களை விற்பனை செய்வதாக பேச்சுக்கள் இருக்கின்றன.
இது திரை ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது இது குறித்து அரசும் கவனம் செலுத்தாமல் இருக்கிறது என்பது அவர்களுக்கு கவலையாக இருக்கிறது.