இயக்குனர் லோகேஷ் கனகராஜை பொருத்தவரை அவர் திரைப்படம் குறித்து வெளியிடும் ப்ரோமோ வீடியோவிற்கும் படத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் இருக்கும்.
விக்ரம் திரைப்படத்திலேயே இந்த விஷயத்தை பார்க்க முடியும். விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் சமைத்து வாழை இலையை விரித்து போட்டு உணவு வைத்து விட்டு ஆரம்பிக்கலாமா? என்று கேட்பார்.
ஆனால் அந்த ப்ரோமோவிற்கும் பிறகு வந்த விக்ரம் படத்திற்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை. அதே போலதான் கூலி திரைப்படத்திற்கும் ஒரு ப்ரோமோ வெளியாகி இருந்தது.
அந்த ப்ரோமோவில் வாட்ச் வைத்து செய்த ஒரு சங்கலியை கையில் எடுத்துக் கொண்டு வரும் ரஜினி ஒரு கூட்டத்தை அடிப்பதாக ப்ரோமோ இருந்தது.
வழக்கம் போல இந்த ப்ரோமோவிற்கும் படத்திற்கும் இடையே எந்த ஒரு தொடர்பும் இருக்காது என்பது மக்களது எண்ணமாக இருந்தது. ஆனால் அதற்கும் படத்திற்கும் இடையே தொடர்பு உண்டு என்பதை லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது கடிகாரங்களை செய்யும் ஒரு நிறுவனத்தில் தான் கூலியாக வேலை செய்கிறார் ரஜினிகாந்த். அதனால்தான் அப்படியான ஒரு காட்சியை அமைத்திருந்தேன் என்று கூறுகிறார் லோகேஷ் கனகராஜ்.