நேற்று நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் தமிழில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ளார். 36 வருடங்களுக்கு பிறகு மணிரத்தினம் மற்றும் கமல் இருவரும் ஒன்றிணையும் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று வெளியான தக் லைஃப் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தது. தற்சமயம் இது பட வசூலையும் கூட வெகுவாக பாதித்துள்ளது.

அந்த வகையில் முதல் நாளே தக் லைஃப் திரைப்படம் 17 கோடிதான் வசூல் செய்துள்ளது. ரெட்ரோ திரைப்படம் முதல் நாள் 19 கோடி வசூல் செய்த நிலையில் அதை விட தக் லைஃபின் வசூல் குறைந்துள்ளது.