சமீபத்தில் மாபெரும் பொருட் செலவில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் கல்கி 2898 ஏடி திரைப்படம். மகாபாரத கதையை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இந்த திரைப்படம் தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் ஆகியவற்றில் வெளியாகியுள்ளது.
அதன் கதை எப்படியிருக்கிறது என இப்போது பார்க்கலாம். படத்தின் கதைப்படி கதை காசியில் நடக்கிறது. காசியில் பைரவா எனப்படும் பிரபாஸ் வாழ்ந்து வருகிறார். அங்கு கடவுள்கள் வாழும் பகுதி இருக்கிறது. அதற்குள் செல்வது அவ்வளவு எளிது கிடையாது.
படத்தின் கதை:
அப்போது இருக்கும் பணத்தில் 1 மில்லியன் தொகை கொடுத்தால்தான் அவர்களால் அந்த இடத்திற்குள் சென்று வாழ முடியும். அதாவது பணக்காரர்கள் மட்டுமே அங்கு வாழ முடியும். ஏழைகள் வாழும் பகுதில் ஒரு புல் பூண்டுக்கூட இருக்காது.
மொத்த உலகமும் தண்ணீர் இல்லாமல் வறட்சியடைந்து காணப்படும். இந்த நிலையில் காம்ப்ளக்ஸ் என்னும் அந்த இடம் மட்டுமே செழிப்பாக இருக்கிறது. அதை உருவாக்கிய சுப்ரீம் எஸ்கின் என்பவர்தான் கடவுளாக கருதப்படுகிறார்.
இந்த நிலையில் ஒரு போராட்ட குழு அவர்களிடம் இருந்து தப்பித்து தனியாக வாழ்ந்து வருகிறது. இதிகாச கதைகளில் வரும் கல்கி அவதாரத்தின் பிறப்பு தங்கள் வாழ்க்கையை மாற்றும் என அவர்கள் கருதுகின்றனர்.
மகாபாரத கதை:
இதற்கு நடுவே மகாபாரத போர் கதை செல்கிறது. அதில் அசுவத்தாமன் பாண்டவ குலம் அழிவதற்காக எய்யும் அம்பு அபிமன்யுவின் மனைவி வயிற்றில் இருக்கும் சிசுவை கொல்கிறது.
இதனால் கோபமடைந்த கிருஷ்ணன் என்றென்றைக்கும் சாகா வரத்தை சாபமாக தருகிறார். போரால் ஏற்பட்ட வடு ஆறாமல் அந்த வாழ்க்கையை வாழ்கிறார் அசுவத்தாமன். இந்த நிலையில் கல்கி அவதாரத்தை வயிற்றில் கொண்டுள்ள பெண்ணை காப்பதன் மூலம் அசுவத்தாமனுக்கு முக்தி கிடைக்கும் என்கிற நிலை இருக்கிறது.
இந்த நிலையில் அதை சுமக்கும் தீபிகா படுகோனேவிடம் இருந்து அந்த குழந்தையை அபகரிக்க நினைக்கிறது காம்ப்ளக்ஸ். எனவே 1 மில்லியன் காசுகளை அவளை பிடிப்பவர்களுக்கு தருவதாக அறிவிக்கிறது. இந்த நிலையில் அவரை பிடிக்க பிரபாஸ் கிளம்புகிறார். அதே சமயம் அசுவத்தாமனும் அவரை காக்க கிளம்புகிறார்.
இதனை வைத்து கதை செல்கிறது.
படத்தின் பிரச்சனைகள்:
கதையம்சம், கிராபிக்ஸ் எல்லாம் மிரட்டும் வகையில் இருந்தாலும் கூட இந்தியாவின் சாயலே படத்தில் இல்லை. முழுக்க முழுக்க ஹாலிவுட் படங்களின் மீது மோகம் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்தின் கதை அதிகப்பட்சம் ஹாலிவுட்டில் வந்த அலிட்டா பேட்டல் ஏஞ்சல் திரைப்படத்தின் கதையை ஒத்திருப்பதை பார்க்க முடிகிறது. படத்தில் மாஸான ஒரு கதாபாத்திரத்தை மிக சாதாரணமாக இண்ட்ரோ செய்கின்றனர்.
ஹாலிவுட் தாக்கத்தில் இல்லாமல் நம்ம ஊர் பாணியில் இந்த படம் இருந்திருந்தால் இன்னமுமே சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் பரவலான கருத்தாக இருக்கிறது.