இரண்டாம் நாளே இந்த கதியா.. கல்கி படமும் பிரபாஸிற்கு கை கொடுக்காது போலயே!..

நேற்று நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உலகம் முழுக்க வெளியான திரைப்படம் கல்கி 2898 ஏடி. இந்த திரைப்படத்தை மாபெரும் பொருட் செலவில் படமாக்கியுள்ளனர். இதற்கு முன்பு பிரபாஸ் நடித்த பெரும்பாலான பேன் இந்தியா திரைப்படங்கள் தோல்வியைதான் கண்டுள்ளன.

பாகுப்பலி திரைப்படம் மூலமாகதான் முதன் முதலாக பேன் இந்தியா நட்சத்திரமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் பிரபாஸ். ஆனால் அந்த படத்திற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வியைதான் கண்டன.

தொடர்ந்து தோல்வி:

இந்த நிலையில்  அவர் நடித்த ராதே ஷியாம், சாகோ, ஆதிப்புருஷ் ஆகிய படங்கள் எல்லாம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பேன் இந்தியா திரைப்படங்களாக இருந்தும் கூட அந்த திரைப்படங்கள் படு தோல்வியையே கண்டன.

kalki 2898 AD
kalki 2898 AD

இந்த நிலையில் அடுத்து அவர் நடித்த சலார் திரைப்படம் கே.ஜி.எஃப் இயக்குனரின் திரைப்படம் என்பதால் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அடுத்து அவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கல்கி 2898 ஏடி.

கல்கி நிலை:

பெருமாளின் கல்கி அவதாரமானது கலியுகத்தின் இறுதியில் உருவாகும் என்பது புராண கதை. அதை அடிப்படையாக கொண்டு இந்த படம் நகர்கிறது. இது முதல் பாகம் மட்டுமே என கூறப்படுகிறது.

kalki

இன்னும் அடுத்தடுத்து பாகங்கள் வர இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.  இந்த நிலையில் 750 கோடி செலவில் பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் திரைப்படமாக கல்கி திரைப்படம் உள்ளது. ஆனால் அதே சமயம் 1500 கோடி வசூல் செய்தால்தான் அது படத்திற்கு ஓரளவு வெற்றியையாவது கொடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டாம் நாளே வசூலில் தொய்வை கண்டுள்ளது கல்கி திரைப்படம் முதல் நாள் 200 கோடி வரை வசூல் செய்த கல்கி நேற்று 100 கோடிதான் வசூலித்துள்ளது. இப்படியே போக போக வசூல் குறைந்தால் கண்டிப்பாக நினைத்த வசூல் கிடைக்காது என கூறப்படுகிறது.