தொடர்ந்து தென்னிந்தியாவில் சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே நிறைய பக்தி பாடல்களும் சூப்பர் ஹீரோ திரைப்படங்களும் தென்னிந்தியாவில் வந்த வண்ணம் இருக்கின்றன.
முக்கியமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நிறைய இந்த மாதிரியான திரைப்படங்கள் வருவதை பார்க்க முடிகிறது. இந்த படங்களுக்கும் வரவேற்புகள் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்து தெலுங்கில் மிராய் என்கிற ஒரு திரைப்படம் வரவிருக்கிறது. இந்த படம் தமிழில் வெளியாக இருக்கிறது. 12 செப்டம்பர் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இதற்கு முன்பு நடிகர் தேஜா சஜா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை கொடுத்த அனுமன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தேஜா சஜா சூப்பர் ஹீரோ திரைப்படமாக மிராய் திரைப்படத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.
தீய சக்திகளை கொண்ட வில்லன் தொடர்ந்து பல தீமைகளை செய்து வரும் நிலையில் அதனை சரி செய்ய உதவும் ஆயுதமாக ராமர் பயன்படுத்திய மிராய் என்கிற ஆயுதம் இருக்கிறது. அதனை கண்டடையும் கதாநாயகன் எப்படி அதன் மூலமாக சக்திகளை பெற்று வில்லனை அடக்குகிறார் என்பதாக படத்தின் கதை அமைந்து இருக்கிறது.
இந்த படத்தின் டிரைலர் வெளியாகி தற்சமயம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
விலங்குகள் உலகை அடிப்படையாகக் கொண்டு வால்டு டிஸ்னி நிறுவனத்தில் வெளியான அனிமேஷன் திரைப்படம்தான் Zootopia. விலங்குகள் உலகில் இருக்கும் முயல் மற்றும் நரியை கதை நாயகர்களாக கொண்டு படத்தின் கதை செல்லும்.
சிறுவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படமாக இந்த திரைப்படம் இருந்தது. Zootopia நகரமானது பலவித விலங்குகள் மனிதர்கள் போலவே நாகரிகமாக வாழும் ஒரு நகரமாகும்.
அங்கு நடக்கும் குற்றங்களை கண்டறியும் போலீஸ் அதிகாரிகளாகத்தான் இந்த நரியும் முயலும் வருகின்றன. இவர்கள் இருவருக்கும் இடையே நம்பிக்கை ஏற்படுவதை அடிப்படையாகக் கொண்டு தான் முதல் பாகம் சென்று கொண்டிருந்தது.
இரண்டாம் பாகத்தைப் பொறுத்தவரை Zootopia நகரில் பாம்புகளுக்கு அனுமதியே கிடையாது இந்த நிலையில் அத்துமீறி நுழையும் ஒரு பாம்பை இவர்கள் இருவரும் தடுப்பது கதையாக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் இப்பொழுது வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் மாபெரும் பொருட் செலவில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் கல்கி 2898 ஏடி திரைப்படம். மகாபாரத கதையை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இந்த திரைப்படம் தற்சமயம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் ஆகியவற்றில் வெளியாகியுள்ளது.
அதன் கதை எப்படியிருக்கிறது என இப்போது பார்க்கலாம். படத்தின் கதைப்படி கதை காசியில் நடக்கிறது. காசியில் பைரவா எனப்படும் பிரபாஸ் வாழ்ந்து வருகிறார். அங்கு கடவுள்கள் வாழும் பகுதி இருக்கிறது. அதற்குள் செல்வது அவ்வளவு எளிது கிடையாது.
படத்தின் கதை:
அப்போது இருக்கும் பணத்தில் 1 மில்லியன் தொகை கொடுத்தால்தான் அவர்களால் அந்த இடத்திற்குள் சென்று வாழ முடியும். அதாவது பணக்காரர்கள் மட்டுமே அங்கு வாழ முடியும். ஏழைகள் வாழும் பகுதில் ஒரு புல் பூண்டுக்கூட இருக்காது.
மொத்த உலகமும் தண்ணீர் இல்லாமல் வறட்சியடைந்து காணப்படும். இந்த நிலையில் காம்ப்ளக்ஸ் என்னும் அந்த இடம் மட்டுமே செழிப்பாக இருக்கிறது. அதை உருவாக்கிய சுப்ரீம் எஸ்கின் என்பவர்தான் கடவுளாக கருதப்படுகிறார்.
இந்த நிலையில் ஒரு போராட்ட குழு அவர்களிடம் இருந்து தப்பித்து தனியாக வாழ்ந்து வருகிறது. இதிகாச கதைகளில் வரும் கல்கி அவதாரத்தின் பிறப்பு தங்கள் வாழ்க்கையை மாற்றும் என அவர்கள் கருதுகின்றனர்.
மகாபாரத கதை:
இதற்கு நடுவே மகாபாரத போர் கதை செல்கிறது. அதில் அசுவத்தாமன் பாண்டவ குலம் அழிவதற்காக எய்யும் அம்பு அபிமன்யுவின் மனைவி வயிற்றில் இருக்கும் சிசுவை கொல்கிறது.
இதனால் கோபமடைந்த கிருஷ்ணன் என்றென்றைக்கும் சாகா வரத்தை சாபமாக தருகிறார். போரால் ஏற்பட்ட வடு ஆறாமல் அந்த வாழ்க்கையை வாழ்கிறார் அசுவத்தாமன். இந்த நிலையில் கல்கி அவதாரத்தை வயிற்றில் கொண்டுள்ள பெண்ணை காப்பதன் மூலம் அசுவத்தாமனுக்கு முக்தி கிடைக்கும் என்கிற நிலை இருக்கிறது.
இந்த நிலையில் அதை சுமக்கும் தீபிகா படுகோனேவிடம் இருந்து அந்த குழந்தையை அபகரிக்க நினைக்கிறது காம்ப்ளக்ஸ். எனவே 1 மில்லியன் காசுகளை அவளை பிடிப்பவர்களுக்கு தருவதாக அறிவிக்கிறது. இந்த நிலையில் அவரை பிடிக்க பிரபாஸ் கிளம்புகிறார். அதே சமயம் அசுவத்தாமனும் அவரை காக்க கிளம்புகிறார்.
இதனை வைத்து கதை செல்கிறது.
படத்தின் பிரச்சனைகள்:
கதையம்சம், கிராபிக்ஸ் எல்லாம் மிரட்டும் வகையில் இருந்தாலும் கூட இந்தியாவின் சாயலே படத்தில் இல்லை. முழுக்க முழுக்க ஹாலிவுட் படங்களின் மீது மோகம் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்தின் கதை அதிகப்பட்சம் ஹாலிவுட்டில் வந்த அலிட்டா பேட்டல் ஏஞ்சல் திரைப்படத்தின் கதையை ஒத்திருப்பதை பார்க்க முடிகிறது. படத்தில் மாஸான ஒரு கதாபாத்திரத்தை மிக சாதாரணமாக இண்ட்ரோ செய்கின்றனர்.
ஹாலிவுட் தாக்கத்தில் இல்லாமல் நம்ம ஊர் பாணியில் இந்த படம் இருந்திருந்தால் இன்னமுமே சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் பரவலான கருத்தாக இருக்கிறது.
ஒவ்வொரு முறை ஆஸ்கார் விருது கொடுக்கும்பொழுதும் தமிழிலிருந்து ஒரு திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்காக அனுப்பி வைப்பது உண்டு ஆனால் இதுவரை ஒரு திரைப்படம் கூட ஆஸ்கார் விருதை வென்றது கிடையாது இருந்தாலும் 1960களில் இருந்து இந்த முயற்சி என்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது அப்படியாக இதுவரை தமிழ் சினிமாவில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களின் விபரங்களை இப்பொழுது பார்க்கலாம்
துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு வெகு காலங்களாக அஜித்தின் எந்த படமும் திரைக்கு வராமல் இருக்கிறது. ஏனெனில் துணிவு திரைப்படம் முடிந்த உடனேயே உலக சுற்றுலா ஒன்றிற்கு சென்றுவிட்டார் அஜித். மேலும் அந்த சமயத்தில் விக்னேஷ் சிவன் படத்தில்தான் இவர் நடிக்க இருந்தார்.
ஆனால் பிறகு படத்தின் இயக்குனராக மகிழ் திருமேனி கமிட் ஆனார். அதனை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வெகு காலங்கள் ஆகியும் இன்னமும் முடியாமலே இருக்கிறது.
லைக்கா நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி பற்றாக்குறையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் அடுத்து குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு நடிக்க சென்றுவிட்டார் அஜித். இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பானது இப்போதுதான் துவங்கியது. ஆனால் அதற்குள்ளாகவே ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் அந்த படத்தின் ஓ.டி.டி உரிமத்தை வாங்கியுள்ளது. அதுவும் 95 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் போன வருட இறுதியிலேயே ஒரு வருடத்திற்கான திரைப்படங்களை வாங்கிவிட்டது. இடை இடையே அன்னப்பூரணி மாதிரியான சின்ன படங்களை வாங்கினாலும் பெரிய படம் எதையும் அது வாங்கவில்லை. இந்த நிலையில் அஜித்திற்காக மட்டும் இப்போது விதிமுறையை மாற்றுவது நியாயமா என்கின்றனர் நெட்டிசன்கள்.
பழைய தமிழ் படங்களில் சில காட்சிகள் மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பு பெற்றதாக இருக்கும். இப்போது கூட மக்கள் அந்த காட்சிகளை கண்டால் சிரிக்காமல் இருக்க மாட்டார்கள். அப்படியாக சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் புராணம் திரைப்படத்திலும் சில காட்சிகள் உண்டு.
அதில் தருமி என்னும் புலவராக நாகேஷ் நடித்திருப்பார். அப்போது படத்தில் ஒரு காட்சியில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் புலவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டிருக்கும். அதை கேட்டு நாகேஷ் படபடப்புடன் நடந்துக்கொண்டே பேசும் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.
அந்த காட்சியை எடுப்பதற்கு யோசனையே கிடையாதாம். அன்று நாகேஷ் முன்பே படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டார். ஆனால் சிவாஜி இன்னும் வரவில்லை. எனவே அதற்கு முன்பு இப்படி ஒரு காட்சியை எடுக்கலாம் என நாகேஷ் கூறியுள்ளார்.
படக்குழுவும் சரி என எடுத்துள்ளனர். இறுதியில் அந்த காட்சி அற்புதமாக அமைந்தது. படத்திலும் அது வரவேற்பை பெற்றது. இப்போது வரை திருவிளையாடல் புராணம் படத்தை கூறினால் தருமி நினைவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக அந்த காட்சியும் இருந்தது என கூறலாம்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips