Tag Archives: அனிமேஷன் திரைப்படம்

மகா அவதார் நரசிம்மா ஓ.டி.டியில் எப்போ வருது.. அப்டேட்..!

அனிமேஷன் திரைப்படமாக வெளிவந்து இப்பொழுது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது மகா அவதார் நரசிம்மா.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்றான நரசிம்மா அவதாரத்தின் கதையைக் கொண்டு வெகு காலங்களாகவே திரைப்படங்கள் வந்துள்ளன ஆனால் அனிமேஷனில் ஒரு சிறப்பான திரைப்படமாக மகா அவதார் நரசிம்மா வந்தது.

அனிமேஷன் திரைப்படம் என்பதால் காட்சிப்படுத்துவதில் மிக பிரம்மாண்டமான ஒரு படமாக இந்த படம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் இந்திய அளவில் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எப்பொழுது ஓடிடியில் வரும் என்று பலரும் ஆர்வமாக எதிர்பார்க்க துவங்கியிருக்கின்றனர். இந்த படம் ஏற்கனவே திரையரங்களில் நல்ல வெற்றியை கொடுத்து விட்டதால் சில நாட்களிலேயே ஓடிடியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை அடுத்து ஆகஸ்ட் 3 வது வாரம் அல்லது செப்டம்பரில் இந்த படம் ஓ டி டிக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

விலங்குகள் உலகில் நடக்கும் சுவாரஸ்யங்கள்.. வில்லனாக வந்த பாம்பு.. Zootopia 2 Trailer out..!

விலங்குகள் உலகை அடிப்படையாகக் கொண்டு வால்டு டிஸ்னி நிறுவனத்தில் வெளியான அனிமேஷன் திரைப்படம்தான் Zootopia. விலங்குகள் உலகில் இருக்கும் முயல் மற்றும் நரியை கதை நாயகர்களாக கொண்டு படத்தின் கதை செல்லும்.

சிறுவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படமாக இந்த திரைப்படம் இருந்தது. Zootopia  நகரமானது பலவித விலங்குகள் மனிதர்கள் போலவே நாகரிகமாக வாழும் ஒரு நகரமாகும்.

அங்கு நடக்கும் குற்றங்களை கண்டறியும் போலீஸ் அதிகாரிகளாகத்தான் இந்த நரியும் முயலும் வருகின்றன. இவர்கள் இருவருக்கும் இடையே நம்பிக்கை ஏற்படுவதை அடிப்படையாகக் கொண்டு தான் முதல் பாகம் சென்று கொண்டிருந்தது.

இரண்டாம் பாகத்தைப் பொறுத்தவரை Zootopia நகரில் பாம்புகளுக்கு அனுமதியே கிடையாது இந்த நிலையில் அத்துமீறி நுழையும் ஒரு பாம்பை இவர்கள் இருவரும் தடுப்பது கதையாக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் இப்பொழுது வரவேற்பை பெற்று வருகிறது.

அனிமேஷனில் வந்த மகா அவதார் நரசிம்மா.. திரைப்படம் எப்படி இருக்கு..!

இயக்குனர் அஸ்வின் குமார் இயக்கத்தில் தற்சமயம் உருவாகி வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் மகா அவதார் நரசிம்மா.

இந்த திரைப்படத்தை கே.ஜி.எஃப் திரைப்படத்தை தயாரித்த ஹம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. வழக்கமான நரசிம்மரின் கதைதான் என்றாலும் கூட பெரிய பட்ஜெட்டில் அனிமேஷனில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு முன்பு விஷ்ணு பகவானின் தசாவதாரங்கள் பலவும் படமாக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எந்த ஒரு படமும் உருவாக்கப்படவில்லை.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மற்ற அவதாரங்களும் படமாக்கப்பட இருப்பதாக ஹம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தற்சமயம் தியேட்டரில் வெளியாக இருக்கும் நரசிம்மா திரைப்படம் கோச்சடையான் திரைப்படம் போல அனிமேஷனில் சொதப்பி இருக்குமா என்பது பலரது கேள்வியாக இருந்தது.

ஆனால் இந்த திரைப்படத்தின் அனிமேஷன் இப்பொழுது வரவேற்பை பெற்று இருக்கிறது. படத்தின் கதை ஓட்டமும் மிகச் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் நரசிம்மா அவதாரத்தின் கதையைப் பொறுத்தவரை பெரும்பான்மையான மக்களுக்கு அந்த படத்தின் கதை ஏற்கனவே தெரியும் என்று தான் கூற வேண்டும்.

அப்படிப்பட்ட நிலையில் கதையை சுவாரசியமாக கொண்டு செல்வது சவாலான விஷயமாகும் இருந்தாலும் கூட படத்தை மிக சுவாரசியமாக கொண்டு சென்று இருக்கின்றனர். முதல் நாளிலேயே இந்த படத்திற்கு வரவேற்பும் அதிகமாக கிடைத்து இருக்கிறது.

ஆரம்பத்தில் குறைவான திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் அடுத்து இந்த படத்திற்கான திரையரங்குகள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.