விலங்குகள் உலகை அடிப்படையாகக் கொண்டு வால்டு டிஸ்னி நிறுவனத்தில் வெளியான அனிமேஷன் திரைப்படம்தான் Zootopia. விலங்குகள் உலகில் இருக்கும் முயல் மற்றும் நரியை கதை நாயகர்களாக கொண்டு படத்தின் கதை செல்லும்.
சிறுவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற திரைப்படமாக இந்த திரைப்படம் இருந்தது. Zootopia நகரமானது பலவித விலங்குகள் மனிதர்கள் போலவே நாகரிகமாக வாழும் ஒரு நகரமாகும்.
அங்கு நடக்கும் குற்றங்களை கண்டறியும் போலீஸ் அதிகாரிகளாகத்தான் இந்த நரியும் முயலும் வருகின்றன. இவர்கள் இருவருக்கும் இடையே நம்பிக்கை ஏற்படுவதை அடிப்படையாகக் கொண்டு தான் முதல் பாகம் சென்று கொண்டிருந்தது.
இரண்டாம் பாகத்தைப் பொறுத்தவரை Zootopia நகரில் பாம்புகளுக்கு அனுமதியே கிடையாது இந்த நிலையில் அத்துமீறி நுழையும் ஒரு பாம்பை இவர்கள் இருவரும் தடுப்பது கதையாக இருக்கிறது. இதன் ட்ரெய்லர் இப்பொழுது வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழில் குடும்ப திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் இயக்குனர் பாண்டியராஜ் முக்கியமானவர். பசங்க திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ்.
அதற்கு பிறகு அவருக்கு தமிழில் நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது அவரது இயக்கத்தில் வந்த கடை குட்டி சிங்கம், நம்ம வீட்டுப்பிள்ளை மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்தன.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பாண்டிராஜ் பேசியிருந்தார். அப்பொழுது அவரிடம் ஏன் எப்பொழுதுமே குடும்ப படமாக எடுக்கிறீர்கள் வேறு ஏதாவது திரைப்படங்கள் எடுக்கலாமே என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த பாண்டிராஜ் கதகளி திரைப்படம் நான் இயக்கிய திரைப்படம்தான்.
அது பெரும்பாலும் பலருக்கும் தெரியாது. யாராவது என்னை குடும்ப இயக்குனர் என்று கூறினால் அப்பொழுது விவரம் தெரிந்த ஒரு சிலர் மட்டும் கதகளி இவருடைய திரைப்படம் தான் என்று கூறுவார்கள். ஒருவேளை அந்த திரைப்படம் மூலமாக எனக்கு ஒரு நல்ல மதிப்பு கிடைத்திருந்தால் அதே மாதிரியான படங்களை செய்திருப்பேன்.
ஆனால் இப்பொழுது வரை குடும்ப பட இயக்குனராக தான் என்னை பார்க்கிறார்கள் தயாரிப்பாளர்களும் அந்த மாதிரியான கதையை நான் சொல்லும் பொழுது தான் நம்பி படத்தை தயாரிக்கிறார்கள் எனவேதான் திரும்பவும் குடும்ப திரைப்படங்களை இயக்கி வருகிறேன் என்று கூறியிருக்கிறார் பாண்டிராஜ்.
நகை கடை விளம்பரத்துக்கு அழைத்து சென்று நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி செய்த விஷயம் இப்போது சினிமா வட்டாரத்தில் அதிக பேச்சு பொருளாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே இந்த நடிகை டாப் நடிகையாக இருந்து வந்துள்ளார்.
ஆனாலும் கூட இப்போது இவருக்கு இப்போது பட வாய்ப்புகள் குறைவாகதான் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் தொடர்ந்து கடை திறப்பு விழா மாதிரியான விஷயங்களை செய்து வருகிறார். அப்படியாக ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற நிகழ்வை சமீபத்தில் இவர் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறும்போது கடை திறப்பு விழாவிற்கு முதல் நாள் எனக்கு அறை போட்டிருப்பதாக அந்த ஹோட்டல் மேலாளர் கூறினார். மறுநாள் காலையிலேயே கடை திறப்பு விழா என்பதால் நானும் முதல் நாளே அங்கு சென்று தங்கினேன்.
அப்போது எனக்கு போன் செய்த மேனாஜர் உங்களுக்கு எல்லா வசதியும் சரியாக இருக்கிறதா? என கேட்டார். நான் அது ஒன்றும் பிரச்சனை இல்லை என கூறினேன். பிறகு அவர் என்னிடம் ஹோட்டல் உரிமையாளர் உங்களை பார்க்க வரவேண்டும் என கூறினார் என்றார்.
நாளை விழாவில் பார்த்துக்கொள்ளலாம் எதற்கு இப்போது பார்க்க வருகிறார் என நான் கேட்டேன். அவர் உங்களது ரசிகர் உங்களுக்காக பரிசு வாங்கி வருகிறார் என்று மேலாளர் கூறினார். பிறகு அந்த முதலாளி வந்த பிறகுதான் அவர்கள் நோக்கம் என்னவென்று புரிந்தது. பிறகு எனக்கு இதில் விருப்பமில்லை என அந்த நபரை அனுப்பிவிட்டேன்.
இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. மறுநாள் விடிந்ததுமே அந்த அறையை காலி செய்துவிட்டு சென்றுவிட்டேன் என கூறியுள்ளார் நடிகை.
பாலிவுட்டில் டைம் லூப் கதை அம்சத்தில் உருவான திரைப்படம் தான் Bhool chuk maaf. இந்த திரைப்படத்தை கர்ணன் சர்மா என்பவர் இயக்கி இருக்கிறார்.
நடிகர் ராஜ்குமார் ராவ் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் ஒரு திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு செல்கிறது படத்தின் கதாநாயகனான ரஞ்சன் திவாரிக்கு ஒரு காதலி இருக்கிறார். அவரை திருமணம் செய்ய வேண்டும் என்றால் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் ரஞ்சனுக்கு ஏற்படுகிறது.
அதனை தொடர்ந்து ரஞ்சன் குறுக்கு வழியில் அந்த அரசு வேலையை பெற நினைக்கிறார். அதற்காக ஒரு ஏஜண்டிடம் சென்று பணமும் கட்டுகிறார். இந்த நிலையில் அவருக்கு ஒரு அரசு வேலையும் கிடைக்கிறது. அதனை தொடர்ந்து திருமணத்திற்கு முதல் நாள் மஞ்சள் விழா என்கிற விழா நடக்கிறது.
அந்த விழா முடிந்ததும் தூங்க செல்கிறார் ரஞ்சன் ஆனால் மறுநாள் எழும்பொழுது திருமண நாளுக்கும் பதிலாக மீண்டும் அந்த மஞ்சள் நாளே இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் இரவு தூங்கும் போது மறுநாள் முப்பதாம் தேதி வருவதற்கும் பதிலாக 29ஆம் தேதியிலேயே அவருடைய வாழ்க்கை நிற்கிறது. இந்த நிலையில் இது குறித்து ஜோசியரிடம் கேட்கும் பொழுது அவரால் காயப்பட்ட ஆத்மாவின் காரணமாக தான் இப்படி நடப்பதாக கூறுகிறார் ஜோசியர்.
இதனை தொடர்ந்து எதனால் இந்த பிரச்சனை தனது வாழ்வில் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து ரஞ்சன் சரி செய்வது தான் கதையாக இருக்கிறது.
ஆரம்பத்தில் கதாநாயகனாக வேண்டும் என்கிற ஆசையில் தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர் நடிகர் பப்லு. அதற்கு பிறகு அவருக்கு துணை கதாபாத்திரங்களில் தான் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது.
நிறைய திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் வகையிலான கதாபாத்திரம் அவருக்கு கிடைத்தது. ஆனாலும் கூட அவரால் கதாநாயகனாக ஆகவே முடியவில்லை.
இப்பொழுது வரையிலும் அது கை கூடாத விஷயமாக தான் இருந்து வருகிறது சமீப காலங்களாக பப்லு நிறைய சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். அப்படியாக சமீபத்தில் ஒரு வீடியோவில் அவர் பேசும்பொழுது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நிலையில் எல்லாம் நான் இருந்து கொண்டு சினிமாவிற்கு வரவில்லை எனது அப்பா காவலாளியாக இருந்தார் எனவே சினிமாவிற்கு வரும்பொழுது பொருளாதார ரீதியாக எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
எனக்கு இருந்த பிரச்சனை எல்லாம் பார்ப்பதற்கு அஜித் மாதிரி இருக்க ஏன் ஹீரோ ஆகவில்லை என்று தொடர்ந்து அனைவரும் கேட்டதுதான் என்று கூறியிருக்கிறார் பப்லு.
தமிழ் சினிமாவில் இப்பொழுது அதிக வசூல் வேட்டை நிகழ்த்தும் நடிகர்களில் முக்கியமானவராக சிவகார்த்திகேயனும் மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவிற்குள் வந்தாலும் கூட சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் அவர் நடித்த அமரன் திரைப்படம் அவர் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை சிவகார்த்திகேயனுக்கு பெற்று கொடுத்தது. அதேபோல் காமெடியாக இல்லாமல் முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன் சீரியஸாக நடித்த திரைப்படம் என்றால் அது அமரன் திரைப்படம் தான்.
இந்த நிலையில் அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே மாஸ் கதாநாயகர்களுக்கான கதைக்களமாகதான் இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மதராஸி.
sivakarthikeyan
இந்த திரைப்படம் குறித்து இப்பொழுது ஒரு அப்டேட் வெளியாகியிருக்கிறது சிவகார்த்திகேயன் மதராசி திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் வருவதாக கூறப்படுகிறது. மீசை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கதாபாத்திரமும் தாடி வைத்துக் கொண்டு இன்னொரு கதாபாத்திரமும் என இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அது அப்பா மகன் கதாபாத்திரமாகவும் இருக்கலாம் ஒருவேளை இரட்டை கதாபாத்திரமாக இருக்கும் பட்சத்தில் சீமா ராஜா திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் படமாக இந்த திரைப்படம் இருக்கும்.
நடிகர் விஜய் போன வருடம் ஜனவரி மாதம் தனது கட்சி பெயரை அறிவித்தார். அதிலிருந்து தொடர்ந்து கட்சி தொடர்பான பணிகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் விஜய்.
இப்பொழுது அவர் பெரிதாக திரைப்படங்களில் நடிப்பது கூட இல்லை. அவர் கடைசியாக நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் மட்டும் அடுத்த வருடம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்றபடி தொடர்ந்து அரசியலில்தான் அவர் ஈடுபாடு காட்டி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தான் அவரது கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் மாதம் விஜய் ஒரு மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறார். அந்த மாநாடு முடித்த கையோடு தேர்தல் வரையிலும் தொடர்ந்து தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் விஜய்.
இந்த நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் போஸ்டர் ஒன்று சமீபத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் முதல்வர் விஜய்யின் திட்டங்கள் என்பதாக ஒரு வசனம் இடம் பெற்று இருந்தது.
இன்னும் விஜய் முதல்வராகவே ஆகாமல் இருக்கும் நேரத்தில் எப்படி இப்படி ஒரு வசனம் போஸ்டரில் வந்தது என பார்க்கும் பொழுது இது ஒரு படத்தின் ப்ரமோஷன் என தெரிகிறது.
யாதும் அறியான் என்கிற ஒரு திரைப்படத்தின் டிரைலரில்தான் இந்த போஸ்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அப்பு குட்டி, தினேஷ், தம்பி ராமய்யா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது ஒரு ஹாரர் திரைப்படம் என்று கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் கதைப்படி 2026 ஆம் ஆண்டு கதை நடக்கிறது அந்த சமயத்தில் விஜய் முதல்வராக இருப்பதாக குறிப்பிடும் படி அப்படியான வசனம் இடம் பெற்ற செய்தி தாள் கொண்ட ஒரு காட்சி அந்த படத்தில் இருக்கிறது அதுதான் இப்பொழுது ட்ரண்டாகி வருகிறது.
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான திரைப்படம் மார்கன். பொதுவாகவே கிரைம் திரில்லர் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனிப்பட்ட வரவேற்பு உண்டு.
அப்படியாக உருவான ஒரு திரைப்படம்தான் மார்கன் திரைப்படம் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இருக்கிறார். ஒரு கொலைகாரன் பெண்களின் உடலை கருப்பாக மாற்றி கொலை செய்வதை வேலையாக கொண்டிருக்கிறான்.
அதனை துப்பறியும் போலீஸ் அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார் இந்த திரைப்படத்தை லியோ ஜான்பால் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பட்ஜெட் 12 கோடி ஆகும்.
இந்த நிலையில் படம் வெளியாகி இத்தனை நாள் கடந்த நிலையில் படத்தின் பட்ஜெட்டை விடவும் அதிக லாபத்தை எடுத்து கொடுத்திருக்கிறது மார்கன் திரைப்படம். மொத்தமாக இதுவரை 14 கோடிக்கு ஓடி இருக்கிறது விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்.
விஜய் ஆண்டனியை பொறுத்தவரை மிக குறைவான பட்ஜெட்டில்தான் படம் நடிப்ப்பார். இந்த 12 கோடி என்பதே அவருக்கு அதிகபட்ஜெட் தான் என்றாலும் கூட இந்த படம் நல்ல வெற்றியை கொடுத்து இருப்பதால் அடுத்த தொடர்ந்து விஜய் ஆண்டனி பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இளையராஜாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான ஒரு இசை அமைப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்தது அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஏ ஆர் ரகுமானின் மனைவியின் வழக்கறிஞர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி ஏ ஆர் ரகுமானை அவரது மனைவி பிரிவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானுவின் பக்கம் இருந்து விவாகரத்து குறித்து அறிவிப்பு வந்த அடுத்த சில மணி நேரங்களில் ஏ.ஆர் ரகுமான் அவர் தரப்பிலிருந்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் 29 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து விட்டோம் 30 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைப்போம் என்று நினைத்தேன் ஆனால் அதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது. என பதிவிட்டு இருந்தார் ஏ.ஆர் ரகுமான் இந்த நிலையில் இது குறித்த பேச்சுக்கள் தற்சமயம் சினிமா வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்தது.
ar rahman wife
கிதார் கலைஞரின் முடிவு:
இதற்கு நடுவே ஏ.ஆர் ரகுமானின் இசை குழுவில் கிதார் கலைஞராக பணிபுரிந்து வரும் மோகினி டே என்பவரும் தனது கணவர் மார்க்கை பிரிவதாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார்.
சாய்ரா பானு தனது விவாகரத்து அறிவித்த சில மணி நேரங்களிலேயே மோகினி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் நானும் எனது கணவர் மார்க்கும் பிரிந்து விட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் இருவரும் பேசி ஒருமித்தமாக இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்.
mohini dey
மேலும் பிரிவிற்கு பிறகும் நாங்கள் நண்பர்களாக இருப்போம் என்றும் அவர் கூறி இருக்கிறார். இந்த நிலையில் இது ரசிகர்களுக்கு இடையே சந்தேகத்தை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டு விவாகரத்தையும் அவர்கள் சேர்த்து பேசி வருகின்றனர்.
தற்சமயம் மலையாளத்தில் நடந்து வரும் பாலியல் குற்றங்கள் தொடர்பான விஷயங்கள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. மலையாள சினிமாவில் சில காலங்களுக்கு முன்பு பிரபல நடிகை ஒருவர் காரிலேயே கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து மலையாள நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை உருவாகிறது. இதனை தொடர்ந்து நடிகைகள் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களுக்கு நடந்த பாலியல் குற்றங்களை கூறி இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இந்த நிலையில் அரசு நடவடிக்கை எடுக்கும் வகையில் ஹேமா கமிட்டி என்கிற கமிஷனை உருவாக்கியது. இவர்கள் தொடர்ந்து சினிமாவில் நடக்கும் பாலியல் குற்றங்களை கண்டுபிடித்து தற்சமயம் அதை வெளியிலும் கொண்டு வந்து உள்ளனர்.
கேரள சினிமா பாதிப்புகள்
கேரள சினிமாவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் நடிகை ஷர்மிளாவிடம் இதுக்குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் நடித்திருக்கிறார் ஷர்மிளா.
மொத்தம் இவர் 38 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதில் 20 திரைப்படங்கள் மலையாளத்தில் நடித்தவைதான், எனவே மலையாளத்தில் நடித்த பொழுது இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தது உண்டா என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சர்மிளா நான் பெரும்பாலும் மலையாளத்தில் இந்த மாதிரி பிரச்சனைகளை சந்தித்து கிடையாது. ஏனெனில் நான் படத்தில் கமிட் ஆகும்பொழுது இயக்குனருடனோ அல்லது தயாரிப்பாளருடனோ அட்ஜஸ்ட்மெண்ட் வைத்துக் கொள்ளும்படி வாய்ப்பு இருக்குமா என்று கேட்டு விடுவேன்.
தமிழ் சினிமாவில் உள்ள நிலை:
அப்படி ஒருவேளை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினால் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் இதனால் தான் நான் குறைவான படங்களில் நடித்திருக்கிறேன். இருந்தாலும் கூட அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
ஆனால் தமிழ் சினிமாவோடு ஒப்பிடும் பொழுது மலையாள சினிமா மோசமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளை குறிவைத்து பின்னாலேயே சுற்றுவார்கள். ஆனால் வயதான பிறகு நம்மை அக்கா என்றோ அம்மா என்றோ அவர்கள் அழைக்க துவங்கி விடுவார்கள்.
ஆனால் மலையாள சினிமாவில் வயதான பிறகு கூட நம்மை விட மாட்டார்கள் தமிழ் சினிமாவை பார்க்கும் பொழுது முன்பு இருந்த அளவிற்கு பாலியல் பிரச்சனைகள் இல்லை. ஏனெனில் விஷால் கார்த்தி போன்ற நடிகர்கள் வந்த பிறகு அதில் அவர்கள் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர் என்று கூறுகிறார் ஷர்மிளா..
சில பிரபலங்கள் திரைத்துறையில் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவராக இருப்பார்கள் ஏனெனில் அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு சமூக வலைதளங்கள் அதிகமாக உதவுகின்றன.
இன்ஸ்டாகிராம், யூடியூப் மாதிரியான தளங்களில் தொடர்ந்து தங்களது முகங்களை பதிவு செய்வதன் மூலம் இவர்கள் மக்கள் மத்தியில் எளிமையாக வரவேற்பை பெற்று வருகின்றனர். அப்படியாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்தான் விஜே ஆன நடிகை ஐஸ்வர்யா ரகுபதி.
மேடைகளில் பேசி பிரபலம்:
நிறைய படம் திரைப்படம் தொடர்பான விழாக்களில் விஜே ஆக இருந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதேபோல நிறைய குறும்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அதன் மூலமாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி சினிமாவில் வாய்ப்புகளை வாங்குவதற்கு ஐஸ்வர்யா ரகுபதி முயற்சி செய்து வருகிறார்.
சீரியல்களிலும் அதே சமயம் முயற்சி செய்து வருகிறார். ஐஸ்வர்யா ரகுபதி கருப்பு நிறம் கொண்ட பெண்கள் என்றாலே அவர்கள் வாய்ப்பைப் பெற்று சினிமாவில் வாழ்வது கடினமான விஷயமாக இருக்கும். இருந்தும் தொடர்ந்து போராடி தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ரகுபதி சமீபத்தில் கூட கூல் சுரேஷ் அவருக்கு மாலை போட்டது தொடர்பாக அதிக சர்ச்சை ஒன்று உருவானது.
இருந்தாலும் இந்த மாதிரியான தடைகளை எல்லாம் தாண்டி தொடர்ந்து கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் அவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஒரு நாடகத்தின் ஆடிஷனுக்கு சென்ற தன்னுடைய அனுபவத்தை குறித்து பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் ஐஸ்வர்யா.
நாடக வாய்ப்பு:
அதில் அவர் கூறும் பொழுது நான் ஒரு நாடகத்திற்கான ஆடிஷனுக்கு செல்ல விரும்பினேன். அப்பொழுது அவர்கள் எனக்கு போன் செய்து நாடகத்தின் கதைப்படி தங்கை கதாபாத்திரம்தான் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தங்கை கொஞ்சம் மாடர்னான ஆள் என்பதால் வரும் பொழுது வெஸ்டன் உடை ஏதும் இருந்தால் கொண்டு வாருங்கள் என்று கூறினர்.
சரி என்று நானும் சில மாடர்ன் உடைகளை எடுத்து சென்று அவற்றை அணிந்து கொண்டு வந்தேன். மேக்கப் செய்து கொண்டு வர சொன்னார்கள் நானும் மேக்கப் செய்து கொண்டு வந்தேன். அப்பொழுது எனக்கு அண்ணனாக நடிக்கும் இரண்டு நடிகர்கள் இருந்தார்கள்.
அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் வெள்ளையாக ஆப்பிள் போல இருந்தார்கள் ஆனால் நான் கருப்பாக இருந்தேன். அதுவே எனக்கு பெரிய தடுமாற்றத்தை கொடுத்தது எப்படி இவர்களுக்கு என்னை தங்கையாக நடிக்க வைக்க போகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இயக்குனர் அதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை இருந்தாலும் என்னை பார்த்து கோபமடைந்து என்னம்மா நீ கதைப்படி ஒரு பணக்கார வீட்டு செல்ல பெண். ஆனால் கையில் ஒரு வளையல் கூட இல்லாமல் வந்து நிற்கிறாய் கழுத்தில் ஒரே ஒரு சின்ன செயின் மட்டும் போட்டு இருக்கிறாய், பார்க்க பணக்கார பெண் போல இல்லை, வேலைக்காரி போல இருக்கிறாய் என்று கூறிவிட்டார் அப்பொழுது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது என்று அந்த அனுபவத்தை பகிர்ந்து இருந்தார் ஐஸ்வர்யா ரகுபதி.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் மாதவன் மாதவனை பொருத்தவரை அவருக்கு முதல் திரைப்படமே வெற்றி படமாக அமைந்தது. அலைபாயுதே 100 நாட்களை தாண்டி ஹிட் கொடுத்த ஒரு திரைப்படமாகும்.
இப்பொழுது வரைக்கும் வெகுவாக பேசப்படும் திரைப்படமாக அது இருக்கிறது அதற்கு பிறகு மூன்றாவதாக அவர் நடித்த மின்னலே திரைப்படம் தமிழில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாகும். மாதவனைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து சினிமாவில் மார்க்கெட் பெற்று வரும் ஒரு நடிகர் என்றுதான் கூற வேண்டும்.
இப்பொழுதும் மாதவன் ஒரு திரைப்படத்தில் நடித்தாலும் அதை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் அவர் நடித்த ராக்கெட்ரி என்கிற திரைப்படம் அதிக வரவேற்பு பெற்று இருந்தது. இந்திய விஞ்ஞானியான நம்பி நாராயணன் என்பவரின் சொல்லப்படாத வாழ்க்கையை திரைப்படம் ஆக்கினார் மாதவன்.
தொடர்ந்து வரவேற்பு:
அதை அவரே இயக்கியிருந்தார். அதற்கு முன்பு மாதம் நடித்த விக்ரம் வேதா இறுதிச்சுற்று மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே தமிழில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் ஆகும். வயதான தோற்றத்தில் நடித்தாலும் கூட இப்பொழுது மாதவனின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு அப்படியேதான் இருந்து கொண்டிருக்கிறது.
அவரும் வழக்கமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காமல் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் மாதவன் செய்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.
கேரளாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் காவியா மாதவன் இவர் கேரளாவில் நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்திருக்கிறார் வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு திரைப்படங்களில் நடிக்கக் கூடியவர் என்று கூறலாம்.
நடிகை சொன்ன விஷயம்:
இவர் நடித்த 5 சுந்தரிகள் மாதிரியான சில திரைப்படங்கள் கேரளாவில் அதிகமாக பிரபலமான படங்களாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு விருது வழங்கும் விழாவில் மாதவன் அவருக்கு விருது வழங்கினார் அப்பொழுது மாதவனிடம் பேசிய காவியா மாதவன் தமிழ்நாடு மக்கள் ஒரு முறை எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்து எனக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தனர்.
ஏன் என்னை பார்க்க இவ்வளவு பேர் வருகிறார்கள் என்று எனக்கு சந்தேகமாக இருந்தது ஏனெனில் நான் தமிழ் படங்களில் நடித்ததே கிடையாது. அதற்கு பிறகு தான் தெரிந்தது காவ்யா மாதவன் என நான் பெயர் வைத்திருப்பதால் என்னை மாதவனின் மனைவி என்று அனைவரும் நினைத்து விட்டனர் என்று கூறியிருந்தார் காவியா மாதவன்.
அதற்கு பதில் அளித்த மாதவன் அதனால் ஒன்றும் பரவாயில்லை நான் என்னுடைய முதல் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது எனக்கு இருந்த முதல் வசனமே அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளலாம் என்பதுதான் என்று கூறியிருந்தார். அட்ஜஸ்ட் என்று கூறியவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த நடிகை பிறகு சாதாரண நிலைக்கு வந்ததை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips