தமிழ் சினிமாவில் இப்பொழுது அதிக வசூல் வேட்டை நிகழ்த்தும் நடிகர்களில் முக்கியமானவராக சிவகார்த்திகேயனும் மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவிற்குள் வந்தாலும் கூட சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் அவர் நடித்த அமரன் திரைப்படம் அவர் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை சிவகார்த்திகேயனுக்கு பெற்று கொடுத்தது. அதேபோல் காமெடியாக இல்லாமல் முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன் சீரியஸாக நடித்த திரைப்படம் என்றால் அது அமரன் திரைப்படம் தான்.
இந்த நிலையில் அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே மாஸ் கதாநாயகர்களுக்கான கதைக்களமாகதான் இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மதராஸி.

இந்த திரைப்படம் குறித்து இப்பொழுது ஒரு அப்டேட் வெளியாகியிருக்கிறது சிவகார்த்திகேயன் மதராசி திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் வருவதாக கூறப்படுகிறது. மீசை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கதாபாத்திரமும் தாடி வைத்துக் கொண்டு இன்னொரு கதாபாத்திரமும் என இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அது அப்பா மகன் கதாபாத்திரமாகவும் இருக்கலாம் ஒருவேளை இரட்டை கதாபாத்திரமாக இருக்கும் பட்சத்தில் சீமா ராஜா திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் படமாக இந்த திரைப்படம் இருக்கும்.