Tag Archives: மதராஸி

அந்த தெலுங்கு படம் மாதிரி இருக்கே… மதராஸி ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவராக இருந்து வருகிறார். அவரது நடிப்பில் வரும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு என்பது இருந்து வருகிறது.

அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன் என்றுதான் கூற வேண்டும். அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பெரிய இயக்குனர்கள் படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார் சிவகார்த்திகேயன்.

அந்த வகையில் அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் மதராஸி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரைலரை பார்க்கும்போது நானி நடித்த சூர்யா சாட்டர்டே திரைப்படத்தின் சில விஷயங்கள் இருப்பது தெரிவதாக கூறப்படுகிறது.

சூர்யா சாட்டர்டே திரைப்படத்தில் யார் என்ன வம்பு செய்தாலும் ஹீரோ அவர்களை சனிக்கிழமை மட்டுமே அடிப்பார் என்கிற மாதிரியாக திரைப்படத்தின் கதை அம்சம் இருக்கும். அதே போல இதிலும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு விதிமுறை இருக்கலாம் என கூறப்படுகிறது.

எப்படி இருந்தாலும் இப்போது இந்த ட்ரைலர் வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் முறையாக இரட்டை வேடத்தில் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த அப்டேட்..!

தமிழ் சினிமாவில் இப்பொழுது அதிக வசூல் வேட்டை நிகழ்த்தும் நடிகர்களில் முக்கியமானவராக சிவகார்த்திகேயனும் மாறி இருக்கிறார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவிற்குள் வந்தாலும் கூட சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் அவர் நடித்த அமரன் திரைப்படம் அவர் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை சிவகார்த்திகேயனுக்கு பெற்று கொடுத்தது. அதேபோல் காமெடியாக இல்லாமல் முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன் சீரியஸாக நடித்த திரைப்படம் என்றால் அது அமரன் திரைப்படம் தான்.

இந்த நிலையில் அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே மாஸ் கதாநாயகர்களுக்கான கதைக்களமாகதான் இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மதராஸி.

sivakarthikeyan

இந்த திரைப்படம் குறித்து இப்பொழுது ஒரு அப்டேட் வெளியாகியிருக்கிறது சிவகார்த்திகேயன் மதராசி திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் வருவதாக கூறப்படுகிறது. மீசை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கதாபாத்திரமும் தாடி வைத்துக் கொண்டு இன்னொரு கதாபாத்திரமும் என இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அது அப்பா மகன் கதாபாத்திரமாகவும் இருக்கலாம் ஒருவேளை இரட்டை கதாபாத்திரமாக இருக்கும் பட்சத்தில் சீமா ராஜா திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் படமாக இந்த திரைப்படம் இருக்கும்.

சிவகார்த்திகேயன் மதராஸி பட கதை.. வெளியிட்ட நடிகை ருக்மணி வசந்த்.!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் மதராஸி. அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் விஜய் அஜித் மாதிரியான ஒரு கமர்சியல் நடிகராக மாறிவிட்டார்.

அதற்கு முன்பு வரை சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடி கதைகளங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் இப்பொழுது அவர் தேர்ந்தெடுக்கும் கதை களங்கள் எல்லாமே மாறி இருக்கிறது.

அந்த வகையில் அவர் அடுத்து நடிக்கும் மதராசி மற்றும் பராசக்தி ஆகிய திரைப்படங்கள் இரண்டுமே விஜய் அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு இணையான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்கள் தான்.

இந்த நிலையில் மதராஸி திரைப்படத்தில் நடித்த நடிகை ருக்மணி வசந்த் அந்த படம் குறித்து சில விஷயங்களை கூறியிருக்கிறார். அவர் அதில் அவர் கூறும் பொழுது ஏ ஆர் முருகதாஸ் வந்த ஆரம்ப காலகட்டங்களில் அவர் எடுத்த திரைப்படங்கள் ஒரு மாதிரியாக இருந்தது.

அந்த மாதிரியான ஒரு படமாக தான் மதராஸி இருக்கும். எனவே பழைய ஏ ஆர் முருகதாஸின் கதை அமைப்பை இந்த திரைப்படத்தில் நீங்கள் பார்க்க முடியும் என்று கூறியிருக்கிறார். ஆரம்ப காலகட்டங்களில் ஏ.ஆர் முருகதாஸ் ரமணா தீனா மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் எனவே அந்த மாதிரியான ஒரு படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர் முருகதாஸ் படம் பேரும் ஏற்கனவே வந்ததுதான்..! வெளியான எஸ்.கே 23 டைட்டில்.!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவராக மாறியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். பெரும்பாலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே டாப் ஹிட் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு தனக்கான மார்க்கெட்டை அவர் அதிகரித்திருக்கிறார். இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து வெற்றி இயக்குனர்களின் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

ஏனெனில் அமரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. எனவே அதற்கு பிறகு நடிக்கும் திரைப்படங்களும் அதே அளவிலான வெற்றியை கொடுத்தால்தான் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் என்பது அதிகரிக்கும்.

இந்த நிலையில் அமரன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கொங்காரா திரைப்படங்களில் நடித்து வருகிறார் எஸ்.கே. இதில் சுதா கொங்காரா இயக்கும் பராசக்தி திரைப்படமானது எஸ்.கேவின் 25 ஆவது திரைப்படமாகும்.

பராசக்தி திரைப்படத்திற்கே டைட்டில் வெளியாகிவிட்டது. ஆனால் அதற்கு முன்பே படப்பிடிப்பை துவங்கிய ஏ.ஆர் முருகதாஸ் திரைப்படத்திற்கு இன்னமும் டைட்டில் வெளியாகவில்லையே என காத்திருப்பில் இருந்தனர் ரசிகர்கள்.

அதை பூர்த்தி செய்யும் வகையில் தற்சமயம் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு மதராசி என பெயரிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் சிவகார்த்திகேயனின் படங்களின் பெயர்கள் ஏற்கனவே தமிழில் வந்த படங்களில் டைட்டிலாகதான் இருக்கும்.

அந்த வகையில் இந்த பெயரில் நடிகர் அர்ஜுன் ஏற்கனவே 2006 இல் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். வட இந்தியாவில் தமிழ்நாட்டு காரர்களை மதராஸி என்றுதான் அழைப்பார்கள். எனவே அதனை மையப்படுத்தி இந்த படத்தின் கதை இருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.