23 படங்களில் நான் செய்யாத விஷயம்.. ஓப்பன் டாக் கொடுத்த சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் ஒரு நடிகராக இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். மிக குறைவான காலகட்டங்களிலேயே தமிழில் உள்ள டாப் நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதற்கு சிவகார்த்திகேயனின் கதை தேர்ந்தெடுப்புகளே முக்கிய காரணம் என்று கூறலாம். கடைசியாக இவர் நடித்த அமரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

அதனை தொடர்ந்து இப்பொழுது ஒவ்வொரு படத்தின் கதைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரீமேக் திரைப்படங்களில் நடிப்பது குறித்து பேசி இருந்தார் சிவகார்த்திகேயன்.

அதில் அவர் கூறும் பொழுது எனக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தின் கதையில் திரும்ப நடிப்பதற்கு ஆர்வம் கிடையாது ஒவ்வொரு முறையும் புது கதைகளில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் உண்டு.

அதனால்தான் இதுவரை நடித்த 23 திரைப்படங்களில் ஒரு படம் கூட ரீமேக் படமாக நான் நடித்தது கிடையாது. அதே மாதிரி வேற்று மொழி திரைப்படங்களிலும் நான் நடித்தது கிடையாது என்று கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.