Tag Archives: சினிமா செய்திகள்

ஊதுப்பத்தி கொழுத்துறதுக்குள்ள கடைல அலப்பறை.. கடுப்பாகி கேப்டன் செய்த வேலை!.. பகிர்ந்த காமெடி நடிகர்..!

எம்ஜிஆர்க்கு பிறகு தமிழ் சினிமாவில் மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்தவராக அறியப்படுபவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் இறந்த பிறகுதான் அவரை பற்றிய நிறைய விஷயங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கின.

விஜயகாந்துடன் பணிபுரிந்த பலரும் கூட அவரைக் குறித்து நிறைய விஷயங்களை பகிர துவங்கினர். விஜயகாந்த் அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அங்கு பணிபுரிபவர்களுக்கு நல்ல சாப்பாடு இருக்க வேண்டும் என்பதில் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்.

vijayakanth1

அப்படி ஒரு வேளை சாப்பாடு சரியில்லை என்றால் அவரே அந்த படப்பிடிப்பில் சாப்பிட மாட்டார் மற்றவர்களையும் சாப்பிட விட மாட்டார் வெளியில் இருந்தாவது காசு கொடுத்து சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட வைப்பாராம்.

விஜயகாந்த் உதவி:

அது போல படம் வெற்றி அடைந்தாலும் அந்த படத்தில் நடித்தவர்களுக்கு நன்மைகள் செய்யக்கூடியவராக இருந்திருக்கிறார் விஜயகாந்த். இந்த நிலையில் வானத்தபோல திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜயகாந்த் செய்ததை குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் பவா லட்சுமணன்.

இவர் பிரபலமான காமெடி நடிகர் அவர் வானத்தைப்போல திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்பொழுது படத்தில் நடித்த சின்ன நடிகர்களை எல்லாம் அழைத்த விஜயகாந்த் பக்கத்தில் இருக்கும் ஒரு ஜவுளி கடை பெயரை கூறி அங்கு சென்று ஐயாயிரம் ரூபாய்க்கு உங்களுக்கு வேண்டிய ஆடைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஜவுளிக்கடை சம்பவம்:

Vijayakanth-1-1

அதற்கான பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என்று கூறியிருக்கிறார் சரி என்று அவர்களும் அங்கு சென்ற பொழுது கடையை திறக்காமல் இருந்திருக்கிறது.

இதனை பார்த்து விஜயகாந்துக்கு போன் செய்த அவர்கள் சார் இன்னும் கடையே திறக்கவில்லை என கூறியிருக்கின்றனர். உடனே சத்தம் போட்ட விஜயகாந்த் மதுரைக்காரன் என்பதை காட்டிவிட்டீர்களே என்று திட்டிவிட்டு திரும்ப வரும்படி கூறிவிட்டார்.

திரும்ப அவர்கள் சென்ற பிறகு டெய்லர் ஒருவரை அழைத்து அவர்களுடைய ஆடை அளவுகளை எடுத்துக்கொண்டு எல்லாம் வீட்டுக்கு போங்க நானே ட்ரெஸ்ஸை வாங்கி அனுப்புறேன் என்று கூறினார் விஜயகாந்த் அதேபோல அவரே வாங்கி அனுப்பி வைத்தார் என்று கூறுகிறார் பவா லெட்சுமணன்.

அந்த விஷயத்தில் த்ரிஷாவை நிராகரித்த விஜய்… கண்ணீர் விட்டு அழுத த்ரிஷா..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே விஜய்யும் த்ரிஷாவும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். விஜய் ஒரு நடிகையுடன் அதிகமான திரைப்படங்களில் நடித்தார் என்றால் அது திரிஷாவாகதான் இருக்கும்.

அத்தனை திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக நடித்திருக்கின்றனர். இன்னமும் கூட அடுத்து விஜய் கோட் திரைப்படத்திற்கு பிறகு நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று பேச்சுக்கள் இருந்தது.

ஆனால் தற்சமயம் சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது ஏனெனில் தொடர்ந்து விஜய் மற்றும் திரிஷா குறித்து நிறைய கிசுகிசுகளும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. முக்கியமாக அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக வெகு காலங்களாகவே பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

த்ரிஷா சர்ச்சை:

vijay trisha

சமீபத்தில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் போட்டோ வெளியிட்டபோது கூட அது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு திரிசா மற்றும் விஜய் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை கூறியுள்ளார்.

போக்கிரி திரைப்படத்தில் அசின் கதாநாயகியாக நடிக்க இருந்த பொழுது திரிஷாவிற்கு அதனால் அதிர்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போக்கிரி படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அந்த படத்திற்கு சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது.

அந்த நிகழ்ச்சிக்கு திரிஷாவை அழைப்பார்கள் என்று திரிஷா ஆவலுடன் காத்திருந்தாராம். ஆனால் கடைசிவரை அவருக்கு அந்த படத்திற்காக அழைப்பிதழே வரவில்லை.

அப்செட்டான திரிஷா:

ஏன் படத்தின் வெற்றி விழாவிற்கு திரிஷாவைஅழைக்கவில்லை என கேட்ட பொழுது திரிஷாவின் பெயர் லிஸ்ட்டில் இல்லை என கூறிவிட்டனர். இயக்குனர் பிரபு தேவாவிடம் இது குறித்து கேட்ட பொழுது விஜய் சார் கால் செய்வார் என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு விஜய் கண்டிப்பாக அழைப்பார் என்று காத்திருந்தார் த்ரிஷா. ஆனால் விஜய் அவரை அழைக்கவே இல்லை இதனால் கவலைப்பட்ட திரிஷா அப்பொழுது கண்ணீர் விட்டு அழுது புலம்பி இருக்கிறார்.

அதற்கு பிறகு விஜய்க்கு போன் செய்த த்ரிஷாவின் அம்மா திரிசாவுடன் ஒரு படம் தோல்வி அடைந்தவுடன் அவரை இப்படி ஓரங்கட்டிவிட்டிர்களே தம்பி என்று கேட்டிருக்கிறார். ஏனெனில் அதற்கு முன்பு திரிஷாவுடன் ஜோடியாக இவர் நடித்த ஆதி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அதற்கு பிறகு ஹோட்டலில் திரிஷாவை சந்தித்து சமாதானப்படுத்தினாராம் விஜய். அவர்களது வீடியோ ஒன்று கூட பொழுது வைரலானதாக கூறுகிறார் செய்யாறு பாலு.

கேரவனுக்குள் நுழைந்து சட்டையை கழட்டிய உதவி இயக்குனர்..! காஜல் அகர்வாலுக்கு நடந்த சோகம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் காஜல் அகர்வால். 2004 ஆம் ஆண்டு முதலே சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக முயற்சி செய்து வந்தார். அவர் அதற்கு முன்பு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

தமிழில் முதன் முதலாக பழனி திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் காஜல் அகர்வால். அதன் பிறகு அவருக்கு தெலுங்கு சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் நான் மகான் அல்ல திரைப்படம் அவருக்கு நல்ல கம் பேக்காக இருந்தது.

kajal agarwal

அதற்கு பிறகு பல படங்களில் நடித்தார் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பிறகு காஜல் அகர்வால் நடிப்பதை விட்டுவிட்டார். இருந்தாலும் தற்சமயம் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். இந்த நிலையில் உதவி இயக்குனர் ஒருவர் படப்பிடிப்பில் செய்த செயல்களை அவர் தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது ஒருமுறை நான் படப்பிடிப்பில் இருந்தப்போது எனது கேரவானுக்கு அனுமதியே இல்லாம ஒரு உதவி இயக்குனர் வந்தார். அவர் வந்த வேகத்திற்கு சட்டையை கழட்டினார். அதை பார்த்து நான் அதிர்ச்சியானேன்.

அவர் தனது சட்டையை கழட்டி காட்டினார். அதில் அவரது இதயத்திற்கு மேலாக எனது பெயரை பச்சை குத்தி வைத்திருந்தார். என் மேல் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தவே அப்படி செய்தார். ஆனால் அதற்கு அவர் பயன்படுத்திய வழி தவறாக இருந்தது.

இதனால் அந்த படப்பிடிப்பு முடியும் வரையிலுமே அவர் மீது எனக்கு பயம் இருந்தது என்கிறார் காஜல் அகர்வால்.

என் அப்பாவுக்கு கூட அதை பண்ணுனது கிடையாது!.. சிவாஜிக்கு பண்ணுனேன்.. கண் கலங்கிய ரஜினிகாந்த்!..

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் வந்து தற்சமயம் தமிழ்நாட்டிலேயே முக்கிய நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். எளிமையான குடும்பத்தில் பிறப்பவர்கள் கூட பெரும் உச்சத்தை தொடலாம் என்பதை மீண்டும் ஒருமுறை தமிழ் சினிமாவில் நிரூபித்தவர் ரஜினிகாந்த்.

அவர் தனித்துவமான நடிப்பு திறமையை கொண்டிருந்தார் அவரது ஸ்டைலின் காரணமாகவே அவருக்கு அதிகமான ரசிகர்கள் உண்டானார்கள். நாடகங்களில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே மிகவும் ஸ்டைலாக நடிக்க கூடியவர் ரஜினிகாந்த்.

சிவாஜி கணேசனுக்கும் ரஜினிகாந்திற்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது. கிட்டத்தட்ட ரஜினிகாந்த் சிவாஜியை தனது தந்தை போன்றே கருதினார். ஒருமுறை சிவாஜி கணேசன் எதார்த்தமாக பேசி கொண்டிருக்கும்போது நான் இறந்தால் என் பிணத்தோடு நீ கூட வருவியாடா என கேட்டுள்ளார் சிவாஜி.

அதிர்ச்சியடைந்த ரஜினி ஏன் ஐயா அப்படி கேட்கிறீர்கள் என கேட்டுள்ளார். இல்லை நீ வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பிற்கு சென்றுவிடுகிறாய். இமயமலைக்கு செல்கிறாய். நான் இறக்கும்போது நீ இருப்பியோ இல்லையோ அதான் கேட்டேன் என கூறியுள்ளார்.

ஆனால் சிவாஜி கணேசன் இறந்தப்போது சரியாக அங்கு வந்து சேர்ந்தார் ரஜினிகாந்த். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது என் அப்பா இறந்தப்போது கூட நான் கூட இருக்கவில்லை. ஆனால் சிவாஜி இருந்தப்போது அவருடனேயேதான் நான் இருந்தேன் என கூறியுள்ளார் ரஜினிகாந்த்!.

ஏண்டா அந்த படத்துல நடிச்சோம்னு ஃபீல் பண்ணியிருக்கேன்!.. ஓப்பனாக கூறிய சந்தானம்.

தமிழ் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் சந்தானம். வடிவேலுவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் சந்தானம். காமெடியனாக நடித்து வந்த சந்தானம் நாளடைவில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார்.

காமெடி கதாநாயகனாக இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்சமயம் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் கூட எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

தற்சமயம் நடிகர் சந்தானமும் கூட அதிகமாக பேட்டிகள் கொடுத்து வருகிறார். சில பேட்டிகளில் அவருக்கு சினிமாவில் நடந்த காமெடியான அனுபவங்களை அவர் பகிர்ந்துக்கொள்வதை பார்க்க முடிகிறது. தற்சமயம் அப்படியான ஒரு செய்தியையும் அவர் பகிர்ந்துள்ளார்.

சந்தானத்திடம் கேள்வி கேட்கும்போது நீங்கள் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டுள்ளீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்தானம் என் கண்ணில் ஏன் விழுந்தாய் என்கிற ஒரு படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த திரைப்படத்தை கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக படமாக எடுத்தனர். அவ்வபோது அந்த படப்பிடிப்பிற்கு என்னை அழைப்பது வழக்கம். இப்படியாக ஒருநாள் என்னை காரில் அழைத்து சென்று ஒரு ரோட்டில் நிற்க வைத்துவிட்டு கையில் வாக்கி டாக்கியை மட்டும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். பிறகு எனக்கு போன் செய்து சார் காரில் கேமரா இருக்கு டக்குன்னு ஏதாவது காமெடி பண்ணுங்க சார் என கூறிவிட்டனர். அப்போதுதான் யோசித்தேன்.

இவர்கள் கண்ணில் நாம் பட்டிருக்க கூடாது என்று என நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.

தனி ஒருவன் 2 வில்லன் யாருன்னு சொல்லவா!.. ஜெயம் ரவிக்கு அண்ணன் வைத்த ட்விஸ்ட்!..

ஜெயம் ரவி நடித்த திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக தனி ஒருவன் திரைப்படம் இருக்கிறது. பொதுவாக கதாநாயகனுக்கு பெரிதாக மாஸ் காட்டி திரைப்படங்கள் வருவதை பார்க்கலாம்.

ஆனால் தனி ஒருவன் திரைப்படத்தில் கதாநாயகனை விடவும் வில்லன் கதாபாத்திரமான சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம்தான் அதிக மாஸான கதாபாத்திரமாக இருக்கும். அப்படியான ஒரு பெரிய வில்லனையே கதாநாயகன் எப்படி தோற்கடிக்கிறான் என்பதே கதையாக இருந்ததால் மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதையாக அது அமைந்திருந்தது.

அதற்கு பிறகு அவர்கள் இணைந்து போகன் மாதிரியான படங்களில் நடித்தாலும் தனி ஒருவன் பெற்ற வரவேற்பை அந்த திரைப்படங்கள் பெறவில்லை. இந்த நிலையில் படத்தின் இயக்குனரும், ஜெயம் ரவியின் அண்ணனுமான இயக்குனர் மோகன் ராஜா தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதுக்குறித்த ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது ஏ.ஜி.எஸ் நிறுவனம். அதில் நீ யாரென்று சொல், உன் எதிரி யாரென்று சொல்கிறேன். என படத்தில் வரும் வார்த்தையை மாற்றி அமைத்து ஒரு ப்ரோமோவை தயாரித்திருந்தனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் படத்தின் வில்லன் யார் என்பதை இன்னும் கூறவில்லை. சித்தார்த் அபிமன்யு கொடுத்த பெண்ட்ரைவ் ஆதாரங்களை கொண்டு அதில் வலிமைமிக்க வில்லனை மித்ரன் தேர்ந்தெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக வில்லனே அவரை தேடி வருவார் என கூறி ப்ரோமோவை முடித்துள்ளனர்.

அந்த கண்ணு இருக்கே… அசத்தும் க்ரித்தி ஷெட்டி!..

தற்சமயம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவராக க்ரீத்தி ஷெட்டி உள்ளார். குறைந்த அளவில்தான் படங்கள் நடித்துள்ளார் என்றாலும் கூட அதிகமான ரசிக வட்டாரத்தை கொண்டுள்ளார் க்ரீத்தி ஷெட்டி.

இவர் முதன் முதலாக மலையாள சினிமாவில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். அவர் நடித்த உப்பனா என்கிற திரைப்படம் ஆவரேஜான வெற்றியைதான் பெற்றது என்றாலும் தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

ஏனெனில் அந்த படத்தில் அவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 17 வயதிலேயே அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தார் க்ரீத்தி ஷெட்டி.

தமிழ் மக்களிடையே அவரை அறிமுகப்படுத்திய திரைப்படம் ஷியாம் சிங்கா ராய். தெலுங்கில் வந்த ஷியாம் சிங்கா ராய் திரைப்படமானது தமிழில் டப்பிங் செய்து வெளியானது. இந்த படத்தில் க்ரீத்தி ஷெட்டிக்கு கவர்ச்சியான காட்சி ஒன்றும் இருந்தது.

இந்த படத்திலேயே இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து அவர் நடித்த வாரியர் திரைப்படம் தென்னிந்திய அளவில் பிரபலமானது. அதில் வரும் புல்லட் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து தமிழில் வணங்கான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்தார் க்ரீத்தி ஷெட்டி, ஆனால் பிறகு அவர் படத்தை விட்டு விலகிவிட்டார்.

அந்த படத்தை தப்பான நோக்கத்துல எடுக்கல – சிம்பு பட நடிகைக்கே இந்த நிலமையா?

சில சமயங்களில் இந்திய சினிமாவில் வெளிவரும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக சர்ச்சை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் அப்படியான திரைப்படங்கள் பெரும்பாலும் சென்சார் போர்டிலேயே பல காட்சிகள் நீக்கப்பட்டு பிறகு தான் திரைக்கு வரும்.

அதிலும் சமூகத்தில் பிரச்சனை ஏற்படும் திரைப்படமாக இருந்தால் அதை வெளியிடவே மாட்டார்கள் ஆனால் பாலிவுட்டின் தயாரிக்கப்பட்ட கேரளா ஸ்டோரி என்கிற திரைப்படம் மட்டும் பல எதிர்ப்புகளை சந்தித்த பிறகும் திரையில் வெளியாகி உள்ளது.

இந்தத் திரைப்படம் மதநல்லினக்கத்தில் பிரச்சனை ஏற்படுகிறது என்று ஒரு சாரார் பேசுகின்றனர். இன்னொரு பக்கம் இது ஒரு நல்ல திரைப்படம் என்றும் ஒரு சாரார் பேசுகின்றனர். ஆனால் படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களே அதிகமாக உள்ளன.

இந்தப் படத்தில் சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சித்தி இதானி நடித்துள்ளார். அவர் சமூக வலைத்தளங்களில் இது குறித்து கூறும் பொழுது யாரையும் புண்படுத்தும் விதமாக இந்த படத்தை எடுக்கவில்லை.

ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த படத்தை எடுத்தோம் இந்த படம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. தீவிரவாதத்திற்குதான் இந்த படம் எதிரானது ஒரு நடிகராக நான் அந்த படத்தில் சரியாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன். என சித்தி இதானி கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு நாக சைதன்யா கூட்டணி – படத்திற்கு பேர் வச்சாச்சு!

தமிழில் மிகவும் கலகலப்பான இயக்குனர் என வெங்கட் பிரபுவை சொல்லலாம். ஜாலியாக படம் எடுக்கும் ஒரு இயக்குனர். இந்த வருடம் அவர் இயக்கி வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. 

இந்த நிலையில் தற்சமயம் வெங்கட் பிரபு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நேர்மையான போலீஸாக நடித்துள்ளார் நாக சைதன்யா. சிவா என்னும் கதாபாத்திரத்தில் இவர் தோன்றுவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு கஷ்டடி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வெங்கட் பிரபு படத்திலும் படத்திற்கு கீழ் வெங்கட் பிரபு பெயர் போட்டு ஒரு வசனம் வரும். அதே போல இந்த படத்தில் A venkat prabhu Hunt என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

கீர்த்தி ஷெட்டிக்கு ஏற்கனவே ஒரு ரசிக வட்டாரம் உருவாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்குவதால் இந்த படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படத்தின் போஸ்டரை பார்க்கும்போது நேர்மையான போலீஸாக இருந்து ஏதோ ஒரு பிரச்சனையால் இவரே போலீஸில் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.