Tag Archives: கேரளா ஸ்டோரி

நியாயமற்று வழங்கப்பட்ட தேசிய விருது..? வெளி கொண்டு வந்த இயக்குனர்.!

சமீபத்தில் வழங்கப்பட்ட தேசிய விருது குறித்து நிறைய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் நிலவி வருகின்றன.

ஜவான் திரைப்படத்திற்காக ஷாருக்கானுக்கு தேசிய விருது கொடுத்தது குறித்து ஏற்கனவே சர்ச்சை பேச்சு ஒன்றை ஊர்வசி கொடுத்திருந்தார். ஜவான் திரைப்படத்தை பெற்றவரை ஷாருக்கானின் நடிப்பு தேசிய விருதுக்கு பணிந்துரைக்கும் அளவில் இல்லை என்பது பலரது கருத்தாக இருந்து வருகிறது.

இதற்கு நடுவே கேரளா ஸ்டோரி என்கிற திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டு இருப்பது இன்னும் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனெனில் தென்னிந்தியாவை பொறுத்தவரை கேரளா ஸ்டோரி திரைப்படம் அதிக விமர்சனத்திற்கு உள்ளானது என்று கூறலாம். இந்த நிலையில் இது குறித்து பேசிய கேரளா இயக்குனரான பிரதீப் நாயர் கூறும் பொழுது நானுமே அந்த தேர்ந்தெடுப்பு குழுவில் இருந்தேன்.

அப்பொழுது கேரளா ஸ்டோரி தவறான கருத்துக்களை முன்வைக்கிறது என்று நான் கூறிய பொழுது குழுவின் மற்ற உறுப்பினர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சமூகத்தில் உள்ள முக்கியமான ஒரு விஷயத்தை அந்த படம் பேசியிருப்பதாக கூறி அந்த படத்திற்கு விருதை அறிவித்தனர்.

ஆனால் பிரித்திவிராஜ் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படத்திற்கு சிறந்த படம் சிறந்த இசை சிறந்த இயக்குனர் என்று பல கேட்டகிரியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. அதில் எந்த கேட்டகிரியிலுமே அந்த படத்தை இவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் இயக்குனர் பிரதீப் நாயர்.

அந்த படத்தை தப்பான நோக்கத்துல எடுக்கல – சிம்பு பட நடிகைக்கே இந்த நிலமையா?

சில சமயங்களில் இந்திய சினிமாவில் வெளிவரும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அதிக சர்ச்சை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால் அப்படியான திரைப்படங்கள் பெரும்பாலும் சென்சார் போர்டிலேயே பல காட்சிகள் நீக்கப்பட்டு பிறகு தான் திரைக்கு வரும்.

அதிலும் சமூகத்தில் பிரச்சனை ஏற்படும் திரைப்படமாக இருந்தால் அதை வெளியிடவே மாட்டார்கள் ஆனால் பாலிவுட்டின் தயாரிக்கப்பட்ட கேரளா ஸ்டோரி என்கிற திரைப்படம் மட்டும் பல எதிர்ப்புகளை சந்தித்த பிறகும் திரையில் வெளியாகி உள்ளது.

இந்தத் திரைப்படம் மதநல்லினக்கத்தில் பிரச்சனை ஏற்படுகிறது என்று ஒரு சாரார் பேசுகின்றனர். இன்னொரு பக்கம் இது ஒரு நல்ல திரைப்படம் என்றும் ஒரு சாரார் பேசுகின்றனர். ஆனால் படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களே அதிகமாக உள்ளன.

இந்தப் படத்தில் சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சித்தி இதானி நடித்துள்ளார். அவர் சமூக வலைத்தளங்களில் இது குறித்து கூறும் பொழுது யாரையும் புண்படுத்தும் விதமாக இந்த படத்தை எடுக்கவில்லை.

ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த படத்தை எடுத்தோம் இந்த படம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. தீவிரவாதத்திற்குதான் இந்த படம் எதிரானது ஒரு நடிகராக நான் அந்த படத்தில் சரியாக நடித்திருக்கிறேன் என நம்புகிறேன். என சித்தி இதானி கூறியுள்ளார்.