Tag Archives: tamil cinema news

செத்த பிறகு இரண்டு கணவர்களிடம் மாட்டி கொள்ளும் பெண்… Eternity – Official Trailer

இயக்குனர் டேவிட் ப்ரைனி இயக்கத்தில் தற்சமயம் உருவாகி இருக்கும் திரைப்படம்தான் Eternity. அடுத்த மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளுக்கு வர இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Miles Teller, Elizabeth Olsen, Callum Turner ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இறப்புக்குப் பின்பான வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதைகளம் செல்கிறது.

ஜோன் என்கிற பெண் லேரி என்கிற ஒரு நபரை திருமணம் செய்து இருக்கிறார் ஆனால் லாரிக்கு முன்பே இவர் லூக் என்பவருடன் வாழ்ந்து வந்திருக்கிறார். லூக் இறந்த பிறகு தான் அவர் லேரியை திருமணம் செய்து இருக்கிறார்.

இந்த நிலையில் லுக் மற்றும் larry இருவருமே இறந்து விடுகின்றனர். இறப்புக்குப் பின்னான வாழ்வில் சொர்க்கத்தில் தன்னுடைய முதல் கணவரான லூக்கை சந்திக்கிறார் ஜோன்.

இந்த நிலையில் இறப்புக்கு பிறகு உள்ள வாழ்க்கையில் அவர் யார் கூட சேர்ந்து வாழ வேண்டும் என்பதில் பிரச்சனை தொடங்குகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் செல்கிறது.

 

 

 

காட்டுக்குள் காணாமல் போய் பிரதேமாக கிடைக்கும் பெண்.. அமானுஷ்ய சக்தியின் வேலையா..  Revenant எழுத்தாளரின் அடுத்த கதை UNTAMED Netflix trailer

அமெரிக்காவில் பெரும் வெற்றியை கொடுத்த Revenant  மற்றும் american primival போன்ற படங்கள் மற்றும் தொடர்களுக்கு கதைகளை எழுதிய எழுத்தாளர் Mark L Smith கைவண்ணத்தில் அடுத்து உருவாகி இருக்கும் சீரியஸ் தான் UNTAMED என்கிற இந்த சீரிஸ்.

இது ஒரு மர்மமான தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது காட்டுக்குள் இருக்கும் ஒரு பெண் திடீரென காணாமல் போகிறார்.

அவர் எப்படி காணாமல் போனார் என்று ஆய்வு செய்து கொண்டிருக்கும் போதே அவர் இறந்து கிடக்கிறார். இந்த நிலையில் அந்த காட்டில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று கதை சொல்கிறது.

அது கொலைகாரர்களின் வேலையா அல்லது அந்த காட்டுக்குள் ஏதேனும் அமானுஷ்ய சக்தி இருக்கிறதா என்னும் பாணியில் இந்த கதை சொல்கிறது இதன் ட்ரெய்லர் தற்சமயம் வெளியாகி இருக்கிறது.

பாகுபலியாவே இருந்தாலும் அந்த திருப்தி எனக்கு இல்லை.. ஓப்பன் டாக் கொடுத்த சத்யராஜ்..!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகம் ஆகி அதன் பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் சத்யராஜ். சத்யராஜ் சினிமாவிற்கு வந்த பொழுது அவருக்கு வரவேற்புகள் அதிகமாக இருந்தன.

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 100க்கும் அதிகமான திரைப்படங்களில் குறுகிய காலகட்டத்திலேயே நடித்தார் சத்யராஜ். ஏனெனில் அப்பொழுதெல்லாம் ஒரு மாதத்தில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் ஒரு படத்தின் படபிடிப்பு முடிந்துவிடும்.

அதனால் ஒரு வருடத்திலேயே நடிகர்கள் ஐந்திலிருந்து ஆறு திரைப்படங்களில் நடித்து விடுவார்கள். இதனால் இந்த எண்ணிக்கையை மிக சுலபமாக பெற்றுவிட்டார் நடிகர் சத்யராஜ். ஆனால் இப்பொழுது உள்ள நடிகர்களுக்கு 25 படம் அல்லது 50 படம் நடிப்பதற்கே கிட்டத்தட்ட 10 லிருந்து 20 ஆண்டுகள் தேவைப்படுகிறது.

ஓப்பன் டாக் கொடுத்த சத்யராஜ்:

இந்த நிலையில் இப்பொழுது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். இது குறித்து சமீபத்தில் அவர் பேட்டிகளில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது நான் இதுவரை 150-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.

ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு வகையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் சொல்ல போனால் நான் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது என்று கூறலாம் இப்போது துணை கதாபாத்திரத்தில் நடிப்பது கண்டிப்பாக எனக்கு திருப்திகரமாக இல்லை.

ஏனெனில் பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா கதாபாத்திரமாகவே நடித்தாலும் கூட கதையின் நாயகன் பாகுபலிதானே.. எனவே கதாநாயகனாக நடித்தப்போது இருந்த திருப்தி இப்பொழுது இல்லை என்று கூறியிருக்கிறார் சத்யராஜ்.

ஏகப்பட்ட கவர்ச்சி கன்னிகளை இறக்கியிருக்காங்க.. ஃபைனல் ஆன 16 பிக்பாஸ் போட்டியாளர்கள்.. ஒரு வழியா கன்ஃபார் ஆயிட்டு..

இன்னும் சில நாட்களில் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட இருக்கிறது. இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் குறித்து மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. யாரெல்லாம் இதில் கலந்து கொள்ள போகிறார்கள் என்று ஒரு பக்கம் கேள்விகள் இருந்து வருகின்றன. அதற்கு தகுந்தார் போல நிறைய நபர்களின் பெயர்களை மக்களே கூறி வருகின்றனர்.

ஆனால் அதில் யாரெல்லாம் உண்மையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப் போகிறார்கள் என்பது தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் பிரபல பத்திரிகைகள் சில பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 16 நபர்கள் யார் என்கிற தகவல்களை வெளியிட்டு இருக்கின்றனர்.

அந்த தரவுகளின் அடிப்படையில் தற்சமயம் இந்த 16 நபர்கள்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது அவர்களின் லிஸ்ட் இதோ..

பிக்பாஸ் போட்டியாளர்கள்:

கவர்ச்சியில் சமந்தாவை மிஞ்சிய கீர்த்தி ஷெட்டி.. எல்.ஐ.சி போஸ்டரை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்.. ஹாலிவுட் லெவல்ல இருக்கே!.

மிகக் குறுகிய காலங்களிலேயே  தென்னிந்தியாவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி செட்டி. 17வது வயதிலேயே இவர் சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார்.

அவர் தெலுங்கில் நடித்த இப்பன்னா என்னும் திரைப்படம் தான் அவரது மார்க்கெட்டை முதன்முதலாக அதிகரித்த திரைப்படம் என்று கூறலாம். அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கீர்த்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்திருப்பார்.

பட வாய்ப்புகள்:

அதற்கு பிறகு கீர்த்தி ஷெட்டிக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. அதில் லிங்குசாமி இயக்கிய வாரியார் திரைப்படம் முக்கியமான படம் ஆகும். இந்த திரைப்படத்தில் புல்லட் என்கிற ஒரு பாடலில் அட்டகாசமாக நடனமாடி இருந்தார் கீர்த்தி ஷெட்டி.

அந்த பாடலை அடுத்து தென்னிந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார். அந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றதால் டி.எஸ்.பி திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் விஜய் சேதுபதி அப்போதே அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

ஏனெனில் உப்பனா திரைப்படத்தில்தான் அவருக்கு அப்பாவாக நடித்திருந்தார் விஜய் சேதுபதி. திரும்ப அவரே எப்படி ஜோடியாக நடிக்க முடியும் என்பது அவருக்கு உறுத்தலான விஷயமாக இருந்தது.

அதனால் விஜய் சேதுபதி இதற்கு ஒப்பு கொள்ளவில்லை. தொடர்ந்து ஒரு காதல் சப்ஜெக்டில் கீர்த்தி ஷெட்டியை தமிழ் சினிமா எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அதேபோல தற்சமயம் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் முதல் படம்:

இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார் லவ் டுடே திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. இதனை அடுத்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகரித்திருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன் என்கிற காம்போவே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருப்பதால் விக்னேஷ் சிவனின் இந்த திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் போல இல்லாமல் அதிக ஆர்வத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் எல்.ஐ.சி திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கீர்த்தி ஷெட்டி குட்டை பாவாடை போட்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது. படத்தில் அவர் கவர்ச்சியாக இருப்பார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படம் போஸ்டர் பார்ப்பதற்கு வெளிநாட்டு பார்பி படத்தின் போஸ்டர் போல இருக்கிறது அதற்கு தகுந்தார் போல கதை இருக்குமா? ஒரு வேலை இந்த படம் எதிர்காலத்தில் நடக்கும் கதையாக இருக்குமா? என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

கொழுந்தனார் மீது ஆசை.. பட வாய்ப்புகளையே இழந்த நடிகை.. அட கொடுமையே!..

தமிழ் சினிமாவில் நடிகை சினேகாவின் தோழியும் பிரபலமான நடிகையுமாக இருப்பவர் நடிகை சங்கீதா. சங்கீதா என்கிற பெயரில் தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் இருந்தாலும் பெரும்பாலும் இவர் தான் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவார்.

பாலா இயக்கிய பிதாமகன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை சங்கீதா. அந்த திரைப்படம் அளவிற்கு வேறு எந்த திரைப்படமும் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை.

90களில் பிரபலம்:

90ஸ் காலகட்டங்களில் பிரபலமான ஒரு நடிகையாக சங்கீதா இருந்து வந்தார். தொடர்ந்து அவர் நிறைய வாய்ப்புகளையும் பெற்று வந்து கொண்டிருந்தார். பெரும்பாலும் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் சங்கீதாவிற்கு கிடைக்கும் என்றாலும் கூட அந்த கதாபாத்திரங்களையும் சிறப்பாக இவர் நடிக்க கூடியவர்.

இவர் நடித்த உயிர், பிதாமகன் மாதிரியான திரைப்படங்களில் கவனத்தை ஈர்க்கும் ஒரு கதாபாத்திரமாக இவர் இருப்பதை பார்க்க முடியும். சினிமாவில் ஓரளவு உயரத்தை தொட்ட பிறகு இவர் சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அது குறித்து நிறைய பேட்டிகளிலும் பேசி இருக்கிறார். பெரும்பாலும் திரைப்பட வாய்ப்புகளுக்காக பெரிதாக போராட மாட்டார் சங்கீதா. தனக்கு என்ன கிடைக்கிறதோ அதில் மட்டும் நடித்துவிட்டு சென்றுவிடுவார் இதற்காக அட்ஜஸ்ட்மெண்டிற்கு செல்வதோ, மற்ற விஷயங்களை செய்வதோ எதையும் அவர் செய்ய மாட்டார்.

ஏனெனில் சினிமா மட்டும்தான் வாழ்க்கை என்று இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர் சங்கீதா. சிம்பு நடித்த காளை திரைப்படத்தில் இவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தது.

சின்னத்திரையில் பிரபலம்:

இந்த மாதிரி இருபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். அதேபோல சின்ன தொலைக்காட்சிகளிலும் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 1 நடுவராக இருந்திருக்கிறார்.

அதேபோல ஆர்யாவை வைத்து கலர்ஸ் தமிழில் நம்ம வீட்டு மாப்பிள்ளை என்கிற ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியை சங்கீதாதான் தொகுத்து வழங்கினார். அவரது பிறந்த வீட்டை பொறுத்தவரைக்கும் அதில் சுமுகமான வாழ்க்கை அவருக்கு இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவரது வீட்டில் அவரது அண்ணனும் அம்மாவும் அவரது பணத்தை பயன்படுத்தி வாழ்ந்து வந்தனர் எனவும் பிறகு அவர்களிடம் விலகிப் வந்த பிறகுதான் வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் நடித்த திரைப்படம் ஒன்று சங்கீதாவிற்கு எளிதாக மார்க்கெட்டை இழக்க செய்த சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்தது.

உயிர் என்கிற ஒரு திரைப்படத்தில் சங்கீதா நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் கதைப்படி சங்கீதாவின் கணவர் தற்கொலை செய்து கொள்வார் அதற்கு பிறகு கணவரின் தம்பியான ஸ்ரீகாந்த் மீது ஆசைப்படுவார் சங்கீதா.

ஸ்ரீகாந்த் வேறொரு பெண்ணின் மீது காதல் வயப்பட்டு இருப்பார். இந்த நிலையில் இவர்களுக்கு இடையே ஒரு வில்லியாக மாறி ஸ்ரீகாந்தை அவர் அடைய விரும்புவதே கதையாக இருக்கும். இந்த படம் படுதோல்வி அடைந்ததுடன் சங்கீதாவிற்கும் கெட்ட பெயரை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார் சங்கீதா.

போயஸ் கார்டன் வீட்டிற்கு பின்னால் இருக்கும் மர்மம்… தனுஷ் காசில் கட்டியது கிடையாது!.. வெளியிட்ட பிரபலம்!.

தமிழ் சினிமாவில் தற்சமயம் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் தனுஷ். தொடர்ந்து தனுஷ் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமா மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இந்த வளர்ச்சி பெறுவதற்கு நடிகர் தனுஷ் மிகவும் கஷ்டப்பட்டார் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலக்கட்டங்களில் அதிகமாக கேலிக்கு உள்ளான நடிகராக இருந்தவர் நடிகர் தனுஷ்.

தனுஷ் வீடு:

சினிமாவில் தனுஷ் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டங்களில் அவருக்கு அவரை விடவும் பெரும் நடிகராக இருந்தார் நடிகர் சிம்பு. இப்படி எல்லாம் இருந்த பல நடிகர்களையும் தாண்டி இப்பொழுது தனக்கான இடத்தை தனுஷ் பிடித்திருக்கிறார்.

சமீபத்தில் அவரது ஐம்பதாவது திரைப்படம் ஆன ராயன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை தனுஷே இயக்கியிருந்தார். நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் செய்து வருகிறது ராயன் திரைப்படம்.

இந்த நிலையில் தொடர்ந்து தனுஷ் இதுக்குறித்து குறித்து நிறைய சர்ச்சைகளில் அவரது வீடு குறித்த சர்ச்சைகளும் ஒன்று. போயஸ் கார்டனில் தனுஷ் அதிக செலவில் வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். அந்த வீட்டுக்கு கூட சமீபத்தில்தான் கிரகப்பிரவேசம் நடத்தி குடி போனார்.

தனிஷ் ஆசை:

அந்த வீடு குறித்து நிறைய சர்ச்சைகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து தனுஷ் பதிலளித்திருந்தார். அதில் அவர் கூறும் பொழுது எனக்கு போயஸ் கார்டனில் வீடு கட்டுவது என்பது வெகுநாளைய ஆசை, அதை தான் செய்தேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பிரபல பத்திரிகையாளர்கள் பதில் அளிக்கும் போது அந்த பதில்கள் வேறு மாதிரி இருக்கின்றன. அவர்கள் கூறும் பொழுது தனுஷ் இந்த வீட்டை கட்டுவதற்கு நிறைய செலவு ஆனதால் அதற்கான காசை தயாரிப்பாளர்களிடம் வாங்கினார்.

தயாரிப்பாளர்களிடம் படத்திற்கு அட்வான்ஸ் தொகையாக கேட்டு வாங்கிதான் அந்த வீட்டை கட்டினார் தனுஷ். ஆனால் அட்வான்ஸ் தொகை வாங்கிய யாருக்கும் தனுஷ் படம் நடித்து கொடுக்கவில்லை இதனால் அவர்கள் எல்லாம் கவலையில் இருக்கின்றனர். இதனால்தான் தற்சமயம் தயாரிப்பாளர் சங்கமும் தனுஷ் புது படங்களில் கமிட்டாக கூடாது ஏற்கனவே கமிட்டான திரைப்படங்களை நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

ஒரு நைட்டுக்கு 10 லட்சம்!.. 48 வயதில் ரூட்டை மாற்றிய நடிகை.. வாய்ப்பு கிடைக்காட்டி இப்படியா.!

சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கும், வதந்திகளுக்கும் எப்பொழுதும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் ஒரு நடிகையை பற்றியோ அல்லது நடிகரைப் பற்றியோ ஒரு தகவல் கிடைத்துவிட்டால், மற்றொரு சர்ச்சை கிடைக்கும் வரை அந்த சர்ச்சை தான் சமூக வலைத்தளங்கள் பேசு பொருளாக அமையும்.

அந்த வகையில் சமீப காலங்களாக சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் ஒரு பிரபல நடிகை. சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியின் புகைப்படம் வெளியாகி தற்பொழுது அனைவரின் மத்தியிலும் பேசு பொருளாக அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரபல முன்னணி நடிகை

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் இந்த பிரபல நடிகை.

ஒரு காலத்தில் பல ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருந்துள்ளார். சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இந்த பிரபல நடிகை. அதன் பிறகு சீரியலிலும் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமீபத்தில் இந்த பிரபல நடிகையின் கணவர் நோய் தொற்று காரணமாக இறந்து விட்டார். இது திரைத்துறையில் இருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் தற்பொழுது அவரின் குழந்தையோடு வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பிரபல அரசியல் தலைவர் வீட்டில் நடந்த விழா நிகழ்ச்சியில் இந்த பிரபல நடிகை மற்றும் அவரது தோழி கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த அரசியல்வாதிக்கும், இந்த பிரபல நடிகைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என அனைவரும் கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள். ஆனால் இதனை எல்லாம் அந்த முன்னணி நடிகை கண்டு கொள்ளாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று தற்பொழுது வரை மௌனம் காத்து வருகிறார்.

ரூ.10 லட்சம் வாங்கிய நடிகை

ஒரு விழாவிற்கு ஒரு நடிகை வருகிறார்கள் என்றாலே நிச்சயம் அதற்கான பணம் பெற்றுக் கொண்டுதான் வருவார்கள். அந்தவகையில் இந்த நடிகையும் நிச்சயம் பணம் வாங்கிக் கொண்டுதான் அந்த விழாவில் கலந்து இருப்பார் என ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனாலும் கட்சியில் முக்கிய பிரமுகராக இருக்கும் ஒரு முன்னணி நடிகை கலந்து கொள்ளாமல், இந்த நடிகை மட்டும் கலந்து கொள்வதற்கான அவசியம் என்னவென்று கேட்டு வருகிறார்கள். ஒருவேளை அந்த பிரபல அரசியல்வாதியின் மனைவிக்கு இந்த நடிகையை பிடித்து இருக்கலாம் அல்லது அந்த அரசியல்வாதிக்கு இந்த முன்னணி நடிகையை பிடித்திருக்கலாம். அதனால் இவரை பணம் கொடுத்து அந்த விழாவில் கலந்துகொள்ள வைத்திருக்கலாம் என பலரும் நடிகைக்கு சப்போர்ட் செய்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பலரும் பல காரணங்கள் தெரிவிக்க, தற்பொழுது அந்த நடிகை ரூ.10லட்சம் வாங்கி கொண்டு தான் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருப்பார். மற்றப்படி வேற ஒன்றும் இருக்காது என பலரும் நடிகைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ட்ரெஸ் போடும்போது அந்த இடத்துல வாயை வச்சி கடிப்பாங்க!.. சினிமா அனுபவத்தை பகிர்ந்த நடிகை கஸ்தூரி!.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து இப்பொழுது ஒரு சர்ச்சையான அரசியல்வாதியாக மாறி இருப்பவர் நடிகை கஸ்தூரி. எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் 1992ல் தனது படிப்பை முடித்த கஸ்தூரி அதற்குப் பிறகு ஃபெமினா மிஸ் மெட்ராஸ் என்கிற விருது பெற்றார்.

அதன் மூலமாக அவருக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் ஆரம்பத்தில் நடிக்கும் போது மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் எல்லாம் இல்லாமல் டீசண்டான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார் கஸ்தூரி.

முதல் பட வாய்ப்பு:

முதன்முதலில் ஆத்தா உன் கோயிலிலே என்கிற திரைப்படத்தில்தான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதாநாயகனான நடிகர் செல்வாவிற்கும் அந்த படம்தான் முதல் திரைப்படமாக அமைந்தது.

அதற்கு பிறகு கஸ்தூரிக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. 1990 களில் இருந்த சினிமா ரசிகர்களுக்கு கஸ்தூரியை கண்டிப்பாக தெரிந்திருக்கும். அப்போது தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் கஸ்தூரி.

சமீபத்தில் கூட தமிழ் படம் 2, டிராபிக் ராமசாமி மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் கஸ்தூரி நடித்து வந்து கொண்டிருந்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மூலமாக அதிக பிரபலமாகி வந்தார் கஸ்தூரி.

இப்போது அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மற்றபடி முழு மூச்சாக அரசியலில்தான் ஈடுபாடு காட்டி வருகிறார் கஸ்தூரி. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து இருந்தார்.

கஸ்தூரியின் அனுபவம்:

அதில் கூறும் பொழுது அந்த காலத்தில் எல்லாம் கேரவன் வசதி எல்லாம் கிடையாது. நடிகைகள் கிடைக்கும் இடத்தில் உடை மாற்றிக் கொண்டு வருவோம். அதேபோல எங்களுக்கான காஸ்ட்யும்களை எங்களுக்கு தகுந்தாற்போல தைப்பதற்கு நேரம் இருக்காது.

அதனால் உடையை எங்கள் மேலே போட்டு தைக்கும் வேலையை எல்லாம் செய்வார்கள். என்னை சுற்றி அதிகபட்சம் இருக்கும் உதவியாளர்கள் எல்லாம் ஆண்களாகதான் இருப்பார்கள். அப்பொழுது இந்த மாதிரி உடையை தைக்கும் பொழுது அதில் நூல் ஏதாவது பிசிராக இருந்தால் அதை வாயாலே கடித்து  அகற்றுவார்கள்.

என் இடுப்புக்கு துணியை வைத்து தைக்கும் போது அதே மாதிரி நூல் பிசிராக இருந்ததால் அந்த இடத்தில் வாயை வைத்து கடித்தார் ஒரு நபர் ஆனால் அப்படி செய்யும் யாரும் அதை தவறான நோக்கத்தில் செய்வது கிடையாது தொழில் முறையாக மட்டுமே செய்வார்கள் என்று அது குறித்து விளக்கம் கொடுத்து இருக்கிறார் கஸ்தூரி.

முட்டாள்கள்கிட்டலாம் பேச முடியாது.. போஸ்டை டெலிட் செய்த நயன்தாரா.. மருத்துவர் பார்த்த வேலைதான் காரணம்!.

நேற்று முதலே அதிக சர்ச்சையான ஒரு விஷயமாக நயன்தாரா போட்ட பதிவு ஒன்றுதான் இருந்து வருகிறது. நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிக பிரபலம் என்பதால் சமூக வலைதளங்களில் அவருக்கு நிறைய ஃபாலோவர்ஸ் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவருடைய மருத்துவர் கூறியதற்கு இணங்க செம்பருத்தி டீயின் நன்மைகள் குறித்து நயன்தாரா ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார் அதில் செம்பருத்தி உடலுக்கு பல நன்மைகளை செய்வதாகவும், நோய்களிலிருந்து பாதுகாப்பதாகவும், சருமத்தை பாதுகாப்பதாகவும் பல வழிகளில் செம்பருத்தி டீ குறித்து எழுதி இருந்தார் நயன்தாரா.

நயன்தாரா பதிவு:

இந்த நிலையில் இதற்கு வன்மையாக எதிர்ப்பு தெரிவித்த பிரபல கேரள மருத்துவரான லிவர் டாக் என்று அழைக்கப்படும் சிரியாக் அபி பிலிப்ஸ் ஒரு பதிவு ஒன்று ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது நயன்தாரா வெளியிட்டிருக்கும் தகவல்கள் எதுவும் உண்மை கிடையாது. அவை எதுவுமே அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டது கிடையாது. செம்பருத்தி டீ இந்த மாதிரி நன்மைகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது.

நாட்டு மருத்துவத்திற்கு முதலில் ஆதாரமே கிடையாது. எனவே இந்த மாதிரி தவறான செய்திகளை எல்லாம் பிரபலங்கள் பரப்ப கூடாது என்று கூறியிருந்தார். இதனை அடுத்து நயன்தாரா அந்த பதிவையே டெலிட் செய்து விட்டார்.

அதற்கும் ரிப்ளை செய்த சிரியாக் அபி பிலிப்ஸ் கூறும் போது குறைந்தபட்சம் தவறான பதிவுக்கு மன்னிப்பு கூட கேட்காமல் இப்படி டெலிட் செய்து விடுகிறார் நயன்தாரா என்று பதிவிட்டு இருந்தார்.

பதில் கொடுத்த நயன்தாரா:

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் முட்டாள்களுடன் எப்பொழுதும் விவாதம் செய்யாதீர்கள். அவர்கள் உங்களை அவர்கள் தரத்திற்கு குறைத்து உங்களுடன் சண்டையிடுவார்கள் என்று கூறியிருந்தார்.

இதனை அடுத்து லிவர் டாக்கை தன் நயன்தாரா முட்டாள் என்று கூறுகிறார் என்று பேச்சுக்கள் இருந்து வந்தது. இதற்கு நடுவே நயன்தாராவின் மருத்துவர் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது செம்பருத்தியில் நன்மைகள் இல்லை என்று என்னுடைய கிளைன்ட் நயன்தாராவிடம் யாரோ சண்டை இட்டதாக கேள்விப்பட்டேன்.

செம்பருத்தி நன்மை இல்லாமல் தான் அதை அனைத்து மூலிகை சார்ந்த இடங்களிலும் பயன்படுத்துகிறார்களா? ஒரு ஸ்பாவிற்கு சென்றால் கூட அங்கு செம்பருத்திதான் தண்ணீரில் கலந்து பயன்படுத்துகிறார்கள் என்று இது குறித்து பேசி இருந்தார்.

இதனை அடுத்து இந்த பிரச்சனை தான் தற்சமயம் சமூக வலைதளங்களில் பெரிய பிரச்சனையாக சென்று கொண்டிருக்கிறது.

தனுஷ் இனிமே நடிக்க கூடாது.. நோட்டீஸ் விட்ட தயாரிப்பாளர் சங்கம்… சப்போர்ட்டுக்கு வந்த நடிகர் கார்த்தி!.

தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்துவரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் இவர் அதிகமாக உருவ கேலிக்கு உள்ளானாலும் கூட பிறகு தொடர்ந்து தனது நடிப்பில் மாற்றத்தை கொண்டு வந்து மக்கள் மத்தியில் தன்னை ஒரு பிரபலமான நடிகராக மாற்றிக் கொண்டார் தனுஷ்.

இந்த நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் ராயன் திரைப்படம் வெளியானது. ராயன் திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. ஆனால் இது இல்லாமல் தனுஷ்க்கு ஒரு புது பிரச்சனை தற்சமயம் உருவாகி இருக்கிறது.

தனுஷிற்கு கிடைத்த வரவேற்பு:

தனுஷை பொருத்தவரை அவர் ஒரு திரைப்படத்தின் கதையை கேட்டு அந்த கதை நன்றாக இருக்கிறது என்று தோன்றினால் அதற்கு அட்வான்ஸ் தொகையை வாங்கி விடுவார். ஏனெனில் அப்பொழுதுதான் அந்த கதை வேறு யாரிடமும் செல்லாது.

அதிகபட்சம் தனுஷ் பிடித்த கதைகளை இந்த மாதிரி பிடித்து வைத்துக் கொள்வார். பிறகு நேரம் கிடைக்கும் பொழுது அந்த படங்களில் நடித்து கொடுத்து விடுவார். ஆனால் இதே முறையை நிறைய தயாரிப்பு நிறுவனங்களிடம் அவர் பின்பற்றியதாக கூறப்படுகிறது என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து இனிமேல் தனுஷின் படத்தை தயாரிக்க கூடாது என்ற முடிவு செய்திருக்கின்றனர். மேலும் புது தயாரிப்பாளர்கள் யாராவது தனுஷை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்றால் முதலில் அது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச வேண்டும்.

கார்த்தி கூறிய பதில்:

அதற்கு முன்பு தனுஷ் ஏற்கனவே அட்வான்ஸ் தொகை வாங்கி இருக்கும் படங்களை எல்லாம் முதலில் முடித்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் திடீரென்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த விஷயம் பரபரப்பாகி வந்தது.

இதனை அறிந்த நடிகர் கார்த்தி உடனே செயற்குழு கூட்டத்தை கூட்டி இருக்கிறார், இது குறித்து அவர் பேட்டியில் கூறும் பொழுது தனுஷ் குறித்து எந்த ஒரு பிரச்சனையையும் நடிகர் சங்கத்திடம் வந்து தயாரிப்பாளர் சங்கம் கூறவே இல்லை.

முதலில் ஒரு நடிகர் குறித்து ஒரு முடிவை எடுக்கிறார்கள் என்றால் எங்களிடம் கலந்து ஆலோசித்து பேச வேண்டும். என்ன ஏது என்றே விஷயத்தை கூறாமல் அவர்கள் இஷ்டத்திற்கு முடிவு எடுத்திருக்கிறார்கள் இதை நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இது குறித்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்த பிறகு மீதியை கூறுவோம் என்று கூறியிருக்கிறார் நடிகர் கார்த்தி.

கோட் படம் வெளியாவதில் தாமதம்!.. விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர்!..

Goat Movie: தற்போது தமிழில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் லியோ படத்திற்கு பிறகு நடித்து வரும் படம் கோட். இந்த படம் தான் இவருக்கு கடைசி படம் என்றும், அதன் பிறகு இவர் முழு நேர அரசியல்வாதியாக களம் காண போகிறார் என்ற தகவலும் வந்தது.

எனவே அவருடைய கடைசி படமான கோட் படத்தை நோக்கி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த படத்தைக் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருந்த நிலையில், தற்பொழுது படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் ரசிகர்களும் எதிர்பார்த்து வந்தார்கள்.

இந்நிலையில் கோட் படத்தின் ரிலீஸ் பற்றிய ஒரு முக்கிய அப்டேட் வந்திருக்கிறது. அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கோட் படம்

நடிகர் விஜயின் 68 -வது படமான கோட் படம் தற்பொழுது பிரம்மாண்டமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் லைலா, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், நிதின் சத்யா, பிரேம்ஜி, பார்வதி மோனன், வைபவ் போன்ற நட்சத்திர பட்டாளமே இத்திரைப்படத்தில் நடிக்கிறார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்த படத்தில் விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் ஆகிய இரண்டு பாடல்களும் வெளிவந்தது. இந்த இரு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

எனவே படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்க இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது இந்த படம் வெளியாகுமா? என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

தயாரிப்பாளர் விளக்கம்

செப்டம்பர் மாதம் கோட் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் ForumKeralam அக்கவுண்டில் இருந்து இந்த வருடம் எதிர்பார்க்கப்படும் ஒரு பெரிய பட்ஜெட் படமானது VFX வேலைகள் முடியாததால் தள்ளி செல்லலாம் என கூறப்பட்டிருந்தது.

எனவே இது “கோட்” படமாக இருக்கும் என ரசிகர்கள் கேட்டு வருவதால், இதற்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்திருக்கிறார். அந்தக் கணக்கில் எங்கேயும் கோட் படத்தை பற்றி குறிப்பிடவில்லை. எனவே யாரும் இதுபோன்ற எதிர்மறையான விஷயங்களை பரப்பாதீர்கள் என அவர் கூறியிருக்கிறார்.

மேலும் அடுத்த ஒரு மாதம் முழுவதும் கோட் படம் வெளியாவதற்கான வேலைகள் நடைபெறும் என்றும், படத்தின் அப்டேட் ஆகஸ்ட் 1ஆம் தேதி கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் செப்டம்பர் மாதம் கோட் படம் வெளியாகும் என அவர் தெரிவித்திருக்கிறார்.