Tag Archives: செய்யாறு பாலு

அந்த விஷயத்தில் த்ரிஷாவை நிராகரித்த விஜய்… கண்ணீர் விட்டு அழுத த்ரிஷா..

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே விஜய்யும் த்ரிஷாவும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். விஜய் ஒரு நடிகையுடன் அதிகமான திரைப்படங்களில் நடித்தார் என்றால் அது திரிஷாவாகதான் இருக்கும்.

அத்தனை திரைப்படங்களில் இருவரும் ஒன்றாக நடித்திருக்கின்றனர். இன்னமும் கூட அடுத்து விஜய் கோட் திரைப்படத்திற்கு பிறகு நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று பேச்சுக்கள் இருந்தது.

ஆனால் தற்சமயம் சமந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது ஏனெனில் தொடர்ந்து விஜய் மற்றும் திரிஷா குறித்து நிறைய கிசுகிசுகளும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. முக்கியமாக அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக வெகு காலங்களாகவே பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

த்ரிஷா சர்ச்சை:

vijay trisha

சமீபத்தில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் போட்டோ வெளியிட்டபோது கூட அது சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு திரிசா மற்றும் விஜய் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை கூறியுள்ளார்.

போக்கிரி திரைப்படத்தில் அசின் கதாநாயகியாக நடிக்க இருந்த பொழுது திரிஷாவிற்கு அதனால் அதிர்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போக்கிரி படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அந்த படத்திற்கு சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது.

அந்த நிகழ்ச்சிக்கு திரிஷாவை அழைப்பார்கள் என்று திரிஷா ஆவலுடன் காத்திருந்தாராம். ஆனால் கடைசிவரை அவருக்கு அந்த படத்திற்காக அழைப்பிதழே வரவில்லை.

அப்செட்டான திரிஷா:

ஏன் படத்தின் வெற்றி விழாவிற்கு திரிஷாவைஅழைக்கவில்லை என கேட்ட பொழுது திரிஷாவின் பெயர் லிஸ்ட்டில் இல்லை என கூறிவிட்டனர். இயக்குனர் பிரபு தேவாவிடம் இது குறித்து கேட்ட பொழுது விஜய் சார் கால் செய்வார் என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

அதனை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு விஜய் கண்டிப்பாக அழைப்பார் என்று காத்திருந்தார் த்ரிஷா. ஆனால் விஜய் அவரை அழைக்கவே இல்லை இதனால் கவலைப்பட்ட திரிஷா அப்பொழுது கண்ணீர் விட்டு அழுது புலம்பி இருக்கிறார்.

அதற்கு பிறகு விஜய்க்கு போன் செய்த த்ரிஷாவின் அம்மா திரிசாவுடன் ஒரு படம் தோல்வி அடைந்தவுடன் அவரை இப்படி ஓரங்கட்டிவிட்டிர்களே தம்பி என்று கேட்டிருக்கிறார். ஏனெனில் அதற்கு முன்பு திரிஷாவுடன் ஜோடியாக இவர் நடித்த ஆதி திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

அதற்கு பிறகு ஹோட்டலில் திரிஷாவை சந்தித்து சமாதானப்படுத்தினாராம் விஜய். அவர்களது வீடியோ ஒன்று கூட பொழுது வைரலானதாக கூறுகிறார் செய்யாறு பாலு.

விஜயகாந்தோட ஆவி கூட ராதிகாவை மன்னிக்காது!.. கடுப்பான பத்திரிக்கையாளர்!.

எம்.ஜி.ஆருக்கு பிறகு திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் நிறைய உதவிகளை செய்தவர் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்களில் அதிகபட்சம் புதுமுக இயக்குனர்களுக்குதான் வாய்ப்பு கொடுப்பார்.

ஏனெனில் மாணவர்களாக கல்வி பயின்று திரைத்துறையில் வரும் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் இயக்குனராக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனை அறிந்த விஜயகாந்த் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார்.

எப்படி வெற்றிமாறனும் தனுஷும் ஒரு காம்பாக இப்போது கலக்கி வருகிறார்களோ அதேபோல அப்பொழுது எஸ்.ஏ சந்திரசேகரும் விஜயகாந்தும் ஒரு காம்போவாக சினிமாவில் கலக்கி வந்து கொண்டிருந்தனர்.

vijayakanth

அந்த சமயத்தில்தான் விஜயகாந்த் திரைப்படங்களில் ராதிகா நடிக்க தொடங்கினார். ராதிகாவிற்கும் விஜயகாந்திற்க்கும் இடையே நல்ல நட்பு உருவானது. அதனை தொடர்ந்து விஜயகாந்தின் படங்கள் பலவற்றில் ராதிகா கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் அப்பொழுது பேச்சுக்கள் இருந்தன. அதேபோல விஜயகாந்த் ராதிகாவை திருமணம் செய்ய இருந்ததாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன ஆனால் விஜயகாந்தின் நண்பரான ராவுத்தர் அவர்கள் இருவரும் சேராமல் செய்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறும் பொழுது ராதிகாவிற்கும் சரி திரைத்துறையில் உள்ள மற்றவர்களுக்கும் சரி எவ்வளவு நன்மைகளை செய்திருக்கிறார் விஜயகாந்த். ஆனால் விருதுநகர் தொகுதியில் தற்சமயம் ராதிகா விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரனுக்கு எதிராக போட்டியிடுகிறார்.

இந்த விஷயத்தை ஆவியாக இருந்து பார்க்கும் விஜயகாந்த் கண்டிப்பாக ராதிகாவை மன்னிக்க மாட்டார். திரைத்துறையில் உங்களுக்கெல்லாம் எவ்வளவோ செய்தேன் கடைசியில் என் மகனை இப்படி எதிர்த்து நிற்கிறீர்களே என்று தன் விஜயகாந்த் நினைப்பார் என்று கூறுகிறார் செய்யாறு பாலு.

மனசாட்சி இல்லாமல் விஜய் அந்த முடிவை எடுக்க மாட்டார்!.. தளபதி 69 இயக்குனர் குறித்து மனம் குமுறும் பத்திரிக்கையாளர்!.

Thalapathy 69: விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை விடவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக அவர் அடுத்து படங்கள் நடிப்பதை நிறுத்தப் போகிறார் என்பதுதான் இருக்கிறது.

ஏனெனில் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பது அவர் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்றாலும் கூட திரையின் வழியாக விஜய்யை ரசித்து வந்த அவர்களுக்கு திரும்ப அதற்கான வாய்ப்புகள் கிடைக்காது என்பது மன வருத்தத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே இருந்து வருகிறது.

Thalapathy-vijay

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்சமயம் கோட் திரைப்படத்தில் நடித்து வரும் விஜய். இதற்குப் பிறகு இன்னும் ஒரு திரைப்படத்தில் நடிப்பார் அதற்குப் பிறகு சினிமாவை விட்டு சென்று விடுவார் என்று கூறப்படுகிறது.

எனவே அந்த ஒரு திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதே பெரும் கேள்வியாக இருக்கிறது. கண்டிப்பாக அந்த திரைப்படம் அரசியல் சார்ந்த ஒரு திரைப்படமாகதான் இருக்கும் என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் அரசியலுக்கு வந்துள்ள விஜய் அதை பேசும் வகையிலேயேதான் இறுதி படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

விஜய்யின் கடைசி திரைப்படம்:

எனவே கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் இப்படி பல இயக்குனர்கள் தளபதி 69 படத்தின் இயக்குனர்கள் என்று பேச்சுக்கள் இருந்து வருகிறது. இந்த நிலையில் சில நாட்களாக ஆர்.ஜே பாலாஜிதான் விஜயின் 69 ஆவது திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று பேச்சுக்கள் வரத்துவங்கின.

அதற்கு தகுந்தார் போல ஆர்.ஜே பாலாஜியும், எல்கேஜி ,மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்களில் அரசியல் ரீதியாக நிறைய விஷயங்களை பேசி இருந்தார். அந்த படங்களின் திரைக்கதையிலும் ஆர்.ஜே பணியாற்றியிருந்தார்.

மேலும் ஆர்.ஜே பாலாஜி பேட்டியில் கூறும் பொழுது விஜய்க்கு ஒரு கதை கூறியதாகவும் அதை விஜய்க்கு பிடித்திருந்தும் அப்பொழுது வீட்ல விசேஷம் என்கிற திரைப்படத்தை இயக்கி வந்ததால் விஜயின் படத்தை இயக்க முடியாமல் போனதாகவும் கூறி இருக்கிறார் ஆர்.ஜே பாலாஜி.

இதற்கு நடுவே இது குறித்து பேசும் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறும் பொழுது விஜய் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் படம் நடிப்பதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. மனசாட்சியே இல்லாமல் இப்படியெல்லாம் புரளியை கிளப்பி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

சங்கர் எடுத்த அந்த படம் அவர் வாழ்க்கையில் நடந்த விஷயம்தான்!.. பத்திரிக்கையாளர் சொல்லும் புது தகவல்!.

Director Shankar: தமிழில் பிரமாண்டமான திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். எப்படி தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் வாங்கி இருக்கிறாரோ அதேபோல தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் வாங்கியவர் இயக்குனர் ஷங்கர்.

சங்கர் இயக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. இப்போதும் அவர் இயக்கும் திரைப்படங்களை பார்ப்பதற்கு அதிகமான மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். தற்சமயம் கமல்ஹாசனை வைத்து இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.

ஷங்கர் இயக்கிய திரைப்படங்களில் அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்ட இரண்டு திரைப்படங்கள் என்றால் அதில் ஒன்றும் முதல்வன் மற்றொன்று இந்தியன். இந்த இரண்டு திரைப்படங்களுமே அரசியல் ரீதியாக சமூக கருத்துக்களை பேசும் திரைப்படங்கள் ஆகும்.

இதனாலேயே இந்த திரைப்படங்களுக்கு இப்போது வரை மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. பொதுவாகவே ஷங்கர் இயக்கும் திரைப்படங்களில் சமூகம் சார்ந்த நிறைய விஷயங்களை பேசி இருப்பார். அந்நியன், சிவாஜி மாதிரியான திரைப்படங்களில் கூட அவற்றை நாம் பார்க்க முடியும்.

இந்த நிலையில் ஷங்கரின் முதல் திரைப்படமான ஜென்டில்மேன் திரைப்படம் குறித்து ஒரு புது தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது இயக்குனர் ஷங்கருக்கும் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது பெரும் கனவாக இருந்தது.

அதற்காக அவர் விண்ணப்பித்த பொழுது இட ஒதுக்கீடு காரணமாக அவருக்கு சீட்டு கிடைக்காமல் போனது. இதனால் கோபமான இயக்குனர் சங்கர் அதனை கதைகளாக வைத்து தனது முதல் திரைப்படத்தை இயக்கினார் என்று கூறுகிறார் செய்யாறு பாலு.

தங்க கூண்டுல அடைச்ச கிளி மாதிரிதான் என் வாழ்க்கை!.. பத்திரிக்கையாளரிடம் மனம் வருந்திய சிம்ரன்!..

Actress Simran : தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஸ்ரீதேவி போலவே மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றிருந்தவர் நடிகை சிம்ரன். நடிகை சிம்ரன் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

அவருக்கு முதலில் தமிழே தெரியாது என்று கூறலாம். லவ் டுடே திரைப்படம் மூலமாக தான் தமிழ் சினிமாவிற்கு அவர் அறிமுகமானார். லவ் டுடே திரைப்படத்தில் நடிக்கும் போது சுத்தமாக தமிழே தெரியாமல் நடித்திருந்தார் சிம்ரன்.

ஆனால் அவருக்கு தமிழ் சினிமா இப்படியான வரவேற்பை கொடுக்கும் என்பது அவரே எதிர்பார்க்காத ஒன்று. அப்போதைய கால கட்டங்களில் குஷ்பூ, சிம்ரன் மாதிரி பல வட மாநில பெண்களுக்கு தமிழ் சினிமா வரவேற்பை கொடுத்து இருக்கிறது.

simran

அப்படியாக சிம்ரன் தொடர்ந்து நடிக்க துவங்கியப்போது விஜய் அஜித் சூர்யா பிரசாந்த் என்று அப்போது பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களுடனும் வரிசையாக படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் அவருக்கு இந்த கதாநாயகி வாழ்க்கை என்பது அவ்வளவாக பிடிக்கவில்லை என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இது குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறும் பொழுது நான் ஒரு முறை சிம்ரனை நேரில் சென்று பேட்டி எடுத்தேன். அப்பொழுது அவர் கூறும் பொழுது உண்மையில் எனக்கு இந்த பிரபலமாக இருக்கும் வாழ்க்கை பிடிக்கவில்லை.

simran-1

இதற்கு முன்பு இருந்த சாதாரணமான வாழ்க்கைதான் பிடித்திருக்கிறது. நான் நினைத்தால் ஒரு கடையில் போய் சாப்பிட முடியும் ஒரு கடைக்கு பொருள் வாங்க செல்ல முடியும். ஆனால் ஒரு நடிகையான பிறகு வீட்டை விட்டு என்னால் வெளியில் செல்ல முடிவதில்லை.

உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு தங்கக் கூண்டுக்குள் அடைப்பட்ட கிளி மாதிரிதான் என்னுடைய வாழ்க்கை இருக்கிறது. எனவே ஒரு பிரபலமாக இருப்பது அவ்வளவு சந்தோஷமான விஷயம் கிடையாது என்று வெறுப்புடன் கூறி இருக்கிறார் சிம்ரன். இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.

படம் எடுக்குறேன்னு ஜெயலலிதா எம்.ஜி.ஆரை போட்டு பொளக்குறது தப்பு.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பற்றி பேசிய பத்திரிக்கையாளர்!.

Jigarthanda Double X : தற்சமயம் தீபாவளியை முன்னிட்டு இரண்டு திரைப்படங்கள் முக்கியமாக திரையில் வெளியாகின. அதில் ஒன்று ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா சேர்ந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம். மற்றொன்று கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம்.

ஆனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம்தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் அதிகப்பட்சம் படம் குறித்து நல்ல விதமான விமர்சனங்களையே அளித்து வருகின்றனர்.

ஆனால் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசும்போது அந்த திரைப்படம் தனக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் மக்கள் கொண்டாடும் அளவிற்கு எல்லாம் அது சிறப்பான படம் இல்லை என கூறியுள்ளார்.

படத்தின் கதைப்படி கதை 1975 இல் நடப்பதாக இருக்கிறது. இதில் ஒரு பெண் முதலமைச்சராக இருக்கிறார். அவரே முக்கிய வில்லி கதாபாத்திரமாக இருக்கிறார். இதுக்குறித்து செய்யாறு பாலு கூறும்போது அவர்கள் ஜெயலலிதாவைதான் அந்த பெண் கதாபாத்திரத்தில் காட்டியுள்ளனர். அதே போல அதில் நடிகர் கதாபாத்திரத்தில் வருபவர் எம்.ஜி.ஆர்தான்.

ஜெயலலிதாதான் சந்தன கடத்தல் வீரப்பனை வளர்த்துவிட்டார் என்பது போல படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அவர்தான் வீரப்பனை கொன்று அந்த பிரச்சனைக்கு முடிவு கட்டினார்.

அதே போல எம்.ஜி.ஆர் பதவிக்காக மலிவான வேலைகளை பார்த்தார் என படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்படி அரசியல் சார்ந்து ஜிகர்தண்டாவில் பல பிரச்சனைகள் இருக்கின்றன என்று படம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் செய்யாறு பாலு.

அப்பாவை வீட்டிற்கு வெளியேவே நிற்க வைத்த விஜய்!.. ரொம்ப கோபக்காரர்தான் தளபதி!..

தற்சமயம் லியோ படத்தின் டிரைலர் மூலமாக அதிகமாக பேசுபொருளாக ஆகியுள்ளார் நடிகர் விஜய். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உண்டு. லியோ திரைப்படத்திற்குமே கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

ஆனாலும் படத்தின் டிரைலர் நேர்மறையான விமர்சனங்களையும் பெறுகிறது, அதே சமயம் எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படம் அதிக வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படத்தில் இரண்டு விஜய் கதாபாத்திரங்கள் இருப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு வந்தது முதலே அவர் அதிகமாக தாக்கப்பட்டது அவரது குடும்ப விஷயம் காரணமாகத்தான்.

அவருக்கும் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கும் இடையே நிலவிய பிரச்சனை காரணமாக அவர்கள் சிறிது காலம் பிரிந்து இருந்தனர். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தியது. குடும்பத்தில் தனது பெற்றோரையே சரியாக பார்த்துக் கொள்ளாத விஜய் எப்படி மக்களை நன்றாக பார்த்துக் கொள்வார் என்றெல்லாம் பேச துவங்கி விட்டனர்.

இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறும் போது ஒரு முறை தனது பேரனை பார்ப்பதற்காக விஜய் வீட்டிற்கு எஸ்.ஏ சந்திரசேகரும் விஜய்யின் அம்மாவும் வந்திருக்கிறார்கள் அப்போது வெளியே நின்ற வாட்ச்மேன் விஜய்யிடம் போய் கேட்டுவிட்டு விஜய்யின் அம்மாவை மட்டும் உள்ளே வர அனுமதித்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த அவரது தாய் தனது கணவனுடன் திரும்ப வீட்டிற்கு சென்று விட்டார். அந்த அளவிற்கு சண்டை இருந்தது இந்த நிலையில் தற்சமயம் விஜய் தனது அம்மா அப்பா உடன் சேர்ந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு இந்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டியுள்ளார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

இரும்புக் கடைக்காரங்க கிட்ட கூட பிரச்சனை பண்ணுவோம்…  லியோ தயாரிப்பாளர் செய்த சம்பவம்!.

கோடிக்கணக்கில் காசு வைத்திருந்தாலும் கூட சிலர் சிறு பணத்திற்கு கூட கணக்கு பார்ப்பவர்கள் பலர் உண்டு. அப்படியான நபர்களில் தயாரிப்பாளர் லலித்தும் ஒருவர் என்பது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.

லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர்தான் லலித் , இவர் 777 ஸ்டுடியோ நிறுவனத்தில் உரிமையாளர் ஆவார். லியோ திரைப்படத்திற்காக இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்துள்ளது. இந்த திரைப்படத்தில் நான் ரெடி தான் வரவா? என்கிற பாடலுக்காக மிகப்பெரிய செட் போடப்பட்டது.

அந்த செட் முழுவதும் தொழிற்சாலை மாதிரியான செட் ஆகும். அதனால் முழுக்க முழுக்க இரும்பு பொருட்கள் போன்றவற்றைக் கொண்டே இந்த செட் போடப்பட்டது. குருவி படத்தில் இதே மாதிரி ஒரு செட்டில் விஜய்க்கு பாடல் இருக்கும். அதை நினைவூட்டும் விதமாகவே இந்த பாடலுக்கு அதேபோன்று செட் போடப்பட்டது.

வழக்கம் போல பாடலின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த செட்டை கலைத்தனர். பொதுவாக இந்த மாதிரி செட் போட்டு வீணாகப் போகும் பொருட்களை எடுத்துக் கொண்டு அதற்கு பணம் கொடுக்க ஒரு குழு இருக்கும்.

அந்த குழு லியோ படத்தின் செட்டை பார்த்துவிட்டு மொத்தமாக இதற்கு இரண்டு லட்சம் ரூபாய் தருகிறோம் என்று கூறியிருக்கின்றனர். ஆனால் லலித்திற்கு அந்த தொகை குறைவாக தெரிந்துள்ளது. எனவே ஏரியாவில் அவருக்கு தெரிந்த வேறு ஒரு இரும்பு கடைக்காரரை அழைத்து அவரிடம் இந்த செட்டை மொத்தமாக விற்றால் எவ்வளவு வரும் என கேட்டு அவர் மூலமாக செட்டில் இருந்த இரும்பு பொருட்களை விற்றுள்ளார்.

இதன் மூலமாக அவருக்கு ஏழு லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. இவ்வளவு கோடிகளை செலவு செய்த போதும் லலித் இந்த மாதிரியான சின்ன சின்ன செலவுகளை கூட கண்காணிக்கிறார் எனவேதான் விஜய் எப்பொழுதுமே லலித்தை தன்னுடன் வைத்திருக்கிறார் என ஒரு பேட்டியில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியிருந்தார்.

சென்னை மக்களுக்காக கோவில் கட்டிய அர்ஜுன்!.. இவரை போய் இப்படி பேசலாமா.. கோபமான பத்திரிக்கையாளர்!..

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜுன். சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து அர்ஜுனின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. தொடர்ந்து ஹீரோ ஆன்ட்டி ஹீரோ வில்லன் என பல கதாபாத்திரங்களில் அர்ஜுன் நடித்துள்ளார்.

 நடிப்பதை நிறுத்திக் கொண்ட பிறகு அர்ஜுனுக்கு ஒரு கம் பேக்காக அமைந்த திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா. மங்காத்தா திரைப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பிரபலமானது.  இதனை தொடர்ந்து மீண்டும் அர்ஜுனுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு கிடைக்க துவங்கியது பிறகு ஹீரோ மாதிரியான சில படங்களில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

 தற்சமயம் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அர்ஜுன். இந்த நிலையில் அர்ஜுனை பற்றி சமூக வலைதளங்களில் சிலர் பேசும் பொழுது அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை வேற்று மாநிலத்தை சேர்ந்தவர் என பேசியிருக்கின்றனர்.

இது குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது பேட்டியில் பேசும் பொழுது அர்ஜுன் சென்னையில்தான் அதிக இடங்களை வாங்கி வைத்துள்ளார். அவரது அதிக சொத்துக்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. சென்னை மக்களுக்காக ஒரு ஆஞ்சநேயர் கோயிலை சென்னையில் அவர் கட்டியுள்ளார் அப்படிப்பட்ட அர்ஜுனை வேற்று மாநிலத்தவர் எனக் கூறுவது சரி கிடையாது என அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். 

இதனாலதான் ஜெய் பீம் படத்துக்கு விருது கிடைக்கலை.. பத்திரிக்கையாளர் விளக்கத்தால் கடுப்பான ரசிகர்கள்!..

எந்த ஒரு துறையிலும் விருதுகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதில் சினிமாவில் விருது என்பது நடிகருக்கும் இயக்குனருக்கும் மிக பெரும் மரியாதையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது தற்சமயம் வழங்கப்பட்டது.

அப்படி வழங்கும்போது தமிழில் ஜெய்பீம், சார்ப்பாட்டா பரம்பரை, கர்ணன் போன்ற திரைப்படங்களுக்கு எந்த ஒரு விருதும் வழங்கவில்லை. ஆனால் இவை யாவும் சமூக நீதியை கூறிய படங்களாகவும், தயாரிப்பு ரீதியிலும் சிறப்பான படங்களாக இருந்தன.

இந்த நிலையில் ஏன் அந்த படத்திற்கு தேசிய விருது தரவில்லை என்பது குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு நேர்க்காணலில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது ஜெய் பீம் படத்தில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கும் வகையில் படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் அதில் காட்டும் இருளர் சமூகம் குறித்த வசனங்களை ஒரு எழுத்தாளரிடம் சென்று எழுதி வாங்கினார் இயக்குனர் த.செ ஞானவேல்.

ஆனால் அவரிடம் ஜெய் பீம் படத்திற்காகதான் இந்த வசனத்தை வாங்குகிறோம் என்பதை கூறாமல் வேறு படத்திற்கு என கூறி  வசனத்தை வாங்கினார். இதனால் கோபமான எழுத்தாளர் படத்திற்காக கொடுத்த 50,000 சம்பளத்தை திரும்ப அளித்துவிட்டாராம்.

இந்த மாதிரியான பிரச்சனைகள் அந்த படத்தில் இருந்ததால்தான் படத்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை என கூறியுள்ளார் செய்யாறு பாலு.  இதனால் கடுப்பான ரசிகர்கள் “இதெல்லாம் ஒரு காரணமா?” என செய்யாறு பாலுவை கேள்வி எழுப்பி வருகின்றனர்.