Tag Archives: jigarthanda

ஜிகர்தண்டா படம் உருவாவதற்கு ஒரு ரவுடிதான் முக்கிய காரணம்… அதிர்ச்சி தகவல் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!..

Director Karthik subbaraj: தமிழில் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக இயக்குனரான ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியைதான் கொடுத்துள்ளன.

அவரது முதல் படம் பீட்சாவாக இருந்தாலும் அவருக்கு பெரும் அடையாளமாக அமைந்த திரைப்படம் ஜிகர்தண்டாதான். ஜிகர்தண்டா திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புது வித கதை அமைப்பை கொண்டிருந்தது.

சினிமாவின் மீது ஈர்ப்பு கொண்ட ரவுடி ஒருவனை வைத்து ஒரு இயக்குனர் படம்  எடுப்பதாக அதன் கதை இருக்கும். இந்த கதை உருவாவதற்கு ஒரு ரவுடிதான் உண்மையிலேயே காரணம் என ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

அவர் குறும்படங்கள் எடுத்து வந்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்க திட்டமிட்டிருந்தாராம். அப்போது ஒரு ரவுடியை சந்தித்திருக்கின்றனர். அந்த ரவுடி முதலில் குற்றங்கள் எல்லாம் செய்து அதனால் சிறைக்கு சென்று வந்து மீண்டும் திருந்தி வாழ்ந்து வந்தார்.

அவரிடம் கதை தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் பேசும்போது அவர் அந்த கதையில் அவரே நடிப்பதாக கூறினார். அந்த நேரத்தில்தான் கார்த்திக் சுப்புராஜ் இப்படி படம் நடிக்க ஆசைப்படும் ரவுடியை வைத்து திரைப்படம் எடுக்கும் ஒரு இயக்குனரின் நிலை என்னவாக இருக்கும் என யோசித்தார்.

பின்னர் இதுவே அவரது திரைப்படத்திற்கான கதையானது. முதலில் அவர் எழுதிய கதை ஜிகர்தண்டாதான் என்றாலும் அப்போது அது அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருந்ததால் கார்த்திக் சுப்புராஜ் முதலில் பீட்சா திரைப்படத்தை இயக்கினார்.

படம் எடுக்குறேன்னு ஜெயலலிதா எம்.ஜி.ஆரை போட்டு பொளக்குறது தப்பு.. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பற்றி பேசிய பத்திரிக்கையாளர்!.

Jigarthanda Double X : தற்சமயம் தீபாவளியை முன்னிட்டு இரண்டு திரைப்படங்கள் முக்கியமாக திரையில் வெளியாகின. அதில் ஒன்று ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா சேர்ந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம். மற்றொன்று கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம்.

ஆனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம்தான் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் அதிகப்பட்சம் படம் குறித்து நல்ல விதமான விமர்சனங்களையே அளித்து வருகின்றனர்.

ஆனால் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேசும்போது அந்த திரைப்படம் தனக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். மேலும் மக்கள் கொண்டாடும் அளவிற்கு எல்லாம் அது சிறப்பான படம் இல்லை என கூறியுள்ளார்.

படத்தின் கதைப்படி கதை 1975 இல் நடப்பதாக இருக்கிறது. இதில் ஒரு பெண் முதலமைச்சராக இருக்கிறார். அவரே முக்கிய வில்லி கதாபாத்திரமாக இருக்கிறார். இதுக்குறித்து செய்யாறு பாலு கூறும்போது அவர்கள் ஜெயலலிதாவைதான் அந்த பெண் கதாபாத்திரத்தில் காட்டியுள்ளனர். அதே போல அதில் நடிகர் கதாபாத்திரத்தில் வருபவர் எம்.ஜி.ஆர்தான்.

ஜெயலலிதாதான் சந்தன கடத்தல் வீரப்பனை வளர்த்துவிட்டார் என்பது போல படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அவர்தான் வீரப்பனை கொன்று அந்த பிரச்சனைக்கு முடிவு கட்டினார்.

அதே போல எம்.ஜி.ஆர் பதவிக்காக மலிவான வேலைகளை பார்த்தார் என படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்படி அரசியல் சார்ந்து ஜிகர்தண்டாவில் பல பிரச்சனைகள் இருக்கின்றன என்று படம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் செய்யாறு பாலு.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. நான்ஸ்டாப் எண்டர்டெயின்மெண்ட் –  பட விமர்சனம்!..

ஒரு சினிமா என்பது பலருக்கு பொழுது போக்காக இருக்கும். சிலருக்கு அதுவே வாழ்க்கையாக இருக்கும். ஆனால் வரலாற்றில் பல நாட்டின் அரசியலையே புரட்டி போட்டிருக்கிறது சினிமா. தமிழகத்தில் துவங்கி அமெரிக்காவரை சினிமா அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் அதிகமானவை.

அதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

படக்கதை:

படத்தின் கதைப்படி எதற்கெடுத்தாலும் பயப்படும் ஒரு கதாபாத்திரமாக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். படம் 1973 காலக்கட்டத்தில் நடக்கிறது. போலீஸாக வேண்டும் எனும் ஆசையில் இருக்கும் எஸ்.ஜே சூர்யாவிற்கு இந்த பயம் ஒரு தடையாக இருக்கிறது.

இந்த நிலையில் எஸ்.ஐ ஆக இருக்கும் எஸ்.ஜே சூர்யாவின் மேல் ஒரு கொலை பழி விழுகிறது. 4 பேரை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார் எஸ்.ஜே சூர்யா. இந்த நிலையில் பெரும் புகழ் கொண்ட நடிகர் ஒருவர் முதலைமைச்சர் ஆக திட்டமிடுகிறார்.

அதற்கு தடையாக ஆலிஸ் சீசர் (லாரன்ஸ்) என்னும் பழங்குடி இன ரவுடி ஒருவன் இருக்கிறான். அவனை தீர்த்து கட்டுவதற்காக ஆள் தேடும்போது அவருக்கு எஸ்.ஜே சூர்யா அறிமுகமாகிறார். ஏற்கனவே போலீஸ் வேலையை இழந்த எஸ்.ஜே சூர்யா இந்த விஷயத்தை செய்ய ஒப்பு கொள்கிறார்.

ஆலிஸ் சீசருக்கு சினிமாவின் மீது அதிக ஈடுபாடு உண்டு. எனவே தன்னை ஒரு இயக்குனராக அறிமுகம் செய்துக்கொண்டு அவரிடம் செல்லும் எஸ்.ஜே சூர்யா அவரை எப்படி தீர்த்துக்கட்ட போகிறார் என்பதே கதை.

விமர்சனம்:

விறுவிறுப்பான கதைக்களத்தில் சுறுசுறுப்பான கதை ஓட்டத்தை கொண்டு திரைப்படம் செல்கிறது. உலக சினிமா தொடர்பாக ஏகப்பட்ட விஷயங்களை கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தில் வைத்துள்ளார்.

உதாரணத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகரான க்ளின்ட் ஈஸ்ட்வுட் தான் லாரன்ஸிற்கு ஆலீஸ் சீசர் என்னும் பெயரை வைக்கிறார். அதே போல எஸ்.ஜே சூர்யாவும் தன்னை சத்யஜித்ரேவின் உதவி இயக்குனர் என கூறியே அறிமுகமாகிறார்.

வெற்றிமாறன், பா.ரஞ்சித் போல படத்தில் அரசியலை அதிகமாக பேசியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இரண்டாம் பாதி முழுக்க அதை பார்க்க முடிகிறது.

முக்கியமாக 1970களில் சினிமாவின் தாக்கம் மக்கள் மத்தியில் எப்படி வேறூன்றி இருந்தது. அது அரசியலை எப்படி புரட்டி போட்டது. உண்மையில் சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதை கார்த்தி சுப்புராஜ் படத்தில் பேசியுள்ளார்.

அந்த தப்ப பண்ணதால பெரிய நடிகர்கள் படத்தை எல்லாம் இழந்திருக்கேன்!.. கார்த்திக் சுப்புராஜ் சந்தித்த பிரச்சனை!..

தமிழில் குறைந்த நாட்களிலேயே பெரும் இயக்குனர்களாக வளர்ந்த இயக்குனர்களில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முக்கியமானவர். எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக சினிமாவிற்கு வந்தவர் கார்த்திக் சுப்புராஜ்.

இவர் முதன்முதலாக நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படங்களை எடுத்து வந்தார். அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டம் முதலே கார்த்திக் சுப்புராஜிற்கு ஒரு பிரச்சனை இருந்தது.

அவருக்கு ஒரு படத்தின் கதையை சுவாரசியமாக தயாரிப்பாளரிடம் சொல்லத் தெரியாது. இது மிகப்பெரிய பிரச்சனையாகும். ஏனெனில் ஒரு இயக்குனர் கதையை சுவாரஸ்யமாக சொல்வதை வைத்துதான் தயாரிப்பாளர் அந்த படத்தை தயாரிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வார்.

ஆனால் கார்த்திக் சுப்புராஜ் எங்கே சென்றாலும் கதையை சுருக்கமாகவே கூறி விடுவாராம். இதனாலேயே அவரது முதல் படத்திற்கான வாய்ப்புகள் மிக தாமதமாகவே கிடைத்தன என்று பேட்டியில் கூறியுள்ளார். முதன் முதலாக ஜிகர்தண்டா திரைப்படத்திற்கான கதையைதான் எழுதி வைத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.

அந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் சுவாரஸ்யமாக கூறாததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தயாரிப்பாளர் சி வி குமாரை பொறுத்தவரை அவர் கதையை கேட்பதைவிட எழுதி வைத்திருக்கும் திரை கதையை வாங்கி படித்து விடுவாராம் அப்படி படித்த காரணத்தினால் தான் கார்த்திக் சுப்புராஜிற்கு அவரது முதல் படமான பீட்சா படத்திற்கு சி.வி குமாரிடம் வாய்ப்பு கிடைத்தது.

அதற்குப் பிறகும் கூட பல முறை கதை சொல்லத் தெரியாத காரணத்தினால் பெரும் இயக்குனர்களின் படத்தை தவறவிட்டிருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

உங்கக்கிட்ட அப்படி நடந்திருக்க கூடாது!. லாரன்ஸிடம் மேடையில் மன்னிப்பு கேட்ட ரஜினி இயக்குனர்!.

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தொடர்ந்து இவர் வெற்றி படங்களாகவே கொடுத்து வருகிறார் தற்சமயம் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு பிறகு இவர் நடித்து வரும் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த திரைப்படத்தில் ரவுடியாக லாரன்ஸும் படம் எடுக்கும் இயக்குனராக எஸ்.ஜே சூர்யாவும் நடிக்கின்றனர். இந்த நடிகர்கள் காம்போவாலேயே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு உண்டாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்த சுவாரஷ்யமான விஷயம் ஒன்றை ராகவா லாரன்ஸ் பகிர்ந்து இருந்தார். நடனம் ஆடிக் கொண்டிருந்த பொழுது அதை கார்த்திக் சுப்புராஜிடம் ஆடி காட்டினார் லாரன்ஸ்.

அதைப் பார்த்த கார்த்திக் சுப்புராஜ் எப்படி ஆட வேண்டும் என்று லாரன்ஸ்க்கு கற்று கொடுத்துள்ளார். அது குறித்து லாரன்ஸ் கூறும் பொழுது ஒரு டான்ஸ் மாஸ்டர் எனக்கே அவர் எப்படி ஆட வேண்டும் என்று சொல்லித் தருகிறார் என்று கூறுகிறார். அதற்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு பெரிதாக நடனமாட தெரியாது, அது ஒரு ரவுடி கதாபாத்திரம் என்னும்போது லாரன்ஸ் ஆடும் அளவிற்கு சிறப்பான நடனத்தை அந்த கதாபாத்திரம் வெளிப்படுத்தக் கூடாது என்று நினைத்தேன் அதனால்தான் அவரது நடனத்தை மாற்றி அமைத்தேன், அது தவறு என்று நினைத்தால் இப்போதே அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று மேடையிலேயே எழுந்து அவரிடம் மன்னிப்பு கேட்டார் கார்த்திக் சுப்புராஜ்.

அட கொடுமையே..காரே இல்லாமல் கார் சீன் எடுத்தோம்!. ஜிகர்தண்டா படத்தில் நடந்த சம்பவம்!..

தமிழில் குறைந்த படங்களே எடுத்து பெரும் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். சில திரைப்படங்கள் இயக்கிய பிறகு இயக்குனர்களுக்கு ஒரு தெளிவு வரும். எப்படியெல்லாம் கேமிராவில் ட்ரிக் செய்து ஒரு படத்தை இயக்கலாம் என அவர்களுக்கு தெரியும். ஆனால் கார்த்திக் சுப்புராஜ் அப்படியான வேலையை தனது முதல் திரைப்படத்திலேயே செய்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் முதன் முதலாக இயக்கிய திரைப்படம் ஜிகர்தண்டா, இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடித்தார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்தார். இந்த திரைப்படம் பெறும் வெற்றி அடைந்ததை அடுத்து இதை தெலுங்கிலும் படமாக்கினார்கள்.

இதில் பாபி சிம்ஹா ஒரு பழைய காலத்து காரை வைத்திருப்பார். அந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு அந்த இண்டர்வெல் காட்சி மட்டும் எடுக்க வேண்டி இருந்தது. அந்த காட்சிக்கு கார் வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அந்த கார் அவர்களிடம் இல்லை.

இந்த நிலையில் என்ன செய்யலாம் என யோசித்த இயக்குனர் அந்த காட்சியில் காரின் லைட்டுதான் தெரியும். எனவே அதை வைத்து சமாளிப்போம் என காரின் ஹெட்லைட்டை வாங்கி அதை ஒரு ஸ்டாண்டில் கட்டி படப்பிடிப்பை நடத்தினர்.

ஆனால் அந்த காட்சியில் பார்க்கும்போது நிஜமாகவே கார் அங்கு இருப்பது போன்றே தோன்றும். அவ்வளவு நேர்த்தியாக அந்த காட்சியை எடுத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.