Tag Archives: லாரன்ஸ்

ஒரு அளவுக்குதான் எறங்கி போக முடியும்… லோகேஷ் படத்தில் இருந்து விலக இதுதான் காரணம்… லாரன்ஸ் கொடுத்த அப்டேட்.!

தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். தமிழில் இதுவரை தோல்வி முகமே காணாத ஒரு இயக்குனர்தான் லோகேஷ் கனகராஜ்.

தொடர்ந்து அவர் இயக்கும் திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கைதி திரைப்படம் வந்தது முதலே நடிகர் ராகவா லாரன்ஸை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை லோகேஷ் கனகராஜுக்கு இருந்தது.

முக்கியமாக அவருக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆனாலும் லாரன்ஸ் ஆரம்பத்தில் அவருடைய திரைப்படங்களில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.

லாரன்ஸ் கொடுத்த பதில்:

இந்த நிலையில் இது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது வில்லன் நடிகராக நடிப்பதில் எனக்கு நிறைய சிக்கல்கள் இருக்கிறது.

raghava lawarance

வில்லன் என்றாலும் ஒரு அளவு தான் இறங்கி நடிக்க முடியும் மிகவும் மோசமான வில்லனாக நடிக்க முடியாது. ஏனெனில் என்னுடைய படங்களை குழந்தைகள் கூட பார்க்கிறார்கள்.

அவர்களுக்கு அது மோசமான அனுபவத்தை கொடுத்து விடக்கூடாது அதனால்தான் லோகேஷ் கனகராஜ் கேட்டும் கூட நான் நடித்து தருவதற்கு மறுத்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

அதாவது விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் லாரன்ஸை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டு இருந்தாராம் லோகேஷ் கனகராஜ்.

பாலாவின் சேவை தொடரும் போல… சலவை தொழிலாளிக்கு பாலா செய்த உதவி..

நடிகர் லாரன்ஸ்க்கு பிறகு அதிகமாக மக்கள் மத்தியில் அதிக உதவிகளை செய்து வரும் ஒரு நபராக பார்க்கப்படுபவர் கலக்கப்போவது யாரு பாலா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக வரவேற்பை பெற்றவர் பாலா. அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார் பாலா.

kpy-bala-

அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு பிரபலமாக அவர் மாறினார். இதற்கு நடுவே குக் வித் கோமாளி சீசன் 2வில் கோமாளியாக பங்கேற்றார் பாலா. அந்த நிகழ்ச்சி அவருக்கு பெறும் வரவேற்பை பெற்று கொடுத்தது.

பாலா செய்யும் உதவி:

அதனை தொடர்ந்து அவருக்கு வரும் வருமானத்தை எல்லாம் அனாதை ஆசிரமங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் அவர் செலவு செய்து வந்தார் என்பது மிக தாமதமாகதான் மக்களுக்கு தெரிந்தது.

bala

தொடர்ந்து வெளிப்படையாக நிறைய உதவிகளை செய்ய தொடங்கினார் பாலா. இடையில் சென்னையில் மிக்ஜாம் புயல் வந்த போது கூட பல வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வந்தார்.

இப்படி பல உதவிகளை செய்து வரும் பாலாவிற்கு தற்சமயம் நடிகர் லாரன்ஸ் ஆதரவு தெரிவித்து வருகிறார். அவரும் இவருடன் சேர்ந்து உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சலவை தொழில் செய்யும் பெண் ஒருவருக்கு துணி துவைக்கும் இயந்திரத்தை வாங்கி கொடுத்திருக்கிறார் பாலா. சமீபத்தில் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரண்டாகி வருகின்றன.

அந்த சீன்ல கோபம் கொடூரமா இருக்கணும்… நெஜமாகவே வெறி ஏத்திய லாரன்ஸ்!.. ட்ரிக் தெரிஞ்ச மனுஷன்!..

Raghava lawarance: சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்து பிறகு டான்ஸ் மாஸ்டரானவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு கதாநாயகனாக ஆசைப்பட்ட லாரன்ஸ் அற்புதம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கிய லாரன்ஸ் ஒரு கட்டத்தில் படத்தை இயக்க துவங்கினார். அவர் இயக்கிய முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கண்டன. தற்சமயம் முன்னணி நடிகர்களில் முக்கியமான நடிகராக லாரன்ஸ் இருக்கிறார்.

இந்த நிலையில் தற்சமயம் லாரன்ஸ் நடித்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. அதில் சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் அதற்கடுத்து வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் அவர் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான படமாக வந்தது.

இந்த படம் குறித்து அவர் தன் பேட்டியில் கூறும்போது படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மிகவும் கோபமாக இருக்க வேண்டும் என கூறியிருந்தனர். எப்போதுமே லாரன்ஸ் மூன்று வேளை சாப்பாட்டை நேரத்திற்கு சாப்பிட கூடியவர். அவருக்கு சாப்பாடு காலதாமதம் ஆனால் மிகவும் கோபம் வருமாம்.

எனவே அந்த காட்சியின் போது சாப்பிடாமல் நின்று படப்பிடிப்பில் நடித்துள்ளார் லாரன்ஸ். முக்கியமாக அதற்கு முந்தைய காட்சியில் எஸ்.ஜே சூர்யா நடிக்க வேண்டி இருந்ததாம். அப்போது அவரிடம் லாரன்ஸ் முடிஞ்ச அளவுக்கு நல்லா பண்ணுங்க என கூறியுள்ளார்.

படப்பிடிப்பை முடித்து வந்த எஸ்.ஜே சூர்யா சிறப்பா பண்ணியிருக்கேன் என கூறியுள்ளார். அப்படியென்றால் அவரை விட நாம் சிறப்பாக செய்ய வேண்டுமே என்கிற பயத்திலேயே அந்த படப்பிடிப்பில் சாப்பிடாமல் நடித்துள்ளார் லாரன்ஸ்.

எனக்கு முதல் வாய்ப்பை வாங்கி கொடுத்தவரே அஜித்து தான்!. மனம் திறந்த லாரன்ஸ்!.

தமிழில் நடிகர் விஜய்க்கு பிறகு பிரபலமான நடிகராக அஜித் இருக்கிறார். தற்சமயம் விஜய்க்கு பிறகு தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் இருக்கிறார். தமிழில் அமராவதி திரைப்படம் மூலமாக இவர் கதாநாயகனாக அறிமுகமானார்.

பிறகு வந்த திரைப்படங்கள் பலவும் அஜித்திற்கு வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக அவருக்கு வெற்றி படங்களாக வந்தன. அஜித் அனைவருக்கும் பல நன்மைகளை செய்து வருகிறார் என்று பலரும் கூறுவதுண்டு.

அந்த வகையில் அவர் தனக்கும் உதவிகளை செய்திருக்கிறார் என்று இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். லாரன்ஸ் ஆரம்பத்தில் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராகதான் இருந்தார். அப்போதெல்லாம் டான்ஸ் மாஸ்டர்கள் திரைப்படத்தில் ஏதாவது ஒரு பாடலில் நடனமாடுவதுண்டு.

அமர்களம் திரைப்படத்தில் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்த்தப்போது அதில் மஹா கணபதி என்னும் பாடலில் ஆட வேண்டும் என ஆசைப்பட்டார் லாரன்ஸ். ஆனால் அதற்கு அஜித் ஒப்புக்கொள்வாரா? என அவருக்கு தெரியவில்லை.

இந்த நிலையில் இதுக்குறித்து அஜித்திடம் கேட்டப்பொழுது அதனால் எதுவும் பிரச்சனை இல்லை, நடனமாடி கொள்ளட்டும் என்று கூறியுள்ளார் அஜித். அந்த படத்தில் நடனமாடிய பிறகு லாரன்ஸ் அதிகமான வாய்ப்புகளை பெற்றார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. நான்ஸ்டாப் எண்டர்டெயின்மெண்ட் –  பட விமர்சனம்!..

ஒரு சினிமா என்பது பலருக்கு பொழுது போக்காக இருக்கும். சிலருக்கு அதுவே வாழ்க்கையாக இருக்கும். ஆனால் வரலாற்றில் பல நாட்டின் அரசியலையே புரட்டி போட்டிருக்கிறது சினிமா. தமிழகத்தில் துவங்கி அமெரிக்காவரை சினிமா அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் அதிகமானவை.

அதை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

படக்கதை:

படத்தின் கதைப்படி எதற்கெடுத்தாலும் பயப்படும் ஒரு கதாபாத்திரமாக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். படம் 1973 காலக்கட்டத்தில் நடக்கிறது. போலீஸாக வேண்டும் எனும் ஆசையில் இருக்கும் எஸ்.ஜே சூர்யாவிற்கு இந்த பயம் ஒரு தடையாக இருக்கிறது.

இந்த நிலையில் எஸ்.ஐ ஆக இருக்கும் எஸ்.ஜே சூர்யாவின் மேல் ஒரு கொலை பழி விழுகிறது. 4 பேரை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார் எஸ்.ஜே சூர்யா. இந்த நிலையில் பெரும் புகழ் கொண்ட நடிகர் ஒருவர் முதலைமைச்சர் ஆக திட்டமிடுகிறார்.

அதற்கு தடையாக ஆலிஸ் சீசர் (லாரன்ஸ்) என்னும் பழங்குடி இன ரவுடி ஒருவன் இருக்கிறான். அவனை தீர்த்து கட்டுவதற்காக ஆள் தேடும்போது அவருக்கு எஸ்.ஜே சூர்யா அறிமுகமாகிறார். ஏற்கனவே போலீஸ் வேலையை இழந்த எஸ்.ஜே சூர்யா இந்த விஷயத்தை செய்ய ஒப்பு கொள்கிறார்.

ஆலிஸ் சீசருக்கு சினிமாவின் மீது அதிக ஈடுபாடு உண்டு. எனவே தன்னை ஒரு இயக்குனராக அறிமுகம் செய்துக்கொண்டு அவரிடம் செல்லும் எஸ்.ஜே சூர்யா அவரை எப்படி தீர்த்துக்கட்ட போகிறார் என்பதே கதை.

விமர்சனம்:

விறுவிறுப்பான கதைக்களத்தில் சுறுசுறுப்பான கதை ஓட்டத்தை கொண்டு திரைப்படம் செல்கிறது. உலக சினிமா தொடர்பாக ஏகப்பட்ட விஷயங்களை கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தில் வைத்துள்ளார்.

உதாரணத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகரான க்ளின்ட் ஈஸ்ட்வுட் தான் லாரன்ஸிற்கு ஆலீஸ் சீசர் என்னும் பெயரை வைக்கிறார். அதே போல எஸ்.ஜே சூர்யாவும் தன்னை சத்யஜித்ரேவின் உதவி இயக்குனர் என கூறியே அறிமுகமாகிறார்.

வெற்றிமாறன், பா.ரஞ்சித் போல படத்தில் அரசியலை அதிகமாக பேசியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இரண்டாம் பாதி முழுக்க அதை பார்க்க முடிகிறது.

முக்கியமாக 1970களில் சினிமாவின் தாக்கம் மக்கள் மத்தியில் எப்படி வேறூன்றி இருந்தது. அது அரசியலை எப்படி புரட்டி போட்டது. உண்மையில் சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதை கார்த்தி சுப்புராஜ் படத்தில் பேசியுள்ளார்.

சந்திரமுகி 2 காக அந்த தப்பை பண்ணிட்டு இப்ப வருத்தப்படுறேன்!.. உண்மையை கூறிய லாரன்ஸ்!..

தமிழில் உள்ள நடனக்கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் நடனங்கள் தமிழ் சினிமாவில் பிரபலமானவை. அவரது திரைப்படங்கள் பலவும்  அவரது நடனத்திற்காகவே ஓடியுள்ளன.

இவற்றையெல்லாம் தாண்டி பல மாற்று திறனாளிகளுக்கு, ஏழைகளுக்கு உதவி வருகிறார் லாரன்ஸ். லாரன்ஸ் தற்சமயம் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது சாதாரணமாக ஒரு டான்ஸ் மாஸ்டர் 75 கிலோவுக்கு அதிகமாக எடை கொண்டிருக்க கூடாது.

ஆனால் சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக 82 கிலோ வரை எடையை அதிகரித்தேன். ஏனெனில் வேட்டையன் கதாபாத்திரத்திற்கு உடல் எடை அதிகமாக இருக்க வேண்டும் என கூறிவிட்டனர். இப்போது அந்த 7 கிலோ எடையை குறைப்பது மிகவும் கடினமான காரியமாக உள்ளது என கூறியுள்ளா லாரன்ஸ்.

பயம் காட்டிட்டாங்க பரமா!.. சந்திரமுகி 2 வை விரட்டி அடித்த மார்க் ஆண்டனி!..

ரஜினி நடித்த திரைப்படங்களில் சில திரைப்படங்கள் மட்டும் வசூல் ரீதியாக நல்ல சாதனை புரிந்துள்ளன. அந்த வகையில் சந்திரமுகி திரைப்படத்திற்கும் அதில் முக்கிய இடமுண்டு. சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என வெகு நாட்களாக ஆசைப்பட்டார் இயக்குனர் பி.வாசு.

ஆனால் அந்த நேரங்களில் எல்லாம் ரஜினிகாந்திற்கு நேரம் இல்லாமல் போனதால் படமும் தள்ளி சென்றுக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த பி.வாசு சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை நடிகர் லாரன்ஸை வைத்து எடுக்க முடிவெடுத்தார்.

அதன் படி சந்திரமுகியின் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது. வருகிற செப்டம்பர் 15 இந்த திரைப்படம் வெளியாக இருந்தது. 2 நாட்களுக்கு முன்பு இதன் ட்ரைலரும் வெளியானது. ஆனால் அதே நாளில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ட்ரைலரும் வெளியானது.

மார்க் ஆண்டனி திரைப்படமும் செப்டம்பர் 15 ஆம் தேதியே வெளியாக இருந்தது. ட்ரைலர் வெளியான பிறகு சந்திரமுகி 2 வை விடவும் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு வர துவங்கியுள்ளது. இது சந்திரமுகி திரைப்படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சந்திரமுகி 2 திரைப்படத்தை செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் படத்தில் நான் இருக்கேன்!.. உண்மையை உடைத்த ராகவா லாரன்ஸ்..

தமிழ் சினிமாவில் ஹீரோ நடிகர்களை விடவும் வில்லன் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் படங்களில் ஹீரோவுக்கு இருந்த அதே அளவிலான வரவேற்பு வில்லனுக்கும் இருந்தது.

எனவே பல முக்கிய நடிகர்கள் தற்சமயம் வில்லனாக நடிக்கவும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் லாரன்ஸும் தற்சமயம் வரவிருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

அதனை தொடர்ந்து அவருக்கு வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்துக்கொண்டுள்ளன. இந்த நிலையில் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் கைதி 2 திரைப்படத்தில் லாரன்ஸ் வில்லனாக நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

இதுக்குறித்து லாரன்ஸ் ஒரு பேட்டியில் கூறும்போது நான் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பது உண்மைதான். ஆனால் அது அவர் தயாரிக்கும் திரைப்படம் ஆகும் என கூறியுள்ளார் லாரன்ஸ்.

ரசிகன்னு சொல்லி என்ன வச்சி காசு சம்பாதிப்பான்!. வாசுவிடம் ரஜினிகாந்த் சொன்ன சீக்ரெட்!..

தமிழ் சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் அதிகமாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே உள்ளதால் எப்போதுமே அவரது திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் உண்டு.

ஆனால் பாபா படம் பெரும் தோல்வியை கண்ட பிறகு தமிழ் சினிமாவில் ரஜினியின் மார்க்கெட் குறைந்தது. அதன் பிறகு அவருக்கு மறுபடி மார்க்கெட் வர காரணமான படமாக சந்திரமுகி இருந்தது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் இந்த படம் தயாரானது.

மலையாளத்தில் மோகன்லால் நடித்த திரைப்படத்தின் ரீமேக்காக சந்திரமுகி எடுக்கப்பட்டது. ஒரு வருடம் ஓடி பெரும் ஹிட் கொடுத்தது சந்திரமுகி. பொதுவாக பெரிய நடிகர்கள் கொஞ்சம் வளர்ந்த பிறகு தங்களது ரசிகர்களுக்காக ரசிகர் மன்றங்களை திறப்பார்கள்.

ரஜினியும் அதை செய்தார் என்றபோதும் ரஜினிகாந்த் அனைத்து ரசிகர்களையும் கூட சேர்த்து கொள்ள மாட்டாராம். இதுக்குறித்து ஒருமுறை வாசு கேட்டப்போது ரசிகர்களில் நல்ல ரசிகரும் இருப்பார்கள், கெட்ட ரசிகரும் இருப்பார்கள். சிலர் நம்மை பயன்படுத்தி சம்பாதிக்க பார்ப்பார்கள். என அறிவுரை கூறியுள்ளார் ரஜினி.

தற்சமயம் பி.வாசு நடிகர் லாரன்ஸை வைத்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

கைதி 2 வில் வில்லனாக லாரன்ஸ் – இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு தனியான ரசிகர் பட்டாளமே உருவாகி கொண்டிருக்கிறது என கூறலாம். அந்த அளவிற்கு லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு வரவேற்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க போகும் அடுத்த படம் தளபதி 67. இதற்கு அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி 2 திரைப்படத்தை இயக்க உள்ளார். கைதி 2 திரைப்படமானது கார்த்தியின் முன்கதையாக இருக்கும் என அனுமானங்கள் இருந்து வந்தன.

ஆனால் படத்தில் அரை மணி நேரத்திற்குதான் கார்த்தியின் முன்கதை வரும். அதன் பிறகு தற்போதைய காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக கைதி 2 இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஏற்கனவே சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வேட்டையன் ராஜா கதை வருவதாகவும் அதில் லாரன்ஸ் வேட்டையன் ராஜாவாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கைதி 2 விலும் அவர் வில்லனாக நடிக்கிறார். ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு வேலை செய்யும் கதாபாத்திரமாக இவர் இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.