Tag Archives: விஷால்

என்னை யாராச்சும் காப்பாத்துங்க.. கதறி அழுத விஷால் பட நடிகை.. அட கொடுமையே..!

வெகு காலங்களாகவே சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா. 2005 ஆம் ஆண்டில் இருந்தே இவர் சினிமாவில் நடித்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில்தான் முயற்சி செய்தார்.

ஆனால் அவருக்கு பாலிவுட் சினிமாவில் அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அடுத்து அவர் மற்ற சினிமாக்களில் முயற்சி செய்து வந்தார். முதல் படம் பாலிவுட்டில் தோல்வியடைந்ததை அடுத்து தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்தார் தனுஷ் ஸ்ரீ தத்தா.

2010 ஆம் ஆண்டு தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் இவர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார். அதற்கு பிறகும் கூட தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அதிர்ச்சி பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை தனுஷ் ஸ்ரீ தத்தா.

அதில் அவர் தன்னுடைய வீட்டிலேயே தான் கொடுமைக்கு ஆளாவதாகவும் தனக்கு உதவும்படியும் கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டில் அப்படி என்னதான் நடக்கிறது என அதுக்குறித்து இப்போது பேசி வருகின்றனர் ரசிகர்கள்.

நீ தைரியமா இரு.. நான் இருக்கேன்.. தொகுப்பாளினி சப்போர்ட்டாக வந்த நடிகர் விஷால்..!

சமீபத்தில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி குறித்த சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் அதிக வைரலாகி வந்தது. நிறைய சினிமா தொடர்பான விழாக்களை தொகுத்து வழங்கியும் வருகிறார்.

மேலும் சில குறும்படங்கள் போன்றவற்றிலும் நடித்து வருகிறார் நடிகை ஆவதற்கும் இவர் முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் ஒரு படத்தின் விழாவில் தொகுத்து வழங்கி வந்த பொழுது அவரிடம் அங்கிருந்த பத்திரிகையாளர் நீங்கள் அணிந்திருக்கும் உடை கோடைகாலத்திற்கு ஏற்ற உடையா? என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு அப்பொழுது ஐஸ்வர்யா ரகுபதி விடை அளிக்கவில்லை. ஆனால் பிறகு ஒரு மேடையில் அவர் பேசும் பொழுது ஒரு பத்திரிகையாளர் அப்படியான ஒரு மோசமான கேள்வியை கேட்கும் பொழுது திரை துறையை சேர்ந்த யாருமே ஏன் அது குறித்து எனக்கு ஆதரவாக பேசவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அந்த பத்திரிகையாளர் ஸ்லீவ்லஸ் உடையை வெயிலுக்கு காற்றோட்டமாக அணிந்து வந்திருக்கிறேன் என்கிற போக்கில்தான் அந்த கேள்வியை கேட்டார் ஆனால் அவரை யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மனம் வருந்தினார் ஐஸ்வர்யா ரகுபதி.

இந்த நிலையில் இது குறித்து மேடையில் பேசிய விஷால் கூறும் பொழுது உனக்கு பிடித்ததை நீ செய். உன்னிடத்தில் எந்த தவறும் இல்லை நான் உனக்கு சப்போர்ட்டாக இருக்கிறேன் என்று ஆதரவு கொடுத்திருக்கிறார்.

முதலில் அவரை பத்திர்க்கையாளர்களை சந்திக்க சொல்லுங்க.. விஜய்க்கு பதிலடி கொடுத்த நடிகர் விஷால்..!

நடிகர் விஜய்க்கு முன்பு இருந்தே அரசியலின் மீது அதிக ஈடுபாடு கொண்டவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார்.

நடிகர் விஜய் கட்சி துவங்கிய பொழுது விஷாலும் கட்சியை துவங்கி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஷால் அரசியலுக்கு வருவதாக கூறிக் கொண்டிருக்கிறாரே தவிர இப்பொழுது வரை அரசியலுக்கு வரவில்லை.

ஆனாலும் கூட அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுப்பதை தொடர்ந்து விஷால் செய்து வருகிறார். ஒவ்வொரு முறை சென்னையில் பேரிடர் ஏற்படும் பொழுதும் கொரோனா போன்ற காலகட்டத்தின் பொழுதும் தொடர்ந்து தனது குரலை பதிவு செய்து வந்திருக்கிறார் நடிகர் விஷால்.

இதனால் அரசியல் சார்ந்த கேள்விகளையும் பத்திரிகையாளர்கள் அடிக்கடி விஷாலிடம் கேட்பது உண்டு. இந்த நிலையில் நடிகர் விஜய் எப்போதுமே ஆளுங்கட்சிகளையும் மத்திய அரசையும் நேரடியாக பேசுவதே கிடையாது என்று இது குறித்து விஷாலிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த விஷால் இதுவரை விஜய் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்று ஒன்று வைக்கவே இல்லை. முதலில் பத்திரிகையாளர் சந்திப்பு வைக்க சொல்லுங்கள். பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் இந்த கேள்விகளை எல்லாம் கேளுங்கள்.

இதை என்னிடம் கேட்டால் என்ன அர்த்தம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார் விஷால். இந்த நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது சரியா? என்று விஷாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஷால் சமூக ஈடுபாடு கொண்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதில் தவறு இல்லை என்று கூறியிருக்கிறார்.

காதல் செய்தியால் வந்த பிரச்சனை நடிகை எடுத்த திடீர் முடிவு.. விஷாலால் வந்த வினை.!

லத்தி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடிப்பில் வரும் திரைப்படங்கள் எல்லாம் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுக்கும் திரைப்படங்களாகதான் இருந்து வருகின்றன. மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது.

அதற்கு பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த மதகஜ ராஜா திரைப்படமும் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி படம் வந்த காலக்கட்டத்தில் இருந்தே அந்த படத்தில் நடித்த நடிகை அபிநயாவுக்கும் விஷாலுக்கும் காதல் இருந்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

இந்த சர்ச்சை ஓயாமலே இருந்த காரணத்தினால் இதற்கு முடிவு கட்டும் வகையில் அபிநயா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 12 வருடங்களாக ஒரு நபரை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார் நடிகை அபிநயா. மேலும் அந்த நபருடன் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இருந்தாலும் யார் தன்னுடைய காதலர் என்பதை அபிநயா பகிரங்கமாக வெளியிடவில்லை. இரண்டு கைகள் இணைந்து இருக்கும் புகைப்படத்தை மட்டுமே அவர் வெளியிட்டுள்ளார். அபிநயா முன்பு ஒரு பேட்டியில் பேசும்போது இப்போதைக்கு திருமணத்தை பற்றி யோசிப்பதாக இல்லை என கூறியிருந்தார்.

ஆனால் தற்சமயம் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிடுள்ளார். விஷால் குறித்த சர்ச்சைக்கு முடிவு கட்டவே இப்படியான முடிவை அவர் எடுத்துள்ளார் என இதுக்குறித்து பேச்சுக்கள் இருக்கின்றன.

நயன்தாரா முடிவால் சிக்கலில் சிக்கிய சுந்தர் சி… இப்படி ஆயிடுச்சே..!

நடிகை நயன்தாரா தமிழில் தற்சமயம் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். ஆர் ஜே பாலாஜியுடன் நயன்தாரா இணைந்து நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் வேல்ஸ் நிறுவனம் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சுந்தர் சி இடமும் அவர்கள் பேசியிருக்கின்றனர். அவரும்  படத்தை இயக்குவதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நயன்தாரா ஏப்ரல் மாதம் வரைக்கும் நிறைய திரைப்படங்களில் கமிட்டாகி இருப்பதால் மூக்குத்தி அம்மன் டு2 திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

mookuthi amman

இதனால் இயக்குனர் சுந்தர் சி நடிகர் விஷாலை வைத்து அடுத்த படத்தை துவங்குவதற்கு திட்டமிட்டார். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இப்பொழுது நயன்தாரா மார்ச் மாதத்திலேயே கால்ஷீட் தருவதாகவும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை துவங்க வேண்டும் என்றும் இயக்குனர் சுந்தர் சி யை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கு நடுவே விஷாலும் தற்சமயம் அடுத்த படத்தில் நடிப்பதற்கு தயாராக இருப்பதால் யாரை வைத்து திரைப்படம் இயக்குவது என்கிற தர்ம சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறார் சுந்தர் சி.

பெரும்பாலும் அவர் விஷால் படத்தைதான் அடுத்து துவங்குவார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ஏனெனில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதகஜராஜா நல்ல வெற்றியை கொடுத்திருந்தது அதனை தொடர்ந்து இன்னொரு படத்தை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறாராம் சுந்தர் சி.

எந்த சமரசமும் இருக்காது.! பராசக்தி டைட்டில் பிரச்சனைக்குள் வந்த விஷால்..

தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்தின் டைட்டில் குறித்த விஷயங்கள்தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி தயாராகி வரும் திரைப்படம் சுதா கொங்காரா.

சுதா கொங்காரா இயக்கும் திரைப்படம் என்பதாலேயே இந்த திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் நேற்று வெளியானது. அதன்படி தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் படத்தின் டீசர் வெளியானது.

இரண்டிலுமே பராசக்தி என்கிற பெயரில்தான் டீசர் வெளியானது. இந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் சக்தி திருமகன் என்கிற திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படம் தமிழில் மட்டுமே சக்தி திருமகன் என்கிற பெயரில் வெளியாகிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளிலும் இந்த படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான உரிமத்தையும் விஜய் ஆண்டனி வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய விஷால் இதுக்குறித்து நாசர் சாருடன் கலந்து பேச உள்ளோம். விஜய் ஆண்டனிதான் தமிழை தவிர்த்து மற்ற நான்கு மொழிகளிலும் பதிவு செய்திருக்கிறார். எனவே காம்ப்ரமைஸாக செல்வதுதான் நல்லது என கூறியுள்ளார் விஷால்.

மேலும் பதிவு செய்ததில் யார் முன்னிலையில் இருக்கின்றனர் என்பதை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார் விஷால்.

மீண்டும் விஜய் படத்தை கையில் எடுத்த கௌதம் மேனன்.. விரைவில் வெளிவர இருக்கும் அப்டேட்.!

விஜய்யை வைத்து திரைப்படம் எடுக்க நினைக்கும் நிறைய இயக்குனர்களுக்கு விஜய்யே வாய்ப்பு கொடுத்தும் கூட படம் பண்ணுவதற்கான வாய்ப்புகள் அமையாமல் போயுள்ளது.

இதை நிறைய இயக்குனர்கள் பேட்டிகளில் பகிர்ந்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. சிவகாசி திரைப்படத்திற்கு பிறகு விஜய் பேரரசுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அப்போது பேரரசு வேறு படத்தை இயக்கி வந்ததால் அந்த படத்தை அவரால் இயக்க முடியவில்லை.

அதே போல இயக்குனர் பி.வாசுவிடம் நடிகன் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்குமாறு கூறியுள்ளார். மேலும் அதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன் என விஜய் கூறியுள்ளார். ஆனால் அப்போது இயக்குனர் பி.வாசு வேறு வேலைகளில் இருந்ததால் அவரால் இயக்க முடியாமல் போனது.

இதே சம்பவம் இயக்குனர் கௌதம் மேனனுக்கும் நடந்தது. உலக பிரபலமான லார்கோ வின்ச் என்கிற காமிக்ஸை அடிப்படையாக கொண்டு கௌதம் மேனன் இயக்க நினைத்த திரைப்படக் யோகன் அத்தியாயம் ஒன்று. இந்த படத்தை இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டிருந்தார் கௌதம் மேனன்.

ஆனால் அப்போதைய சூழ்நிலையில் அந்த படம் பாதியிலேயே நின்று போனது. இந்த நிலையில் அந்த படத்தை மீண்டும் இயக்க திட்டமிட்டுள்ளார் கௌதம் மேனன். இந்த நிலையில் இப்போது விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டதால் அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரண்மனை 4க்கே டஃப் கொடுக்கும் போல.. வாய் பிளக்க வைத்த 5 நாள் வசூல்.. மாஸ் காட்டும் மதகஜராஜா.!

நடிகர் விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பே உருவாகி தற்சமயம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படமாக மதகஜராஜா திரைப்படம் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இந்த அளவிலான வரவேற்பு கிடைக்கும் என்பது இயக்குனர் சுந்தர் சியே எதிர்பார்க்காத விஷயமாகும்.

பெரும்பாலும் 10 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு இப்போது இப்படி ஒரு வரவேற்பு கிடைப்பது அதிசயமான விஷயம்தான். ஏனெனில் 10 வருடங்களுக்கு முன்பு இருந்த தொழில்நுட்பம் வேறு இப்போது இருக்கும் தொழில்நுட்பம் வேறு.

அந்த அளவிற்கு சினிமாவில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஆனால் அதே சமயம் காமெடி திரைப்படங்கள் வெளியாவதே இப்போது குறைந்துவிட்டது. அதே சமயம் எப்போதுமே மக்கள் காமெடி படங்களை விரும்பி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக இருந்ததால் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 28 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மதகஜராஜா திரைப்படம். அரண்மனை 4 திரைப்படம் மொத்தமாகவே 100 கோடி ரூபாய்தான் வெற்றி கொடுத்தது. ஆனால் மதகஜராஜா அதனை தாண்டி வசூல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டில் முடங்கி கிடந்த விஷால்.. ஒருமையில் பேசிய குஷ்பு.. இத்தனை விஷயம் நடந்துருக்கு.. விளக்கிய பிரபலம்..!

நடிகர் விஷால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்சமயம் வரவேற்பை பெற்று வரும் நடிகராக மாறியுள்ளார். சமீப காலங்களாக விஷாலுக்கு சொல்லி கொள்ளும்ப்படியாக திரைப்படங்கள் என்று எதுவுமே வெளிவரவில்லை. அவர் நடித்த லத்தி திரைப்படம் வரை பெரிதாக வரவேற்பு இல்லாத நடிகராகதான் இருந்து வந்தார் விஷால்.

ஆனால் மார்க் ஆண்டனி திரைப்படம் மீண்டும் அவருக்கு ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது. மார்க் ஆண்டனி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது.

அதனை தொடர்ந்து அவருக்கு வரவேற்பை ஏற்படுத்தும் மற்றுமொரு திரைப்படமாக மதகஜராஜா திரைப்படம் அமைந்துள்ளது. மதகஜராஜா திரைப்படத்தின் மூலமாக மீண்டும் இவருக்கு வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.

விஷாலுக்கு இருந்த கை நடுக்கம்:

ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பு நடந்த விழாவில் விஷால் கை நடுக்கத்துடன் மைக்கை பிடித்து பேசியதை பலரும் பார்த்திருக்கலாம். படத்தின் ப்ரோமஷனுக்காக விஷால் வேண்டுமென்றே கையில் நடுக்கம் ஏற்பட்டது போல நடித்துள்ளார் என இதுக்குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் இதுக்குறித்து வலைப்பேச்சு பிஸ்மி பேசியுள்ளார். அவர் கூறும்போது விஷாலுக்கு கை நடுக்கம் ஏற்பட்டது என கூறுவதெல்லாம் வெறும் நடிப்புதான். அவர் சிம்பதி உருவாக்கி அதன் மூலமாக படத்துக்கு ப்ரோமோஷன் தேட பார்த்தார்.

ஆனால் அதுவே அவருக்கு எதிர்வினையாக முடிந்தது. உண்மையில் விஷால் எங்கிருக்கிறார் என்பது பலருக்குமே தெரியாத விஷயமாக இருந்தது. அவர் எங்கோயோ முடங்கி கிடந்தார். அதனால்தான் குஷ்பு மேடையில் பேசும்போது கூட விஷால் உன்னை கண்டுப்பிடிப்பது எங்களுக்கு சிரமமாக இருந்தது என ஒருமையில் பேசியிருந்தார். என்று அந்த நிகழ்வு குறித்து பகிர்ந்திருந்தார் வலைப்பேச்சு பிஸ்மி.

பொங்கலுக்கு கேம் சேஞ்சராக அமைந்த மதகஜராஜா… மூன்றாவது நாள் நடந்த அதிசயம்.. வசூல் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. ஏனெனில் ஆக்‌ஷன் திரைப்படங்களை இயக்குவதற்கு தமிழில் நிறைய இயக்குனர்கள் இருக்கின்றனர். ஆனால் காமெடி திரைப்படங்களை இயக்குவதற்கு சுந்தர் சி மாதிரியான இயக்குனர்கள்தான் இருக்கிறார்கள்.

சுந்தர் சி 12 வருடங்களுக்கு முன்பு இயக்கிய திரைப்படம் மதகஜராஜா. தற்சமயம் பொங்கலை முன்னிட்டு பல படங்கள் வெளியானது. அதில் மதகஜராஜா திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். ஜனவரி 12 அன்று வெளியான மதகஜராஜா முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து அதன் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மதகஜராஜா.

பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே தற்சமயம் அதிக வசூல் கொடுத்த தமிழ் படமாக மதகஜராஜாதான் இருந்து வருகிறது. மதகஜராஜா வெளியான முதல் நாள் 3 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாளும் 3 கோடிதான் வசூலித்தது.

ஆனால் மூன்றாவது நாள் மட்டும் கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இதன் வசூல் அதிகரித்தால் கண்டிப்பாக 100 கோடி ரூபாய் வசூல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 வயது நடிகையுடன் தொடர்பு.. ஒவ்வொருவாட்டியும் அதை பண்ணுவார்.. விஷால் குறித்து பேசிய பிரபலம்..!

நடிகர் விஷால் செல்லமே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் நெப்போலியனுக்கு பிறகு அவரை போலவே அதிக உயரம் கொண்ட நடிகராக விஷால் இருந்து வருகிறார்.

சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து அவர் நடித்த மலைக்கோட்டை, தாமிரபரணி, சண்டக்கோழி மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

அப்படியெல்லாம் நடித்து வந்த விஷால் இப்போது மைக் பிடிக்கவே திணறும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சமீபத்தில் நிமோனியா காய்ச்சல் வந்ததாகவும் அதனால்தான் இப்படி இருக்கிறார் என்றும் விஷால் தரப்பில் இருந்து கூறப்பட்டது.

ஆனால் இதுக்குறித்து மக்கள் மத்தியில் பலவாறு பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் இதுக்குறித்து கூறியுள்ளார். அவர் கூறும்போது தொடர் போதை பழக்கம்தான் விஷாலின் இந்த நிலைக்கு காரணம் என கூறுகிறார்.

மது அடிப்பதால் இப்படி ஆகுமா? என தொகுப்பாளர் கேட்டப்பொழுது மதுவை தாண்டி போதை பொருட்கள் இருக்கின்றன. அவற்றிற்கு எல்லாம் உலக அளவில் அதிக மார்க்கெட் உண்டு. பிரபலங்கள் பெரும்பாலும் அவற்றைதான் பயன்படுத்துகின்றனர் என விளக்கியிருந்தார் தமிழா தமிழா பாண்டியன்.

மேலும் அவர் கூறும்போது எல்லா பிரபலங்களும் போதை பொருட்களை பயன்படுத்தினாலும் கூட அவர்கள் அளவாக பயன்படுத்துகின்றனர். ஆனால் ராஜபோதை வேண்டும் என்று விஷால் அதிகப்படியாக எடுத்துக்கொண்டார். முக்கியமாக 1980 மற்றும் 1990களில் இருந்த நடிகையுடன் விஷாலுக்கு உறவு உண்டு.

அவர்களுடன் இருக்கும்போது அதிகமாக போதை பொருட்களை பயன்படுத்துகிறார் என கூறியிருந்தார் தமிழா தமிழா பாண்டியன். அவரின் இந்த சர்ச்சை பேச்சு அதிக பிரபலமாகி வருகிறது.

போடா பு#டா மவனே.. சரக்கை எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்தான்.. விஷால் குறித்து சர்ச்சையை கிளப்பிய பாடகி..!

சமீப காலங்களாக அதிகமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நடிகராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். ஒரு காலத்தில் சண்டக்கோழி, தாமிரப்பரணி என நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் விஷால்.

ஆனால் இப்போது அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சமீபத்தில் மதகஜ ராஜா திரைப்படத்தில் ஒரு 12 வருடங்களுக்கு முன்பு விஷால் நடித்திருந்தார். சில காரணங்களால் அந்த படம் வெளியாவதில் சிக்கல் இருந்து வந்தது.

இந்த நிலையில் வருகிற பொங்கலை முன்னிட்டு அந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இதுக்குறித்து நடந்த விழாவில் விஷால் கலந்துக்கொண்டார். அப்போது விஷால் பேசும்போது அவரது கைகள் நடுங்கி கொண்டு இருப்பதை பார்க்க முடிந்தது.

vishal

இதனையடுத்து உண்மையிலேயே விஷாலுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என ஒரு பக்கம் பேச்சுக்கள் சென்று கொண்டுள்ளன. இந்நிலையில் இதுக்குறித்து பிரபல சர்ச்சை பாடகி சுசித்ரா பேசியுள்ளார்.

அவர் பேசும்போது ஒரு நாள் எனது கணவர் கார்த்திக் இல்லாத நேரத்தில் விஷால் எங்கள் வீட்டுக்கு வந்தான். அவனது கண்கள் பற்கள் எல்லாம் மஞ்சளாக இருந்தது. கையில் ஒரு ஒயின் பாட்டில் வைத்திருந்தான். அவன் என்னிடம் கார்த்திக் இல்லையா என கேட்டான்.

நான் இல்லை என்றேன். நான் ஒயின் குடிக்க வேண்டும் உள்ளே வரவா? எனக் கேட்டான். நான் முடியாது.. கார்த்திக் கௌதம் மேனன் அலுவலகத்தில் இருக்கிறான். வேண்டும் என்றால் அங்கு சென்று போய் பார் என்றேன். அவன் கிளம்பினான். எனக்கூறிய சுசித்ரா அவனை கெட்ட வார்த்தையில் திட்டியதாகவும் பதிவு செய்துள்ளார்.