சந்திரமுகி 2 காக அந்த தப்பை பண்ணிட்டு இப்ப வருத்தப்படுறேன்!.. உண்மையை கூறிய லாரன்ஸ்!..
தமிழில் உள்ள நடனக்கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் நடனங்கள் தமிழ் சினிமாவில் பிரபலமானவை. அவரது திரைப்படங்கள் பலவும் அவரது நடனத்திற்காகவே ஓடியுள்ளன.
இவற்றையெல்லாம் தாண்டி பல மாற்று திறனாளிகளுக்கு, ஏழைகளுக்கு உதவி வருகிறார் லாரன்ஸ். லாரன்ஸ் தற்சமயம் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது சாதாரணமாக ஒரு டான்ஸ் மாஸ்டர் 75 கிலோவுக்கு அதிகமாக எடை கொண்டிருக்க கூடாது.
ஆனால் சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக 82 கிலோ வரை எடையை அதிகரித்தேன். ஏனெனில் வேட்டையன் கதாபாத்திரத்திற்கு உடல் எடை அதிகமாக இருக்க வேண்டும் என கூறிவிட்டனர். இப்போது அந்த 7 கிலோ எடையை குறைப்பது மிகவும் கடினமான காரியமாக உள்ளது என கூறியுள்ளா லாரன்ஸ்.