நடிகர் அஜித் தொடர்ந்து கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நடிப்பதை விடவும் அவருக்கு அதன் மீதுதான் அதிக ஆர்வமாக இருந்து வருகிறது.
இதனால் அஜித் வருடத்திற்கு ஒரு திரைப்படம்தான் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் அஜித்தின் நடிப்பில் இந்த வருடம் இரண்டு திரைப்படங்கள் வெளியானது. ஜனவரி ஆரம்பத்தில் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது.
விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களுக்கு ஏற்புடைய திரைப்படமாக அமையவில்லை. அதனால் இந்த திரைப்படம் பெரிய தோல்வியை கண்டது அதனை தொடர்ந்து அஜித் நடித்த திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. நல்ல வசூலையும் பெற்று கொடுத்தது. இதனை தொடர்ந்து அடுத்து அஜித் நடிக்கும் திரைப்படம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் ரஜினிகாந்துக்கு இருக்கும் அளவிலான மார்க்கெட் என்பது இன்னமும் அஜித்துக்கு இல்லை என்று தான் கூற வேண்டும். எனவே விஜய் ரஜினி மாதிரி மிக அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக அஜித் இல்லை.
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவர்கள் இருவருக்கு பிறகுதான் அஜித் இருக்கிறார். இந்த நிலையில் அடுத்து அஜித் நடிக்கும் திரைப்படத்திற்கு அவர் அதிக சம்பளம் கேட்டிருக்கிறார்.
இதனாலேயே இந்த திரைப்படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தையுமே ஆதிக்க ரவிச்சந்திரன் தான் இயக்க இருக்கிறார் எனவே இதுவும் கூட பெரிய வெற்றியை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.