Tag Archives: jigarthanda double x

Director Karthik subbaraj:  உங்க சீனை எல்லாம் படத்துல வச்சுருக்கார்!.. கார்த்திக் சுப்புராஜை ஹாலிவுட் நடிகரிடம் கோர்த்துவிட்ட ரசிகர்!..

Jigarthanda Double x : தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு இயக்குனராக கார்த்திக் சுப்புராஜ் இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியான சமயத்திலேயே அதிக வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் முதல் பாகத்தின் கதையைதான் கிட்டத்தட்ட வைத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். ஒரு ரவுடியை வைத்து ஒருவர் படம் இயக்குவதுதான் படத்தின் கதையாக இருந்தாலும் அதற்குள் ஆட்சியாளர்களின் அரசியல், காடுகளில் நடக்கும் யானை வேட்டை என்று பல விஷயங்களையும் பேசி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ் முக்கியமாக பழங்குடியின மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்தும் சில பேசியிருந்தார்.

சினிமா ஒரு பொழுதுபோக்கு விஷயம் என்பதையும் தாண்டி அதனால் வரலாற்றில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் பேசி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இந்த வருடம் வந்த திரைப்படங்களிலேயே அதிகமான வரவேற்பு பெற்ற திரைப்படமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இருந்தது.

இந்த படத்தில் ராகவா லாரன்ஸை கௌபாய் மீது பெரும் ஈடுபாடு கொண்ட ஒரு நபராக காட்டியிருப்பார் கார்த்திக் சுப்புராஜ். அதற்காக ஹாலிவுட்டின் பிரபல  கௌபாய் நடிகரான க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை படத்தில் பல இடங்களில் பயன்படுத்தி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். அவரின் கௌபாய் திரைப்படங்கள் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவை.

டாலர் ட்ரய்யாலஜி என்னும் மூன்று படங்கள் அடங்கிய அவரது திரைப்படங்கள் உலகம் முழுக்க பிரபலமானவையாகும். இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸில் ஜிகர்தண்டா வெளியாகி தற்சமயம் மீண்டும் மக்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது. இதற்கு நடுவே ரசிகர் ஒருவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் க்ளிண்ட் ஈஸ்டு உட்டை குறிப்பிட்டு இந்த திரைப்படத்தில் உங்களை குறித்து நிறைய காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது முடிந்தால் பாருங்கள் என்று கிளினிட் ஈஸ்ட் உட்டிற்கு கோரிக்கை வைத்திருந்தார்.

அதற்கு பதில் அளித்த க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நான் ஒரு படபிடிப்பில் இருக்கிறேன். அது முடிந்து கண்டிப்பாக அந்த திரைப்படத்தை பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த பதில் கார்த்திக் சுப்புராஜிற்கு சற்று அதிர்ச்சியாக இருந்துள்ளது கார்த்திக் சுப்புராஜ் கூறும் பொழுது எப்போது க்ளிண்ட் ஈஸ்ட் உட் அந்த படத்தை பார்த்து அது குறித்து பேசுவார் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறி உள்ளார்.

அந்த சீன்ல கோபம் கொடூரமா இருக்கணும்… நெஜமாகவே வெறி ஏத்திய லாரன்ஸ்!.. ட்ரிக் தெரிஞ்ச மனுஷன்!..

Raghava lawarance: சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்து பிறகு டான்ஸ் மாஸ்டரானவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு கதாநாயகனாக ஆசைப்பட்ட லாரன்ஸ் அற்புதம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கிய லாரன்ஸ் ஒரு கட்டத்தில் படத்தை இயக்க துவங்கினார். அவர் இயக்கிய முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கண்டன. தற்சமயம் முன்னணி நடிகர்களில் முக்கியமான நடிகராக லாரன்ஸ் இருக்கிறார்.

இந்த நிலையில் தற்சமயம் லாரன்ஸ் நடித்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. அதில் சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் அதற்கடுத்து வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் அவர் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான படமாக வந்தது.

இந்த படம் குறித்து அவர் தன் பேட்டியில் கூறும்போது படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மிகவும் கோபமாக இருக்க வேண்டும் என கூறியிருந்தனர். எப்போதுமே லாரன்ஸ் மூன்று வேளை சாப்பாட்டை நேரத்திற்கு சாப்பிட கூடியவர். அவருக்கு சாப்பாடு காலதாமதம் ஆனால் மிகவும் கோபம் வருமாம்.

எனவே அந்த காட்சியின் போது சாப்பிடாமல் நின்று படப்பிடிப்பில் நடித்துள்ளார் லாரன்ஸ். முக்கியமாக அதற்கு முந்தைய காட்சியில் எஸ்.ஜே சூர்யா நடிக்க வேண்டி இருந்ததாம். அப்போது அவரிடம் லாரன்ஸ் முடிஞ்ச அளவுக்கு நல்லா பண்ணுங்க என கூறியுள்ளார்.

படப்பிடிப்பை முடித்து வந்த எஸ்.ஜே சூர்யா சிறப்பா பண்ணியிருக்கேன் என கூறியுள்ளார். அப்படியென்றால் அவரை விட நாம் சிறப்பாக செய்ய வேண்டுமே என்கிற பயத்திலேயே அந்த படப்பிடிப்பில் சாப்பிடாமல் நடித்துள்ளார் லாரன்ஸ்.

ஜிகர்தண்டா மூணாவது பார்ட் வருமா!.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்திக் சுப்புராஜ்!.

தீபாவளியை முன்னிட்டு தமிழில் இரண்டு படங்கள் வெளியாகின. அதில் முக்கியமான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஜப்பான் திரைப்படத்தையும் விட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திற்கு வரவேற்புகள் அதிகமாக இருந்தன.

பழங்குடி இன மக்கள் மத்தியில் அரசு நிகழ்த்தும் அதிகார மீறல்களை காட்டும் அதே வேளையில் ஜிகர்தண்டா முதல் பாகத்திற்கான விஷயங்களையும் இதில் சேர்த்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இதனால் இந்த படம் அதிகமான வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் படம் முடியும்போது ஜிகர்தண்டாவின் அடுத்த பாகமான ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸிற்கான தொடக்கத்தை வைத்து படத்தை முடித்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்த நிலையில் ஜிகர்தண்டா படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகுமா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வந்தது.

இதுக்குறித்து தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸிற்கு இன்னமும் கதை கூட எழுதவில்லை. ஆனால் அப்படி ஒரு படம் எடுக்க ஆசை இருக்கிறது. ஆனால் பல வருடங்கள் கழித்தே அடுத்த பாகத்தை எடுப்பேன். எனவே இப்போது யாரும் அதை எதிர்பார்க்க வேண்டாம் என கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸில் வரும் க்ளிண்ட் ஈஸ்ட் உட் யார் தெரியுமா?.. பின்னாடி இவ்வளவு பெரிய கதையா?

தற்சமயம் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கார்த்தி நடித்த ஜப்பானை விடவும் இந்த படத்திற்குதான் வரவேற்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் லாரன்ஸ் கதாபாத்திரத்திற்கு க்ளிண்ட் ஈஸ்ட் உட் என்னும் நடிகரை மிகவும் பிடிக்கும். அவர்தான் லாரன்ஸிற்கு ஆலிஸ் சீசர் என்னும் பெயரை வைத்ததாக படத்தில் காட்டப்படும். க்ளிண்ட் ஈஸ்ட் உட் அமெரிக்காவில் பிரபலமான ஒரு கெளபாய் கதாநாயகன் ஆவார்.

அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுப்பிடித்த பிறகு மூன்று தேசத்து மக்கள் அங்கு குடியேறினர். ஆனால் அங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த செவ்விந்திய மக்களுக்கு இது பிடிக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்கா வளர துவங்கிய காலக்கட்டத்தில் அங்கு உருவானதுதான் இந்த கெளபாய் கலாச்சாரம்.

கெளபாயில் நல்லவர்கள் கெட்டவர்கள் என இருவருமே இருந்தனர். அப்போது அமெரிக்காவில் பல இடங்களில் தங்கம் கிடைத்தது. அவற்றை திருடுபவர்கள் அதிகமாக கெளபாய்களாக இருந்தனர். அதே போல அதிக குற்றம் செய்பவர்களின் தலைக்கு அரசு ஒரு விலை நிர்ணயிக்கும். அந்த குற்றவாளிகளை கொன்று அந்த தொகையை வாங்கும் பௌண்டி ஹண்டர் என்னும் கெளபாய்களும் இருந்தனர்.

மெல்ல அமெரிக்கா வளர்ந்த பிறகு இந்த கெளபாய் கலாச்சாரம் அறவே இல்லாமல் போனது. ஆனால் அதை திரைப்படம், காமிக்ஸ் மூலமாக அடுத்த தலைமுறைக்கு அமெரிக்கர்கள் கடத்தினர். அப்படி திரைப்படமாக்கப்பட்டது அதில் மிக பிரபலமான திரைப்படங்கள்தான் க்ளிண்ட் ஈஸ்ட் உட்டின் திரைப்படங்கள்.

க்ளிண்ட் ஈஸ்ட் உட் தீமைக்கு எதிராக தனியாக போராடும் ஒரு நாடோடி கெளபாயாக படங்களில் நடித்தார். அவற்றில் மூன்று படங்கள் பிரபலமானவை. A Fistful of Dollars, For a few Dollars More, The Good the bad and the ugly, ஆகிய இந்த மூன்று படங்கள் கௌபாய் திரைப்படங்களுக்கு ஒரு இலக்கணமாக அமைந்தன.

அதன் பிறகு ஒரு கௌபாய் திரைப்படம் வருகிறது என்றால் அதில் கண்டிப்பாக இவரது திரைப்பட சாயல் இருக்கும் என்கிற நிலை இருக்கும். இந்த படத்தை பார்த்து வியந்துப்போன கார்த்திக் சுப்புராஜ் அவரையே தனது திரைப்படத்தில் அனிமேஷனாக கொண்டு வந்திருந்தார்.