Tag Archives: Sj surya

19 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் எஸ்.ஜே சூர்யா நயன்தாரா..!

சந்திரமுகி ஐயா மாதிரியான திரைப்படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நயன்தாராவின் வளர்ச்சி என்பது அதிகமாக தான் இருந்து வந்தது.

தொடர்ந்து தமிழில் பிரபலமாக இருந்த பெரிய நடிகர்களுடன் நடித்து வந்தார் நயன்தாரா. அப்படியாக அவர் நடித்து வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் கல்வனின் காதலி திரைப்படமும் முக்கியமான திரைப்படம் ஆகும்.

19 ஆண்டுகளுக்கு முன்பு 2006 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்த திரைப்படம் கள்வனின் காதலி. அப்பொழுது அந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் பலவும் ஹிட் கொடுத்தன.

மேலும் அந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் பழைய திரைப்படங்களை இப்பொழுது மறு வெளியீடு செய்வதை ஒரு வேலையாகக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் சச்சின் திரைப்படம் கூட மறு வெளியீடு செய்யப்பட்டு அதிக வெற்றியை கொடுத்தது. தற்சமயம் அவ்வளவாக காதல் திரைப்படங்கள் எடுக்கப்படாத காரணத்தினால் கள்வனின் காதலி திரைப்படத்தையும் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றனர்.

இந்த வருட இறுதிக்குள் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

எஸ்.ஜே சூர்யா செஞ்ச சாதனையை தமிழ் சினிமாவிலேயே யாரும் செய்யலை..!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பிறகு நடிகராக அதிக வரவேற்பு பெற்றவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. எஸ்.ஜே சூர்யாவிற்கு ஆரம்பத்தில் மிகப்பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் பெரிய ஆசையாக இருந்தது.

அப்படியாக ஆரம்பத்தில் அவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுத்தன. அவர் இயக்கிய வாலி, குஷி மாதிரியான படங்கள் எல்லாம் நல்ல வெற்றியைதான் கொடுத்தன. ஆனாலும் அதற்கு பிறகு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் எஸ்.ஜே சூர்யா.

அப்படியாக எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடித்த திரைப்படம் நியூ. இந்த நிலையில் நியூ திரைப்படம் குறித்து வீரதீர சூரன் திரைப்படத்தின் இயக்குனரான அருண்குமார் கூறியிருக்கிறார்.

முதலில் ஒரு இயக்குனர் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு பெரிய தைரியம் வேண்டும். அதையெல்லாம் தாண்டி நியூ திரைப்படத்திற்கு முதல் நாள் முதல் ஷோவிற்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை.

அந்த படத்தை பார்க்க நான் வெகுவாக காத்திருந்தேன். ஆனால் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு இயக்குனர் நடித்த முதல் படத்திற்கு முதல் ஷோவில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் அது எஸ் ஜே சூர்யாவிற்கு மட்டும்தான் என்று கூறியிருக்கிறார் அருண்குமார்.

படம் தோக்கலாம். ஆனால் ரகுமான் தோற்க மாட்டார்.! ஆச்சரியப்பட்ட எஸ்.ஜே சூர்யா..!

நடிகர் எஸ் ஜே சூர்யா இயக்குனராக ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இப்போதைய தலைமுறையினருக்கு அவரை ஒரு நடிகராக தான் தெரியும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் வாய்ப்புகள் பெற்று நடித்thu வருகிறார் எஸ்.ஜே சூர்யா.

எஸ் ஜே சூர்யாவின் தனிப்பட்ட நடிப்புக்கு தனி மதிப்பு இருக்கும் காரணத்தினால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றது. தற்சமயம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் அவருக்கு வரவேற்பு கிடைத்து வருகின்றன.

தற்சமயம் பிரதீப் ரங்கநாதன் நடித்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் எல்.ஐ.கே திரைப்படத்திலும் எஸ்.ஜே சூர்யா தான் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் குறித்து ஒரு பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்து இருந்தார் எஸ் ஜே சூர்யா.

அதில் எஸ் ஜே சூர்யா கூறும் பொழுது ஏ.ஆர் ரகுமானை பொறுத்தவரை அவர் இசையமைக்கும் படங்கள் தோல்வியடைந்தாலும் கூட அவரது இசை மட்டும் தோல்வி அடையாது. உதாரணத்திற்கு சங்கமம் திரைப்படத்தை கூறலாம்.

சங்கமம் திரைப்படத்தில் வந்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் அந்த திரைப்படம் திரையரங்கில் தோல்வியை கண்டது ஒரு திரைப்படம் எப்படி எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்தே அதன் வெற்றி தோல்வி அமைகிறது.

ஒரு இசையமைப்பாளரால் தீர்மானிக்க முடியாது ஆனால் அவர்களால் எதை சிறப்பாக கொடுக்க முடியுமோ அதை கொடுத்து விடுவார்கள் அந்த விஷயத்தில் ஏ ஆர் ரகுமானை தோற்கடிக்கவே முடியாது என்று கூறி இருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

எஸ்.ஜே சூர்யாவுக்கு பிரச்சனையை உண்டு பண்ணுன பெண்… பார்த்ததும் ஆடிப்போன புகழ்.. இதுதான் காரணம்.!

பெரும்பாலும் பேட்டிகளில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் பேசும் விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் பேசும் சின்ன சின்ன விஷயங்கள் கூட சர்ச்சையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நிறைய பிரபலங்கள் இப்படி பேட்டிகளில் பேசி நிறைய சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றனர். உதாரணத்திற்கு நடிகர் அஜித்தை கூறலாம். நடிகர் அஜித் ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பேட்டிகளில் எல்லாம் பங்கு பெற்றுக் கொண்டுதான் இருந்தார்.

ஆனால் அந்த மாதிரி பேட்டிகளில் அவர் பேசும் விஷயங்களை தவறாக மக்கள் மத்தியில் காட்டி வந்தனர் டிவி சேனல் காரர்கள். இதனால் கோபமடைந்த அஜித் அதற்கு பிறகு யாருக்குமே பேட்டி கொடுப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்தார்.

sj surya

பேட்டியில் நடந்த சம்பவம்:

இப்போது வரை பத்திரிகையாளர் யாருக்குமே அவர் பேட்டி கொடுப்பதை பார்க்க முடியாது. இதே மாதிரி எஸ்.ஜே சூர்யா ஒரு பிரச்சனையில் சிக்கினார் எஸ்.ஜே சூர்யா சமீபத்தில் நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அப்படியாக ஒரு திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் பேட்டிக்கு சென்றிருந்தார். அங்கு அவரை ஏதாவது ஒரு பாட்டு பாடும்படி கேட்டிருந்தார் அங்கிருந்த தொகுப்பாளர்.

உடனே எஸ் ஜே சூர்யா அன்பே ஆருயிரே திரைப்படத்தில் வரும் பொதிகை மலையில்  என துவங்கும் பாடல் ஒன்றை பாடினார். பிறகு அந்த வீடியோ அதிக வைரலானது தொடர்ந்து அதை வைத்து எஸ் ஜே சூர்யாவை கேலி செய்து வந்தனர் நெட்டிசன்கள்.

இந்த நிலையில் அதே பெண், நடிகர் புகழையும் சமீபத்தில் பேட்டி எடுத்தார் அப்பொழுது புகழை ஒரு பாட்டு பாடும் படி அவர் கேட்டுக் கொண்டார் உடனே பயந்து போன புகழ் ஏற்கனவே எஸ் ஜே சூர்யாவை வைத்து நீங்கள் செய்தது போதும் என்னை விட்டுவிடுங்கள் என்று கூறியிருந்தார்.

மதவெறியில் செஞ்ச செயல்!. ஏ.ஆர் ரகுமான் சீக்ரெட்டுகளை போட்டு உடைத்த பயில்வான் ரங்கநாதன்!. இவ்வளவு நாள் பாட்டு கேட்டும் இது தெரியலையே!..

தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். கருநாடக சங்கீதம் தமிழ் சினிமாவில் அதிகமாக பழக்கத்தில் இருந்தப்போது அதை மாற்றி வெளிநாட்டு இசைகள் பலவற்றையும் தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வந்தார் ஏ.ஆர் ரகுமான்.

அதற்கு முன்பு இருந்த இசையமைப்பாளர்களின் இசையில் இருந்து முற்றிலுமாக மாறுப்பட்டு இருந்தது ஏ.ஆர் ரகுமானின் இசை. அதனால்தான் அவரை இசைப்புயல் என்கிறோம். இப்படி பல பெருமைகளை பெற்றவராக இருந்தும் கூட ஏ.ஆர் ரகுமான் ஒரு சில எதிர்மறையான விஷயங்களையும் செய்துள்ளார்.

அவற்றை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் ஒரு இஸ்லாமியர் என்பது பலரும் அறிந்த விஷயமே. ஆனால் அந்த மத நம்பிக்கைகளை தனது தொழிலிலும் ஈடுப்படுத்தியுள்ளார் ஏ.ஆர் ரகுமான். பாய்ஸ் திரைப்படத்திற்கு அவர் இசையமைக்கும்போது அதில் ஐயப்பன் பாடல் ஒன்றிற்கு இசையமைக்க வேண்டும் என கேட்டுள்ளார் ஷங்கர்.

அப்போது அல்லாஹ்வை தவிர வேறு எந்த கடவுளுக்கும் இசையமைக்க முடியாது என மறுத்துவிட்டாராம் ஏ.ஆர் ரகுமான். இந்த நிலையில் அந்த ஒரு பாடலை மட்டும் வேறு இசையமைப்பாளரை வைத்து இசையமைத்துள்ளனர். அதே போல எஸ்.ஜே சூர்யா தெலுங்கில் பவண் கல்யாணை கதாநாயகனாக வைத்து கோமரம் புலி என்கிற திரைப்படத்தை இயக்கினார். அதில் ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பாளராக பணிப்புரிந்தார்.

அந்த திரைப்படத்திலும் ஒரு ஐயப்பன் பாடல் இடம்பெற்றது. அதற்கும் இசையமைக்க மறுத்துவிட்டாராம் ஏ.ஆர் ரகுமான். இதுக்கூட பரவாயில்லை. நியூ திரைப்படத்தில் காலையில் தினமும் என்கிற அம்மா பாடலுக்கு முதலில் வரிகள் எழுதியப்போது “காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொழும் தெய்வம் அம்மா” என இருந்துள்ளது.

இந்த நிலையில் அதற்கும் இசையமைக்க முடியாது என மறுத்துள்ளார் ஏ.ஆர் ரகுமான். இந்த நிலையில் அந்த பாடல் வரிகளை ” காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொடும் தேவதை அம்மா” என பாடல் வரிகளை மாற்றி அமைத்துள்ளனர். இப்படி தனது பாடல் இசையமைப்பில் கூட மதவெறியை காட்டியுள்ளார் ஏ.ஆர் ரகுமான் என்கிறார் பயில்வான் ரங்கநாதன்:

Source: Link

அடுத்து மாநாடு 2தான் இயக்க போறோம்!.. வில்லனாக களம் இறங்கும் சிம்பு!.

Maanadu 2 : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்பட வரிசையில் மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அதிக வெற்றியை கொடுத்து பேசும் படமாக அமைந்த திரைப்படம் மாநாடு.

மாநாடு திரைப்படத்தைப் பொறுத்தவரை ஹாலிவுட்டில் மட்டுமே எடுத்து வந்த டைம் லூப் என்கிற கான்செப்டில் முதன்முதலாக தமிழில் வந்த திரைப்படம் மாநாடு. ஏதோ ஒரு காரணத்திற்காக குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஒருவர் மாட்டிக் கொள்வதைதான் அது குறிக்கும்.

அந்த காலகட்டத்தில் அவர் செய்ய வேண்டிய விஷயத்தை செய்யாத பட்சத்தில் அதே காலகட்டம் மீண்டும் நடந்து கொண்டிருக்கும். ஆனால் அதை புரியும் விதத்தில் தமிழில் எடுப்பது கடினம் என்பதால் எந்த இயக்குனர்களும் அப்படியான கதைகளை தேர்ந்தெடுப்பது இல்லை.

ஆனால் அதை படமாக்கி புரியும் விதத்தில் இயக்கியது மட்டும் அல்லாமல் எஸ்.ஜே சூர்யா மற்றும் சிம்புவை வைத்து சிறப்பான என்டர்டைன்மெண்ட் திரைப்படமாகவும் அதை உருவாக்கி இருந்தார் வெங்கட் பிரபு. அந்த படமும் அதிக வரவேற்பு பெற்றது.

மாநாடு அடுத்த பாகம்:

தற்சமயம் கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த கதை கூட ஒரு டைம் டிராவல் கதை என்று பேச்சுக்கள் இருக்கின்றன. அதற்கு தகுந்தார் போல இரண்டு விஜய் திரைப்படத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது.

அதில் ஒரு விஜய் இளமையாகவும் மற்றொரு விஜய் வயதானவராகவும் இருப்பதை வைத்து பார்க்கும் பொழுது ஒரு விஜய் காலப்பயணம் மேற்கொண்டு அங்கு வந்தவராக இருக்கலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு நடுவே கோட் திரைப்படத்திற்கு பிறகு மாநாடு திரைப்படத்தின் அடுத்த பாகத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு என கூறப்படுகிறது. மாநாடு படத்தின் இரண்டாம் பாகமும் டைம் லூப் கான்செப்டில் எடுக்கப்படும் என்றும் இந்த திரைப்படத்தில் சிம்பு எஸ்.ஜே சூர்யா இருவரும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த படத்தில் இருந்து கதைகளும் முற்றிலுமாக இந்த திரைப்படத்தில் மாறி இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதன்படி எஸ்.ஜே சூர்யா இதில் ஹீரோவாகவும் சிம்பு வில்லனாகவும் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. சிம்பு வில்லனாக நடிக்கிறார் என்றதுமே அதற்கு வரவேற்புகள் அதிகமாக கிடைக்க துவங்கியுள்ளன.

தமிழ் சினிமாவில் வந்த ஹீரோயின் பஞ்சம்!.. வரிசையில் காத்திருக்கும் அருண் விஜய், எஸ்.ஜே சூர்யா!.. என்ன கொடுமை இது?..

Tamil Heroine: தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்கிற தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்துள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு பஞ்சம் என்கிற நிலை ஏற்பட்டதே கிடையாது.

ஏனெனில் எப்போதும் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களை காட்டிலும் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள்தான் அதிகமாக இருந்து வருவார்கள். மேலும் தமிழ்நாடு சினிமா மார்க்கெட் கொஞ்சம் பெரிது என்பதால் வேற்று மொழி நடிகைகளும் கூட தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு உடனே விருப்பம் தெரிவிப்பதுண்டு.

tammannah

தெலுங்கு மலையாளத்தில் பிரபலமாக இருந்த நடிகை க்ரீத்தி ஷெட்டி கூட தற்சமயம் தமிழில்தான் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு கதாநாயகி கிடைக்கவில்லை என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

கதாநாயகி கிடைக்காமல் கஷ்டப்படும் எஸ்.ஜே சூர்யா:

எஸ்.ஜே சூர்யா அவரே இயக்கி நடிக்கும் கில்லர் என்கிற திரைப்படத்தின் திரைக்கதை வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் கதாநாயகிக்கும் வழங்கப்பட்டதுள்ளாம்.

sj-surya

எனவே இந்த கதைக்கு கொஞ்சம் சிறப்பாக நடிக்க தெரிந்த கதாநாயகிகள் தேவைப்படுகின்றனர். இதற்காக வெகு காலமாகவே கதாநாயகிகளை தேடி வருகிறாராம் எஸ்.ஜே சூர்யா. அதே போல அடுத்து அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கும் வெகு நாட்களாகவே கதாநாயகியை தேடி வருகிறார்களாம்.

தற்சமயம் கதாநாயகி கிடைக்காமல் இந்த இரண்டு திரைப்படங்களுமே படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருக்கின்றன.

ஒரே சம்பளத்தை கொடுத்து ரெண்டு படம் எடுத்தா எப்புடி? எஸ்.ஜே சூர்யாவுக்கே விபூதி அடித்த இயக்குனர்!..

SJ Surya : சினிமாவைப் பொறுத்தவரை அதில் சின்ன சின்ன நடிகர்களுக்கு தான் தினசரி சம்பளம் என்கிற வகையில் சம்பளம் வழங்கப்படும். பெரிய நடிகர்களுக்கெல்லாம் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் என்று படம் துவங்கும்போதே பேசப்பட்டுவிடும்.

அந்த படத்திற்க்கான சம்பளத்தை அவர்கள் பெற்றுவிட்டு படம் எவ்வளவு நாட்களாக இருந்தாலும் நடித்துக் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ரஜினிகாந்த் தற்சமயம் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு சம்பளமாக அவர் 150 கோடி வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் மேலாகியும் கூட படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறது.

indian-2

ரஜினிகாந்த் நடித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படி எவ்வளவு நாள் ஆனாலும் நடித்துக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் சம்பள விஷயத்தில் நடிகர்களிடம் சரியாக இருக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இந்தியன் 2 திரைப்படத்தைப் பொறுத்தவரை எஸ். ஜே. சூர்யாவிற்கு அதில் அநீதி நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏமாற்றப்பட்ட எஸ்.ஜே சூர்யா:

அதில் எஸ்.ஜே சூர்யா விற்கும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு வெகு நாட்களாக நடந்தது. இதில் நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதால் இந்த ஒரு படத்தையே இரண்டாக பிரித்து இந்தியன் இரண்டு மற்றும் மூன்று என இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று பேச்சுக்கள் இருந்தன.

இந்த நிலையில் மூன்றாம் பாகத்திற்கான பாடப்பிடிப்பையும் சேர்த்து எடுத்து வருகிறார். இயக்குனர் சங்கர். இதற்காக இயக்குனர் சங்கர் மற்றும் கமலஹாசன் இருவருக்குமே இரண்டு திரைப்படங்களுக்கான சம்பளத்தை வாங்கி இருக்கின்றனர் நிறுவனத்தினர்.

sj-surya

ஆனால் மற்ற நடிகர்கள் யாருமே இரண்டு படத்திற்கான சம்பளத்தை வழங்கவில்லை. அதனால் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஒரு திரைப்படத்திற்கான சம்பளமே வழங்கப்பட்டிருக்கின்றன.

இருந்தாலும் இது கமல்ஹாசன் திரைப்படம் என்பதால் ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் இருவரும் எந்த கேள்வியும் கேட்காமல் நடித்து வருகின்றனர். எஸ்.ஜே சூர்யாவை பொருத்தவரை அவருக்கு இதில் மன வருத்தம் இருப்பதாக கூறப்படுகிறது.

சனிக்கிழமை மட்டும் கோபப்படும் ஹீரோ!.. வித்தியாசமான கதையில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா!..

SJ Surya : தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும் நடிகர்களில் முக்கியமானவராக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடித்தாலும் வில்லனாக நடித்தாலும் அவரது திரைப்படத்தை பார்ப்பதில் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

எனவே அவரும் அதற்கு தகுந்தார் போல தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் எஸ்.ஜே சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் நானி கூட்டணியில் சூர்யா சாட்டர்டே என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

புதுக்கதை:

தெலுங்கு நடிகர் நாணியம் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் தற்சமயம் நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் தென்னிந்திய அளவிலேயே நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

சண்டை காட்சிகள் பெரிதாக இல்லாத திரைப்படங்களை கூட நானி தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்த வகையில் இந்த சூர்யா சாட்டர்டே என்கிற திரைப்படத்தின் கதை களமே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

அதாவது படத்தின் கதைப்படி கதாநாயகன் வாரத்தில் ஆறு நாட்களும் மிகவும் அமைதியாக இருக்கக்கூடியவர். அந்த நாட்களில் யாரேனும் அவரிடம் சண்டை போட்டால் கூட திரும்ப அடிக்க மாட்டார்

ஆனால் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையை கோபப்படுவதற்கான நாளாக வைத்திருப்பார் கதாநாயகன். அந்த சனிக்கிழமை நாளில் மிகுந்த கோபக்காரராகவும் சண்டை செய்பவராகவும் இருப்பார். இந்தப் படத்தில் கதாநாயகனாக நானியும் போலீஸ் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யாவும் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கதையே இல்லாத படத்துல எப்படியா நடிச்ச!.. விஜய்யை பார்த்து ஆச்சரியப்பட்ட இயக்குனர்!..

Actor Vijay : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் இருக்கிறார். தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அதிக சம்பளம் வாங்குபவர் நடிகர் விஜய்தான். இவருக்கு தொடர்ந்து சினிமாவில் நடிப்பதிலேயே இப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அரசியலுக்கு சென்றுள்ள விஜய் கமிட்டாகி இருக்கிற ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்துவிட்டு அதற்கு மேல் புது படங்களில் நடிக்க போவதில்லை. தொடர்ந்து அரசியலில் ஈடுபட போகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

Thalapathy-vijay

இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு செய்தியாக அமைந்துள்ளது. ஏனெனில் விஜய் அரசியலுக்கு வந்தாலும் கூட தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பார் என்று ரசிகர்கள் நம்பி வந்தனர்.

ஆனால் தற்சமயம் விஜய் நடிக்க மாட்டார் என்று கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் தமிழ் சினிமாவில் எவ்வளவோ தோல்விகளை கண்டபோது கூட சினிமாவை விட்டு சென்றது கிடையாது. பலமுறை அவருக்கு படங்கள் தோல்வி அடைந்துள்ளன அப்போதெல்லாம் திரும்ப ஏதாவது ஒரு படம் பெரிய ஹிட்டை கொடுக்கும்.

அப்படியாக விஜய் நடித்து வெளியான திரைப்படம் தான் குஷி. குஷி திரைப்படத்திற்கு முன்பு சில படங்கள் ஒழுங்காக ஓடாத காரணத்தினால் விஜய் கவலையில் இருந்தார். அப்பொழுது அவரது மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தியது குஷி திரைப்படம் தான்.

இது குறித்து ஒரு மேடையில் விஜய் பேசும் பொழுது அவரிடம் பேசிய இன்னொரு இயக்குனர் குஷி திரைப்படத்தின் கதையை எப்படி ஒப்புக்கொண்டீர்கள். அந்த திரைப்படத்தில் முதலில் கதையே இல்லையே என்று கேட்டிருக்கின்றனர். அப்பொழுது அதற்கு பதில் அளித்த விஜய் எஸ்.ஜே சூர்யா என்று ஒருவர் இருக்கிறார்.

அவரிடம் நீங்கள் கதை கேட்டீர்கள் என்றால் எந்த கதையாக இருந்தாலும் அதை ஒப்புக்கொள்வீர்கள். அப்படி திரை கதையை விரிவாக சொல்லக்கூடியவர் அவர் என்று எஸ்.ஜே சூர்யாவை புகழ்ந்து பேசி இருந்தார் விஜய்.

காதலியோட நடந்த பிரச்சனையை அப்படியே படத்துல வச்சேன்!.. திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா செய்த வேலை!..

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்தை மட்டுமே வைத்து மட்டுமே படம் எடுத்த இயக்குனர் என்றால் அது எஸ்.ஜே சூர்யாவாக மட்டும்தான் இருக்க முடியும். ஏனெனில் அஜித்தை வைத்து வாலி மற்றும் விஜய்யை வைத்து குஷி ஆகிய இரு திரைப்படங்களை இயக்கியப்பிறகு எஸ்.ஜே சூர்யா வேறு எந்த நடிகரையும் வைத்து படம் இயக்கவில்லை.

அவர் இயக்கும் திரைப்படங்களில் அவர்தான் கதாநாயகனாக நடித்தார். அப்படி அவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் தற்சமயம் தொடர்ந்து நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார் எஸ்.ஜே சூர்யா.

ஒரு பேட்டியில் தனது கடந்தக்கால காதல் குறித்து சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை எஸ்.ஜே சூர்யா கூறியிருந்தார். அவர் ஒரு பெண்ணை காதலித்து கொண்டிருந்தப்போது அந்த பெண் அவரை ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்திருந்தார். ஆனால் அந்த நாளில் ஒரு தயாரிப்பாளரும் படம் குறித்து பேச அழைத்திருந்தார்.

anbe aaruyire

இதை காதலியிடம் கூறினால் கடுப்பாகிவிடுவார் என நினைத்த எஸ்.ஜே சூர்யா. சாப்பிட போய்விட்டு அரை மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்பி விடலாம் என முடிவு செய்தார். ஆனால் அங்கு சென்று உணவு வரவே அரை மணி நேரம் ஆகிவிட்டது. பிறகு தனது காதலியிடம் முக்கியமாக வெளியே செல்ல வேண்டும் என கூறிய எஸ்.ஜே சூர்யா அங்கிருந்த உணவை வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார்.

இதனால் கடுப்பான காதலி வருத்தத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு இரவு 12 மணிக்கு சென்று காதலியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் எஸ்.ஜே சூர்யா. இந்த விஷயத்தை அப்படியே அன்பே ஆருயிரே திரைப்படத்தில் அவர் காட்சியாக வைத்திருந்தார்.

அந்த சீன்ல கோபம் கொடூரமா இருக்கணும்… நெஜமாகவே வெறி ஏத்திய லாரன்ஸ்!.. ட்ரிக் தெரிஞ்ச மனுஷன்!..

Raghava lawarance: சினிமாவில் சின்ன சின்ன வேலைகள் செய்து பிறகு டான்ஸ் மாஸ்டரானவர் ராகவா லாரன்ஸ். அதன் பிறகு கதாநாயகனாக ஆசைப்பட்ட லாரன்ஸ் அற்புதம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கிய லாரன்ஸ் ஒரு கட்டத்தில் படத்தை இயக்க துவங்கினார். அவர் இயக்கிய முனி, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கண்டன. தற்சமயம் முன்னணி நடிகர்களில் முக்கியமான நடிகராக லாரன்ஸ் இருக்கிறார்.

இந்த நிலையில் தற்சமயம் லாரன்ஸ் நடித்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. அதில் சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் அதற்கடுத்து வந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் அவர் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான படமாக வந்தது.

இந்த படம் குறித்து அவர் தன் பேட்டியில் கூறும்போது படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மிகவும் கோபமாக இருக்க வேண்டும் என கூறியிருந்தனர். எப்போதுமே லாரன்ஸ் மூன்று வேளை சாப்பாட்டை நேரத்திற்கு சாப்பிட கூடியவர். அவருக்கு சாப்பாடு காலதாமதம் ஆனால் மிகவும் கோபம் வருமாம்.

எனவே அந்த காட்சியின் போது சாப்பிடாமல் நின்று படப்பிடிப்பில் நடித்துள்ளார் லாரன்ஸ். முக்கியமாக அதற்கு முந்தைய காட்சியில் எஸ்.ஜே சூர்யா நடிக்க வேண்டி இருந்ததாம். அப்போது அவரிடம் லாரன்ஸ் முடிஞ்ச அளவுக்கு நல்லா பண்ணுங்க என கூறியுள்ளார்.

படப்பிடிப்பை முடித்து வந்த எஸ்.ஜே சூர்யா சிறப்பா பண்ணியிருக்கேன் என கூறியுள்ளார். அப்படியென்றால் அவரை விட நாம் சிறப்பாக செய்ய வேண்டுமே என்கிற பயத்திலேயே அந்த படப்பிடிப்பில் சாப்பிடாமல் நடித்துள்ளார் லாரன்ஸ்.