Tag Archives: ar rahman

அரை மணி நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்..! மாஸ் காட்டிய அனிரூத்..!

தமிழ்நாட்டில் ஏ.ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜாவை விடவுமே அதிக வரவேற்பை பெற்ற இசையமைப்பாளராக அனிரூத் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தொடர்ந்து அனிருத்தின் மார்க்கெட் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் ஒரு இசையமைப்பாளராகவே அனிருத் இருந்து வருகிறார்.

அதேபோல இசையமைக்கும் படங்களில் பெரும்பான்மையான பாடல்கள் அதிக வெற்றியை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் அனிருத் வேறு வகையிலும் அதிகம் சம்பாதித்து வருகிறார். இசை கச்சேரிகளை அதிகமாக நடத்தி அதன் மூலமாக சம்பாதித்து வருகிறார் அனிருத்.

அந்த வகையில் ஏற்கனவே பெங்களூரில் அவர் போட்ட இசை கச்சேரி அதிக பிரபலமானது. அதற்கான டிக்கெட் ஓப்பன் ஆன ஒரு மணி நேரத்திலேயே அனைத்துமே புக்கிங் ஆகி முடித்தது.

இந்த நிலையில் சென்னையில் 30000 டிக்கெட் தீர்ந்து விட்டன. அந்த அளவிற்கு அனிருத்துக்கான ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். டிக்கெட் எண்ணிக்கையை அதிகரிக்கலாமா என்று இது குறித்து பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

மேலும் டிக்கெட் ஓபன் ஆகி 30 நிமிடங்களில் 30000 டிக்கெட் விற்றது ஒரு பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர் ரகுமானுக்கு ஷாக் கொடுத்த மணிரத்தினம்… தக் லைஃப் படத்தில் நடந்த சம்பவம்..!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தற்சமயம் கமல்ஹாசன் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் பாடல்களுக்கும் கூட நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றை ஏ.ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது தக் லைஃப் திரைப்படத்தின் முதல் காட்சிக்கு நான் ஒரு இசையை அமைத்திருந்தேன். பிறகு எனக்கு வெளியூருக்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால் நான் திரும்பி வந்தப்போது மணிரத்தினம் அந்த இசையை மாற்றி இருந்தார். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்.

அது படத்துக்கு நன்றாகவே செட் ஆகி இருந்தது. அதுதான் மணிரத்தினம் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருப்பதற்கு காரணம் என கூறியுள்ளார் ஏ.ஆர் ரகுமான்.

சர்ச்சையில் சிக்கிய போது என்னை காப்பாற்றியவர் ஏ.ஆர் ரகுமான்.. சீக்ரெட்டை கூறிய சிம்பு..!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே வித்தியாசமானதாக இருக்கின்றன.

மேலும் மக்கள் மத்தியில் அந்த படங்களுக்கு வரவேற்பும் இருந்து வருகிறது மாநாடு திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த பத்து தல திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்சமயம் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்நிலையில் மணிரத்தினமும் ஏ.ஆர். ரகுமானும் தனக்கு எப்படி உதவினார்கள் என்பது குறித்து அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சினிமாவில் எனக்கு ரெட் கார்ட் கொடுத்த சமயத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் மணி சார்.

அதுவும் இல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கும் என்னை அழைத்தார். இப்பொழுது மீண்டும் அவருடன் தக்லைஃப் திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.

அதேபோல பீப் சாங் வெளியாகி நான் அதிக சர்ச்சையில் சிக்கி இருந்த பொழுது எனக்கு ஏ ஆர் ரகுமான் உதவினார். ம் அவர் இசையமைத்த தள்ளி போகாதே பாடலை என்னை பாட வைத்தார் என்று கூறியிருக்கிறார் சிம்பு.

இத்தனை நாள் தெரியவே இல்லை..! ஏ.ஆர் ரகுமானின் ரகசியத்தை உடைத்த இளையராஜா.!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு பிறகு அதிக பிரபலமடைந்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். முதல் திரைப்படத்திலேயே பெரும்பாலான ரசிகர்களை பிடித்தார் ஏ.ஆர் ரகுமான்.

இதனால் ஏ.ஆர் ரகுமானுக்கு எடுத்த உடனேயே அதிக பிரபலம் கிடைத்தது. அதுவரை இளையராஜாதான் தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் அதற்கு பிறகு இளைஞர்களுக்கு பிடித்த இசையமைப்பாளராக மாறினார் ஏ.ஆர் ரகுமான்.

ஆனாலும் இளையராஜாவின் இசைக்கு இப்போதும் ரசிகர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் ரோஜா திரைப்படம் வந்த காலக்கட்டத்தில் இருந்தே இளையராஜாவுக்கு போட்டி இசையமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் தான் பார்க்கப்படுகிறார்.

ar rahman

ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பாளராக மாறுவதற்கு முன்பு இளையராஜாவிடம்தான் உதவியாளராக பணிப்புரிந்து வந்தார். இந்த நிலையில் ஒருமுறை இளையராஜா ஏ.ஆர் ரகுமான் இருவருமே ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

அந்த சமயத்தில் பேசிய இளையராஜா கூறும்போது ஏ.ஆர் ரகுமான் என்னுடன் இணைந்து 500க்கும் அதிகமான படங்களில் வேலை பார்த்திருக்கிறார். என கூறினார். மேலும் ஏ.ஆர் ரகுமானிடம் திரும்பி இதையெல்லாம் நீ சொல்லணும் மக்கள்கிட்ட என கூறியிருந்தார்.

ஏ.ஆர் ரகுமான் இளையராஜாவிடம் உதவியாளராக இருந்தார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் இளையராஜாவின் திரைப்படங்களில் 500க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் பணிப்புரிந்து இருப்பார் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும்.

கடுப்பான ஹாரிஸ் ஜெயராஜ்.. பதிலடி கொடுத்த ஏ.ஆர் ரகுமான்.!

சமீப காலங்களாகவே ஏ.ஐ குறித்த பேச்சுக்கள் அதிகமாக இருந்து வருகிறது. இசை துறையிலும் கூட ஏ.ஐயின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.

அதில் அவரிடம் இசையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறீர்களா? என கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த ஹாரிஸ் ஜெயராஜ் இத்தனை பாடகர்கள் இருக்கும்போது நான் ஏன் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்டிருந்தார்.

மேலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் கலைஞர்களை அவமானப்படுத்த வேண்டாம் என கூறியிருந்தார். தமிழ் சினிமாவிற்கு முதன் முதலாக ஏ.ஐ தொழில்நுட்பத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தான் அறிமுகப்படுத்தியிருந்தார்.

harris jayaraj

இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமானை விமர்சித்து பாடகர் அபிஜீத் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது ஏ.ஆர் ரகுமான் தான் ஏ.ஐ தொழில்நுட்பத்தை கொண்டு வந்தார். இப்போ அவரால் நிறைய பாடகர்களுக்கு வாய்ப்புகளே இல்லாமல் போயிடுச்சு.

இந்த ஏ.ஐ ஐ ஆர்டிஃபிசியல் என சொல்லுங்கள். ஆனால் இண்டலிஜன்ஸ் என சொல்லாதீர்கள் என கூறியிருந்தார் அபிஜீத். இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமான் இதற்கு பதிலளித்துள்ளார்.

அவர் இதுக்குறித்து கூறும்போது நான் இப்போது பல பாடகர்களை வைத்துதான் பாடல்களை உருவாக்குகிறேன். அவர்களுக்கு அதற்கான தொகையையும் கொடுத்து விடுகிறேன். 50க்கும் அதிகமான பாடகர்கள் என்னிடம் வேலைச் செய்கிறார்கள். ஏ.ஐ தொழில்நுட்பத்தில் சாதகங்களும் உண்டு. பாதகங்களும் உண்டு.

அது பயன்படுத்துபவரை பொறுத்துதான் அமைகிறது என கூறியுள்ளார் ஏ.ஆர் ரகுமான்.

திருப்புகழில் இருந்து ஏ.ஆர் ரகுமான் உருவாக்கிய பாடல்.. உண்மையை கூறிய பாடகர்.!

தமிழில் தனது வித்தியாசமான இசையை வழங்கி இசை புயல் என்ற பட்டத்தை பெற்றவர் ஏ.ஆர் ரகுமான். இளையராஜாவின் இசையை கேட்டு வந்த தலைமுறையினருக்கு திடீரென்று ஒரு புது இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் அறிமுகமானார்.

அப்போதிலிருந்து இப்போது வரை ஏ ஆர் ரகுமானின் இசைக்கு என்று ஒரு தனி மதிப்பு இருக்கதான் செய்கிறது. ஏ.ஆர் ரகுமான் எங்கிருந்தும் ஒரு நல்ல இசையை எடுக்க கூடியவர்.

பழைய பாடல்களில் இருந்தும் பழைய பாடல் வரிகளில் இருந்தும் நிறைய இசையை ஏ ஆர் ரகுமான் கொண்டு வந்திருக்கிறார். அப்படியாக அவர் செய்த ஒரு விஷயம் குறித்து பாடகர் பாலக்காடு ஸ்ரீராம் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது திருப்புகழ் பாடலை ஒருமுறை நான் ஏ.ஆர் ரகுமானிடம் பாடி காட்டிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அதன் ராகத்தை கேட்டுக் கொண்டிருந்தார் ஏ ஆர் ரகுமான்.

இதை வைத்து படையப்பா படத்தில் ஒரு பாடலை வைப்போம் என்று கூறினார் பிறகு நான் சில நாட்களுக்கு பிறகு  திரும்ப வந்தபொழுது வெற்றி கொடி கட்டு பாடலுக்கான இசையை அமைத்திருந்தார். கொஞ்சம் திருப்புகழின் பாடலில் இருந்து மாற்றமாக செய்திருந்தாலும் அது சிறப்பாக இருந்தது என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் பாலக்காடு ஸ்ரீராம்.

இளையராஜாவுக்கு பணத்தாசை.. ரஹ்மான் மனசால பெரியவர்.. ஓப்பன் டாக் கொடுத்த தயாரிப்பாளர்.!

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு ஒரு சிவாஜி கணேசன் இருப்பது போல இசைக்கு ஒரு ஆள் என்றால் அது இளையராஜாதான். பொதுவாக திரைப்படங்கள் வெளியாகும்போது அதில் போஸ்டர்களில் கதாநாயகனின் பெயர்தான் இருக்கும்.

ஆனால் இளையராஜா இசையமைக்கும் படங்களில் எல்லாம் அவரது புகைப்படம்தான் போஸ்டர்களில் பெரிதாக இருக்கும். அந்த அளவிற்கு இளையராஜாவின் இசைக்கு என ஒரு மார்க்கெட் இருந்தது. இளையராஜா பல நுட்பமான இசைகளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

ஆனால் ஏ.ஆர் ரகுமான் சினிமா துறைக்குள் வந்தப்போது பெரிய மாற்றம் ஏற்பட்டது. இளையராஜாவின் இசையில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட இசையாக ஏ.ஆர் ரகுமானின் இசை இருந்தது. அவரது இசை வளர்ச்சி எந்த அளவிற்கு இருந்தது என்றால் ஹிந்தி, ஹாலிவுட் என பல இடங்களில் ஏ.ஆர் ரகுமானின் இசை பிடித்து அவரை இசையமைக்க அழைத்தனர்.

அந்த பெருமை தமிழ் சினிமாவில் மற்ற இசையமைப்பாளர்களுக்கு அமையவில்லை. அப்போதிருந்தே ஏ.ஆர் ரகுமான் மற்றும் இளையராஜா ரசிகர்களுக்கு இடையே சண்டை உண்டு.

இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.ராஜன் இளையராஜா குறித்து பேசியிருந்தார். அவர் பேசும்போது இளையராஜா ஒரு இசைஞானி என்பதை நான் மறுக்கல. ஆனால் அவருக்கு பணத்தின் மீது அதிக பேராசை உண்டு.

அவர் பாடல்களிலேயே நிறைய மற்ற மொழி பாடல்களின் சாயல் உண்டு. அவரே காபி அடிச்சிதான் இசையமைச்சி இருக்கார். ஆனால் அதை இசையமைக்க சொந்த மகனுக்கே காபிரைட்ஸ் கொடுத்தாரு.

ஆனால் ஏ.ஆர் ரகுமான் அப்படி கிடையாது. அவர் அற்புதமான மனிதன். வயசு சின்னவர் என்றாலும் மனசால ரொம்ப பெரியவர் என கூறியுள்ளார் கே. ராஜன்.

 

குடிப்போதையில் அந்த நபர் செய்த வேலை.. மாறிப்போன ஏ.ஆர் ரகுமானின் வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் வெளிநாட்டு இசையை அறிமுகப்படுத்தியதில் முக்கிய பங்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு உண்டு. ஏ ஆர் ரகுமான் புது ரக இசைகளை அறிமுகப்படுத்த துவங்கிய பிறகுதான் இசையில் ஒரு மாற்றம் தமிழ் சினிமாவில் நடந்தது.

அதற்கு பிறகு நிறைய புது வகையான பாடல்கள் வந்திருக்கின்றன. ஏ.ஆர் ரகுமான் இது குறித்து பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் கூறும் பொழுது தமிழ் சினிமா ரசிகர்களிடம் மட்டும்தான் எப்பொழுதும் தைரியமாக புதிய இசையை அறிமுகப்படுத்துவேன்.

மற்ற எந்த மொழியிலும் நான் புதிய இசையை முயற்சி செய்து பார்க்க மாட்டேன். ஏனெனில் தமிழ் ரசிகர்கள்தான் புதிதாக ஒரு இசை போடப்பட்டு அது நன்றாக இருக்கிறது என்றால் அதற்கு ஆதரவு கொடுப்பார்கள்.

மற்ற மொழிகளில் அப்படி கொடுப்பது கிடையாது என்று ஏ.ஆர் ரகுமான் கூறியிருக்கிறார். ஏ.ஆர் ரகுமான் இப்படி புது இசையை தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு காரணமாக இருந்த நிகழ்வையும் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ar rahman

அதில் அவர் கூறும் பொழுது நான் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த பொழுது ஒருவர் நன்றாக மது அருந்திவிட்டு என்னிடம் வந்து பேசினார். அவர் எங்களுடன் சேர்ந்து பணிபுரியும் ஒரு இசை கலைஞர் தான். அவர் கூறும் பொழுது தொடர்ந்து படங்களுக்கு இசையமைத்து வருகிறாய்.

உனக்கென்று வித்தியாசமாக என்ன செய்யப் போகிறாய் என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு பிறகு தான் தனித்துவமான இசையை அமைப்பது குறித்து நான் யோசிக்க துவங்கினேன், என்று ஏ.ஆர் ரகுமான் கூறியிருக்கிறார்.

அதற்கு பிறகுதான் ஏ ஆர் ரகுமான் நிறைய ஆல்பம் பாடல்களையும் வெளியிட தொடங்கி இருக்கிறார். அது ஏ.ஆர் ரகுமானை தனித்துவமான ஒரு இசையமைப்பாளராக மாற்றியும் இருக்கிறது.

ஏ.ஆர் ரகுமானை தொடர்ந்து விவாகரத்து அறிவித்த கிதார் கலைஞர்.. இப்பதான் டவுட் வருது..!

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இளையராஜாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக பிரபலமான ஒரு இசை அமைப்பாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்தது அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஏ ஆர் ரகுமானின் மனைவியின் வழக்கறிஞர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி ஏ ஆர் ரகுமானை அவரது மனைவி பிரிவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. ஏ ஆர் ரகுமானின் மனைவி சாய்ரா பானுவின் பக்கம் இருந்து விவாகரத்து குறித்து அறிவிப்பு வந்த அடுத்த சில மணி நேரங்களில் ஏ.ஆர் ரகுமான் அவர் தரப்பிலிருந்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில் 29 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து விட்டோம் 30 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைப்போம் என்று நினைத்தேன் ஆனால் அதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது. என பதிவிட்டு இருந்தார் ஏ.ஆர் ரகுமான் இந்த நிலையில் இது குறித்த பேச்சுக்கள் தற்சமயம் சினிமா வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்தது.

ar rahman wife

கிதார் கலைஞரின் முடிவு:

இதற்கு நடுவே ஏ.ஆர் ரகுமானின் இசை குழுவில் கிதார் கலைஞராக பணிபுரிந்து வரும் மோகினி டே என்பவரும் தனது கணவர் மார்க்கை பிரிவதாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றே வெளியிட்டு இருக்கிறார்.

சாய்ரா பானு தனது விவாகரத்து அறிவித்த சில மணி நேரங்களிலேயே மோகினி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் நானும் எனது கணவர் மார்க்கும் பிரிந்து விட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் இருவரும் பேசி ஒருமித்தமாக இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்று அவர் கூறியிருக்கிறார்.

mohini dey

மேலும் பிரிவிற்கு பிறகும் நாங்கள் நண்பர்களாக இருப்போம் என்றும் அவர் கூறி இருக்கிறார். இந்த நிலையில் இது ரசிகர்களுக்கு இடையே சந்தேகத்தை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டு விவாகரத்தையும் அவர்கள் சேர்த்து பேசி வருகின்றனர்.

எங்களுக்கும் மதிப்பு கொடுங்கள்.. AR Rahman விவாகரத்து குறித்து மகன் போட்ட பதிவு..!

The divorce of A.R. Rahman and his wife Saira Banu has been the subject of much discussion. In this situation, his son has now spoken out about it.

தமிழ் சினிமாவில் வந்து பல காலங்களாகவே இசையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு நபராக ஏ.ஆர் ரகுமான் இருந்து வருகிறார். அதுவரை தமிழில் இருந்து வந்த இசையில் இருந்து முழுக்க முழுக்க வித்தியாசமான ஒரு புதுவித இசையை சினிமாவிற்குள் கொண்டு வந்தவர் ஏ.ஆர் ரகுமான்.

அதனால்தான் ஏ.ஆர் ரகுமானின் பாடல்களுக்கு எப்பொழுதும் அதிகபட்ச மதிப்பு கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து வரும் நிலையில் தற்சமயம் ஏ ஆர் ரகுமானும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்திருப்பது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ஏனெனில் ஏ.ஆர் ரகுமான் குறித்து இதுவரை பெரிதாக சர்ச்சைகள் என்று எதுவும் வந்ததே கிடையாது. இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய மனைவி சைரா பானுவை விவாகரத்து செய்யப் போவதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருக்கிறார்.

ar rahman wife

மகன் வெளியிட்ட பதிவு:

இது ஒரு கடினமான முடிவுதான் என்றாலும் கூட வேறு வழி இன்றி எடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமானின் மகன் அமீன் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று மட்டும் கூறியிருக்கிறார்.

அதாவது தன்னுடைய தாய் தந்தையரின் இந்த முடிவுக்கு அமீன் விருப்பம் தெரிவித்திருக்கிறார். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் சர்ச்சையை கிளப்ப வேண்டாம் என்பதையும் அவர் இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.

ஜீவானாம்சம் தொகை மட்டும் இவ்வளவு வருதாம்… AR Rahman divorce update.!

There is a lot of talk about the divorce of AR Rahman and his wife Saira Banu. In this situation, the question now is how much alimony AR Rahman will give her.

தொடர்ந்து பிரபலங்கள் விவாகரத்து என்பது சினிமாவிலும் சினிமாவில் நடந்து கொண்டே இருக்கிறது. பொது மக்களுக்கு இருக்கும் கேள்வி எல்லாம் எப்பொழுதும் ஏன் சினிமாவில் உள்ளவர்கள் மட்டும் அதிகமாக விவாகரத்தை செய்து கொள்கிறார்கள் என்பதுதான்.

ஏனெனில் இந்திய சட்டப்படி விவாகரத்துக்கு பின்னால் சில லாப நோக்கம் உள்ள விஷயம் இருப்பதாக கூறப்படுகிறது. சில பெண்கள் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்டு அவர்களை விவாகரத்து செய்யும் பொழுது மனைவிகளுக்கு ஜீவனாம்சம் என்கிற ஒரு தொகை கிடைக்கும்.

அது கணவரின் வருமானத்தை பொறுத்து அமையும் தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வருமானம் அதிகமாக இருப்பதால் அவர்கள் ஒரு பெரிய தொகையை ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டி இருக்கும்.

ar rahman wife

ஜீவனாம்சம் தொகை:

இதனால் சில பெண்கள் ஜீவனாம்சத்திற்காகவே விவாகரத்துகளை செய்வதும் உண்டு. ஹாலிவுட்டில் இந்த மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் ஏற்கனவே நடந்து இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சமந்தா மாதிரியான சில நடிகைகள் விவாகரத்து பெற்ற பிறகும் கூட எந்த ஜீவனாம்சம் தொகையும் தேவையில்லை என்று அதை நிராகரித்தும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமானின் மனைவி சைரா பானுவிற்கு எவ்வளவு ஜீவனாம்சம் கிடைக்கும் என்பது ஒரு கேள்வியாக இருந்து வருகிறது அதன்படி பார்க்கும் பொழுது ஏ ஆர் ரகுமானின் மொத்த சொத்து மதிப்பு 1700 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கணவரின் நிகர மதிப்பில் 1/5 முதல் 1/3 வரை ஜீவனாம்ச தொகையாக கொடுக்கப்படுகிறது. 5 இல் ஒரு பங்கு என்று பாத்தால் கூட 340 கோடி தொகையை ஏ.ஆர் ரகுமான் ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும் என பேச்சுக்கள் இருக்கின்றன.

என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.. அதனால்தான் பேசுவதில்லை.. ஏ.ஆர் ரகுமானின் இருண்ட பக்கங்கள்..

தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். தமிழில் ஒரு மாறுபட்ட இசையை கொண்டு வந்ததில் ஏ ஆர் ரகுமானுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது.

அதுவரை ஒரு வகையான இசையை கேட்டு வந்த தமிழ் மக்களுக்கு மத்தியில் வேறு வகையான ஒரு இசையை அறிமுகப்படுத்தியவர் ஏ.ஆர் ரகுமான். ஏ.ஆர் ரகுமான் குறித்து எப்பொழுதுமே தவறான செய்திகள் என்று எதையும் தமிழ் சினிமாவில் பார்க்க முடியாது.

அந்த அளவிற்கு மிகவும் நல்ல மனிதர் என்கிற பெயரை எடுத்தவர் ஏ.ஆர் ரகுமான். சமீபத்தில் ஏ ஆர் ரகுமான் பேசும்பொழுது உங்களது தந்தை குறித்து நீங்கள் பெரிதாக எந்த ஒரு தகவலும் கொடுத்தது கிடையாதே என்று அவரிடம் கேட்டனர்.

ar rahman

ஏ.ஆர் ரகுமானின் கசப்பான நினைவுகள்:

அதற்கு பதில் அளித்த ஏ.ஆர் ரகுமான் கூறும் பொழுது எனது தந்தை குறித்து நான் எங்குமே இருந்தவரை பேசியது கிடையாது. ஏனெனில் அதை எனது வாழ்க்கையின் கருப்பு பக்கங்கள் என்றுதான் கூற வேண்டும். எனது தந்தையின் இறுதி காலங்கள் என்னால் சகித்துக் கொள்ளவே முடியாத வகையில் இருந்தது.

இறுதி காலத்தில் எனது தந்தை மிகவும் கஷ்டப்பட்டார் அதை நான் மறக்க தான் நினைக்கிறேன் அதனால் தான் எப்போதும் நான் அதைப் பற்றி பேசுவதே கிடையாது என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர் ரகுமான்.