Tag Archives: ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ் அனுப்புன அந்த இ-மெயில்… ஆடிப்போன கௌதம் மேனன்..! இதான் நடந்தது

ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் முக்கியமானவராக அறியப்படுகிறார். பெரும்பாலும் இவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாம் டாப் ஹிட் கொடுத்து வந்தன. சில இசையமைப்பாளர்களுக்கு சில இயக்குனர்களுடன் மட்டும் நன்றாக செட் ஆகும் என கூறலாம்.

அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனனுக்கு அவரது முதல் படத்தில் இருந்தே இசையமைத்து வந்த இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் இருந்தார். பெரும்பாலும் ஹாரிஸ் ஜெயராஜின் இசை பெரும் வெற்றியை கொடுத்து வந்தது.

ஆனால் சில காலங்களுக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் கௌதம் மேனன் படங்களுக்கு இசையமைக்கவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுவிட்டது என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தது.

gautham-menon1

இதுக்குறித்து கௌதம் மேனன் ஒரு பேட்டியில் கூறும்போது ஹாரிஸ் ஜெயராஜ் எதனால் சென்றார் என எனக்கும் தெரியாது. ஆனால் ஒரு நாள் அவரே ஒரு மெயில் அனுப்பினார். அதில் அவர் நான் படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் என கூறியிருந்தார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் ஏன் அந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை. என அந்த நிகழ்வை குறித்து விளக்கியுள்ளார் இயக்குனர் கௌதம் மேனன்.

கடுப்பான ஹாரிஸ் ஜெயராஜ்.. பதிலடி கொடுத்த ஏ.ஆர் ரகுமான்.!

சமீப காலங்களாகவே ஏ.ஐ குறித்த பேச்சுக்கள் அதிகமாக இருந்து வருகிறது. இசை துறையிலும் கூட ஏ.ஐயின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.

அதில் அவரிடம் இசையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறீர்களா? என கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த ஹாரிஸ் ஜெயராஜ் இத்தனை பாடகர்கள் இருக்கும்போது நான் ஏன் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்டிருந்தார்.

மேலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் கலைஞர்களை அவமானப்படுத்த வேண்டாம் என கூறியிருந்தார். தமிழ் சினிமாவிற்கு முதன் முதலாக ஏ.ஐ தொழில்நுட்பத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தான் அறிமுகப்படுத்தியிருந்தார்.

harris jayaraj

இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமானை விமர்சித்து பாடகர் அபிஜீத் பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது ஏ.ஆர் ரகுமான் தான் ஏ.ஐ தொழில்நுட்பத்தை கொண்டு வந்தார். இப்போ அவரால் நிறைய பாடகர்களுக்கு வாய்ப்புகளே இல்லாமல் போயிடுச்சு.

இந்த ஏ.ஐ ஐ ஆர்டிஃபிசியல் என சொல்லுங்கள். ஆனால் இண்டலிஜன்ஸ் என சொல்லாதீர்கள் என கூறியிருந்தார் அபிஜீத். இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமான் இதற்கு பதிலளித்துள்ளார்.

அவர் இதுக்குறித்து கூறும்போது நான் இப்போது பல பாடகர்களை வைத்துதான் பாடல்களை உருவாக்குகிறேன். அவர்களுக்கு அதற்கான தொகையையும் கொடுத்து விடுகிறேன். 50க்கும் அதிகமான பாடகர்கள் என்னிடம் வேலைச் செய்கிறார்கள். ஏ.ஐ தொழில்நுட்பத்தில் சாதகங்களும் உண்டு. பாதகங்களும் உண்டு.

அது பயன்படுத்துபவரை பொறுத்துதான் அமைகிறது என கூறியுள்ளார் ஏ.ஆர் ரகுமான்.

ஹாரிஸ் ஜெயராஜை விட்டு விலகியதற்கு இதுதான் காரணம்.. ஓப்பன் டாக் கொடுத்த கௌதம் மேனன்.!

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் இடையே நல்ல தொடர்பு என்பது இருக்கும். உதாரணத்திற்கு ராஜ்கிரண் தயாரித்து நடிக்கும் பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைப்பாளர்.

அதேபோல இயக்குனர் ஷங்கர் தயாரிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைப்பார். அந்த வரிசையில் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிக்கும் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைப்பார்.

ஆனால் சமீப காலங்களாகவே ஹாரிஸ் ஜெயராஜ் அவரது திரைப்படங்களில் இசையமைக்கவில்லை. இந்த நிலையில் இது குறித்து கௌதம் மேனனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கௌதம் மேனன் எங்களுக்குள் சண்டை எல்லாம் எதுவும் இல்லை.

மின்னலே திரைப்படம் எடுத்த பொழுது அந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக இருந்தது. ஆனால் அப்பொழுது அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை.

harris-jayaraj

ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் போட்ட இசை என்னை அவர் மீது ஈடுபாடு காட்டச் செய்தது. அப்பொழுதே நான் முடிவு செய்துவிட்டேன் எனக்கான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான் என்று.

அதற்கு பிறகு காக்க காக்க, வாரணம் ஆயிரம் என்று பல வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இருந்தாலும் வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு பிறகு நான் இசையமைப்பாளரை மாற்ற நினைத்தேன் முக்கியமாக ஏ ஆர் ரகுமானிடம் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று யோசித்தேன்.

அப்போதும் என்னை சுற்றியுள்ளவர்கள் கூறினார்கள் வாரணம் ஆயிரம் மாதிரியான படத்தில் ஹிட் பாடலை கொடுத்த பிறகு இசையமைப்பாளரை நீ மாற்றுவது தவறு என்று, ஆனாலும் நான் ஒரு மாற்றத்திற்காக அதை செய்தேன் 

மற்றபடி எங்களுக்குள் எந்த ஒரு சண்டையும் கிடையாது இப்பொழுது வெளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்திருக்கிறார் மேலும் வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு பிறகு என்னை அறிந்தால் திரைப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை அமைத்தார் என்று கூறியிருக்கிறார் கௌதம் மேனன்.

அந்த ஒரு பாட்டுக்காக 10 வைர மோதிரம் வாங்கிட்டு போனேன்!.. ஹாரிஸ் ஜெயராஜுக்கு தயாரிப்பாளர் செய்த மரியாதை!.

ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரும் இசையமைப்பாளராக இருந்து வந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். பெரும்பாலும் அப்போதெல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் பாடல்கள் சிறப்பான வெற்றியை கொடுத்து வந்தன.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானிடம் உதவியாளராக பணிப்புரிந்தவர். படையப்பா மாதிரியான படங்களில் அவர் பணிப்புரிந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனியாக இசையமைப்பாளர் ஆனப்போது அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

அவர் ஹிட் கொடுத்த ஆல்பங்களில் வேட்டையாடு விளையாடு திரைப்படமும் முக்கியமான படமாகும். வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுடன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

அதில் அவர் கூறும்போது முதலில் ஹாரிஸ் ஜெயராஜ் மஞ்சள் வெயில் மாலையிலே என்கிற பாடலைதான் இசையமைத்தார். அதனை கேட்ட எனது மகன் அந்த பாடல் அருமையாக இருக்கிறது என கூறினான். அதற்கு பிறகுதான் பார்த்த முதல் நாளே பாடலுக்கு இசையமைத்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.

பார்த்த முதல் நாளே பாடலுக்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. எனவே நான் ஹாரிஸ் ஜெயராஜை கௌரவிக்க 10 வைர மோதிரங்களை வாங்கி சென்று அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் அதில் ஒரே ஒரு மோதிரத்தை மட்டுமே எடுத்துக்கொண்டார் என கூறுகிறார் மாணிக்கம் நாராயணன்.

அந்த பாட்டு கேவலமாதான் இருக்கும்… இருந்தாலும் வச்சுக்கோங்க!.. படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் செய்த சம்பவம்…

Harrish Jayaraj: தமிழ் இசையமைப்பாளர்களில் ஒரு சீசனில் தொடர்ந்து ஹிட் பாடல்களாக கொடுத்து வந்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். ஏ.ஆர் ரகுமானிடம் உதவியாளராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ் படையப்பா மாதிரியான திரைப்படங்களில் பணிப்புரிந்திருக்கிறார்.

அதற்கு பிறகு அவருக்கு தனியாக இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு கோவில், அருள் மாதிரியான திரைப்படங்களில் சிறப்பாக இசையமைத்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். பிறகு தமிழ் சினிமாவை விடவும் தெலுங்கு சினிமாவில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன.

இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. புஷ்பா திரைப்படத்தை பொறுத்தவரை அதில் ஒரு ஐட்டம் பாடல் போட வேண்டி இருந்தது. பொதுவாகவே தெலுங்கில் ஐட்டம் பாடல் என்றால் மிகவும் அடாதடியான இசையில்தான் அமைந்திருக்கும்.

ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் அதிலிருந்து கொஞ்சம் மாற்றி இசையமைத்தால் நன்றாக இருக்கும் என கருதினார். அதன்படி அவர் இசையமைத்த பாடல்தான் ஊ சொல்றியா மாமா பாடலின் பாடல். மிகவும் மெலோடியாக அதன் பாடல் செல்லும்.

இதனால் ஹாரிஸ் ஜெயராஜிக்கே ஒரு ஐயம் இருந்தது. அவர் நினைத்தது போலவே இந்த பாடல் இயக்குனருக்கு பிடிக்கவில்லை. கண்டிப்பாக பாடலை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். உடனே ஹாரிஸ் ஜெயராஜ் இப்போது கேட்கும்போது பாடல் கேவலமாகதான் சார் இருக்கும். ஆனால் அதை என்னை நம்பி ரிலீஸ் செய்யுங்கள் என கூறியுள்ளார்.

அந்த மாதிரியே வெளியான பின்பு யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை அந்த பாடல் கொடுத்தது. இந்த விஷயத்தை ஒரு மேடை நிகழ்ச்சியில் ஹாரிஸ் கூறியுள்ளார்.

படம் பேர் பிடிக்கலைனா அதுல கமிட் ஆக மாட்டேன்!.. பெரிய வாய்ப்பை தவறவிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்.

தமிழில் பிரபலங்களை பொறுத்தவரை சில நகைச்சுவையான செண்டிமெண்டுகளை அவர்கள் கொண்டிருப்பர். சில பிரபலங்களின் நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக கூட இருக்கும்.

ஆனால் அப்படியான செண்டிமெண்ட் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்று பல பிரபலங்கள் நினைக்கின்றனர். உதாரணமாக நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில்தான் தனது படத்திற்கான பூஜையை போடுவார். அப்படி போடுவதன் மூலம் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என்பது ரஜினிகாந்தின் நம்பிக்கை.

அதேபோல ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு வித்தியாசமான நம்பிக்கை உண்டு. அதாவது படத்தின் கதையை வைத்து பலரும் படத்தில் கமிட் ஆவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் படத்தின் பெயரை கேட்டு அதில் கமிட் ஆவார் ஹாரிஷ் ஜெயராஜ். இதுகுறித்து நடிகர் ஜெகன் ஒரு பேட்டியில் கூறும் பொழுது இந்தியவிலேயே மிகவும் பிரபலமான ஒரு படத்திற்கு இசை அமைப்பதற்கான வாய்ப்பு ஹாரிஸ் ஜெயராஜிற்கு வந்தது.

ஆனால் அந்தப் படத்தின் பெயர் பிடிக்காமல் அவர் அதில் இசையமைக்க மறுத்துவிட்டார். ஆமாம் ஹாரிஸ் ஜெயராஜ் படத்தின் பெயரை வைத்தேன் படத்திற்கு இசையமைக்க முடிவு செய்வாராம் ஒரு படத்தின் பெயர் அவருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றால் அந்த படத்திற்கு இசையமைக்க மாட்டார்.

பெரும் இயக்குனரின் படமாகவே இருந்தாலும் படத்தின் பெயர் பிடித்திருந்தால் மட்டுமே படத்திற்கு இசையமைப்பாராம் இந்த விஷயத்தை ஜெகன் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

ஒரே நைட்டில் ஏரோப்ளேனில் வைத்து சம்பவம் செய்த ஹாரிஸ்! –  என்ன சம்பவம் தெரியுமா?

திரை உலகில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த  இசை அமைப்பாளர்களில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு முக்கியமான  இசையமைப்பாளர் ஆவார்.

 ஏ ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா இவர்கள் வரிசையில் அப்பொழுது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் இருந்தார். 2010 காலகட்டங்களில் ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கு ஒரு ரசிகர் பட்டாளமே தமிழ் சினிமாவில் இருந்தது.

 இப்போதும் கூட  அவருக்கு என்று ஒரு தனி  ரசிகா வட்டாரம் இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு ஹாரிஸ் ஜெயராஜ்,  விக்ரம் நடித்த இருமுகன் என்கிற திரைப்படத்திற்கு இசையமைத்தார்.  இந்த படத்தில் வரும் தீம் மியூசிக் மிகவும் பிரபலமானது.

 ஆனால் படத்தில் காண முக்கியமான இசையை ஒரே இரவில் இசையமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். இருமுகன் படத்திற்கு டீசர் ட்ரைலருக்கான இசையை ஒரே இரவில் இசையமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் திடீரென ஹாரிஸ் ஜெயராஜ்க்கு போன் செய்து உடனே டீசருக்கு இசையமைக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் அன்றைய தினம் ஹாரிஸ் ஜெயராஜ் முக்கியமான வேலையாக வெளிநாடு கிளம்பி கொண்டிருந்தார்.

இருந்தாலும் அவசரமாக இசையமைத்து கேட்பதால் ஒரு லேப்டாப்பையும் கீ போர்டையும் எடுத்துக்கொண்டு ஏரோப்ளேன் ஏறியுள்ளார் ஹாரிஸ். ஏரோப்ளேனில் விடிய விடிய அமர்ந்து ஒரே நாளில் டீசருக்கான இசையை தயார் செய்து காலையில் இயக்குனருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த அளவிற்கு தனது பணிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ்.