அந்த ஒரு பாட்டுக்காக 10 வைர மோதிரம் வாங்கிட்டு போனேன்!.. ஹாரிஸ் ஜெயராஜுக்கு தயாரிப்பாளர் செய்த மரியாதை!.

ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரும் இசையமைப்பாளராக இருந்து வந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். பெரும்பாலும் அப்போதெல்லாம் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் பாடல்கள் சிறப்பான வெற்றியை கொடுத்து வந்தன.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானிடம் உதவியாளராக பணிப்புரிந்தவர். படையப்பா மாதிரியான படங்களில் அவர் பணிப்புரிந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனியாக இசையமைப்பாளர் ஆனப்போது அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது.

அவர் ஹிட் கொடுத்த ஆல்பங்களில் வேட்டையாடு விளையாடு திரைப்படமும் முக்கியமான படமாகும். வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுடன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.

அதில் அவர் கூறும்போது முதலில் ஹாரிஸ் ஜெயராஜ் மஞ்சள் வெயில் மாலையிலே என்கிற பாடலைதான் இசையமைத்தார். அதனை கேட்ட எனது மகன் அந்த பாடல் அருமையாக இருக்கிறது என கூறினான். அதற்கு பிறகுதான் பார்த்த முதல் நாளே பாடலுக்கு இசையமைத்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.

பார்த்த முதல் நாளே பாடலுக்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. எனவே நான் ஹாரிஸ் ஜெயராஜை கௌரவிக்க 10 வைர மோதிரங்களை வாங்கி சென்று அவரிடம் கொடுத்தேன். ஆனால் அவர் அதில் ஒரே ஒரு மோதிரத்தை மட்டுமே எடுத்துக்கொண்டார் என கூறுகிறார் மாணிக்கம் நாராயணன்.