இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இசையமைப்பாளராக பார்க்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் அவரும் அவரது மனைவி சைரா பானுவும் விவாகரத்து செய்யப் போவதாக அவர் அறிவித்திருந்தார். இது சினிமா துறையில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் அதிக அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இந்த காரணத்தால் இவர்கள் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்பது ஒரு குழப்பமான விஷயமாக இருந்தது. இருவரது தரப்பிலிருந்தும் அது குறித்து எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்கவில்லை. மேலும் இந்த விவாகரத்து இருவரும் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவுதான் என்று கூறியிருந்தார் ஏ ஆர் ரகுமான்.
விவாகரத்துக்கு காரணம்:
ஆனாலும் மக்களுக்கு எதனால் இந்த விவாகரத்து நடக்கிறது என்பது பெரிய கேள்வியாக இருந்து வந்தது. ஏனெனில் கிட்டத்தட்ட 29 வருடங்களாக இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து இருக்கின்றனர். அப்படி இருக்கும் பொழுது எதற்காக இவர்கள் பிரிய வேண்டும் என்று மக்கள் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து வம்சம் மாதிரியான திரைப்படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் தாஜ் நூர் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஏ.ஆர் ரகுமான் திருமணத்திற்கு பின்பு திருமண வாழ்க்கையை விடவும் சினிமாவில் தான் அதிக கவனம் செலுத்தினார்.
தொடர்ந்து நிறைய திரைப்படங்களுக்கு இசையமைப்பதில்தான் அவர் ஆர்வமாக இருந்தார். இதனால் அவரது மனைவியே கண்டு கொள்ளவில்லை அவருடைய மனைவிக்கு நேரம் ஒதுக்க அவருக்கு நேரமே இருக்கவில்லை அதுதான் இந்த பிரிவிற்கு முக்கிய காரணம். திருமணம் செய்து கொண்ட போது இப்படி நடக்கும் என்று அவருடைய மனைவி எதிர்பார்க்கவில்லை என்று கூறி இருக்கிறார் தாஜ் நூர்.