Tag Archives: arun vijay

அருண் விஜய்க்கு ஒரு மகாராஜாவா?.. வணங்கான் படத்தின் கதை இதுவா?

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வணங்கான். ஆரம்பத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துதான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

ஆனால் படப்பிடிப்பு போக போக பாலாவுக்கும் சூர்யாவிற்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் முழுதாக படமாக்குவது கடினம் என்பதை அறிந்த சூர்யா பாதியிலேயே படத்தை விட்டு விலகி விட்டார்.

மேலும் அப்பொழுது அந்த திரைப்படத்தை சூர்யாதான் தயாரித்தும் வந்தார். இந்த நிலையில் வணங்கான் திரைப்படத்தில் அடுத்து அருண் விஜயை நடிக்க வைத்தார் பாலா.

சூர்யாவுடன் பிரச்சனை:

தற்சமயம் வணங்கான் திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லருக்கு அதிக வரவேற்புகள் கிடைத்திருக்கின்றன இப்படி ஒரு கதையை சூர்யா தவற விட்டுவிட்டாரே என்று இது குறித்து ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

ட்ரைலரை வைத்து படத்தின் கதையை பார்க்கும் பொழுது பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரமாகதான் அருண் விஜயின் கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் கதை:

அவரைச் சுற்றி இருக்கும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு காரணமானவர்களை அவரே பழிவாங்குவதாக கதை இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஜெயிலுக்கு செல்கிறார் அருண் விஜய்.

ஆனால்  அவர் செய்த எதுவும் தவறாக தெரியாத காரணத்தினால் மக்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாக காட்சிகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ட்ரைலரில் அதற்கு தகுந்தார் போன்ற காட்சிகள் தான் இருக்கின்றன.

படத்தில் நீதிபதியாக நடிகரும் இயக்குனருமான மிஷ்கின் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதிக்கு எப்படி மகாராஜா திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாக இருந்ததோ அதேபோன்ற கதைகளத்தை வணங்கான் திரைப்படமும் கொண்டிருப்பதால் இது அருண் விஜய்க்கும் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மல்யுத்த வீரனாக களம் இறங்கும் அருண் விஜய்!.. எஸ்.கே பட இயக்குனர்தான் இயக்குகிறார்!.

சமீப காலங்களாக நடிகர் அருண் விஜய்க்கு ஓரளவு நல்ல படங்களாக அமைந்து வருகின்றன. கதை தேர்ந்தெடுக்கும் விதத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பதால் நல்ல வெற்றி பெறும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய்.

அப்படி அவர் தற்சமயம் நடித்து வரும் திரைப்படம் வணங்கான் இந்த திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். பொதுவாக பாலா இயக்குகிறார் என்றாலே அந்த திரைப்படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு தானாகவே வந்துவிடும்.

அப்படியாக அந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. மேலும் அந்த படத்தில் ஒரு கையில் சாமியையும் இன்னொரு கையில் பெரியாரையும் வைத்திருக்கிறார் அருண் விஜய். அது இன்னமும் எதிர்பார்ப்பை தூண்டும் விதத்தில் உள்ளது.

இந்நிலையில அடுத்து அருண் விஜய் நடிக்கும் படத்தின் அப்டேட் தற்சமயம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ரெட்ட தல என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் க்ரிஸ் திருக்குமரன் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே மான் கராத்தே கெத்து ஆகிய இரண்டு திரைபடங்களை இயக்கியிருக்கிறார். சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் தற்சமயம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

வனிதா இதோட நிறுத்திக்கலைனா விளைவுகள் கடுமையா இருக்கும்!.. வார்னிங் கொடுத்த நடிகர் அருண் விஜய்!.

விஜயக்குமார் குடும்பத்தில் அவரது பிள்ளைகள் அனைவருமே திரைத்துறைக்கு வாய்ப்பு தேடி வந்தனர். அதில் வனிதா விஜயக்குமாரும் முக்கியமானவர். ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் போக போக பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில் படங்களில் எல்லாம் நடிக்காமல்தான் இருந்து வந்தார் வனிதா. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது மூலமாக மக்கள் மத்தியில் ஓரளவு பிரபலமானார். இதனை தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகள், யூ ட்யூப் பேட்டிகள் போன்றவற்றில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து விட்டது.

இந்த நிலையில் பேட்டிகளில் சொந்த வாழ்க்கை விஷயங்களை அவர் பகிர்ந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டப்போது கூட விஜயக்குமாரை இழிவாக பேசியிருந்தார் வனிதா.

இந்த நிலையில் இவரை குறித்து பேசிய அருண் விஜய் கூறும்போது தன்னுடைய மோசமான செயல்கள் மற்றும் தவறான புத்தி காரணமாக வனிதாவின் நிலை மோசமாகியுள்ளது. ஆனால் அதற்கு அவர் எங்களை குறை கூறுகிறார்.

என் தந்தை குறித்து பேசுவதை வனிதா நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அதற்காக கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறியிருக்கிறார் அருண் விஜய்!.

தமிழ் சினிமாவில் வந்த ஹீரோயின் பஞ்சம்!.. வரிசையில் காத்திருக்கும் அருண் விஜய், எஸ்.ஜே சூர்யா!.. என்ன கொடுமை இது?..

Tamil Heroine: தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்கிற தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்துள்ளது. பொதுவாக தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு பஞ்சம் என்கிற நிலை ஏற்பட்டதே கிடையாது.

ஏனெனில் எப்போதும் கதாநாயகர்களாக நடிக்கும் நடிகர்களை காட்டிலும் கதாநாயகிகளாக நடிக்கும் நடிகைகள்தான் அதிகமாக இருந்து வருவார்கள். மேலும் தமிழ்நாடு சினிமா மார்க்கெட் கொஞ்சம் பெரிது என்பதால் வேற்று மொழி நடிகைகளும் கூட தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு உடனே விருப்பம் தெரிவிப்பதுண்டு.

tammannah

தெலுங்கு மலையாளத்தில் பிரபலமாக இருந்த நடிகை க்ரீத்தி ஷெட்டி கூட தற்சமயம் தமிழில்தான் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு கதாநாயகி கிடைக்கவில்லை என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

கதாநாயகி கிடைக்காமல் கஷ்டப்படும் எஸ்.ஜே சூர்யா:

எஸ்.ஜே சூர்யா அவரே இயக்கி நடிக்கும் கில்லர் என்கிற திரைப்படத்தின் திரைக்கதை வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் கதாநாயகிக்கும் வழங்கப்பட்டதுள்ளாம்.

sj-surya

எனவே இந்த கதைக்கு கொஞ்சம் சிறப்பாக நடிக்க தெரிந்த கதாநாயகிகள் தேவைப்படுகின்றனர். இதற்காக வெகு காலமாகவே கதாநாயகிகளை தேடி வருகிறாராம் எஸ்.ஜே சூர்யா. அதே போல அடுத்து அருண் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கும் வெகு நாட்களாகவே கதாநாயகியை தேடி வருகிறார்களாம்.

தற்சமயம் கதாநாயகி கிடைக்காமல் இந்த இரண்டு திரைப்படங்களுமே படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருக்கின்றன.

வணங்கான் பேசப்போற விஷயம் ஒன்றிய அரசுக்கு எதிரா இருக்குமா? தேர்தல் நேரத்தில் குட்டையை குழப்பிய பாலா!..

Vanangaan Tamil movie: தற்சமயம் இயக்குன பாலா இயக்கத்தில் தமிழில் தயாராகி வரும் திரைப்படம்தான் வணங்கான். முதலில் இந்த திரைப்படத்தில் சூர்யாதான் கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனால் பிறகு இயக்குனர் பாலாவுக்கும் சூர்யாவிற்கும் ஒத்து வராத காரணத்தினால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார்.

தற்சமயம் இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து மத நல்லிணக்கத்துக்கு ஆதரவாகவும், மத அரசியலுக்கு எதிராகவும் திரைப்படங்கள் வந்துக்கொண்டுள்ளன.

arun vijay

அப்படி வரும் திரைப்படங்களில் ஒன்றாகதான் வணங்கான் திரைப்படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த படத்தின் ட்ரைலரில் பார்க்கும்போது திருவள்ளுவருக்கு காவி பூச நினைக்கும் கும்பலை காட்டியுள்ளனர். திருவள்ளுவர் பிராமணர் என்பதாக அவர் மீது அடையாளத்தை புகுத்த வெகு நாட்களாக முயற்சித்து வருகின்றனர்.

இதனை படத்திலும் காட்டியுள்ளனர். அப்படி செய்கிற பெண்ணை கதாநாயகன் அடிப்பது போலவும் காட்சிகள் இருக்கின்றன. அதே போல படத்தில் கிருஸ்துவ மதமாற்றம் குறித்தும் பேசியிருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இதற்கு நடுவே இந்த மத அரசியல் தெரியாத கடவுள் நம்பிக்கை கொண்ட மக்கள் அதிகம். அப்படியான மக்களில் ஒருவராக இருக்கும் அருண் விஜய் இதை அலசுவதாக கதை இருக்கும் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வரும் இந்த நேரத்தில் இப்படியான ஒரு படத்தை எடுத்துவிட்டாரா பாலா என்பதே பலருக்கு அதிர்ச்சியான விஷயமாக அமைந்துள்ளது.

திருவள்ளுவருக்கா காவி சாயம் பூசுறீங்க… மத அரசியலை பிரிக்கும் வணங்கான் ட்ரைலர்!..

Vanangaan movie Trailer: பாலா இயக்கும் திரைப்படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் அந்த திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு என கூறலாம். ஆனால் இயக்குனர் பாலாவை பொறுத்தவரை அவர் அதிக திரைப்படங்கள் எல்லாம் இயக்க மாட்டார்.

எப்போதாவதுதான் திரைப்படம் இயக்குவார். அதே போல இயக்கும் திரைப்படங்களுக்கும் அதிக காலம் எடுத்துக்கொள்வார். இதனாலேயே அதிகபட்ச தயாரிப்பாளர்கள் இவரது திரைப்படங்களை தயாரிப்பதில்லை.

இந்த நிலையில் முதலில் சூர்யாவே தயாரித்து நடித்துதான் வணங்கான் திரைப்படம் தயாரானது. ஏனெனில் அந்த படத்தின் கதை சூர்யாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அதே சமயம் சூர்யாவிற்கும் பிதாமகன் திரைப்படம் மூலமாக நல்ல வெற்றியை கொடுத்திருந்தார் பாலா.

எனவே அந்த படத்தை தயாரித்து நடித்தார் சூர்யா. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த படத்திற்கான செலவு மிகவும் அதிகமானது. அதை பார்த்த சூர்யா படத்தில் இருந்து விலகிக்கொள்ள பிறகு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து திரைப்படம் எடுக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்சமயம் வெளியாகியுள்ளது. அதில் பார்க்கும்போது இந்து மற்றும் கிருஸ்துவ மத அரசியலையும் அதற்கு எதிராக கதாநாயகன் போராடுவது போலவும் தெரிகிறது. அதே சமயம் பகுத்தறிவு தெய்வ நம்பிக்கை இரண்டிலும் நம்பிக்கை கொண்டவராக அருண் விஜய் இருப்பார் என தெரிகிறது. ஒரு காட்சியில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச நினைக்கிறார் ஒரு பெண். அவரை அடிக்கிறார் அருண் விஜய்.

ஏனெனில் ஒரு கையில் பிள்ளையாரும் மற்றொரு கையில் பெரியாரையும் அவர் வைத்திருப்பது போல காட்சி ஒன்று அமைந்துள்ளது.

ப்ளான் பண்ணி அடிச்சாலும் எஸ்கேப் ஆன அருண் விஜய்!.. தனுஷ், சிவகார்த்திகேயனுக்கே டஃப் கொடுக்கிறார்!..

Actor Arun Vijay : பொங்கலுக்கு திரைப்படங்கள் போட்டி போட்டுக் கொள்வது என்பது சினிமாவில் வழக்கமாக நடந்து வரும் ஒரு விஷயம்தான். அந்த வகையில் இந்த பொங்கலை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படமும் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படமும் போட்டி போட்டது.

இந்த இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த அளவு வசூலை கொடுக்கவில்லை என்றாலும் ஒரு நல்ல வசூலைதான் கொடுத்துள்ளது இதுவரை நிலவரப்படி அயலான் திரைப்படத்தை விட கேப்டன் மில்லர் திரைப்படம்தான் நல்ல வசூலை பெற்றுள்ளது என்று கூறப்படுகிறது.

இதற்கு நடுவே நடிகர் அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் ஒன் என்கிற திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. ஆனால் நிறைய திரையரங்குகளில் அந்த படம் வெளியாகவில்லை. இதனால் மக்களுக்கும் பெரிதாக அந்த படம் குறித்து தெரியவில்லை.

ஆனால் வெளியான சில திரையரங்குகளில் அந்த படத்தை பார்த்த மக்கள் படம் குறித்து நல்லவிதமான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இரண்டு பெரிய படங்கள் வெளியானதால்தான் அருண் விஜய் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் போனது என கூறப்படுகிறது.

மொத்தமே தமிழக அளவில் 80 திரையரங்கில்தான் மிஷன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதை பார்த்து தற்சமயம் இன்னும் சில திரையரங்குகள் அந்த திரைப்படத்தை திரையிட துவங்கியுள்ளனர். இவ்வளவு பெரிய கதாநாயகர்கள் படங்கள் வெளியாகியும் கூட நல்ல கதையின் காரணமாக தற்சமயம் அருண் விஜய்யின் திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது.

என் வாழ்க்கையையே சீரிழிச்சாரு.. இருந்தாலும் அடுத்த பட வாய்ப்பு வாங்கி கொடுத்தேன்!.. மகிழ்திருமேனியால் காலியான தயாரிப்பாளர்!..

சினிமாவைப் பொறுத்தவரை கொடுத்தால் கொட்டி கொடுக்கும், எடுத்தால் மொத்தமாக எடுத்து விடும் எனக் கூறுவார்கள். பொதுவாக சன் பிக்சர்ஸ் லைக்கா மாதிரியான பெரிய நிறுவனங்களுக்கு ஒரு படம் தோல்வி படமாக அமைகிறது என்றால் அது ஒரு பெரிய நஷ்டம் இல்லை.

ஏனெனில் அவர்கள் நூற்றுக்கணக்கான கோடிகளில் பணத்தை போடுவார்கள். ஆனால் சின்ன தயாரிப்பாளர்களை பொருத்தவரை ஏதேனும் ஒரு படம் தோல்வியடைந்தால் அடுத்த படம் அவர்கள் படம் தயாரிப்பது என்பதே கேள்விக்குறியாகிவிடும்.

அப்படி பட தோல்விகளின் காரணமாக சினிமாவில் பணத்தை இழந்தவர் தான் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். மாணிக்கம் நாராயணன் வேட்டையாடு விளையாடு மாதிரியான பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

ஆனால் அவர் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் மகிழ்திருமேனி. இது குறித்து அவர் பேட்டியில் கூறும் பொழுது மகிழ் திருமேணி இயக்கிய முன்தினம் பார்த்தேனே என்கிற திரைப்படத்தை நான் தயாரித்தேன். அந்த திரைப்படத்தை மொத்தம் 110 நாட்கள் எடுத்தார் மகிழ்திருமேனி.

அந்தப் படத்தின் கடைசி அவுட்புட்டை பார்த்த பொழுதே நான் கூறிவிட்டேன் அந்த படம் ஓடாது. அப்படி ஓடினால் எனது இரண்டு காதுகளை வெட்டிக் கொள்கிறேன் என்று, ஆனால் அது கண்டிப்பாக ஓடும் என்று மகிழ் திருமேணி கூறினார். அந்த படம் பயங்கரமான தோல்வியை கண்டது.

அப்போதும் கூட நான் அவரைப் பற்றி வெளியில் தவறாக கூறவில்லை ஏனெனில் அதற்கு அடுத்து அவர் இயக்கவிருந்த தடையற தாக்க திரைப்படத்தில் அருண் விஜய் நடிக்க இருந்தார். அவர் என்னிடம் வந்து மகிழ் திருமேனி படத்தில் நடிக்கலாமா என்று கேட்டார் அப்பொழுது நான் நினைத்திருந்தால் மகிழ் திருமேனியை பலி வாங்கியிருக்கலாம்.

ஆனால் நான் அப்படி செய்யவில்லை அவர் நல்ல இயக்குனர் என்றுதான் கூறினேன் என்று தனது பேட்டியில் ஆதங்கத்துடன் கூறியுள்ளார் மாணிக்கம் நாராயணன்.

ரைட்டு சம்பவம் இருக்கு.. பெரியார் அரசியல் பேசும் பாலாவின் வணங்கான் திரைப்படம்!..

தமிழில் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாலா. இயக்குனர் பாலா திரைப்படத்தில் நடித்தாலே அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என அவருக்கு ஒரு நல்ல பெயர் உண்டு.

ஆனால் பாலா படத்தில் நடிப்பவர்கள் பாவம் எனவும் ஒரு பேச்சு உண்டு. ஏனெனில் ஒரு காட்சி எடுத்து முடிப்பதற்குள் நடிக்கும் நடிகரை பாடாய் படுத்திவிடுவாராம் பாலா. இந்த நிலையில் பாலா இயக்கத்தில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம்தான் வணங்கான்.

இந்த திரைப்படத்தில் முதலில் சூர்யாதான் நடிக்கவிருந்தார். ஆனால் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. இதனையடுத்து நடிகர் அருண் விஜய் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார்.

இந்த நிலையில் தற்சமயம் வணங்கான் படத்தின் போஸ்டர் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த போஸ்டரில் சேற்றில் இருந்து எழுந்து வந்து நிற்கிறார் அருண் விஜய். அவரது ஒரு கையில் பிள்ளையார் சிலையும், மற்றொரு கையில் பெரியார் சிலையும் இருக்கிறது.

எனவே இந்த படம் வலுவான அரசியல் பேசும் படம் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

எமி ஜாக்சனுடன் அருண் விஜய்! – அச்சம் என்பது இல்லையே படத்தின் சூட்டிங் புகைப்படங்கள்

தற்சமயம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அருண் விஜய். தற்சமயம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடித்த யானை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

யானை படத்திற்கு பிறகு அருண் விஜய் தனது சம்பளத்தை அதிகரித்து உள்ளதாக சில பேச்சுக்கள் உள்ளன. இந்நிலையில் தற்சமயம் இவர் நடித்து வரும் திரைப்படம் அச்சம் என்பது இல்லையே.

இந்த படத்தில் எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்குகிறார். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தற்சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அருண் விஜய். அதில் பார்க்கும்போது படக்கதை வெளிநாட்டில் நடப்பது போல தெரிகிறது.

இது இல்லாமல் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடித்து அக்னி சிறகுகள் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது.

வணங்கான் படத்தில் சூர்யாவிற்கு பதில் இவர்தான் நடிக்க போறார்! – புதிய அப்டேட்!

நடிகர் சூர்யா பல படங்களில் நடித்திருந்தாலும் கூட இயக்குனர் பாலாவுடன் அவர் நடித்த படங்கள் அனைத்துமே அவருக்கு முக்கியமான படங்கள் எனலாம்.

வெகு காலத்திற்கு பிறகு மீண்டும் பாலாவுடன் கூட்டணி போட்டார் சூர்யா. வணங்கான் எனும் பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. சூர்யாவே இந்த படத்தை தயாரித்தார். இந்த படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

ஆனால் திடீரென சூர்யா இந்த படத்தில் இருந்து விலக்கப்பட்டார். அதற்கு பாலா விளக்கம் கொடுக்கும்போது இந்த படத்தில் வரும் கதாபாத்திரம் அந்தளவிற்கு சூர்யாவிற்கு ஒத்து வரவில்லை. எனவே இது இருவரும் ஒரு மனதாக முடிவு செய்தது என பாலா சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் அடுத்து யார் நடிக்க போகிறார்கள் என்கிற கேள்வி வந்தது. பாலாவும் அடுத்து யாரை கதாநாயகனாக நடிக்க வைப்பது என்பது குறித்து எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில் தற்சமயம் அந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரம் அருண் விஜய்க்கு சரியாக பொருந்தும் என படக்குழு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

ஒரே ஷாட்ல பேசணும்..! –  நடிப்பில் இயக்குனர் ஹரியை ஆச்சரியப்பட வைத்த அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே இருந்து வருகிற நடிகராவார். இவர் அன்புடன், கண்ணால் பேசவா, பாண்டவர் பூமி போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். 

மலை மலை, மாஞ்சா வேலும் போன்ற திரைப்படங்கள் அருண் விஜய்க்கு ஆக்‌ஷன் ஹீரோ படங்களாக அமைந்தன. அதன் பிறகு அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் அருண் விஜய் நடித்து வருகிற ஜூன் 17 அன்று வெளிவர இருக்கும் திரைப்படம் யானை.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஒரே ஷாட்டில் சண்டையிடுவது போன்ற காட்சிகள் உள்ளன. அந்த காட்சிக்கு பிறகு 15 நிமிடம் பேசும் காட்சியும் உள்ளதாம். இது எல்லாமே ஒரே ஷாட்டில் அமைய வேண்டும்.

அதை சாதரணமாக நடித்தாராம் அருண் விஜய். இதை  கண்டு இயக்குனர் ஹரியே வியப்படைந்தாராம்.