maanadu 2

அடுத்து மாநாடு 2தான் இயக்க போறோம்!.. வில்லனாக களம் இறங்கும் சிம்பு!.

Maanadu 2 : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்பட வரிசையில் மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அதிக வெற்றியை கொடுத்து பேசும் படமாக அமைந்த திரைப்படம் மாநாடு.

மாநாடு திரைப்படத்தைப் பொறுத்தவரை ஹாலிவுட்டில் மட்டுமே எடுத்து வந்த டைம் லூப் என்கிற கான்செப்டில் முதன்முதலாக தமிழில் வந்த திரைப்படம் மாநாடு. ஏதோ ஒரு காரணத்திற்காக குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஒருவர் மாட்டிக் கொள்வதைதான் அது குறிக்கும்.

அந்த காலகட்டத்தில் அவர் செய்ய வேண்டிய விஷயத்தை செய்யாத பட்சத்தில் அதே காலகட்டம் மீண்டும் நடந்து கொண்டிருக்கும். ஆனால் அதை புரியும் விதத்தில் தமிழில் எடுப்பது கடினம் என்பதால் எந்த இயக்குனர்களும் அப்படியான கதைகளை தேர்ந்தெடுப்பது இல்லை.

ஆனால் அதை படமாக்கி புரியும் விதத்தில் இயக்கியது மட்டும் அல்லாமல் எஸ்.ஜே சூர்யா மற்றும் சிம்புவை வைத்து சிறப்பான என்டர்டைன்மெண்ட் திரைப்படமாகவும் அதை உருவாக்கி இருந்தார் வெங்கட் பிரபு. அந்த படமும் அதிக வரவேற்பு பெற்றது.

மாநாடு அடுத்த பாகம்:

தற்சமயம் கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த கதை கூட ஒரு டைம் டிராவல் கதை என்று பேச்சுக்கள் இருக்கின்றன. அதற்கு தகுந்தார் போல இரண்டு விஜய் திரைப்படத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது.

அதில் ஒரு விஜய் இளமையாகவும் மற்றொரு விஜய் வயதானவராகவும் இருப்பதை வைத்து பார்க்கும் பொழுது ஒரு விஜய் காலப்பயணம் மேற்கொண்டு அங்கு வந்தவராக இருக்கலாம் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு நடுவே கோட் திரைப்படத்திற்கு பிறகு மாநாடு திரைப்படத்தின் அடுத்த பாகத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு என கூறப்படுகிறது. மாநாடு படத்தின் இரண்டாம் பாகமும் டைம் லூப் கான்செப்டில் எடுக்கப்படும் என்றும் இந்த திரைப்படத்தில் சிம்பு எஸ்.ஜே சூர்யா இருவரும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த படத்தில் இருந்து கதைகளும் முற்றிலுமாக இந்த திரைப்படத்தில் மாறி இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதன்படி எஸ்.ஜே சூர்யா இதில் ஹீரோவாகவும் சிம்பு வில்லனாகவும் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. சிம்பு வில்லனாக நடிக்கிறார் என்றதுமே அதற்கு வரவேற்புகள் அதிகமாக கிடைக்க துவங்கியுள்ளன.