Tag Archives: சூர்யா சாட்டர்டே

சூர்யா சாட்டர்டே படம் எப்படி இருக்கு?.. திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்!.

தெலுங்கில் பிரபல நடிகரான நானி நடித்து சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக சூர்யா சாட்டர்டே திரைப்படம் இருந்து வருகிறது.

சூர்யா சாட்டர்டே திரைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படத்தின் கதைதான். திரைப்படத்தின் கதையை பொறுத்தவரை சிறு வயது முதலே அதிக கோபப்படும் ஒரு கதாபாத்திரமாக நானியின் கதாபாத்திரம் இருக்கிறது.

இந்த நிலையில் அவரது கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக அவரது அம்மா ஒரு சத்தியம் வாங்குகிறார். அதாவது வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் நானி கோபப்பட வேண்டும்.

படத்தின் கதை:

மற்ற ஆறு நாட்களும் கோபம் வந்தாலும் அமைதியாகதான் இருக்க வேண்டும். இந்த சத்தியத்தை வாங்கிய பிறகு நானியின் தாயார் இறந்து விடுகிறார்.

பிறகு அதையே வாழ்நாள் முழுமையும் பின்பற்றுகிறார் நானி. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் 6 நாட்கள் நடக்கும் நிகழ்வுகளில் யார் மீது எல்லாம் கோபம் வருகிறதோ அவர்கள் பெயரை எல்லாம் டைரியில் குறித்து வைத்துக் கொள்வார்.

சனிக்கிழமை அந்த ஆறு நபர்களில் யார் மீது இன்னமும் கோபம் குறையாமல் இருக்கிறதோ அவர்களை மட்டும் சென்று அடித்து விட்டு வருவார்.

கதாநாயகனுக்கு வரும் பிரச்சனை

இப்படியாக நானி செய்து கொண்டிருக்கும் பொழுது அதே ஊரில் போலீசாக இருக்கும் எஸ்.ஜே சூர்யாவிற்கும் நானிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஒரு சனிக்கிழமையில் எஸ் ஜே சூர்யாவை அடிப்பதற்கு திட்டம் தீட்டுகிறார் நானி. அதனை தொடர்ந்து என்னவெல்லாம் பிரச்சனைகளை அவர் சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதுதான் கதை.

 

படத்தின் கதை அம்சத்தை பொருத்தவரை நல்ல திரை கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் என்று தான் கூற வேண்டும். படத்தில் ஒவ்வொரு காட்சியும் மற்ற காட்சிகளோடு கனெக்டிவிட்டியாக இருக்கிறது மாஸ் காட்சிகள் பலவும் படத்தில் வொர்க் அவுட் ஆகி இருக்கின்றன. இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் ஒடிடியில் வெளியான பிறகு இந்த திரைப்படத்திற்கு மீண்டும் ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமை மட்டும் கோபப்படும் ஹீரோ!.. வித்தியாசமான கதையில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா!..

SJ Surya : தற்சமயம் தமிழ் சினிமாவில் பிரபலமாகி வரும் நடிகர்களில் முக்கியமானவராக எஸ்.ஜே சூர்யா இருக்கிறார். எஸ்.ஜே சூர்யா கதாநாயகனாக நடித்தாலும் வில்லனாக நடித்தாலும் அவரது திரைப்படத்தை பார்ப்பதில் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

எனவே அவரும் அதற்கு தகுந்தார் போல தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் எஸ்.ஜே சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் நானி கூட்டணியில் சூர்யா சாட்டர்டே என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

புதுக்கதை:

தெலுங்கு நடிகர் நாணியம் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் தற்சமயம் நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் தென்னிந்திய அளவிலேயே நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

சண்டை காட்சிகள் பெரிதாக இல்லாத திரைப்படங்களை கூட நானி தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்த வகையில் இந்த சூர்யா சாட்டர்டே என்கிற திரைப்படத்தின் கதை களமே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

அதாவது படத்தின் கதைப்படி கதாநாயகன் வாரத்தில் ஆறு நாட்களும் மிகவும் அமைதியாக இருக்கக்கூடியவர். அந்த நாட்களில் யாரேனும் அவரிடம் சண்டை போட்டால் கூட திரும்ப அடிக்க மாட்டார்

ஆனால் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையை கோபப்படுவதற்கான நாளாக வைத்திருப்பார் கதாநாயகன். அந்த சனிக்கிழமை நாளில் மிகுந்த கோபக்காரராகவும் சண்டை செய்பவராகவும் இருப்பார். இந்தப் படத்தில் கதாநாயகனாக நானியும் போலீஸ் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யாவும் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.