19 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் எஸ்.ஜே சூர்யா நயன்தாரா..!

சந்திரமுகி ஐயா மாதிரியான திரைப்படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நயன்தாராவின் வளர்ச்சி என்பது அதிகமாக தான் இருந்து வந்தது.

தொடர்ந்து தமிழில் பிரபலமாக இருந்த பெரிய நடிகர்களுடன் நடித்து வந்தார் நயன்தாரா. அப்படியாக அவர் நடித்து வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் கல்வனின் காதலி திரைப்படமும் முக்கியமான திரைப்படம் ஆகும்.

19 ஆண்டுகளுக்கு முன்பு 2006 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்த திரைப்படம் கள்வனின் காதலி. அப்பொழுது அந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் பலவும் ஹிட் கொடுத்தன.

மேலும் அந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் பழைய திரைப்படங்களை இப்பொழுது மறு வெளியீடு செய்வதை ஒரு வேலையாகக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் சச்சின் திரைப்படம் கூட மறு வெளியீடு செய்யப்பட்டு அதிக வெற்றியை கொடுத்தது. தற்சமயம் அவ்வளவாக காதல் திரைப்படங்கள் எடுக்கப்படாத காரணத்தினால் கள்வனின் காதலி திரைப்படத்தையும் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றனர்.

இந்த வருட இறுதிக்குள் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version