Tag Archives: சந்திரமுகி

19 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் எஸ்.ஜே சூர்யா நயன்தாரா..!

சந்திரமுகி ஐயா மாதிரியான திரைப்படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நயன்தாராவின் வளர்ச்சி என்பது அதிகமாக தான் இருந்து வந்தது.

தொடர்ந்து தமிழில் பிரபலமாக இருந்த பெரிய நடிகர்களுடன் நடித்து வந்தார் நயன்தாரா. அப்படியாக அவர் நடித்து வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் கல்வனின் காதலி திரைப்படமும் முக்கியமான திரைப்படம் ஆகும்.

19 ஆண்டுகளுக்கு முன்பு 2006 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்த திரைப்படம் கள்வனின் காதலி. அப்பொழுது அந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் பலவும் ஹிட் கொடுத்தன.

மேலும் அந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் பழைய திரைப்படங்களை இப்பொழுது மறு வெளியீடு செய்வதை ஒரு வேலையாகக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் சச்சின் திரைப்படம் கூட மறு வெளியீடு செய்யப்பட்டு அதிக வெற்றியை கொடுத்தது. தற்சமயம் அவ்வளவாக காதல் திரைப்படங்கள் எடுக்கப்படாத காரணத்தினால் கள்வனின் காதலி திரைப்படத்தையும் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றனர்.

இந்த வருட இறுதிக்குள் இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

அந்த விஷயம் தெரிந்திருந்தால் ரஜினியோடு நடித்திருக்கவே மாட்டேன்.. பல வருடம் கழித்து உண்மையை கூறிய நயன்தாரா..!

தமிழ் சினிமா நடிகைகளின் டாப் நடிகை என்று கேட்டால் அனைவரும் கூறும் நடிகையாக நயன்தாராதான் இருப்பார். அந்த அளவிற்கு நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிக வருமானம் பெரும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.

தமிழில் ஆண்களில் எப்படி ரஜினி உச்ச கட்ட நடிகராக இருக்கிறாரோ அதேபோல நடிகைகளின் நயன்தாரா இருக்கிறார். அதனால் தான் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர்.

இந்த நிலையில் அவர் முதன் முதலாக ரஜினியுடன் சேர்ந்து நடித்த சந்திரமுகி திரைப்படம் தான் இந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு முக்கிய காரணம். அதற்குப் பிறகு நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து ரஜினியுடன் அவர் நடித்ததை ஹைலைட் செய்து காட்டி வந்தார் நயன்தாரா.

நயன்தாரா கூறிய விஷயம்:

nayanthara

அதன் மூலமாக இந்த லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தையும் பெற்றார் அதன் பிறகு சிவாஜி, தர்பார், அண்ணாத்த மாதிரியான நிறைய திரைப்படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் நயன்தாரா.

இந்த நிலையில் அவர் முதன் முதலாக ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சந்திரமுகி திரைப்படத்தில் நடிக்கும் போது ரஜினி அவ்வளவு பெரிய நடிகர் என்று எனக்கு தெரியாது.

படப்பிடிப்புகள் முடிந்த பிறகுதான் ரஜினி பெரிய நடிகர் என்பதை அறிந்து கொண்டேன். ஒருவேளை ஆரம்பத்திலேயே எனக்கு அது தெரிந்திருந்தால் அவருடன் நடிப்பதற்கு எனக்கு பயமாக இருந்திருக்கும். ஒருவேளை நான் அந்த படத்தில் இருந்து கூட விலகி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார் நயன்தாரா.

செய்தில எல்லாம் வந்தப்பிறகு என்னை நீக்கிட்டாங்க… ரஜினி படத்தில் வாய்ப்பை இழந்த இசையமைப்பாளர் தேவா..!

கோலிவுட் சினிமாவில் கானா இசை அமைப்பாளராக பலராலும் அறியப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. 1990களுக்கு பிறகு நிறைய புது இசை அமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்களில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் இசையமைப்பாளர் தேவா.

பொதுவாக கிராமிய இசையை எந்த இசை அமைப்பாளரும் கையில் எடுக்காத சமயத்திலேயே அதை கையில் எடுத்து வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியவர் தேவா. ஆனால் நிறைய மெலோடி பாடல்களையும் தேவா கொடுத்திருக்கிறார் என்றாலும் கூட கானா பாடல்களுக்கு இவர் பிரபலமானவர்.

பாட்ஷா திரைப்படத்தில் தேவா இசையமைத்த பாடல்கள்தான் அந்த படத்தின் வெற்றிக்கு ஒரு வகையில் முக்கிய காரணமாக இருந்தன. இந்த விஷயத்தை ரஜினிகாந்தே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இந்த நிலையில் ஒரு ரஜினிகாந்த் திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது குறித்து தேவா கூறியிருக்கிறார்.

தேவாவுக்கு வந்த வாய்ப்பு:

அதில் அவர் கூறும்பொழுது சந்திரமுகி திரைப்படத்தில் நான்தான் இசையமைப்பதாக இருந்தது. இதற்காக சிவாஜி கணேசனின் வீட்டுக்கு என்னை அழைத்திருந்தனர். அங்கு ரஜினிகாந்த் இயக்குனர் பி வாசு எல்லோரும் அமர்ந்திருந்தனர்.

அவர்களையெல்லாம் கூடி பேசிவிட்டு என்னிடம் வந்து நீங்கள்தான் இசையமைக்கப் வேண்டும் என்று கூறினார்கள். பிறகு செய்தித்தாள்களிலும் சந்திரமுகி திரைப்படத்தில் நான் இசையமைப்பாளராக இருக்கிறேன் என செய்திகள் எல்லாம் வந்தது.

பிறகு தாமதமாகதான் அந்த திரைப்படத்தில் வித்யாசாகரை இசையமைக்க வைத்து விட்டனர். அதற்கு காரணம் என்னவென்றால் சந்திரமுகியின் கன்னட வெர்ஷனில் இசையமைத்தது வித்யாசாகர்தான் அதனால் தமிழிலும் அவரே இசையமைக்கட்டும் என்று கூறிவிட்டனர். அவரும் நன்றாகவே இசையமைத்திருந்தார் என்று அந்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவா.

Rajinikanth : ரெண்டு வாரத்துக்கு படத்தை கழுவி ஊத்துவாங்க கண்டுக்காதீங்க!.. பிரபுவுக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்!..

Actor Rajinikanth in chandramukhi: திரைத்துறையில் ரஜினிக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்த ஒரு சம்பவம் என்றால் அது பாபா படத்தின் தோல்விதான். 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினியே தயாரித்து உருவான திரைப்படம்தான் பாபா.

பாபா திரைப்படத்தை பொறுத்தவரை அது மாபெரும் வெற்றியை கொடுக்கும் என நம்பினார் ரஜினிகாந்த். ஆனால் அவர் நம்பிக்கைக்கு மாறாக அந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. அதனை தொடர்ந்து சில வருடங்கள் திரைப்படங்களே நடிக்காமல் இருந்தார் ரஜினிகாந்த்.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அவர் நடித்த திரைப்படம்தான் சந்திரமுகி. சந்திரமுகி திரைப்படத்தை பொறுத்தவரை அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகன் என்றாலும் அதில் ரஜினிகாந்த் மட்டுமே முக்கிய கதாபாத்திரம் கிடையாது. ரஜினி இல்லாமல் பலர் அதில் முக்கிய கதாபாத்திரங்களாக இருந்தனர்.

இந்த நிலையில் அந்த படத்தை பார்த்த ஏ.வி.எம் சரவணன் ஏன் ரஜினிகாந்த் இப்படியான படத்தில் நடித்தார் என யோசித்தார். இந்த படத்தை தயாரித்த பிரபுவிற்கும் இந்த படம் குறித்து ஐயம் இருந்தது. இந்த நிலையில் பிரபுவிடம் பேசிய ரஜினிகாந்த் முதல் இரண்டு வாரங்கள் இந்த திரைப்படம் அதிக விமர்சனத்துக்குள்ளாகும். ஆனால் அதன் பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என கூறினார்.

அதே போலவே ஆரம்பத்தில் பேசுபொருளானாலும் படம் அதற்கு பிறகு பெரும் வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ஒருவருடம் ஓடி சாதனை படைத்தது.

விஜய் ரஜினி இப்ப சண்டை போட காரணமே 20 வருஷம் முன்பு நடந்த பிரச்சனைதான்!.. இதெல்லாம் வேற நடந்துச்சா!..

Actor Rajinikanth and Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்தில் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளான நடிகர்களில் தளபதி விஜய்யும் முக்கியமானவர். அவர் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் நடித்தப்போது மக்களால் வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்த நிலையில் மிகவும் கஷ்டப்பட்டுதான் விஜய் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை பெற்றார். ஆனால் வளர துவங்கியவுடன் விஜய்க்கும் சரி அஜித்திற்கும் சரி ரஜினிகாந்தின் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே பெரும் ஆசையாக இருந்தது.

இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. பாபா திரைப்படம் பெறும் வெற்றியை கொடுக்கும் என நம்பினார் ரஜினிகாந்த். ஆனால் அந்த படம் படு தோல்வி அடைந்தது. ஆனால் அதே 2002 ஆம் ஆண்டு விஜய் நடித்து வெளியான தமிழன், யூத், பகவதி ஆகிய மூன்று படங்களுமே பெறும் வெற்றியை கொடுத்தது.

baba

இதனால் தன்னுடைய காலம் சினிமாவில் முடிந்துவிட்டது என்றே கருதினார் ரஜினிகாந்த். எனவே சில வருடங்களுக்கு அவர் படம் நடிப்பதையே விட்டுவிட்டார். அதற்குள் விஜய் திருமலை, கில்லி, மதுர,திருப்பாச்சி மாதிரியான படங்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

இந்த நிலையில்தான் 2005 இல் மீண்டும் சந்திரமுகி திரைப்படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார் ரஜினிகாந்த். 4 வருடங்களாக ரஜினிகாந்திற்கு பெரிதாக மார்க்கெட் இல்லாமல் இருந்ததால் அவரை எளிதாக வீழ்த்திவிடலாம் என விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தை சந்திரமுகி படத்திற்கு போட்டியாக வெளியிட்டனர்.

ஆனால் சச்சின் திரைப்படத்தை ஓரங்கட்டியது சந்திரமுகி. மேலும் ஒரு வருடம் திரையில் ஓடி ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் ரஜினி சினிமாவில் தனது பயணத்தை தொடர அந்த வெற்றி காரணமாக இருந்தது.

அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்,சூர்யா,விக்ரம் தான்… நம்ம கதை முடிஞ்சது!.. விரக்தியில் இருந்த ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்!.

தமிழ் சினிமா நடிகர்களிலேயே அதிகமான வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் நடிகர் ரஜினிகாந்துக்கு தோல்வி பயத்தை காட்டிய திரைப்படங்களும் உண்டு. ஆனால் வழக்கமாக சில படங்கள் தோல்வியடையும் பொழுது ரஜினிகாந்த் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்.

ஆனால் 2002ல் அவர் நடித்து வெளியான பாபா திரைப்படம் படுதோல்வி அடைந்தபோது அதற்காக வெகுவாக மனமுடைந்தார் ரஜினிகாந்த். ஏனெனில் அவர் மிகவும் ஆசைப்பட்டு எடுத்த திரைப்படம் அது கண்டிப்பாக பெரும் வெற்றி அடையும் என்று நினைத்தார் ரஜினிகாந்த். இதனால் விரத்தியிலிருந்து ரஜினிகாந்த் பிறகு சில நாட்களுக்கு படமே நடிக்காமல் இருந்தார்.

அப்பொழுது அவரது நிலையை கண்ட இயக்குனர் பாலச்சந்தர் சாமி திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்தை அழைத்து இருந்தார். அப்போது இந்த நடிகர்களின் திரைப்படங்களை எல்லாம் ரஜினிகாந்த் தொடர்ந்து பார்த்து வந்தார்.

எனவே அவர் அந்த பேட்டியில் பேசும் பொழுது மிகவும் விரக்தியில் இருந்த காரணத்தினால் சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ஒரு தற்காலிகமானதுதான் மக்கள் எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார் ஆக்குவார்கள் அதைப்போல அவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் பெரும் நடிகனின் படமாக இருந்தாலும் பார்க்க மாட்டார்கள் என்று பேசிய ரஜினிகாந்த் தற்சமயம் விஜய் நடித்த வசீகரா திரைப்படத்தை பார்த்தேன்.

அது மிகச் சிறப்பாக இருந்தது. அதேபோல விக்ரம் நடித்த சாமி திரைப்படம் சிறப்பான படமாக இருந்தது. அதேபோல சூர்யா நடித்த காக்க காக்க திரைப்படத்தை நான் மாறுவேடத்தில் சென்று திரையரங்கிலேயே பார்த்து வந்தேன். இவர்களெல்லாம் அடுத்து பெரும் மார்க்கெட்டை பெறும் நாயகர்ளாக இருப்பார்கள் என்று கூறினார் ரஜினிகாந்த்.

சொல்லப்போனால் அந்த பேட்டியில் அவர் பேசிய பொழுது இதோடு அவருடைய காலம் முடிந்துவிட்டது என்று நினைத்து இருந்தார் ரஜினிகாந்த் ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்து 2005 இல் வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் ரஜினிகாந்தின் மொத்த எண்ண ஓட்டத்தையும் மாற்றி அமைத்தது.

தமிழ் சினிமா மக்கள் இன்னும் தன்னை கைவிடவில்லை என்று அப்போது புரிந்து கொண்டார் ரஜினிகாந்த் ஏனனில் சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடி வெற்றி பெற்றது.

சந்திரமுகி படத்தில் ட்ரைவருக்கு வாய்ப்பு கொடுத்த ரஜினிகாந்த்!.. இவ்வளவு நாள் தெரியாம போச்சே!..

Chandramukhi Rajinikanth: திரைத்துறையில் நடிகர்கள் பலர் என்னதான் பிரபலமாக இருந்தாலும் அவர்களை சுற்றி உள்ளவர்கள் மீது நட்பும் அன்பு கொண்டிருப்பார்கள். அப்படியான சில நடிகர்கள் அவர்களை சுற்றி இருக்கும் மக்களுக்கு நன்மைகள் செய்வதுண்டு.

அப்படியாக ரஜினியும் ஒரு விஷயத்தை செய்துள்ளார். ரஜினியிடம் பல வருடங்களாக ஓட்டுனராக இருந்து வருபவர் ராஜ் பகதூர் என்பவர். இவர் ரஜினியின் சிறந்த நண்பர் என்றும் கூறலாம். இவருக்கு பெரிதாக நடிப்பு வராது என்றாலும் சினிமாவில் ஏதேனும் திரைப்படங்களில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளிலாவது வரவேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தது.

இந்த விஷயம் ரஜினிக்கு ரொம்ப நாட்களாக தெரியாமலே இருந்தது. இந்த நிலையில் ஒருநாள் இந்த விஷயம் தெரிந்த ரஜினிகாந்த் அவரை அழைத்து என் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிக்கிறாயா என கேட்டுள்ளார். அவரும் அதற்கு ஒப்புக்கொள்ளவே சந்திரமுகி திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பை கொடுத்தார் ரஜினிகாந்த்.

அதில் வரும் தேவுடா தேவுடா பாடலில் ரிப்பீட்டு என்கிற ஒரு வார்த்தை வரும் அதை முதல் தடவை படத்தின் தயாரிப்பாளரும் இரண்டாவது தடவை படத்தின் இயக்குனர் பி வாசுவும் கூறுவார், மூன்றாவது தடவை ரஜினியின் ஓட்டுனரான ராஜ் பகதூர் கூறுவதாக அந்த பாடல் அமைந்திருக்கும்.

பலான படத்துக்கு கூட்டிட்டு போ.. ஆட்டோக்காரரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரஜினி!..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். தற்சமயம் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை தந்தது.

அதனை தொடர்ந்து தற்சமயம் த.செ ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அதற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். ஒரு பத்து வருடத்திற்கு முன்பு இப்போது இருப்பதை விடவும் ஜாலியாக இருப்பாராம் ரஜினி.

அவரை பற்றி சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை இயக்குனர் பி.வாசு தனது நேர்க்காணலில் பகிர்ந்துள்ளார். கர்நாடாகவிற்கு செல்லும்போது அங்கு நிறைய காமெடிகளை செய்வாராம் ரஜினிகாந்த். இப்படிதான் ஒருமுறை வயதானவர் மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு ஆட்டோவில் ஏறியுள்ளார் ரஜினி.

அவரை ஆட்டோவில் ஏற்றிய ஆட்டோக்காரர் எங்கு போக வேண்டும் என்று கேட்க ஏதாவது பலான படத்துக்கு போப்பா என கூறியுள்ளார். யோவ் பெருசு இந்த வயசுல உனக்கு இது தேவையா? என ஆட்டோக்காரர் திட்டியுள்ளார். இந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் செய்துள்ளார் ரஜினி என பி.வாசு தனது பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த பொண்ணு ஒழுங்கா நடிக்காது சார்!.. குறை சொன்ன ரஜினியை மிரள வைத்த ஜோதிகா!..

ரஜினி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலுமே அந்த படத்தின் கதை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால்தான் அதில் நடிப்பார். அப்படித்தான் சந்திரமுகியில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். இத்தனைக்கும் சந்திரமுகியில் பல கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்.

பிரபு ஜோதிகா இவர்களுக்கு நடுவே ரஜினிக்கும் ஒரு கதாபாத்திரம் என்றுதான் இருக்குமே தவிர ரஜினி மட்டுமே முக்கிய கதாபாத்திரம் என்று படக்கதை செல்லாது. இருந்தும் கூட அந்த படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டார்.

ஆனால் அந்த படத்தில் கங்கா கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிப்பதில் ரஜினிக்கு விருப்பமே இல்லையாம். ஏனெனில் ஜோதிகா அதற்கு முன்பு அவ்வளவு சீரியசான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது கிடையாது. எனவே சந்திரமுகிதான் மொத்த படத்தின் முக்கிய கதாபாத்திரமே, அதற்கு நன்றாக நடிக்கும் ஒரு பெண்ணை நடிக்க வைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் முடிவாக இருந்தார்.

இதற்காக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கலாம் என்பது ரஜினிகாந்தின் எண்ணமாக இருந்தது. அப்போது பி.வாசு கூறும்போது இல்லை ஜோதிகா இதற்கு சரியாக இருப்பார். வேண்டுமென்றால் அவரை வைத்து சில காட்சிகளை முன்னோட்டமாக எடுத்துப் பார்ப்போம்.

அது சரியாக இருந்தால் படத்திற்கு கொண்டு போகலாம் என்று கூறினார் வாலி அதன்படி சலங்கை காட்சி ஒன்றில் ஜோதிகா ரஜினியை முறைத்து பார்க்கும் காட்சி வரும். அதை படமாக்கினர் அப்பொழுது ஜோதிகா ரஜினியை பார்த்த பார்வையை பார்த்து ரஜினிக்கு உடல் சிலிர்த்து விட்டது உடனே அவர் பி வாசுவை அழைத்து ஜோதிகா மட்டும் சந்திரமுகியாக நடித்தால் இந்த படம் ஹிட்டு என்று கூறியுள்ளார் அதன்படியே சந்திரமுகி பெரும் வெற்றியை கொடுத்தது.

ரஜினி பலமுறை கூப்பிட்டும் ஐஸ்வர்யா ராய் நடிக்காத திரைப்படங்கள்!. என்னென்ன தெரியுமா? பெரிய லிஸ்டா இருக்கே!..

தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்படும் அளவிற்கு தொடர்ந்து வசூல் படங்களாக கொடுக்கக்கூடியவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிப்பதற்கு எந்த ஒரு நடிகையும் உடனே ஓ.கே சொல்லிவிடுவார்கள்.

ஆனால் ரஜினிகாந்த் பலமுறை முயற்சித்தும் கூட அவர் படத்தில் நடிக்காமல் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அனைவருக்கும் தெரிந்த வரையில் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ஆனால் அதற்கு முன்பு பலமுறை ரஜினி தன்னுடைய திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கான உள்காரணம் என்னவென்று தெரியவில்லை. இருந்தாலும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக ஐஸ்வர்யா ராயோடு நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் ரஜினி.

இதுகுறித்து அவரே சந்திரமுகியின் வெற்றி விழாவில் பேசும்பொழுது கூறியுள்ளார். முதன்முதலாக படையப்பா படம் எடுக்கப்பட்டபோது ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கேட்டார் ரஜினி.

ஆனால் அப்பொழுது ஐஸ்வர்யாராய் வரவில்லை. அதற்கு பிறகு பாபா திரைப்படத்திலும் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அப்போதும் ஐஸ்வர்யா ராய் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு சந்திரமுகி திரைப்படத்தில் சந்திரமுகியாக நடிக்கும் ஜோதிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராயை கேட்டுள்ளனர்.

அப்போதும் மறுத்துவிட்டார் ஐஸ்வர்யா ராய். இறுதியாக சிவாஜி திரைப்படத்தை இயக்கும்போது அதிலும் ஐஸ்வர்யா ராய் தான் நடிக்க வேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டு உள்ளார் ஆனால் இந்த முறையும் ஐஸ்வர்யா ராய் வரவில்லை கடைசியாக தான் எந்திரன் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யாராய்.

இவ்வளவு காட்சிகளை தூக்கிட்டீங்களா!.. சந்திரமுகியில் டெலிட் ஆன காட்சிகள் வெளியானது..

தமிழ் சினிமாவில் அதிக வசூலை கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் முக்கால்வாசி திரைப்படங்கள் பெரும் ஹிட் கொடுக்கக் கூடியவை, அதற்கு காரணம் ரசிகர்கள் ரஜினிகாந்த்திற்கு கொடுக்கும் வரவேற்பே ஆகும்.

ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் சில படங்கள் ஒரு வருடம் வரை ஓடி கூட ஹிட் கொடுத்துள்ளன. இப்படி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் சந்திரமுகி.

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி நடிகர் ரஜினிகாந்திற்கு முக்கியமான திரைப்படமாக இருந்தது. ஏனெனில் சினிமாவில் ரீ என்ட்ரி ஆவதற்காக பாபா படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். ஆனால் பாபா படம் பெரிதாக வெற்றியை பெறவில்லை அதற்கு அடுத்து ஒரு நல்ல படமாக சந்திரமுகி அமைந்தது நடிகை நயன்தாராவுக்கும் இந்த படம் முக்கிய படமாக அமைந்தது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடி ஹிட் கொடுத்த திரைப்படம் சந்திரமுகி தற்சமயம் சந்திரமுகி இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு சந்திரமுகியில் டெலிட் செய்யப்பட்ட 10 நிமிடங்கள் அடங்கிய காட்சிகளை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

நாலு வருஷத்தில் தலைவர் எடுத்த முடிவுதான் எல்லாத்துக்கும் காரணம்.. விளக்கம் கொடுத்த எஸ்.ஜே சூர்யா!..

தமிழ் சினிமாவில் மாஸ் ஹிட் படங்களாக கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு எப்போதுமே ஒரு தனி ரசிக பட்டாளம் உண்டு. ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு இதனால் இப்போது வரை பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல ரஜினிகாந்திற்கும் தோல்வி படங்கள் உண்டு, அதில் மிக முக்கியமான திரைப்படம் பாபா 2002 இல் வெளியான பாபா திரைப்படம் ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாதான் இந்த படத்தையும் இயக்கினார் என்றாலும் இதன் கதை ரஜினிகாந்தோடது ஆகும். இந்த நிலையில் அதற்கு அடுத்து ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் ஒரு வருடம் ஓடி பயங்கர ஹிட் கொடுத்தது.

இத்தனைக்கும் சந்திரமுகி திரைப்படத்தில் படம் முழுக்க ரஜினி மட்டுமே வரம்மாட்டார். பல முக்கியமான கதாபாத்திரங்கள் அதில் இருப்பார்கள். அதில் ரஜினிகாந்தும் இருப்பார். அப்படியும் படம் பெரும் ஹிட் கொடுத்தது.

இதுக்குறித்து எஸ்.ஜே சூர்யா ஒரு பேட்டியில் கூறும்போது பாபா படத்திற்கு பிறகு 4 ஆண்டுகள் தலைவர் இடைவெளி எடுத்துக்கொண்டார். அந்த நாட்களில் அவர் செய்த தவறை சரி செய்து அடுத்து ஒரு படம் என வரும்போது அதில் வேற லெவல் நடிப்பை கொடுத்து ஹிட் கொடுத்துவிட்டார். அவர்தான் ரஜினிகாந்த் என கூறியுள்ளார்.