Tag Archives: சச்சின்

மறு வெளியீடு திரைப்படங்களால் வந்த பிரச்சனை.. தத்தளிக்கும் தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக மறுவெளியீட்டு திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. போன வருடம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது. அதற்கு எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து பிரபலமான திரைப்படங்களை மறுவெளியீடு செய்வதற்கு தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.

ஏனெனில் எல்லா காலங்களிலும் திரையரங்குகளில் படங்கள் வந்த வண்ணமே இருக்காது. சில சமயங்களில் திரைப்படங்களே வெளியாகாத காலக்கட்டங்களும் இருக்கும். எனவே அந்த சமயங்களில் பழைய படங்களை வெளியிட திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கும் அமோகமான வரவேற்பு கிடைத்தது. அதன் வெற்றியை தொடர்ந்து கண்டு கொண்டேன் கண்டுக்கொண்டேன் திரைப்படத்தையும் மறு வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

 

அதே சமயம் இப்படி மறுவெளியீடு திரைப்படங்கள் அதிக வெற்றியை பெறுவது தமிழ் சினிமாவிற்கு ஒரு வகையில் பாதிப்பு என பேசப்படுகிறது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் 1000 கோடியை தாண்டி வசூல் கொடுக்கும் புஷ்பா, கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர் மாதிரியான படங்கள் எல்லாமே சண்டை படங்கள்தான்.

இதனால் ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில் பெரும்பாலான படங்கள் துப்பாக்கி, கத்தி, இரத்த காட்சிகள் என்றுதான் இருக்கின்றன. இதற்கு நடுவே குடும்பங்கள் கொண்டாடும் கதைகளங்களில் திரைப்படங்கள் வருவது குறைந்துவிட்டன.

அந்த இடத்தை இப்போது மலையாள சினிமாக்கள்தான் நிரப்பி வருகின்றன. பாசில் ஜோசப் மாதிரியான நடிகர்கள் எல்லாம் அங்கு குடும்ப கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அதனால் அந்த படங்களுக்கு இங்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றன.

பழைய தமிழ் படங்களும் குடும்பங்கள் கொண்டாடும் படங்களாக இருப்பதால் நல்ல வெற்றியை கொடுக்கின்றன. இப்படியே போனால் தமிழில் புதிய படங்களின் ஓட்டம் என்பது குறைந்துவிடும் என ஒரு பேச்சு இருக்கிறது.

அஜித் இவ்வளவு வன்மைத்தை கக்கும்போது விஜய் மட்டும் சும்மாவா இருப்பார்!.. அஜித்தை வைத்து செய்த விஜய் பட பாடல் தெரியுமா?

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் சண்டை போலவே தமிழ் சினிமாவில் விஜய் அஜித்திற்கு இடையேயும் போட்டி என்பது இருந்து வந்தது. இப்போதும் இருந்து வருகிறது. போன வருடம் பொங்கல் சமயத்தில் கூட இருவரும் ஒரே சமயத்தில் தங்கள் திரைப்படங்களை வெளியிட்டு போட்டி போட்டுக்கொண்டனர்.

அப்படியாக அட்டகாசம் திரைப்படம் வெளியானப்போது அதில் முழுக்க முழுக்க விஜய்யை விமர்சித்து அஜித் ஒரு பாட்டை இணைத்திருந்தார். உனக்கென்ன என துவங்கும் அந்த பாடலில் பல வரிகள் விஜய்க்கு எதிராக இருந்தன.

ஏற்றி விடவும் தந்தையும் இல்லை ஏந்தி கொள்ள தாய் மடி இல்லை என்னை நானே சிகரத்தில் வைத்தேன் அதனால் உனக்கென்ன என்று வரிகள் இருந்தன. இந்த நிலையில் இதற்கு விஜய் ஏன் பதிலடி கொடுத்து பாடல் வரிகள் வைக்கவில்லை என்று பலரும் யோசித்திருப்பார்கள்.

ajith

உண்மையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் விஜய் பாடல் வரிகளை வைத்திருந்தார். ஆனால் அது அஜித்திற்கே அட்வைஸ் வழங்கும் விதத்தில்தான் இருந்துள்ளது. சச்சின் படத்தில் வரும் வா வா என் தலைவா பாடலில் அந்த வரிகளை பார்க்கலாம்.

உனக்கென்ன உனக்கென்ன பாடலில் ஹிட்லராக வாழ்வது கொடிது புத்தனாக வாழ்வதும் கடிது ஹிட்லர் புத்தன் இருவருமாய் நான் இருந்தால் உனக்கென்ன என்ற வரிகள் வரும்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக விஜய் வா வா என் தலைவா பாடலில் ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம் புத்தன் வாழ்க்கையும் வேண்டாம். உன்னை என்னை போல் வாழ்ந்தால் போதும் உலகம் ரொம்ப அழகு என பாடியிருப்பார். அந்த பாடலுக்கு பிறகு விஜய்யை எதிர்த்து பாடுவதையே விட்டு விட்டார் அஜித்.

விஜய் ரஜினி இப்ப சண்டை போட காரணமே 20 வருஷம் முன்பு நடந்த பிரச்சனைதான்!.. இதெல்லாம் வேற நடந்துச்சா!..

Actor Rajinikanth and Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆரம்பத்தில் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளான நடிகர்களில் தளபதி விஜய்யும் முக்கியமானவர். அவர் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் நடித்தப்போது மக்களால் வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானார்.

இந்த நிலையில் மிகவும் கஷ்டப்பட்டுதான் விஜய் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை பெற்றார். ஆனால் வளர துவங்கியவுடன் விஜய்க்கும் சரி அஜித்திற்கும் சரி ரஜினிகாந்தின் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே பெரும் ஆசையாக இருந்தது.

இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. பாபா திரைப்படம் பெறும் வெற்றியை கொடுக்கும் என நம்பினார் ரஜினிகாந்த். ஆனால் அந்த படம் படு தோல்வி அடைந்தது. ஆனால் அதே 2002 ஆம் ஆண்டு விஜய் நடித்து வெளியான தமிழன், யூத், பகவதி ஆகிய மூன்று படங்களுமே பெறும் வெற்றியை கொடுத்தது.

baba

இதனால் தன்னுடைய காலம் சினிமாவில் முடிந்துவிட்டது என்றே கருதினார் ரஜினிகாந்த். எனவே சில வருடங்களுக்கு அவர் படம் நடிப்பதையே விட்டுவிட்டார். அதற்குள் விஜய் திருமலை, கில்லி, மதுர,திருப்பாச்சி மாதிரியான படங்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

இந்த நிலையில்தான் 2005 இல் மீண்டும் சந்திரமுகி திரைப்படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார் ரஜினிகாந்த். 4 வருடங்களாக ரஜினிகாந்திற்கு பெரிதாக மார்க்கெட் இல்லாமல் இருந்ததால் அவரை எளிதாக வீழ்த்திவிடலாம் என விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தை சந்திரமுகி படத்திற்கு போட்டியாக வெளியிட்டனர்.

ஆனால் சச்சின் திரைப்படத்தை ஓரங்கட்டியது சந்திரமுகி. மேலும் ஒரு வருடம் திரையில் ஓடி ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மீண்டும் ரஜினி சினிமாவில் தனது பயணத்தை தொடர அந்த வெற்றி காரணமாக இருந்தது.

தமிழ் சினிமாவிலேயே அவர் படத்தை அவரே ரீமேக் செய்தது விஜய் மட்டும்தான்!.. என்னப்பா சொல்றிங்க!.. அந்த படமா?

Tamil Actor Vijay : சிறுவயது முதலே தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் விஜய். அவரை எப்படியாவது கதாநாயகன் ஆக்கிவிட வேண்டும் என்பது அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் நீண்ட நாள் ஆசையாக இருந்தது.

ஆனால் எஸ்.ஏ சந்திரசேகர் விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி அடையவில்லை. இருந்தாலும் அதன் பிறகு விஜய் தொடர்ந்து வேறு இயக்குனர்கள் திரைப்படத்தில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற துவங்கினார். ஆரம்பத்தில் மக்களிடம் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானாலும் தற்சமயம் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முக்கியமானவராக விஜய்தான் இருக்கிறார்.

ரஜினி திரைப்படங்களைப் போலவே விஜய்யின் திரைப்படங்களும் அதிகபட்சம் வசூல் சாதனை படைக்கும் திரைப்படங்களாகவே இருக்கின்றன. இந்த நிலையில் விஜய் தற்சமயம் அரசியலுக்கு வரப்போவதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன. விஜய் நடித்த சில படங்கள் தோல்வியை கண்டு வந்த பொழுது விஜய்க்கு ஒரு பூஸ்ட்டராக அமைந்த திரைப்படம் குஷி.

எஸ்.ஜே சூர்யாவின் இரண்டாவது திரைப்படமான குஷி திரைப்படம் விஜய்க்கு பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இத்தனைக்கும் அந்த திரைப்படத்தில் பெரிதாக சண்டை காட்சிகளோ கமர்சியல் சினிமாவிற்கான விஷயங்களோ இருக்காது. வெறும் காதல் கதையை மட்டும் கொண்டு செல்லும் அந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு அதே மாதிரியான கதையில் மீண்டும் நடிக்க வேண்டும் என்று விஜய்க்கு ஆசை இருந்தது. பிறகு சில காலங்கள் கழித்து திரும்ப அதே கதையை மறு உருவாக்கம் செய்து விஜய் நடித்த திரைப்படம்தான் சச்சின் அதேபோல காதலை முக்கிய விஷயமாகக் கொண்டு கல்லூரியில் படிக்கும் இருவருக்கிடையே காதலை உருவாக்கி சச்சின் திரைப்படத்தை கொண்டு சென்றிருப்பார்.

ஆனால் குஷி திரைப்படத்தில் உள்ளதை விடவும் சச்சினில் மிகவும் ஜாலியான ஒரு கதாபாத்திரமாக விஜய் இருப்பார். சந்திரமுகி படத்திற்கு போட்டியாக வெளியான பொழுதும் கூட சச்சின் அப்பொழுது வசூல் சாதனை படைத்தது. அந்த அளவிற்கு அது இரண்டாவது முறையும் மக்கள் மத்தியில் இடம் பிடித்தது. அதேபோல தமிழ் சினிமாவில் ஒரே கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதில் திரும்பத் திரும்ப நடித்து இரு படங்களையும் வெற்றி படங்களாக கொடுத்தவர் நடிகர் விஜய்தான் என்று கூறப்படுகிறது.