Tag Archives: கலைப்புலி எஸ் தாணு

வாடிவாசல் கதையில் நடந்த மாற்றம்.. இதுதான் கதையாம்..!

கலைப்புலி எஸ்.தானு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்க இருந்த திரைப்படம் வாடிவாசல்.

வாடிவாசல் என்று வெளிவந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்ட காரணத்தினால் இப்பொழுது இந்த திரைப்படம் உருவாகாமல் இருந்து வருகிறது.

ஆனால் இந்த திரைப்படத்திற்காக 18 கோடி முன்பணமாக பெற்று இருக்கிறாராம் வெற்றிமாறன். இந்த நிலையில் இன்னும் படம் உருவாகாமல் இருப்பது ஒரு பிரச்சனையாகவே சென்று கொண்டே இருக்கிறது.

இதற்கு நடுவே சிம்பு வெற்றிமாறனின் திரைப்படம் அடுத்து துவங்கி இருக்கிறது இந்த படத்திற்குப் பிறகு மீண்டும் வாடிவாசலின் படபிடிப்பு துவங்க இருக்கிறது என்று பேச்சுகள் இருக்கின்றன.

ஆனால் வாடிவாசல் நாவலின் கதைகளத்தை வைத்து இந்த படம் நகரவில்லை என்று கூறப்படுகிறது. அதற்குள்ளாக வெற்றிமாறன் வேறு வகையான கதை ஒன்றை எழுதி இருக்கிறார் அந்த கதை தான் அடுத்து படமாக வர இருக்கிறது என்று கூறப்படுகிறது.

மறு வெளியீடு திரைப்படங்களால் வந்த பிரச்சனை.. தத்தளிக்கும் தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் சமீப காலங்களாக மறுவெளியீட்டு திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது. போன வருடம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது. அதற்கு எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து பிரபலமான திரைப்படங்களை மறுவெளியீடு செய்வதற்கு தயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர்.

ஏனெனில் எல்லா காலங்களிலும் திரையரங்குகளில் படங்கள் வந்த வண்ணமே இருக்காது. சில சமயங்களில் திரைப்படங்களே வெளியாகாத காலக்கட்டங்களும் இருக்கும். எனவே அந்த சமயங்களில் பழைய படங்களை வெளியிட திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கும் அமோகமான வரவேற்பு கிடைத்தது. அதன் வெற்றியை தொடர்ந்து கண்டு கொண்டேன் கண்டுக்கொண்டேன் திரைப்படத்தையும் மறு வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு.

 

அதே சமயம் இப்படி மறுவெளியீடு திரைப்படங்கள் அதிக வெற்றியை பெறுவது தமிழ் சினிமாவிற்கு ஒரு வகையில் பாதிப்பு என பேசப்படுகிறது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் 1000 கோடியை தாண்டி வசூல் கொடுக்கும் புஷ்பா, கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர் மாதிரியான படங்கள் எல்லாமே சண்டை படங்கள்தான்.

இதனால் ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களில் பெரும்பாலான படங்கள் துப்பாக்கி, கத்தி, இரத்த காட்சிகள் என்றுதான் இருக்கின்றன. இதற்கு நடுவே குடும்பங்கள் கொண்டாடும் கதைகளங்களில் திரைப்படங்கள் வருவது குறைந்துவிட்டன.

அந்த இடத்தை இப்போது மலையாள சினிமாக்கள்தான் நிரப்பி வருகின்றன. பாசில் ஜோசப் மாதிரியான நடிகர்கள் எல்லாம் அங்கு குடும்ப கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அதனால் அந்த படங்களுக்கு இங்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றன.

பழைய தமிழ் படங்களும் குடும்பங்கள் கொண்டாடும் படங்களாக இருப்பதால் நல்ல வெற்றியை கொடுக்கின்றன. இப்படியே போனால் தமிழில் புதிய படங்களின் ஓட்டம் என்பது குறைந்துவிடும் என ஒரு பேச்சு இருக்கிறது.

ஆமை புகுந்த மாதிரி அந்த வீட்டுல புகுந்துட்டியேடா?.. ஞானவேல் ராஜாவை விளாசிய பிரபலம்…

Producer Kalaipuli S Thanu and producer Gnanavel Raja had problems with the release of the film. Kalaipuli S Thanu, who was angry about this, has spoken very boldly

தமிழில் பிரபல தயாரிப்பாளராக பல காலங்களாகவே இருந்து வருபவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. பெரும்பாலும் ஞானவேல் ராஜா தயாரிக்கும் திரைப்படங்களுக்கு ஒரு நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

 ஆனால் சமீப காலமாக அவர் தயாரிக்கும் படங்கள் பெரும்பாலும் வரவேற்பு பெறுவதில்லை. முதன்முதலாக பருத்தி வீரன் படத்தை தயாரித்ததன் மூலமாக சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார் ஞானவேல் ராஜா. ஞானவேல் ராஜாவிற்கும் நடிகர் சூர்யாவின் குடும்பத்தினருக்கும் இடையே வெகு காலமாகவே நட்பு இருந்து வருகிறது.

இதனால் சில சமயங்களில் ஞானவேல் ராஜா ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டால் கூட அப்பொழுது சிவக்குமாரின் குடும்பம் அவரை காப்பாற்றி இருக்கிறது. இந்த நிலையில் தற்சமயம் ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா.

கடுப்பான தயாரிப்பாளர்

கங்குவா திரைப்படத்தை வெளியிடுவதில் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இந்த திரைப்படத்தை ஏற்கனவே இரண்டு முறை தேதி மாற்றம் செய்திருக்கின்றனர். ஏற்கனவே அக்டோபர் பத்தாம் தேதி இந்த படம் திரைக்கு வர இருந்தது.

ஆனால் அந்த நாளில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியானதால் இந்த படத்தின் வெளியீட்டு தேதி மாற்றி வைக்கப்பட்டது இந்த நிலையில் இது குறித்து பேசிய பிரபல தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு கூறும் பொழுது ஆமை புகுந்த வீடு விளங்காத மாதிரி ஞானவேல் ராஜா சிவகுமாரின் வீட்டிற்கு சென்றதாலேயே அவர்கள் இப்பொழுது பிரச்சனையை சந்தித்து வருகின்றனர் என்று கூறியிருக்கிறார்.

இதுதான் காரணம்:

மேலும் அவர் கூறும் பொழுது எந்த ஒரு தடை வந்தாலும் படத்தை வெளியிடும் சக்தி இருக்க வேண்டும். அதெல்லாம் இல்லாமல் என்ன தயாரிப்பாளராக இருக்கிறான் என்று கேட்டிருந்தார். கலைப்புலி எஸ் தானுவின் திரைப்படம் ஒன்றை ஞானவேல் ராஜா வெளியிட்டு தருவதாக கூறியிருக்கிறார் இதனால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இதற்கு பதில் அளிக்கும் பொழுது கலைப்புலி எஸ் தானு எந்த சேட்டிலைட்க்கும் விற்கவில்லை என்றாலும் எனது திரைப்படத்தை நான் விட்டு விடுவேன். எந்த ஒரு ஓடிடிக்கு விற்பனையாக விட்டாலும் கூட என்னால் திரையரங்கில் வெளியிட முடியும். அந்த கெப்பாசிட்டி உனக்கு இருக்கிறதா? உன்னுடைய திரைப்படத்தையே உன்னால் வெளியிட முடியவில்லை இதில் என்னுடைய படத்தை வெளியிடப் போகிறாயா? என்று கேட்டிருக்கிறார் எஸ் தாணு.

சிவாஜியின் மரணத்துக்கு 15 நாள் முன்பு நடந்த சம்பவம்.. முன்னவே அவருக்கு தெரிஞ்சுருக்கு!.

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த நடிகராக அறியப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசனை பொறுத்தவரை நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு நடிகராக அவர் இருந்திருக்கிறார்.

சம்பளத்திற்கு நடிக்கிறோம் என்பதை தாண்டி நடிப்புதான் அவருக்கு எல்லாமே என்கிற நிலை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே இளமை காலங்களில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் சிவாஜி கணேசன் நடித்து வந்தார்.

சிவாஜி கணேசன்:

கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் அவரது வீட்டிற்கு கூட செல்லாமல் படப்பிடிப்பிலேயே அவர் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு நடிப்பின் மீது ஈடுபாடு கொண்டவர், கடைசி காலங்களில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனபோது ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று பல இயக்குனர்களிடம் கூறி பிறகு துணை கதாபாத்திரமாக நடித்த தொடங்கினார் சிவாஜி கணேசன்.

அந்த அளவிற்கு நடிப்பை விட்டு விலக முடியாத ஒரு நபராக அவர் இருந்திருக்கிறார் அவருடன் தனது அனுபவம் குறித்து கலைப்புலி எஸ் தானு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ஒருமுறை சிவாஜி கணேசன் என்னை அவரது வீட்டிற்கு உணவு அருந்துவதற்காக அழைத்தார்.

நானும் அப்பொழுது சென்றேன் எனக்காக தயாராக அங்கு அவர் அமர்ந்திருந்தார். நான் போய் அமர்ந்தவுடன் என்னுடன் பேச தொடங்கினார் உண்மையில் அவருடைய கஷ்டங்களை பேசுவதற்கு அப்போது ஆளில்லாததினால் என்னை அழைத்திருந்தார்.

மனம் வருந்திய சிவாஜி:

அங்கு சென்றபோது அவரது பேத்தி படும் கஷ்டங்களை குறித்து பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரது பேத்தியின் கணவர் சிறையில் இருந்தார். அதனால் அவரது பேத்தி சில பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.

அது குறித்து பேசிய சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர்தான் ராஜா மாதிரி இறந்து போய்விட்டார். நல்லபடியாக வாழ்ந்து நல்லபடியாகவே சென்று விட்டார் நான் அந்த பஸ்ஸை மிஸ் செய்து விட்டேன் என்று மிக மன வருத்தத்துடன் பேசி இருக்கிறார் சிவாஜி கணேசன்.

அதற்கு பிறகு 15 நாட்களுக்கு பிறகு சிவாஜி கணேசன் இறந்துவிட்டதாக கூறுகிறார் கலைப்புலி எஸ் தாணு. எனவே தனது இறுதி நாள் வரப்போவதை அறிந்து பலரையும் பிறகு சந்தித்து சிவாஜி கணேசன் பேசியதாக கூறப்படுகிறது.

எஸ்.ஏ சி குறை கூறி மறுத்த திரைப்படம் அது.. மாஸ் ஹிட் கொடுத்துச்சு.. சீக்ரெட்டை கூறிய தயாரிப்பாளர்.!

விஜய் நடித்த திரைப்படங்களில் நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுத்திருக்கின்றன. அதேபோல நிறைய திரைப்படங்கள் தோல்வியும் கொடுத்திருக்கின்றன. துள்ளாத மனமும் துள்ளும் காலகட்டத்தில் இருந்து விஜய் நடிக்கும் திரைப்படங்களின் கதையை அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர்தான் கேட்பார்.

ஏனெனில் துள்ளாத மனமும் துள்ளும் கதையையும் அவர்தான் கேட்டார் கேட்ட பிறகு அதில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எஸ்.ஏ சந்திரசேகர்தான் நினைத்தார்.

கதை தேர்ந்தெடுத்த தந்தை:

அந்த திரைப்படம் விஜய்க்கு எப்படியான ஒரு வெற்றியை பெற்றுக் கொடுத்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனால் வெகு நாட்கள் விஜயின் கதைகளை தேர்ந்தெடுக்கும் வேலையில் எஸ்.ஏ சந்திரசேகர்தான் இருந்தார்.

ஆனால் சில நேரங்களில் நல்ல வெற்றி படங்களையும் கூட எஸ்.ஏ சந்திரசேகர் நிராகரித்த சம்பவமும் நடந்திருக்கிறது. அப்படி அவர் நிராகரித்த திரைப்படங்களில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படமும் ஒன்று துப்பாக்கி திரைப்படத்தின் கதையை ஏ.ஆர் முருகதாஸ் கூறிய பொழுது அந்த திரைப்படத்தை தானே தயாரிப்பதாக முன் வந்திருக்கிறார் எஸ்.ஏ சந்திரசேகர்.

படத்தின் தயாரிப்பு வேலை துவங்கும் சமயத்திலேயே முருகதாஸ்க்கும் எஸ் ஏ சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது கதையில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று எஸ்.ஏ சந்திரசேகர் கேட்டுள்ளார்.

பிறகு வந்த பிரச்சனை:

ஆனால் அதற்கு ஏ.ஆர் முருகதாஸ் மறுத்திருக்கிறார் இந்த நிலையில் அந்த திரைப்படம் பிறகு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் கைக்கு வந்தது. அந்த படத்தின் ஒன்லைன் படைத்த உடனே இது சிறப்பான வெற்றியை கொடுக்கும் படம் என்று கூறி அந்த படத்தின் கதையை கேட்காமலேயே அதற்கு தயாரிப்பு செலவுகளை செய்தர்  கலைப்புலி எஸ் தானு.

அந்த திரைப்படமும் அதற்கு ஏற்றார் போல பெரும் வெற்றியை கொடுத்து விஜய்க்கு முக்கியமான ஒரு திரைப்படமாக அமைந்தது.

முதல் படத்தின்போது தயாரிப்பாளர் என்னை அவமானப்படுத்தினாலும், ஒரு விஷயத்தில் சந்தோஷமா இருந்துச்சு!.. உண்மையை கூறிய இயக்குனர் சரண்.

Director Saran : தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்தவர் இயக்குனர் சரண். பொதுவாக இயக்குனர்கள் சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படங்களை வைத்துதான் மக்கள் மனதில் பெரும் இடத்தைப் பிடிப்பார்கள்.

ஆனால் அப்போது சில இயக்குனர்கள் அதற்கு விதிவிலக்காக இருந்தனர் விக்ரமன் மாதிரியான சில இயக்குனர்கள் தொடர்ந்து காதல் திரைப்படங்களைக் கொண்டு மக்களிடம் வெற்றியை கண்டு வந்தனர். அப்படி மக்கள் மத்தியில் காதல் திரைப்படத்தை கொண்டு வெற்றியை கண்ட இன்னொரு இயக்குனர் சரண்.

சரணின் முதல் திரைப்படம் காதல் மன்னன். காதல் மன்னன் திரைப்படம் எப்படிப்பட்ட வெற்றியை கொடுத்தது என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான். ஆனால் அந்த திரைப்படத்திற்கு வாய்ப்பு பெற சென்ற பொழுது மிகவும் கஷ்டப்பட்டார் என்பதை இயக்குனரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

kadhal mannan

இந்த திரைப்படத்திற்கு கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தான் தயாரிப்பாளராக இருந்தார். கதையை சொல்வதற்காக எஸ் தாணுவை பார்க்க போகும் போதெல்லாம் அவர் சரணை உதாசீனப்படுத்தி இருக்கிறார். எப்போதும் பார்க்காமலே இருந்திருக்கிறார்.

இருந்தாலும் கூட அங்கு இருக்கும் வாட்ச்மேன்தான் தன்னை முதன்முதலாக இயக்குனர் என்று ஒப்புக்கொண்டதாக சரண் ஒரு பேட்டியில் கூறுகிறார். ஒரு முறை சரண் வெகு நேரம் காத்திருந்ததை பார்த்துவிட்டு அந்த வாட்ச்மேன் எஸ் தாணுவிற்கு போன் செய்து ஒரு இயக்குனர் உங்களுக்காக வெகு நேரமாக காத்திருக்கிறார் சார் என்று கூறிய பொழுது தன்னையும் ஒரு இயக்குனராக அங்கீகரித்துவிட்டனர் என்பதே எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

அதுதான் தொடர்ந்து போராடி என்னை ஒரு இயக்குனர் ஆவதற்கும் உத்வேகம் கொடுத்தது என்று சரண் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

நான் சொன்ன க்ளைமேக்ஸை பா.ரஞ்சித் வைக்கல!.. தயாரிப்பாளருக்கு அதிருப்தி கொடுத்த படம்!.

தமிழில் வெற்றி படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பா.ரஞ்சித். பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமானவை. அவர் இயக்கத்தில் வந்த சார்ப்பாட்டா பரம்பரை திரைப்படமும் நல்ல வெற்றியை கண்டது.

கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப்படம் இயக்கிய பிறகு அவருக்கு கபாலி திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கபாலி திரைப்படம் பா.ரஞ்சித் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

ஏனெனில் அதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்திருந்த கோச்சடையான் மற்றும் லிங்கா இரண்டு தோல்வி படங்களை கொடுத்திருந்தார். கபாலி திரைப்படத்தை பொறுத்தவரை அதன் க்ளைமேக்ஸ் காட்சிகள் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணுவிற்கு பிடிக்கவில்லை.

க்ளைமேக்ஸில் லீ யை கொன்றதோடு திரைப்படத்தை முடித்துவிடலாம் என தாணு நினைத்தார். ஆனால் ஒரு துப்பாக்கி சுடும் காட்சியை வைத்து ஓப்பன் க்ளைமேக்ஸாக முடிக்க வேண்டும் என்பது பா.ரஞ்சித்தின் எண்ணமாக இருந்தது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் கூறும்போது இயக்குனர் விருப்பத்திற்கு படத்தை எடுக்க விடுங்கள் என கூறிவிட்டார். இதனையடுத்து பா.ரஞ்சித்தின் விருப்பத்தின் படியே க்ளைமேக்ஸ் வைக்கப்பட்டது. இதுக்குறித்து தாணு கூறும்போது படத்தை மறு வெளியீடு செய்யும்போது நான் க்ளைமேக்ஸை மாற்றிவிடுவேன் என கூறியிருந்தார்.