நான் சொன்ன க்ளைமேக்ஸை பா.ரஞ்சித் வைக்கல!.. தயாரிப்பாளருக்கு அதிருப்தி கொடுத்த படம்!.

தமிழில் வெற்றி படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பா.ரஞ்சித். பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமானவை. அவர் இயக்கத்தில் வந்த சார்ப்பாட்டா பரம்பரை திரைப்படமும் நல்ல வெற்றியை கண்டது.

கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப்படம் இயக்கிய பிறகு அவருக்கு கபாலி திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கபாலி திரைப்படம் பா.ரஞ்சித் மற்றும் ரஜினிகாந்த் இருவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

ஏனெனில் அதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்திருந்த கோச்சடையான் மற்றும் லிங்கா இரண்டு தோல்வி படங்களை கொடுத்திருந்தார். கபாலி திரைப்படத்தை பொறுத்தவரை அதன் க்ளைமேக்ஸ் காட்சிகள் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணுவிற்கு பிடிக்கவில்லை.

க்ளைமேக்ஸில் லீ யை கொன்றதோடு திரைப்படத்தை முடித்துவிடலாம் என தாணு நினைத்தார். ஆனால் ஒரு துப்பாக்கி சுடும் காட்சியை வைத்து ஓப்பன் க்ளைமேக்ஸாக முடிக்க வேண்டும் என்பது பா.ரஞ்சித்தின் எண்ணமாக இருந்தது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் கூறும்போது இயக்குனர் விருப்பத்திற்கு படத்தை எடுக்க விடுங்கள் என கூறிவிட்டார். இதனையடுத்து பா.ரஞ்சித்தின் விருப்பத்தின் படியே க்ளைமேக்ஸ் வைக்கப்பட்டது. இதுக்குறித்து தாணு கூறும்போது படத்தை மறு வெளியீடு செய்யும்போது நான் க்ளைமேக்ஸை மாற்றிவிடுவேன் என கூறியிருந்தார்.