சாரி கேட்டே ஆண்டவருக்கு விபூதி அடிச்சிடலாம்!.. மாயா போட்ட ப்ளான்!..
இந்த வாரம் பிக்பாஸில் கேப்டன் ஆனது முதலே மாயா செய்யும் செயல்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. கேப்டன் என்பவர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால் இவர் மிகவும் சர்வதிகாரமாக நடந்துக்கொள்கிறார்.
இதனால் மாயா பூர்ணிமா ஜோவிகா அடங்கிய அந்த குழுவை புல்லி (bully) கேங் என அழைத்து வருகின்றனர் மக்கள். அர்ச்சனா மீது பெரிதாக தவறு எதுவும் இல்லாத போதும் இந்த குழு அர்ச்சனாவையும், விசித்ராவையும் டார்கெட் செய்து அடித்து வருகிறது.
இந்த நிலையில் செய்த தவறுகளுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு எஸ்கேப் ஆகிவிடலாம் என இவர்கள் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டுள்ள வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. நாம் நிறைய தவறு செய்துவிட்டோம். வார இறுதியில் இவற்றையெல்லாம் கூறி இதை ஏன் செய்தீர்கள் என கமல் சார் கேட்பார்.
அப்போது நாங்கள் செய்தது தவறுதான். சாரி கமல் சார் என கூறி சமாளித்துவிடலாம் என கூறியிருக்கின்றனர். இதனையடுத்து பிக்பாஸில் இவ்வளவு மோசமான போட்டியாளர்களை பார்த்ததே இல்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர் மக்கள்.